Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள்
+4
krishnaamma
M.M.SENTHIL
ராஜா
சிவா
8 posters
Page 1 of 1
17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள்
இந்திய இளம் தலைமுறையினர் 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகி வருவதாக இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (பி.எச்.எப்.ஐ.) எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மது, புகையிலைப் பழக்கம் வளர்ந்த நாடுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் வளரும் நாடுகளான இந்தியா, சீனாவில் மதுப் பழக்கம் இளைஞர்களை ஆட்டிப் படைத்து வருகிறது.
வார விடுமுறை என்றால் மது விருந்து என்பது இப்போது பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. இப்போது டிசம்பர் மாதம். இந்த சீஷனில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுக்கின்றன. இதனால் மது வியாபாரம் செழித்து கொழிக்கிறது.
இந்தியர்களைப் பொறுத்தவரை பீர், ஒயின் மது வகைகளைவிட ஆல்கஹால் அதிகம் கலந்த விஸ்கி, ரம் மதுபானங்களையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் அவர்களின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
குடி குடியைக் கெடுக்கும், குடலையும் கெடுக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்தாலும் குடியில் மூழ்கிய குடிமகன்களால் அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை.
நாடு முழுவதும் மது போதையால் நேரிடும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமூகவிரோத செயல்கள், வன்முறைச் சம்பவங்களுக்கும் மதுவே முக்கியக் காரணமாக உள்ளது. தொழிலாளர்களின் போதைப் பழக்கத்தால் பணியிடங்களில் உற்பத்தித் திறன் குறைகிறது.
மாயாஜால விளம்பரங்கள்
இந்திய இளைஞர்களிடம் மதுப் பழக்கம் அதிகரிப்பதற்கு மதுபான நிறுவனங்களின் மாயாஜால விளம்பர தந்திரங்களும் வலுவற்ற சட்டங்களுமே முக்கிய காரணம் என்று பி.எச்.எப்.ஐ. சுட்டிக் காட்டியுள்ளது.
நமது நாட்டில் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுபான நிறுவனங்கள் வேறு பொருள்களின் பெயரில் தங்கள் சரக்குகளை விளம்பரப்படுத்துகின்றன. குடிநீர் பாட்டில், சோடா, சி.டி.க்கள், குளிர்பானங்களின் பெயர்களில் மதுபான வகைகளுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் தோன்றி இளம் வயதினரை எளிதாக ஈர்க்கின்றனர். சில முக்கிய விருது நிகழ்ச்சிகளுக்கும் மதுபான நிறுவனங்கள், தங்களின் கிளை நிறுவனங்கள் மூலம் நிதியுதவி அளித்து மறைமுகமாக விளம்பரம் தேடிக் கொள்கின்றன.
திரைப்படங்களில் சரக்குகளின் பெயர்
இப்போது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களின் பாடல்கள், வசனங்களில் மதுபான வகைகளின் பெயர்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன. சில படங்களில் மதுபானங்களுக்கு மறைமுகமாக விளம்பரமும் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைத்தளங்களிலும் மதுபான விளம்பரங்கள் விதைக்கப்படுகின்றன.
இதனால் இந்திய இளைஞர்கள் 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் கொடுமை அரங்கேறி வருகிறது.
இதே நிலை நீடித்து போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறினால் நாட்டின் மனித வளம் மிக மோசமாகப் பாதிக்கப்படக் கூடும் என்று பி.எச்.எப்.ஐ. எச்சரித்துள்ளது.
எனவே, இப்போதுள்ள சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும், புதிய மதுபான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது, மறைமுக விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பி.எச்.எப்.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
தி இந்து
Re: 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள்
ஐயோ ஐயோ ஒரே சிப்பு சிப்பா வருது முதலில் அரசாங்கம் சாராயம் விற்பதை நிறுத்த சொல்லுங்க ... அப்புறம் அறிவுறுத்தலாம்எனவே, இப்போதுள்ள சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும், புதிய மதுபான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது, மறைமுக விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பி.எச்.எப்.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
Re: 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள்
மனிதனின் மனதை மாற்றி, மிருகமாய் வாழ வைக்கும் சாராயத்தை முதலில் தடை பண்ணுங்கள் புண்ணியவான்களே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1036889M.M.SENTHIL wrote:மனிதனின் மனதை மாற்றி, மிருகமாய் வாழ வைக்கும் சாராயத்தை முதலில் தடை பண்ணுங்கள் புண்ணியவான்களே.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள்
தமிழக முதல்வரும் தண்ணி அடிப்பங்களோ, இந்த தண்ணிக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர்ராங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1037141மாணிக்கம் நடேசன் wrote:தமிழக முதல்வரும் தண்ணி அடிப்பங்களோ, இந்த தண்ணிக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர்ராங்க.
தண்ணி அடிக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன், ஆனால் மிக்ஸ் பண்ண அம்மா மினரல் வாட்டர் தருவாங்க.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1036886ராஜா wrote:ஐயோ ஐயோ ஒரே சிப்பு சிப்பா வருது முதலில் அரசாங்கம் சாராயம் விற்பதை நிறுத்த சொல்லுங்க ... அப்புறம் அறிவுறுத்தலாம்எனவே, இப்போதுள்ள சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும், புதிய மதுபான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது, மறைமுக விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பி.எச்.எப்.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள்
குடிப்பழக்கத்தை ஒழிக்க முடியாது...!
-
அளவோடு குடித்து “வளமோடு” வாழுமாறு
கோஷம் எழப்பலாம்..!!
-
அளவோடு குடித்து “வளமோடு” வாழுமாறு
கோஷம் எழப்பலாம்..!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள்
வளர்ப்பில் ஏதோ கோளாரு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Similar topics
» மதுவுக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்!
» நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்
» மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்)
» போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி
» அழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந்தைகள்
» நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்
» மீண்டும் அடிமையாகும் இந்தியா (இண்டெர்நெட்டால்)
» போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி
» அழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந்தைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|