புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:17 pm

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் 1520808_599158266823941_931734593_n

லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 'சட்டப் பஞ்சாயத்து’ என்ற இயக்கம்.

இந்த அமைப்புக்கான தொலைபேசி சேவை தொடக்க விழா சென்னை, தி.நகரில் நடந்தது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோ விழாவில் பேசும்போது, ''ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், கேஸ் இணைப்பு, மின் இணைப்பு, பட்டா மாற்றம், கல்விக் கடன் போன்ற அரசு சேவைகளை எப்படி லஞ்சம் தராமல் பெறுவது என்ற வழிகாட்டுதலை எங்கள் சேவை மையம் வழங்கும்!'' என்றார்.

அமைப்பின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், ''தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தும் முறை, தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் முகவரி மற்றும் தேவைப்படும் தொலைபேசி எண் போன்ற தகவல்களையும் இங்கே தருவோம். அனைத்து மக்களும் நல்லது தரும், நீதி தரும் நல்லாட்சி நாட்டில் மலர்ந்திட தொடங்கப்பட்டதுதான் இந்த இயக்கம். இது எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு போன் போதும். இப்போது நாங்கள் ஒரு தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தப் போகிறோம். அந்த எண்ணுக்கு டயல் செய்யுங்கள். உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்'' என்று பேசி முடித்தார்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொது சேவை எண் 7667100100. இதை சகாயம் ஐ.ஏ.எஸ். அறிமுகப்படுத்திப் பேசினார். 'இதுபோன்ற அமைப்புகளின் சேவை தமிழகத்துக்கு அவசியம் தேவை. இன்றைய தமிழகத்தில் லஞ்சம், ஊழலைக்கூட ஒழித்துவிடலாம். ஆனால், மதுவை ஒழிக்க முடியுமா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் நான் ஆட்சியராகப் பணியாற்றியபோது நள்ளிரவு 12 மணிக்கு ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். எனக்கோ எங்காவது சட்ட - ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விட்டதா... அல்லது எங்காவது கலவரமா என்ற பதற்றத்தில், 'சொல்லுங்க..’ என்றேன்.

'ஐயா... கலெக்டர் சார் பேசுறீங்களா?’

'ஆமாம்... சொல்லுங்க!’

'நான் உசிலம்பட்டியில் இருந்து பேசுறேன்’ என்று சொல்லவும், எனக்கு பதற்றம் மேலும் அதிகமானது. 'என்ன பிரச்னை சொல்லுங்க...’

'ரொம்ப முக்கியமான பிரச்னைங்க ஐயா...’

'என்னன்னு சொல்லுங்க...’ என்றேன் மேலும் பதற்றமாக.

'உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் இருக்குல்ல.. அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு டாஸ்மாக் கடை இருக்குதுல்லய்யா... அந்த டாஸ்மாக் கடையில விற்கும் ரம்ல ஒரு வாரமா கிக்கே இல்லைய்யா... அதுக்கு நீங்கதான் எதாவது செய்யணும்’ என்றார்.

ரம்மில் கிக் இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரை நள்ளிரவு 12 மணிக்கு அழைத்துப் பேசும் அளவுக்கு தமிழன் முன்னேறிவிட்டான்.

லஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவையும் ஒழிக்க வேண்டும் என்றால் அரசு அலுவலர்கள் முதல் மக்கள் வரை அத்தனை பேர் மனதிலும் மாற்றம் வரவேண்டும். நான் எந்த அலுவலகத்துக்கு மாறுதலாகிப் போனாலும் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற போர்டை அங்கே வைக்கச் சொல்வேன். தமிழகம் முழுவதும் எல்லா அலுவலகங்களிலுமே இந்த போர்டை வைக்கலாம். இன்றைக்கு ஊழல் செய்பவர்கள் வெகு வலிமையாக இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்றால் துணிச்சலும், நேர்மையும் மட்டும் போதாது. மக்களுக்கு சட்ட அறிவும் மிகவும் அவசியம்.

இன்றைக்கும் ஒரு நெசவாளனின் தினக்கூலி வெறும் 75 ரூபாய்தான். ஆனால், அரசு அதிகாரிகளின் சம்பளம் இதைவிட பல மடங்கு அதிகம். எனவே, நெசவாளர்கள், விவசாயிகள் போன்றவர்களின் நலனுக்காக அரசு அதிகாரிகள் பலமடங்கு பாடுபட வேண்டும். அதிகாரிகள் ஊழல் மனநிலையில் இருந்து மாறி நேர்மையாக இருந்தால் சமூகம் மேம்படும். நாடு எழுச்சி பெறும்.

என்னை இதுவரை 21 முறை பணிமாற்றம் செய்துள்ளனர். எத்தனை முறை மாற்றினாலும் கவலைப்பட மாட்டேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வாங்கித்தராமல் ஓயவும் மாட்டேன். ஒவ்வொரு முறை என்னை இடமாறுதல் செய்யும்போதும், என் நேர்மை கூடிக்கொண்டே போகிறது. எங்கெல்லாம் நேர்மைக்குக் குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் நான் இருப்பேன்' என்று கம்பீரமாக முடித்தார்.

'இனி கட்டப் பஞ்சாயத்துக்கு இடம் இல்லை... சட்டப் பஞ்சாயத்து சாதிக்கும்!’ என்பதே இந்த இயக்கத்தின் தாரக மந்திரம். அது நிஜமாகட்டும்!

விகடன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:21 pm

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் 1468799_663956160321383_180208245_n

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Dec 19, 2013 5:21 pm

சிவா wrote:''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் 1520808_599158266823941_931734593_n

ஒவ்வொரு முறை என்னை இடமாறுதல் செய்யும்போதும், என் நேர்மை கூடிக்கொண்டே போகிறது. எங்கெல்லாம் நேர்மைக்குக் குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் நான் இருப்பேன்' என்று கம்பீரமாக முடித்தார்.
மேற்கோள் செய்த பதிவு: 1039620

சபாஷ் சார். உங்களை நாமக்கல் மாவட்ட மக்கள் ரொம்பவும் மிஸ் பண்றோம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 15, 2014 7:57 pm

சாமி அவர்கள் சகாயத்தை அறிமுகம் செய்து நமக்கு ஒரு சகாயம் செய்துள்ளார் ! சகாயம் போன்றவர்கள் பல்கிப் பெருக வேண்டும் ! அரசியல் தம்பட்டம் அடித்துக்கொள்வோர் சகாயம் போன்றவர்களை ஏன் கண்டுகொள்வதில்லை?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Feb 17, 2014 8:09 am

தமிழ்நாடு முழுக்க அந்த சேவை வரவேண்டுமே
எங்க மாநில கலெக்டர் எப்போதும் அமைச்சருடனே சுற்றிக்
கொண்டிருப்பார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக