புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
69 Posts - 41%
heezulia
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
6 Posts - 4%
prajai
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
4 Posts - 2%
Saravananj
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
184 Posts - 39%
mohamed nizamudeen
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முடிவல்ல... தொடக்கம்..! I_vote_lcapமுடிவல்ல... தொடக்கம்..! I_voting_barமுடிவல்ல... தொடக்கம்..! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிவல்ல... தொடக்கம்..!


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat 31 Oct 2009 - 11:08




முடிவல்ல... தொடக்கம்..! Ld2
"இதோ... இதோ... நான் இறந்து போகிறேன். அதோ... அதோ... என் உடலை மீண்டும் உயிர்ப்பிக்க டாக்டர்கள் போராடிக் கொண்டிருப்பதை அதே அறையில் ஒரு மூலையில் 'மிதந்தபடி நான் காண்கிறேன். என்ன ஆச்சரியம்! ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம் என்னைச் சுற்றி வருகிறது. திடீரென எங்கிருந்தோ ஒரு குரல். மறைந்த என் தந்தையினுடையது. "ஏன் உன் பச்சிளம் குழந்தையை விட்டுவிட்டு என்னிடம் வரப்பார்க்கிறாய்? சென்று விடு என் அருமை மகளே!' என உருக்கமாய் வேண்டுகிறார். அதற்குப் பின்... சில நிமிட மயக்கம்... பின், ஐயோ.. அம்மா.. தாங்க முடியாத உடல்வலி... மீண்டும் உடலோடு உயிர் ஒட்டிக்கொண்டு விட்டது.''

பத்தாண்டுகளுக்கு முன் லண்டன் மருத்துவமனையில் பிரசவத்தின் போது இறந்து போய், அரைமணி நேர டாக்டர்களின் போராட்டத்திற்குப் பின் மீண்டும் உயிர் பெற்ற கிருஷ்டின் எல்லிங்கம் என்ற பெண்ணின் நிஜ அனுபவம் இது. பி.பி.சி. நியூஸ் சேனல் ஒளிபரப்பிய இச்செய்தி 'மரணத்திற்குப் பின் நாம் எங்கே செல்கிறோம்' என்ற புதிருக்கு சிறு விளக்கத்தை தந்தது.

ஏழு உலகை ஆளும் மனிதனுக்கு நிரந்தர புதிர், மரணம். எந்த தொந்தரவும் இல்லாத, கனவும் இல்லாத நீண்ட தூக்கம் அது. மரணம் எப்போது வரும் என்று சொல்லுவ தில்லை; எப்படி வரும் என்று சொல்லுவதுமில்லை. அது காந்திக்கும், கென்னடிக்கும் துப்பாக்கி குண்டு மூலம், வந்தது. கட்டபொம்மனுக்கும், பகத்சிங்குக்கும் கயிறு மூலம் வந்தது. நேதாஜிக்கும் அணு விஞ்ஞானி பாபாவுக்கும் விமானம் மூலம் வந்தது. தாமசுக்கும், சீசருக்கும் கத்தி மூலம் வந்தது. சாக்ரடீசுக்கும், அலெக்சாண்டருக்கும் விஷம் மூலம் வந்தது.

மரணத்தின் தத்துவத்தை மறந்து அல்லது மறைத்து 'நீயில்லாமல் நானில்லை' என்று கணவன் சொல்வதும், 'உயிரே போனாலும் உங்களை விட்டுப் பிரியவே மாட்டேன்' என்று மனைவி சொல்வதும் உலகில் இரண்டு மிகப் பெரிய பாசப்பொய்கள். தனிப் பயணம் தானே மரணத்திற்கு அழகு!


நட்பைப்பற்றி நாளும் பேசுகிறோம். ஆனால், இவ்வுலகில் பல்லாண்டுகள் நிலைத்து நிற்பது உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள நட்புதான். எப்படிப்பட்ட நண்பர்கள் இவர்கள்! மழையிலும், வெயிலிலும், இரவிலும், பகலிலும், இன்பத்திலும், துன்பத்திலும், வறுமையிலும், செல்வத்திலும், வெற்றியிலும், தோல்வியிலும் இணைந்தே நூறாண்டு நிலைக்கும் நட்பு இது. ஆனால் பாருங்கள். ஒரு நாள் இயற்கை மரணத்தின்போது உயிர், உடலுக்கு துரோகம் செய்து விட்டுப் பிரிந்து ஓடிவிடுகிறது. அல்லது விபத்து போன்ற மரணத்தின் போது, உடல் உயிருக்கு துரோகம் செய்து விட்டுப் பிரிந்து ஓடிவிடுகிறது.

மனித வாழ்க்கையை ஒரு ரெயில் பயணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.ரெயிலில் ஏறுகிறோம். பயணம் தொடங்குகிறது. அங்கு நம்மைப் போலவே பலர். சிறிது நேரம் உட்காருகிறோம்; சிறிது நேரம் படுக்கிறோம்; பசி எடுக்கும்போது சாப்பிடுகிறோம். இடை யிடையே ஜன்னல் வழியே தோன்றும் காட்சிகளைப் பார்க்கிறோம். சில காட்சிகளை கொஞ்ச நேரம் பார்க்க வேண்டும் என்று நாம் விரும்பலாம். ஆனால் ரெயில் நிற்காது. நாம் பார்ப்பது வேகமாக மறைந்து விடும். போகப்போக ஒவ்வொருவராக இறங்கு கிறார்கள். அதற்குப் பதில் சிலர் புதிதாக ஏறுகிறார்கள். கடைசியில் நாமும் ஒரு நிறுத்தத்தில் இறங்கி பயணத்தை முடித்துக் கொள்கிறோம்.

உயிரைத் தக்கவைத்துக் கொள்ள நாம் போடும் திட்டங்களை தவிடுபொடியாக்கக் கூடியது மரணம். இலக்கணம் என்று எதுவும் இதற்குக் கிடையாது. எல்லா கெட்ட பழக்கங்கள் உடையவர் 90 வயது வரை வாழ்கிறார். நல்ல பழக்கங்கள் உடையவர் 40 வயதில் மறைகிறார். 10-வது மாடி பிளாட்டில் பாதுகாப்பாக வசிப்பவர் திடீரென இறக்கிறார். பிளாட்பாரத்தில் அசுத்தமாக வாழ்பவர் பலகாலம் தாக்குப் பிடிக்கிறார். நன்னெறி கொண்டவரை அகால மரணம் தாக்குகிறது. எந்நெறியும் இல்லாதவர் நீடூழி வாழ்கிறார். இப்படி விஞ்ஞானத்தையும், மருத்துவத்தையும், அறத்தையும் புரட்டிப் போடு கிற புதிராகவே மரணம் இருந்து வருகிறது.

வாழும் போது அடக்கம் வேண்டும். 'என்னை யாரும் அசைக்க முடியாது' என கொக்கரிக்கக் கூடாது. ஏனெனில் ஒரு நாள் நான்கு பேர் நாம் அறியாமலேயே நம்மை அசைக்கப் போகிறார்கள். இருக்கிறபோது பிறருக்கு உதவிட வேண்டும். 'உயிரே போனாலும் தர மாட்டேன்' என்று கர்ஜிப்பதில் பயனில்லை. ஏனெனில், உயிர் போனபின் நாம் தராமலேயே எடுத்துக்கொள்ளப் போகிறார்கள். உற்றார், உறவினரோடு அனுசரித்துச் செல்ல வேண்டும். 'எனக்கு யார் தயவும் தேவையில்லை' என எக்காளமிடுவது அறியாமை. ஏனெனில், ஒரு நாள் தூக்கிச் செல்லப்படுகையில், பின்னால் கூட்டம் இல்லையெனில் அனாதைப் பிணம் என அழைக்கப்பட்டு விடுவோம். அமைதியான வாழ்க்கைக்கு வித்திட வேண்டும். 'வாடா... நீயா, நானா.. இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்' என்று யாரையும் சண்டைக்கு அழைக்கக்கூடாது. ஏனெனில் ஒரு நாள், இரண்டில் ஒன்றல்ல, மரணம் என்கிற ஒன்றைத்தான் பார்க்கப் போகிறோம்.

மரணம் என்பது தொடக்கத்தின் முடிவா அல்லது முடிவின் தொடக்கமா என்பதற்கு இதுவரை விடை கண்டாரில்லை. ஆனால் ஒன்று. ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு உண்டு. பிறப்புக்கு முடிவு இறப்பு. சத்தத்திற்கு முடிவு மவுனம். வெளிச்சத்திற்கு முடிவு இருட்டு. பயணத்திற்கு முடிவு ஓய்வு. கதைக்கு முடிவு கிளைமாக்ஸ். தொடருக்கு முடிவு நிறைவு.

வந்தார் இங்கு போயாக வேண்டும். கன்றுக்கு வழிவிட்டு வாழை வீழ்ந்தாக வேண்டும். பிள்ளைக்கு வழி விட்டு பெற்றோர் மறைந்தாக வேண்டும். போய்க்கொண்டிருக்கிற கிïவில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். அல்ல... அல்ல.. நகர்ந்து கொண்டிருக்கி றோம். 'முடியாது, நான் நகர மாட்டேன். இங்கேயே நிற்பேன்' என்று அடம் பிடிக்க முடியாது. 'யோவ்... போய்யா கால் வலிக்கிறது' என்று பின்னால் நிற்பவர்கள் சத்தம் போடுவார்கள். ஆனால் உனக்கு, எனக்கு என்று போட்டி போடாத, முன்னால் இருப்ப வர்களை முந்திச் செல்லாத அமைதியான 'கியூ' இது.

இதற்காக, மரணத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை. இதுவரை பலகோடி பேர் சாவை சந்தித்துள்ளனர். இவ்வுலகில் வாழ்வோரைவிட இறந்தவர்களின் எண் ணிக்கையே அதிகம். எனவே மெஜாரிட்டி மடிவோர் பக்கமே. ஒரு நாள் ஆயுள் என்பதால், ஈசல் பூச்சி ஒப்பாரி வைப்பதுமில்லை; 150 ஆண்டு ஆயுள் என்பதால் ஆமை தலைக்கனம் பிடித்து அலைவதுமில்லை. இன்றைய காலம் நம் கையில்; கடமையைச் செய்து முடிப்போம்.

யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் போய்ச் சேர வேண்டும் என்று நம்மில் ஒவ்வொரு வரும் விரும்புவதில் தவறில்லை. இதற்கு 'எக்சிட் இன் பார்ம்' என்று பெயர். கிரிக்கெட் வீரர், நன்றாக விளையாடுகிறார் என்று ரசிகர்கள் சொல்லும்போதே ஓய்வு பெற்றுவிட நினைப்பார். பாப்புலர் நடிகர், சூப்பராக நடிக்கிறார் என்று பேசப்படும்போதே நடிப்பிலிருந்து விலகி விட நினைப்பார். நன்றாக எழுதுகிறார் என்று பாராட்டப்படும்போதே எழுதும் தொடரை எழுத்தாளர் நிறைவு செய்துவிட நினைப்பார். இதேபோல்தான், 'நோயிலும், வலியிலும் இன்னும் ஏன் தான் இருக்கிறாரோ' என்று உற்றாரும், மற்றோரும் முனகுவதற்கு முன் இயற்கை எய்தினால் அதுவே பாக்கியம்.

ஆனாலும் காலத்தையும், இயற்கையையும் மீறி ஜெயிக்க வேண்டும் என்றால் நல்ல மனம் கொண்ட துணிச்சல் கொண்ட, ஆற்றல் கொண்ட மனிதர்களாக நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் கணித மேதை ராமானுஜம் (32), பாரதி (39), கட்டபொம்மன் (38), விவேகானந்தர் (38), மார்ட்டின் லூதர் கிங் (39), புருஸ் லீ (32), போன்றவர்கள் அகால மரணமடைந்தாலும், இன்றும் இவர்களை உலகம் இளைஞர்ளாகவே நினைவில் வைத்துள்ளது. இவர்கள் 'லிவ் பாஸ்ட், லிவ் ஸ்மார்ட்' என்ற வகையைச் சார்ந்தவர்கள்.

மரணத்தை மனிதன் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. இதனால் 'பிறப்பது ஒரு முறை, இறக்கப்போவது உறுதி' என்பதை நினைவில் கொண்டு அடக்கம், பொறுமை, தயாள மனம், ஒற்றுமை போன்ற குணநலங்ன்களின் அடிப்படையில் வாழ முற்படும் எண்ணம் தோன்றும். இம்மண்ணில் எத்தனையோ மகான்கள், தலைவர்கள், அறிஞர்கள், தத்துவஞானிகள் தோன்றி நம்மை, அறவழியில் வாழ அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் வன்முறையும், இனக்கலவரமும், அநீதியும், சுயநலமும் உலகில் ஒழிந்த பாடில்லை. ஒருவேளை, மரணத்தை இவர்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்தி எச்சரித்தால் மாறுவதற்கு வாய்ப்புண்டு என்ற கோணத்தில் நாம் சிந்திப்பது நல்லது. யார் எல்லை மீறி செயல்பட்டாலும் 'மைன்ட் யுவர் மரணம்' என்று அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

உலகம் உருண்டை மட்டுமல்ல; அது ஒரு பூஜ்ஜியம், சூன்யம், வெற்றிடம் என்பதை புரிந்து கொண்டு விட்டால் 'வாழு, வாழ விடு' என்பதன் அவசியம் எல்லோருக்கும் புரிந்து விடும். அப்போது பிறப்பும், இறப்பும் இங்கு சுமூகமாக நிகழும். அதுவே எல்லோருக்கும் நலம் பயக்கும். நல்லதை எண்ணி, நல்லதை செய்து, நல்லபடி வாழ்ந்து அறவழியில் பயணித்தால், நாம் நினைப்பது எதுவாயினும் அதை அடைவது 'தூரமில்லை; தொட்டுவிடலாம்'

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக