ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்சன் மண்டேலா காலமானார்

+2
amirmaran
டார்வின்
6 posters

Go down

நெல்சன் மண்டேலா காலமானார் Empty நெல்சன் மண்டேலா காலமானார்

Post by டார்வின் Fri Dec 06, 2013 3:17 pm

நெல்சன் மண்டேலா காலமானார் QL6ZyPGpT5CeAFsXZSnb+131204172433_nelson_mandela__512x288_afp
மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார்.

மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.
மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார்.
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

நெல்சன் மண்டேலா காலமானார் Empty Re: நெல்சன் மண்டேலா காலமானார்

Post by டார்வின் Fri Dec 06, 2013 3:19 pm

மண்டேலா இறுதிச் சடங்குகள்- 10 நாட்களாகலாம்
தென்னாப்ரிக்காவிலும்,உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர், நெல்சன் மண்டேலாவின் மறைவு செய்தி கேட்டு, துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

ஜோஹனிஸ்பர்கில் அவரது இல்லத்துக்கு வெளியே ஏராளமான மக்கள் மெழுகுவர்த்திகளையும், மலர்களையும் வைத்துப் பிரார்த்தனைகளை இரவு முழுவதும் நடத்தினர்.

அவரது வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் வேறு பலர், நிறவெறிக்கெதிரான போராட்டத்திலிருந்து பாடல்களைப் பாடி, நடனமாடினர். சிலர் தங்கள் சிறு குழந்தைகளுடன் வந்திருந்ததைக் காண முடிந்தது.

தென்னாப்ரிக்காவில் எல்லாக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கின்றன.
இறுதிச் சடங்குகள் இன்னும் 10 நாட்களில்
நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்குகள் இன்னும் சுமார் 10 நாட்களில் நடந்து முடியும் வரை கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.
துக்க அனுஷ்டிப்புக் காலம் தென்னாப்ரிக்காவில் துவங்கிய நிலையில், தென்னாப்ரிக்காவின் அனைத்துப் பொது, அரசு கட்டிடங்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தென்னாப்ரிக்கத் தூதரகங்கள் அனைத்திலும், அஞ்சலிக் குறிப்புகளை மக்களும் பிரமுகர்களும் எழுத உதவும் வகையில், அஞ்சலிப் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன.

ஜோஹனஸ்பர்கின் புறநகர்ப்பகுதியில் உள்ள எப்.என்.பி அரங்கத்தில், தேசிய துக்கப் பிரார்த்தனை நிகழ்வு ஒன்று நடத்தப்படவிருக்கிறது.

அதன் பின்னர், பிரிட்டோரியாவில் மூன்று நாட்கள் நெல்சன் மண்டேலாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.

நெல்சன் மண்டேலாவின் உடல் கிழக்கு கேப் பகுதியில் அவர் வளர்ந்த குனு கிராமத்தில் அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படும்.
bbc tamil
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

நெல்சன் மண்டேலா காலமானார் Empty Re: நெல்சன் மண்டேலா காலமானார்

Post by டார்வின் Fri Dec 06, 2013 3:42 pm

நெல்சன் மண்டேலா காலமானார் OTbtDLRQfGtAhD6gHhX4+121210111454_mandela-1
நெல்சன் மண்டேலா காலமானார் PS8SIPPLQoSXUQ2K72b1+121210111456_mandela-2
கிழக்கு கேப் பிரதேசத்தில் ஒரு பழங்குடியினத் தலைவரின் குடும்பத்தில் பிறந்த நெல்சன் மண்டேலா, வீட்டை விட்டு ஜோஹனெஸ்பர்க் நகருக்கு ஓடி, அங்கு வழக்கறிஞராகி, நிறவெறிக்கொள்கைக்கு எதிராக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் நடத்தி வந்த போராட்டத்தில் சேர்ந்தார்.
நெல்சன் மண்டேலா காலமானார் Y9xbzAUvQrGaAcQXuAh8+121210111458_mandela-3
இளம்பருவத்தில், நெல்சன் மண்டேலாவுக்கு குத்துச் சண்டையில் ஆர்வமிருந்தது. " குத்துச்சண்டை ஒரு சமத்துவமான விளையாட்டு. குத்துசண்டை நடக்கும் மேடையில், மனிதர்களின் தரம், வயது, நிறம் மற்றும் அவர்களின் பணம் இவைகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை", என்று அவர் தனது சுய சரிதையான " சுதந்திரத்தை நோக்கிய நீண்ட நடைபயணம்" ( லாங் வாக் டு ப்ரீடம்) என்ற புத்தகத்தில் எழுதினார்.
நெல்சன் மண்டேலா காலமானார் YBaindQRKq6HBHXO8cXf+121210111503_mandela-5
1956ல், அவர் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் ஈடுபட்டதால், தேசத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது, அவர் , வின்னி மடிக்கிஸெலா என்ற சமூக சேவகியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு இரண்டாண்டுகளுக்குப் பின்னர், அவர் தனது முதல் மனைவி, ஈவ்லின் மேஸை விவாகரத்து செய்தார்.
வின்னியும் அவரும் 1958ல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் மாறி மாறி சிறைவாசத்தில் இருந்ததால் அவர்களால் நிம்மதியான குடும்ப வாழ்க்கையை பெரிதாக அனுபவிக்க முடியவில்லை.
நெல்சன் மண்டேலா காலமானார் ZbipeQtSTmkmzK9BZmMa+121210111507_mandela-6
இரண்டாவது தேசத்துரோக விசாரணைக்குப் பின்னர், நெல்சன் மண்டேலா நாசவேலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் 1964ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
1990ல் , சுமார் இருபது ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர், ஒரு வழியாக , நெல்சன் மண்டேலா விடுதலையானார்.
விடுதலை ஆன பிறகு, மண்டேலா பல நாடுகளுக்குச் சென்று, உலகத் தலைவர்கள் பலரை சந்தித்தார். நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடவும் தயாரானார்.
நெல்சன் மண்டேலா காலமானார் XclgREC4RUSmUrQXwIJQ+121210111607_mandela-11
தென் ஆப்ரிக்கர்கள் அனைவருக்கும் , ஒரு நபர் ஒரு வாக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் , நாட்டில் தேர்தல்களை நடத்துவது என்று, தென் ஆப்ரிக்க அதிபர் எப்.டபுள்யூ, டி க்ளார்க் உடன்படுவதற்கு முன்னர், கடுமையான பேச்சுவார்த்தைகள் நடந்தன. டி க்ளார்க்குக்கும், மண்டேலாவுக்கும் , அவர்கள் நிறவெறிக்கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆற்றிய பங்குக்காக, 1993ல் நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டது.
நெல்சன் மண்டேலா காலமானார் EcVach8tSjmpGDm8NK4j+121210111609_mandela-12
தென் ஆப்ரிக்காவின் முதல் ஜனநாயக பூர்வமான தேர்தல்கள் 1994 ஏப்ரல் 27ல் நடந்தன. கறுப்பின தென் ஆப்ரிக்கர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய நீண்ட வரிசைகளில் நின்றார்கள். ஏ.என்.சி கட்சி பெரும் வெற்றி பெற்றது. நெல்சன் மண்டேலா நாட்டின் முதல் கறுப்பின அதிபரானார்.
மண்டேலா ஒரே ஒரு முறைதான் பதவி வகித்தார். 1999ல் அவர் தானாக முன்வந்து பதவியிலிருந்து விலகிய வெகு சில ஆப்ரிக்கத் தலைவர்களில் ஒருவரானார் அவர். தென் ஆப்ரிக்காவின் அடுத்த அதிபர் மற்றும் ஏ.என்.சி கட்சியின் தலைவர் என்ற இரு பதவிகளுக்கும் மண்டேலாவுக்கு அடுத்தபடியாக பதவிக்கு வந்தார் தாபோ இம்பெக்கி

உலகின் மிகவும் விரும்பப்பட்ட தலைவராக மட்டுமல்லாமல், அவர் ஒரு நாகரீக உடைகள் அணிவதிலும் நாட்டமுடையவராக அறியப்பட்டார். அவர் அணிந்து கொண்ட பளிச்சென்று தெரியும் நிறத்திலான சட்டைகள் பிரசித்தம். இந்தப் படத்தில் பிரசித்தி பெற்ற நாகரீக உடுப்புகளை உருவாக்கும் டிசைனர் , பியர் கார்டினுடன் மதிய உணவருந்திய பின்னர், தான் போட்டிருந்த சட்டையைக் காட்டி " இது எப்படி இருக்கு? " என்ற பாணியில் பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கேட்கிறார் மண்டேலா !

1999ல் அதிபர் பதவியிலிருந்து இறங்கிய பின்னர், தென் ஆப்ரிக்காவின் மிகப் பிரபல்யமான தூதரானார் நெல்சன் மண்டேலா. எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2010ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டியை தென் ஆப்ரிக்கா நடத்தும் உரிமையையையும் அவர் பெற்றுத்தந்தார்.

2012ல் நெல்சன் மண்டேலா தனது 94வது பிறந்த நாளைக்கொண்டாடினார். 2009ல்தான், ஐ.நா மன்றம், அவரது பிறந்த நாளை நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாக அறிவித்தது. ஒவ்வொரு ஜூலை 18ம் தேதியும், உலக மக்கள் அனைவரும், மண்டேலா அரசியல் வாழ்க்கையில் கழித்த 67 ஆண்டுகளைக் குறிக்கும் வண்ணம், 67 நிமிடங்கள் சமூக சேவைக்காக ஒதுக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
2013 ஏப்ரலில் குளிர்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மண்டேலா மிகவும் பலவீனமாகவும், குழப்பமுற்ற நிலையிலும் காணப்பட்டதை இந்த வீடியோ காட்சி காட்டியது, சர்ச்சையை தூண்டியது. அவர் மீண்டும் ஜூன் மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
bbc tamil
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

நெல்சன் மண்டேலா காலமானார் Empty Re: நெல்சன் மண்டேலா காலமானார்

Post by amirmaran Fri Dec 06, 2013 4:11 pm

எப்பொழுது இறந்தார்


அன்புடன் அமிர்தா

நெல்சன் மண்டேலா காலமானார் Aநெல்சன் மண்டேலா காலமானார் Mநெல்சன் மண்டேலா காலமானார் Iநெல்சன் மண்டேலா காலமானார் Rநெல்சன் மண்டேலா காலமானார் Tநெல்சன் மண்டேலா காலமானார் Hநெல்சன் மண்டேலா காலமானார் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

நெல்சன் மண்டேலா காலமானார் Empty Re: நெல்சன் மண்டேலா காலமானார்

Post by Muthumohamed Fri Dec 06, 2013 9:16 pm

எனது கணிப்பில் இன்றைய உலகில் அதிக செல்வாக்கு மிக்க ஒருவர் இவர் தான்

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரிவானாக



நெல்சன் மண்டேலா காலமானார் Mநெல்சன் மண்டேலா காலமானார் Uநெல்சன் மண்டேலா காலமானார் Tநெல்சன் மண்டேலா காலமானார் Hநெல்சன் மண்டேலா காலமானார் Uநெல்சன் மண்டேலா காலமானார் Mநெல்சன் மண்டேலா காலமானார் Oநெல்சன் மண்டேலா காலமானார் Hநெல்சன் மண்டேலா காலமானார் Aநெல்சன் மண்டேலா காலமானார் Mநெல்சன் மண்டேலா காலமானார் Eநெல்சன் மண்டேலா காலமானார் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நெல்சன் மண்டேலா காலமானார் Empty Re: நெல்சன் மண்டேலா காலமானார்

Post by சிவா Sat Dec 07, 2013 9:11 am

 தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் மண்டேலா மறைவுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி இரு சபைகளும் ஒத்திவைப்பு

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும், நிறவெறிக்கு எதிராக போராடியவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன.

உறுப்பினர்கள் இரங்கல்

தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும், இனவெறியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவருமான நெல்சன் மண்டேலா (வயது 95), நுரையீரல் தொற்று பிரச்சினையால் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நேற்று பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. காலையில் பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகர் மீராகுமார், இந்த துயரச்செய்தியை சபையில் அறிவித்தார்.

பின்னர் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், உயிரிழந்த தலைவருக்கு இரங்கல் தெரிவித்து பேசினர்.

சோனியா பேச்சு

சோனியா காந்தி தனது உரையில், மண்டேலா, வாழ்நாள் முழுவதும் தென்ஆப்பிரிக்காவின் அதிபராகவே இருக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் விரும்பிய போதும், தானாகவே அரசியலை விட்டு விலகிய அவரது தியாகத்தை நினைவு கூர்ந்தார். மேலும் மண்டேலாவின் தைரியம் மற்றும் சகிப்புத்தன்மையை பாராட்டிய சோனியா, அவரை ‘தென்ஆப்பிரிக்காவின் மகாத்மா காந்தி’ என்று புகழ்ந்தார்.

பின்னர் உறுப்பினர்களின் இரங்கல் உரைகளை தொடர்ந்து, சபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார்.

மவுன அஞ்சலி

இதைப்போல மேல்–சபையிலும் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவைத்தலைவர் ஹமீது அன்சாரி தனது இரங்கல் உரையில், ‘சமகாலத்தில் மிக உயர்ந்த குணநலன்களை கொண்டு வாழ்ந்த உன்னத மனிதர், மண்டேலா’ என கூறினார். மேலும், பாராளுமன்றத்தில் கடந்த 1995–ம் ஆண்டு நெல்சன் மண்டேலா உரையாற்றியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவையை ஒத்திவைப்பதாக ஹமீது அன்சாரி அறிவித்தார்.

பிரணாப் முகர்ஜி இரங்கல்

நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சிறந்த அரசியல் மேதையான மண்டேலா, ஒரு உலக தலைவர் என்றும், இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்’ என்றும் கூறியுள்ளார். மேலும் ‘இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான நெருங்கிய உறவுக்கு, அவர் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவுகூரத்தக்கது’ என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங்

பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘மனிதரிடையே உயர்ந்த மனிதனாக வாழ்ந்த மண்டேலா இறந்துவிட்டார். அவரது இறப்பு தென்ஆப்பிரிக்காவைப்போல இந்தியாவுக்கும் பேரிழப்பு. அவர் ஒரு உண்மையான காந்தியவாதி. அவரது வாழ்வும், சேவையும் வருகிற தலைமுறைகளுக்கு உந்துதலையும், உற்சாகத்தையும் கொடுக்கும்’ என்று கூறியுள்ளார்.

இதைப்போல, ‘வாழ்நாள் முழுவதும் அநீதி மற்றும் இனவெறிக்கு எதிராக போராடியவர், மண்டேலா’ என பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கும், ‘ஒப்பற்ற சமாதான தூதுவரை உலகம் இழந்துவிட்டது’ என்று நரேந்திர மோடியும் தங்கள் இரங்கல் செய்தியில் கூறியுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெல்சன் மண்டேலா காலமானார் Empty Re: நெல்சன் மண்டேலா காலமானார்

Post by ராஜா Sat Dec 07, 2013 11:31 am

எனது ஆழ்ந்த இரங்கல்கள் , சிறந்த மகனை இந்த பூமி தாய் இழந்துவிட்டாள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நெல்சன் மண்டேலா காலமானார் Empty Re: நெல்சன் மண்டேலா காலமானார்

Post by அருண் Sat Dec 07, 2013 1:39 pm

சரித்திரம் படைத்த நாயகனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நெல்சன் மண்டேலா காலமானார் Empty Re: நெல்சன் மண்டேலா காலமானார்

Post by சிவா Sat Dec 07, 2013 1:41 pm

amirmaran wrote:எப்பொழுது இறந்தார்
மேற்கோள் செய்த பதிவு: 1036584

மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற அதிர்ச்சியில் இவரும் இறந்துவிட்டார் என்று பிபிசி செய்தியில் கூறினார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெல்சன் மண்டேலா காலமானார் Empty Re: நெல்சன் மண்டேலா காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum