ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவெம்பாவை

5 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

திருவெம்பாவை - Page 4 Empty திருவெம்பாவை

Post by சாமி Sat Dec 14, 2013 6:24 am

First topic message reminder :

திருவெம்பாவை - Page 4 ETL4zjnZTwCriZPyKfRp+thiruvembaavai

புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர்.

÷பெரும்பாலும் உலகியல் இலக்கியமாகவே விளங்கிவந்த தமிழ் இலக்கியத்தை, அருளியலிலக்கியமாக மாற்றியவர் மாணிக்கவாசகர் என்றால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டாக அவர் அருளிச் செய்த திருக்கோவையாரைக் கூறலாம். அடுத்து திருவாசகத்திலும் பல பாடல்கள் மகளிர் விளையாட்டுப் பாடல்களாக உள்ளன. அவைகளில் சிவபெருமானையே தலைவனாகக் கொண்டு பக்திப் பாடல்களாக இருப்பதைக் காண்கிறோம்.

÷இது முதலான சில காரணங்களால் திருவாசகம் ஓர் ஒப்பற்ற பக்தி இலக்கியம் என்பதைத் ""திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'' என்னும் பழமொழி உணர்த்துகின்றது. இம்முறையில் அமைந்த பாடல்களுள் "திருவெம்பாவை'ப் பாடல்கள் முதலிடத்தைப் பெறுகின்றன.

÷ஓர் ஆண்டில் நிகழும் பன்னிரண்டு திங்களில் மார்கழித் திங்கள் சிறப்புடையதாக நம் முன்னோரால் பாராட்டப்பட்டு வருகின்றது. அத்திங்கள் முழுவதும் இறை வழிபாட்டுத் திங்களாகவே முன்னோரால் கொள்ளப்பட்டது.

÷மக்கள் ஆண்டில் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் என்றும், அந்த நாளில் விடியற்காலை நேரம் மார்கழித் திங்கள் என்னும் மரபாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் மற்றை நாட்களிலெல்லாம் எவ்வாறு இருப்பினும், மார்கழித் திங்களில் பெரும்பாலும் எல்லா மக்களுமே விடியலில் எழுவதும், நீராடுவதும், திருக்கோயில் சென்று வழிபடுவதும் ஆகிய ஒழுக்கமுடையவர்களாய் இருப்பர். அவர்களில் மணம் ஆகாத கன்னிப் பெண்டிர் அத்திங்களில் ஒருவரையொருவர் எழுப்பி, ஒன்றாகக் கூடிக்கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியும் வணங்கியும் வருவார்கள்.

இந் நிலைமையில் சிவநெறிச் செல்வரது மகளிர் நிலையில் வைத்து மாணிக்கவாசகர் "திருவெம்பாவை'யை அம்மகளிர் கூற்றாக அருளிச் செய்துள்ளார். இப்பகுதியில் இலக்கியச் சுவையான நவரசங்களையும் நாம் காண்பதோடு, சிவபெருமானது அளவிலா பக்திச் சிறப்பையும் காண்கிறோம். தேவர்கள் முப்பத்து மூன்று கோடியினர் என்பது ஒரு வழக்கம். எண்ணிறந்த தேவர்கள் யாவருக்கும் தலைவனாக விளங்குபவன் சிவபெருமானே என்பது சைவ சமய முடிவான கொள்கை. அத்தகைய அவனது பெருமையை திருவெம்பாவையில் மிக விளக்கமாக உணர முடிகின்றது. ÷திருவெம்பாவைப் பாடல்கள் இருபது. அவைகளில் பதினெட்டாவது பாடல் ""அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்'' எனத் தொடங்குவது. திருவெம்பாவையை மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிச்செய்தார் என்பது புராணம். அதுபற்றி சிவபெருமானை "அண்ணாமலையான்' என்றே குறிப்பிடுகின்றார். அவருடைய திருவடியின் சிறப்பை இதன் இறுதிப் பாடலில் விரிவாக அருளுகின்றார்.

சிவபெருமான் திருவடிகளே உலகத்திற்கு முதலும் முடிவுமாய் உள்ளது என்பதையும்; அவைகளே ஐந்தொழில் ஆற்றுகின்றன என்பதையும் அப்பாடல் கூறும். எனவே, அவைகளிலும் மிக்க பொருள் வேறொன்று இல்லை என்பது விளங்கும். அகநிலையில் இவ்வாறு இருப்பினும், புறநிலையிலும் அவற்றின் சிறப்பை மாணிக்கவாசகர் இப்பாடலில் விளக்குகின்றார்.

அனைத்துத் தேவர்களும் சிவபெருமானிடம் சென்று அவனுடைய திருவடிமேல் வீழ்ந்து வணங்குகின்றார்கள். அவ்வாறு வீழ்ந்து வணங்கும் யாவரும் ஒளிமிகுந்த மணிக்கற்களால் இழைக்கப்பெற்ற முடி புனைந்தவர்களேயாவர். அம் முடிகள் எல்லாம் சிவபெருமான் திருவடியில் படும்பொழுது மணிக்கற்கள் பலவும் ஒளி வீசுகின்றன. அதே சமயத்தில் சிவபெருமான் திருவடிகளும் ஒளியை வீசுகின்றன. இவைகளில் எந்த ஒளி பேரொளி என்பதை இங்கே மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். ÷அனைத்துத் தேவர்களுடைய முடிகளிலுள்ள மணிகளின் ஒளித்திரட்சி சிவபெருமானின் திருவடிகள் வீசும் ஒளியின் முன் வேறு காணப்படாது அதனுள் அடங்கிவிடுகின்றன. இந்தச் செய்தியை மாணிக்கவாசகர், நீராடச் சென்ற பெண்கள், "விண்மீன் ஒளிகள் கதிரவன் ஒளியால் மறைவதற்கு முன் நீராட வேண்டும்' என்பதைக் குறிக்குமிடத்தில் இடம்பெறச் செய்கிறார்.

(மேற்கண்டவை மகாவித்துவான் சி. அருணைவடிவேல் முதலியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.)

தொடரும்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


திருவெம்பாவை - Page 4 Empty Re: திருவெம்பாவை

Post by ayyasamy ram Sun Dec 13, 2015 5:45 pm

திருவெம்பாவை - Page 4 103459460 திருவெம்பாவை - Page 4 3838410834
-
திருவெம்பாவை - Page 4 T1qMSoLQTLy5qSytDztE+be231ab8-c52f-4733-bf2e-9b3b058d576d_S_secvpf.gif
-

சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக, மிக விசேஷமானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மார்கழியை நோன்பு மாதம் என்று கூறுவதே சாலப் பொருந்தும்.

நோன்புக்கு புலனடக்கம் இன்றியமையாதது. நமது நாட்டில் மழை, குளிர் காலங்களில் தான் பெரும்பாலும் விரத நாட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவர்களின் பகல் காலமான தை முதல் ஆனி வரை சுப காரியங்கள், அதாவது விவாகப் பேச்சுகள், திருமணங்கள் நடத்துகின்றோம்.

தேவர்களின் இரவு காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களில் விரதம், தியானம் முதலியவற்றைச் செய்கிறோம். விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எனவே ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதம் மார்கழி என்று கூறப்படுகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருவெம்பாவை - Page 4 Empty Re: திருவெம்பாவை

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 6:22 pm

சாமி wrote:
÷ஓர் ஆண்டில் நிகழும் பன்னிரண்டு திங்களில் மார்கழித் திங்கள் சிறப்புடையதாக நம் முன்னோரால் பாராட்டப்பட்டு வருகின்றது. அத்திங்கள் முழுவதும் இறை வழிபாட்டுத் திங்களாகவே முன்னோரால் கொள்ளப்பட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1038417
திருவெம்பாவை - Page 4 3838410834 திருவெம்பாவை - Page 4 103459460 திருவெம்பாவை - Page 4 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருவெம்பாவை - Page 4 Empty Re: திருவெம்பாவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum