ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Empty நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்

Post by ராஜா Mon Dec 09, 2013 11:10 am

நேற்று சிங்கபூர் லிட்டில் இந்தியாவில் நடந்த கலவரம் இது . அங்குள்ள நண்பர்கள் யாராவது இது பற்றிய முழு விபரம் தரமுடியுமா.







ஈகரை உறவுகளின் கருத்துக்களும் வரவேற்கபடுகின்றன
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Empty Re: நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்

Post by சிவா Mon Dec 09, 2013 11:46 am

நேற்று சிங்கப்பூரில் பஸ் மோதி 33 வயதுடைய (புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் எனக் கூறுகிறார்கள், உறுதியாகத் தெரியவில்லை) அந்நியத் தொழிலாளி மரணமடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மாபெரும் கலவரமாக வெடித்துள்ளது...

பஸ் ஒட்டுனர் மீது தாக்குதல் தொடுத்த அந்நியத் தொழிலாளிகளைக் கட்டுப்படுத்த வந்த போலிசார் மீதும் தாக்குதல் தொடர்ந்ததால் இராணுவம் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது..

இதில் 10 போலிசார் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு ஆசியாவைச் சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

இந்தச் செய்தியை என் அலைபேசியிலிருந்து பதிவிடுவதால் வீடியோ இணைக்க முடியவில்லை...!


இப்பொழுதுதான் முகநூலில் இச்செய்தியை எழுதினேன் தல...!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Empty Re: நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்

Post by ராஜா Mon Dec 09, 2013 12:03 pm

இந்த காணொளியில் வரும் உரையாடல்கள் அனைத்துமே தமிழில் தான் உள்ளது தல , "ஏற்கனவே இங்கு இன பிரச்சினை தலைதூக்குகிறது இதில் இது போன்ற கலவரங்கள் நம் மீது இன்னும் கெடுபிடிகளை திணிக்க அரசுக்கு எதுவாக இருக்கும்" என எனது நண்பர் கூறுகிறார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Empty Re: நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்

Post by ராஜா Mon Dec 09, 2013 3:10 pm

சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மிக மோசமான வன்முறை சம்பவம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. மக்கள்தொகை நெருக்கமும், இறுக்கமான கட்டுப்பாடுகளையும் கொண்ட லிட்டில் இந்தியா என்ற பகுதியில் நேற்று இரவு 33 வயதான இந்தியத் தொழிலாளி ஒருவர் தனியார் பேருந்து ஒன்று மோதியதன் விளைவாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து அங்கு கூடிய 400-க்கும் மேற்பட்டோர் வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மூன்று காவல்துறை வாகனங்கள் உட்பட ஐந்து வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தினர்.

உடனடியாக சிறப்புக் காவல்பிரிவு அங்கு வரவழைக்கப்பட்ட பின்னரே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் 27 தெற்கு ஆசிய தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிரம்படி உட்பட ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்ட குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலவரத்தைத் தூண்டுவதற்கான காரணம் எதுவாக இருந்தபோதிலும், இதுபோன்ற வன்முறை, அழிவு மற்றும் குற்றவியல் நடத்தைகளை மேற்கொண்டவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை அடையாளம் காண சட்டம் தனது முழு ஆற்றலுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

காவல்துறை ஆணையாளரான என்ஜி ஜூ ஹூ இந்த வன்முறை செயலைக் கண்டித்துள்ளார். கலவரம் செய்தலும், சொத்துகளை அழித்தலும் சிங்கப்பூரின் வழியல்ல என்று இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார்.

பல்வேறு சமூக மக்கள் வாழும் சிங்கப்பூரில் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது ஒழுங்குமுறையின் மதிப்பினை இந்த வன்முறை சம்பவம் குறைத்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Empty Re: நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Dec 09, 2013 4:35 pm

ஆமாம் அண்ணா இங்கு விரும்பத்தகாத சில விடையங்கள் நடந்தேறிவிட்டன
9:00 மணிவரை மிகச் சாதாரணமாக இருந்த (தேக்கா) லிட்டில் இந்தியா அதன் பின்னர்
சிங்கப்பூரே திரும்பிப் பார்க்கும் வகையில் முக்கியத்துவம் பெற்றது
குறிப்பிடத்தக்கது .
சுமார் இரவு 8:30 மணியளவில் இந்தியத் தொழிலாளி ஒருவர் தவறாக சாலையைக் கடக்க முற்ப்பட்ட போது அந்த விழியாக வந்த தனியார் பேருந்தால் மோதப்பட்டு இறந்தார் .
பொதுவாக லிட்டில் இந்தியா என்பது தமிழர்களுக்கான வர்த்தகப் பகுதி ஆகும் .
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மிகவும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தங்களின் நண்பர்களுக்கான வழக்கமான பகுதியில் பொழுதுபோக்குவர்.இங்குதான் வாரம் ஒருமுறை அலைபேசி அட்டை வாங்குதல்,ஊருக்குப் பணம் அனுப்புதல்,தமக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுதல் என அனைத்து நடவடிக்கைகளுமே நமது ஊருக்கு எந்தவிதத்திலும் குறையாத தமிழில் நடக்கும் .படிப்பறிவு இல்லாதவரும் தமிழில் பேசி அனைத்துப் பொருட்களையுமே வாங்க முடியும் .
அந்த விபத்தினைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சிறு பதட்டம் ஏற்படவே காவல் துறையினர் அந்தப் பகுதியில் இருந்து விலகிச் செல்லுமாறு கேட்டுகொண்டனர் .இந்த செய்தி விரைந்து பரவி அந்த சிறிய பகுதி முழுவதும் பதட்டம் தொற்றிகொண்டது .
இதற்கிடையே ஒரு போதைக் கும்பல் அனைத்து விதிமுறைகளையும் தன கையில் எடுத்துகொண்டது .அங்கு நின்றிருந்த அந்த தனியார் பேருந்தை அடித்து நொறுக்கியது பாதுகாப்புக்கு வந்த காவல்துறையின் இரண்டு வாகனங்களையும் தலைகீழாகத் தூக்கிப் போட்டனர் .அதைத் தொடர்ந்து வந்த மருத்துவ வாகனத்தையும் மற்றொரு காவல் வாகனத்தையும் தீவைத்துக் கொழுத்தியது .
நடந்த விபத்துக்கு அடுத்த நாட்டின் விதி முறைகளை மீறி இங்கு வாழ்ந்து வரும்
தமிழ்க் குடும்பங்களுக்கு மிகப் பெரிய இழிவைத் தேடித்தந்தது அனைவருக்கும் வருத்தமே . அதுமட்டும் அல்லாமல் முகப்புத்தகத்தில் கீழ்த்தரமான கருத்துக்களையும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அந்தக் கும்பல் வாங்கித்தந்தது
துரதிர்ஷ்டமே .(இது நண்பர் ஒருவரால் சொல்லக்கேட்டது)


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Empty Re: நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்

Post by சிவா Mon Dec 09, 2013 5:52 pm

ஆயுதமேந்தி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஆயுதமேந்தி இறப்புக்கு காரணமாக இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரம்படியும் வழங்கும் கடுமையான சட்டம் சிங்கப்பூரில் உள்ளது!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Empty Re: நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்

Post by ராஜா Mon Dec 09, 2013 6:34 pm

தமிழகத்தில் நடக்கும் விபத்துக்களை இவர்கள் பார்த்ததில்லையா? தமிழகத்தில் ஒரு உயிரைக் கொன்றுவிட்டு வெறும் 5000 அபராதம் கட்டிவிட்டுச் செல்லும் ஓட்டுனர்களை இவர்களுக்குத் தெரியாதா?
உண்மை .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Empty Re: நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்

Post by M.M.SENTHIL Mon Dec 09, 2013 9:41 pm

சில நேரத்தில் தமிழனே, தமிழனுக்கு விரோதியாகிறான்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Empty Re: நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்

Post by சிவா Mon Dec 09, 2013 11:43 pm

சிங்கப்பூர் கலவரம்.. உண்மையில் நடந்தது என்ன?

பொது ஒழுக்கம், போக்குவரத்து விதிகளில் கறார், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்காமை போன்றவை சிங்கப்பூருக்கே உரிய சிறம்பம்சங்களாகும். ஆனால் இவை அனைத்தும் நேற்று சில மணி நேரம் மீறப்பட்டதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் சிங்கப்பூர்வாசிகள். குறிப்பாக அங்கு வேலைக்குப் போய் செட்டிலாகியுள்ளத இந்தியர்கள் - தமிழர்கள். சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. மக்கள் தொகையில் பத்து சதவீதமுள்ளனர் தமிழர்கள்.

சிங்கப்பூர் கலவரம்.. உண்மையில் நடந்தது என்ன?

இந்த கலவரத்துக்கு தமிழர்கள் காரணம் என ஊடகங்களில் பரவும் செய்திகள் மற்றும் அதுகுறித்த விமர்சனங்கள் சிங்கப்பூர் தமிழர்களை பெரிதும் பாதித்துள்ளது. "இந்த கலவரச் செய்தி காதில் விழுந்ததிலிருந்து என்னால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சும்மாவே 'போன இடத்தில் தமிழர்கள் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு போகவேண்டியதுதானே' என்பார்கள். இப்போது கேட்கவே வேண்டாம்...

என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை. சிங்கப்பூரில் இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை," என்கிறார் சிங்கப்பூர் வாழ் தமிழர் ரமேஷ்.

சரி அப்படி என்னதான் நடந்தது? "இது ரொம்ப சாதாரண சம்பவம். ஆனால் தேவையில்லாமல் பெரிய கலவரமாக்கிவிட்டார்கள். ஆனால் அத்தனையையும் ஜஸ்ட் 2 மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது சிங்கப்பூர் அரசு. லிட்டில் இந்தியா பகுதியில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் கூட்டம் அலைமோதும். கூட்டம் என்றால் உங்க ஊரு கூட்டம் எங்க ஊரு கூட்டமில்லை...

நம்ம தி நகர் ரங்கநாதன் தெருவைவிட அதிகமாக இருக்கும் நெரிசல். அந்தப் பகுதியில் பீர் போன்ற மதுவகைகளை வெளியில் வைத்தே குடிக்க அனுமதி கொடுத்துள்ளது அரசு. பணியாளர்கள், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷைச் சேர்ந்த இளைஞர்கள்தான் நிறைய அங்கு வந்து குடிப்பார்கள். குடிபோதையில் பஸ் ஏறப்போன இளைஞன் தவறி விழுந்துவிட்டான். அந்த விபத்தில் அங்கேயே அவன் இறந்துவிட்டான். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகள் சேதமாக்கப்பட்டு, போலீசார் தாக்கப்பட்டு, ஒரு ஆம்புலன்ஸ் கூட எரிந்துவிட்டது.

இந்த கலவரம் தொடர்பாக 27 பேரை சிங்கப்பூர் போலீஸ் கைது செய்துள்ளது. கலவரம் நடந்த பகுதியில் வைக்கப்பட்ட சிசிடிவி காமிராவில் பதிவான முகங்களை வைத்து கலவரக்காரர்களை அடையாளம் கண்டு வருகிறார்கள் போலீசார்.

கலவரம் நடந்த இரண்டு மணி நேரத்துக்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது.

ஏற்கெனவே வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது. இனி வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கான நிபந்தனைகள் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி," என்கிறார் ரமேஷ்.

தட்ஸ்தமிழ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Empty Re: நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்

Post by சிவா Mon Dec 09, 2013 11:45 pm

இந்தியர்கள் - வெளியேற தடை ! இந்தியாவிற்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து ....!!!

400 இந்திய தமிழ் குற்றவாளிகளை கண்டு பிடித்து சிறையில் அடைக்கும் வரை - இந்தியாவுடனான விமான சேவையை நிறுத்தி உள்ளது சிங்கப்பூர் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Empty Re: நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum