ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்பாத்தி வகைகள்

3 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சப்பாத்தி வகைகள் - Page 3 Empty சப்பாத்தி வகைகள்

Post by மதுமிதா Fri Dec 20, 2013 11:19 am

First topic message reminder :

வெந்தயக் கீரை சப்பாத்தி



தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயக் கீரை - 2 கட்டு, மாங்காய் தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை: வெந்தயக் கீரையை இலைகளாக நறுக்கிக்கொண்டு, தண்ணீரில் அலசி, சுத்தம் செய்துகொள்ளுங்கள். கீரையுடன், ஒரு டீஸ்பூன் நெய், கோதுமை மாவு, கடலை மாவு, மஞ்சள்தூள், மாங்காய் தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெய், நெய்யைக் கலந்துவைத்துக் கொள்ளுங்கள். பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு வேகவையுங்கள்.

குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை சப்பாத்தி சுடுவதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் ஒரு டேபிள்ஸ்பூன் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.


சப்பாத்தி வகைகள் - Page 3 Mசப்பாத்தி வகைகள் - Page 3 Aசப்பாத்தி வகைகள் - Page 3 Dசப்பாத்தி வகைகள் - Page 3 Hசப்பாத்தி வகைகள் - Page 3 U



சப்பாத்தி வகைகள் - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


சப்பாத்தி வகைகள் - Page 3 Empty Re: சப்பாத்தி வகைகள்

Post by மதுமிதா Fri Dec 20, 2013 12:31 pm

வெஜிடபிள் சப்பாத்தி

சப்பாத்தி வகைகள் - Page 3 311850_290446397652007_1672821792_n

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், காய்கறிக்கலவை (பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவை) - ஒரு கப், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு விழுது - 2 டீஸ்பூன், புதினா, மல்லித்தழை அரைத்தது - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளை அளவான தண்ணீரில் உப்பு சேர்த்து, வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதுகள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். அதனுடன், மசித்த உருளைக்கிழங்கு, மசித்த காய்கறி கலவை, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். இதுதான் பூரணம். கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்த மாவிலிருந்து, மெல்லிய சப்பாத்திகள் திரட்டி, இரு சப்பாத்திகளுக்கு நடுவே காய்கறி பூரணத்தை பரத்தி, ஓரங்களை ஒட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் சேர்த்து வேகவிடுங்கள்.


சப்பாத்தி வகைகள் - Page 3 Mசப்பாத்தி வகைகள் - Page 3 Aசப்பாத்தி வகைகள் - Page 3 Dசப்பாத்தி வகைகள் - Page 3 Hசப்பாத்தி வகைகள் - Page 3 U



சப்பாத்தி வகைகள் - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சப்பாத்தி வகைகள் - Page 3 Empty Re: சப்பாத்தி வகைகள்

Post by மதுமிதா Fri Dec 20, 2013 12:52 pm

சுரைக்காய் சப்பாத்தி

சப்பாத்தி வகைகள் - Page 3 320141_290446564318657_841795752_n

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.

பூரணத்துக்கு: சுரைக்காய் (துருவியது) - 2 கப், பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, துருவிய சுரைக்காய், பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்குங்கள். அதனுடன் உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்து, கிண்ணங்களாக செய்து, உள்ளே பூரணம் வைத்து மூடி சப்பாத்திகளாக திரட்டுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளை போட்டு வேக வைத்தெடுங்கள்.


சப்பாத்தி வகைகள் - Page 3 Mசப்பாத்தி வகைகள் - Page 3 Aசப்பாத்தி வகைகள் - Page 3 Dசப்பாத்தி வகைகள் - Page 3 Hசப்பாத்தி வகைகள் - Page 3 U



சப்பாத்தி வகைகள் - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சப்பாத்தி வகைகள் - Page 3 Empty Re: சப்பாத்தி வகைகள்

Post by மதுமிதா Fri Dec 20, 2013 12:53 pm

கார்ன் சப்பாத்தி

சப்பாத்தி வகைகள் - Page 3 312847_290446794318634_282128002_n

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

பூரணத்துக்கு: சோளம் (வேகவைத்து உதிர்த்தது) - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். வேகவைத்த சோளத்தை மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டு, மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், பூண்டு விழுதைப் போட்டு வதக்கி, அரைத்த சோளம், உப்பு சேர்த்து கிளறுங்கள். இறக்கி ஆறவைத்த, இந்தப் பூரணத்தை நடுவே வைத்து சப்பாத்திகளாக திரட்டி, எண்ணெய்-நெய் சேர்த்து வேகவைத்தெடுங்கள்.


சப்பாத்தி வகைகள் - Page 3 Mசப்பாத்தி வகைகள் - Page 3 Aசப்பாத்தி வகைகள் - Page 3 Dசப்பாத்தி வகைகள் - Page 3 Hசப்பாத்தி வகைகள் - Page 3 U



சப்பாத்தி வகைகள் - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சப்பாத்தி வகைகள் - Page 3 Empty Re: சப்பாத்தி வகைகள்

Post by மாணிக்கம் நடேசன் Fri Dec 20, 2013 12:54 pm

இந்த சப்பாத்தி வகைகளை எல்லாம் பீத்து சாப்பிடாமல் அப்படியே சேமிப்புப் பெட்டியில் வைத்து விட்டேன். மதுமிதா அக்காவுக்கு மங்கலமான பாராட்டும் வாழ்த்தும் .
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சப்பாத்தி வகைகள் - Page 3 Empty Re: சப்பாத்தி வகைகள்

Post by மதுமிதா Fri Dec 20, 2013 12:55 pm

பீஸ் மசாலா சப்பாத்தி

சப்பாத்தி வகைகள் - Page 3 310194_290450544318259_1898326405_n

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.

பூரணத்துக்கு: பட்டாணி - ஒரு கப், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, மாங்காய் தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை-புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கோதுமை மாவை உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். பட்டாணியை வேகவைத்து, நீரை வடித்துவிட்டு மசித்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து பட்டாணி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கி இறக்குங்கள். பூரணம் ரெடி. இனி, வழக்கம்போல கோதுமை மாவினுள் இந்தப் பூரணத்தை ஸ்டஃப் செய்து, சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக் கல்லில் போட்டு வேகவிடுங்கள்.


சப்பாத்தி வகைகள் - Page 3 Mசப்பாத்தி வகைகள் - Page 3 Aசப்பாத்தி வகைகள் - Page 3 Dசப்பாத்தி வகைகள் - Page 3 Hசப்பாத்தி வகைகள் - Page 3 U



சப்பாத்தி வகைகள் - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சப்பாத்தி வகைகள் - Page 3 Empty Re: சப்பாத்தி வகைகள்

Post by மதுமிதா Fri Dec 20, 2013 12:56 pm

காக்ரா

சப்பாத்தி வகைகள் - Page 3 300059_290450754318238_1100158126_n

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை: மாவை உப்பு சேர்த்து, ‘மெத்’தென்று பிசைந்துகொள்ளுங்கள். மிக மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் சுட்டெடுங்கள். எண்ணெய் தடவத் தேவையில்லை. இரண்டு சப்பாத்திகளை ஒன்றன் மேல் ஒன்றாக தோசைக்கல்லில் போட்டு, கனமான துணி கொண்டு இருபுறமும் நன்கு அழுத்தி எடுங்கள். சப்பாத்திகள் அப்பளம் போல நன்கு மொறுமொறுப்பாக வரும்வரை, இப்படியே திருப்பித் திருப்பிவிட்டு, துணியால் அழுத்திவிட்டு எடுத்தால், ‘கரகர’ காக்ரா ரெடி. காக்ராவை பல நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப்போகாது.


சப்பாத்தி வகைகள் - Page 3 Mசப்பாத்தி வகைகள் - Page 3 Aசப்பாத்தி வகைகள் - Page 3 Dசப்பாத்தி வகைகள் - Page 3 Hசப்பாத்தி வகைகள் - Page 3 U



சப்பாத்தி வகைகள் - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சப்பாத்தி வகைகள் - Page 3 Empty Re: சப்பாத்தி வகைகள்

Post by மதுமிதா Fri Dec 20, 2013 12:57 pm

கடலைமாவு சப்பாத்தி

சப்பாத்தி வகைகள் - Page 3 316530_290451080984872_759140881_n

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன். பூரணத்துக்கு: கடலை மாவு - ஒரு கப், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாதூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - அரை டீஸ்பூன் (அல்லது) எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
எண்ணெயைக் காயவைத்து, கடலைமாவை சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். பச்சை வாசனை போனதும், பூரணத்துக்குக் கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக்குங்கள். அவற்றை கிண்ணம் போல செய்து, நடுவே கடலை மாவு பூரணத்தை வைத்து, சப்பாத்திகளாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுங்கள்.

குறிப்பு: இந்த கடலைமாவு சப்பாத்தியையும் காக்ரா போல, எண்ணெயில்லாமல் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுத்து வைத்துக்கொண்டால், 2, 3 நாட்கள் வரை கெட்டுப் போகாது


சப்பாத்தி வகைகள் - Page 3 Mசப்பாத்தி வகைகள் - Page 3 Aசப்பாத்தி வகைகள் - Page 3 Dசப்பாத்தி வகைகள் - Page 3 Hசப்பாத்தி வகைகள் - Page 3 U



சப்பாத்தி வகைகள் - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சப்பாத்தி வகைகள் - Page 3 Empty Re: சப்பாத்தி வகைகள்

Post by மதுமிதா Fri Dec 20, 2013 12:58 pm

ஆலு சப்பாத்தி

சப்பாத்தி வகைகள் - Page 3 316494_290451400984840_1616203276_n

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

பூரணத்துக்கு: வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒன்றரை கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - அரை டீஸ்பூன், மாங்காய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூரணத்துக்குக் கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள் (அடுப்பில் வைத்துக் கிளறத் தேவையில்லை). கோதுமை மாவை, நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து, கிண்ணங்களாக செய்து நடுவே பூரணம் வைத்து சப்பாத்திகளாக திரட்டுங்கள். தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் சேர்த்து வேகவிடுங்கள். உப்பு, புளிப்பு, உறைப்பு என மூன்று சுவையும் சேர்ந்து, சூப்பராக இருக்கும் இந்த சப்பாத்தி.


சப்பாத்தி வகைகள் - Page 3 Mசப்பாத்தி வகைகள் - Page 3 Aசப்பாத்தி வகைகள் - Page 3 Dசப்பாத்தி வகைகள் - Page 3 Hசப்பாத்தி வகைகள் - Page 3 U



சப்பாத்தி வகைகள் - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சப்பாத்தி வகைகள் - Page 3 Empty Re: சப்பாத்தி வகைகள்

Post by மதுமிதா Fri Dec 20, 2013 12:59 pm

கோதுமை மாவு பரோட்டா

சப்பாத்தி வகைகள் - Page 3 313575_290451630984817_1682922272_n

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், ஆப்பசோடா - அரை சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்னெய் - நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை: மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருங்கள். பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்திகளாக திரட்டுங்கள். அதன் மேல் எண்ணெய் - நெய் கலவையைத் தடவி, புடவை கொசுவம் போல மடித்துக்கொள்ளுங்கள். மடித்ததை வட்டமாக சுருட்டி, சற்றுக் கனமாக திரட்டுங்கள். தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து சுட்டெடுங்கள். ருசியாக இருக்கும் இந்த கோதுமை பரோட்டா


சப்பாத்தி வகைகள் - Page 3 Mசப்பாத்தி வகைகள் - Page 3 Aசப்பாத்தி வகைகள் - Page 3 Dசப்பாத்தி வகைகள் - Page 3 Hசப்பாத்தி வகைகள் - Page 3 U



சப்பாத்தி வகைகள் - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சப்பாத்தி வகைகள் - Page 3 Empty Re: சப்பாத்தி வகைகள்

Post by மதுமிதா Fri Dec 20, 2013 1:01 pm

பொரித்த பரோட்டா

சப்பாத்தி வகைகள் - Page 3 299767_290451864318127_872900888_n

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், ஆப்பசோடா - அரை சிட்டிகை, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் பால், உப்பு, சோடா சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பரோட்டாவுக்கு சொன்ன செய்முறையில், பூரியை விட சற்றுப் பெரிய அளவில் திரட்டிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பரோட்டாக்களைப் பொரித்தெடுங்கள். விருதுநகர் மாவட்டத்து ஸ்பெஷல் பரோட்டா இது.

நன்றி முகநூல்


சப்பாத்தி வகைகள் - Page 3 Mசப்பாத்தி வகைகள் - Page 3 Aசப்பாத்தி வகைகள் - Page 3 Dசப்பாத்தி வகைகள் - Page 3 Hசப்பாத்தி வகைகள் - Page 3 U



சப்பாத்தி வகைகள் - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சப்பாத்தி வகைகள் - Page 3 Empty Re: சப்பாத்தி வகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum