புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவையான புளியோதரை செய்யும் முறை   Poll_c10சுவையான புளியோதரை செய்யும் முறை   Poll_m10சுவையான புளியோதரை செய்யும் முறை   Poll_c10 
42 Posts - 63%
heezulia
சுவையான புளியோதரை செய்யும் முறை   Poll_c10சுவையான புளியோதரை செய்யும் முறை   Poll_m10சுவையான புளியோதரை செய்யும் முறை   Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
சுவையான புளியோதரை செய்யும் முறை   Poll_c10சுவையான புளியோதரை செய்யும் முறை   Poll_m10சுவையான புளியோதரை செய்யும் முறை   Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சுவையான புளியோதரை செய்யும் முறை   Poll_c10சுவையான புளியோதரை செய்யும் முறை   Poll_m10சுவையான புளியோதரை செய்யும் முறை   Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவையான புளியோதரை செய்யும் முறை


   
   
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue Dec 10, 2013 10:38 am

புளியோதரை செய்யும் முறை

சுவையான புளியோதரை செய்யும் முறை   Sl1452

ஆறு பேருக்கு

தேவையான  பொருள்கள்

புளி - ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு

காய்ந்த மிளகாய் - 10

கொத்துமல்லி - 1 ஸ்பூன்

வெந்தயம் - 1 ஸ்பூன்

காய்ந்த எள்ளு - 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - தேவையான அளவு

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

வறுகடலை - 1 பெரிய டீஸ்பூன்

முந்திரி - தேவையான அளவு

கறிவேப்பிலை - 2 இணுக்கு

நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டிக்கும் மேல்.

செய்முறை:

புளியை தண்ணீரில் ஊறவைத்து நன்றாகப் பிழிந்து கெட்டியாக சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில் பெருங்காயத்தூளை தேவையான அளவுக்கு சேர்க்கவும். சிறிது மஞ்சள் தூளும் சேர்க்கவும்.

வேர்க்கடலையை தீய்ந்து போகாமல் சிறதளவு எண்ணெயில் பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முந்திரியையும் அதே போல லேசாக பதமாக அதிகம் சிவக்காமல் கொஞ்சம் எண்ணையில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து மிகச் சிறிதளவு எண்ணெய் விட்டு தீயை சிம்மில் வைத்து முதலில் வெந்தயம், அடுத்து கொத்துமல்லி  விதை, அடுத்து எள், அடுத்து கடலைப் பருப்பு (ஒரு ஸ்பூன் ), அடுத்து 5 காய்ந்த மிளகாய் இவற்றை சரியான பதத்தில் தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் வறுத்த மசாலாப் பொருட்களை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். மிகவும் நைசாக அரைக்க வேண்டாம். ஓரளவு அரைபட்டாலே போதுமானது. அரைத்த பொடியை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் வாணலியில் ஒன்னரைக் குழிக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பை போட்டு தாளிக்கவும். பின்  5 காய்ந்த மிளகாய்களை கிள்ளி எண்ணெயில் போடவும். அதனுடனேயே சிறிது கறிவேப்பிலை இலைகளைப் போடலாம். இப்போது கரைத்து வைத்த புளித்தண்ணீரை எண்ணெயில் உள்ள பொருட்களுடன் சேர்க்கவும். அடுப்பை மிதமாக எரிய விடவும்.

இதற்குள் சாதத்தை உதிரியான பதத்தில் வடித்துக் கொள்ளவும். சாதத்தை ஒரு தாம்பாளத்தில் கொட்டி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கையை சுத்தமாகக் கழுவிக் கொண்டு (கையுறை இருந்தாலும் அணிந்து கொள்ளலாம்) சாதத்தை கையால் எண்ணெய் ஓட்டுமாறு கிண்டிக்  கொடுக்கவும். சாதம் நன்றாக ஆறட்டும்.

இதற்குள் புளித்தண்ணீர் கொதித்தவுடன் எண்ணெய் பிரிந்து மேலே தனியே வர ஆரம்பிக்கும். ஓரளவிற்கு கெட்டிப் பதம் வந்தவுடன் புளிக்காய்ச்சலை இறக்கி அதன் மேல் மேலும் சில கறிவேப்பிலை இலைகளைப் போடவும்.

தாம்பாளத்தில் கொட்டி வைத்துள்ள சாதத்தில் மீண்டும் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி பின் காய்ச்சிய புளிக்குழம்பை பரவலாக ஊற்றவும். பின் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியை சாதத்திற்குத் தக்கவாறு தேவையான அளவிற்கு தூவவும். பின் சாதத்துடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி இவைகளை சேர்க்கவும். சாதம், புளிக்காய்ச்சல், மசாலாப் பொடி, முந்திரி, வேர்க்கடலை, இவைகள் நன்றாக ஒன்று கலக்குமளவிற்கு கையாலோ அல்லது அன்னவெட்டியாலோ சாதத்தைக் நன்றாகக் கிளறி விடவும்.

இப்போது கமகமக்கும் அருமையான புளிசாதம் ரெடி. சும்மா அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உங்கள் புளிசாதத்தின் வாசனையைப் பார்த்து மோப்பம் பிடித்து உங்கள் வீட்டிற்கே வந்தாலும் வந்து விடுவார்கள். வீடே வாசனையில் தூக்கிவிடும்.

செய்து பார்த்து சொல்லுங்களேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 10, 2013 10:57 am

சுவையான புளியோதரை செய்யும் முறை   3838410834 சுவையான புளியோதரை செய்யும் முறை   3838410834 படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2013 11:26 am

ம்.....சூப்பர் புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 10, 2013 11:33 am

நன்றி அக்கா, அது சரி அன்னவெட்டி ன்னா என்னா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 10, 2013 11:58 am

மாணிக்கம் நடேசன் wrote:நன்றி அக்கா, அது சரி அன்னவெட்டி ன்னா என்னா?
மேற்கோள் செய்த பதிவு: 1037334

சாப்பாடு போடும் கரண்டி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 10, 2013 12:01 pm

சாப்பாடு போடும் கரண்டியா, இல்ல சாப்பாடு போடும் போது, முதுகுல நால் போடு போடர கரண்டியா?
ஜஹிதா அத்தைக்கு ஆயிரம் நன்றி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 10, 2013 12:09 pm

மாணிக்கம் நடேசன் wrote:சாப்பாடு போடும் கரண்டியா, இல்ல சாப்பாடு போடும் போது, முதுகுல நால் போடு போடர கரண்டியா?
ஜஹிதா அத்தைக்கு ஆயிரம் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1037356

டூ இன் ஒன் ரெண்டுக்குமே உபயோகமா இருக்கும் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக