புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமராஜுடன் ஒருநாள்... Poll_c10காமராஜுடன் ஒருநாள்... Poll_m10காமராஜுடன் ஒருநாள்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
காமராஜுடன் ஒருநாள்... Poll_c10காமராஜுடன் ஒருநாள்... Poll_m10காமராஜுடன் ஒருநாள்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
காமராஜுடன் ஒருநாள்... Poll_c10காமராஜுடன் ஒருநாள்... Poll_m10காமராஜுடன் ஒருநாள்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காமராஜுடன் ஒருநாள்... Poll_c10காமராஜுடன் ஒருநாள்... Poll_m10காமராஜுடன் ஒருநாள்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காமராஜுடன் ஒருநாள்... Poll_c10காமராஜுடன் ஒருநாள்... Poll_m10காமராஜுடன் ஒருநாள்... Poll_c10 
19 Posts - 3%
prajai
காமராஜுடன் ஒருநாள்... Poll_c10காமராஜுடன் ஒருநாள்... Poll_m10காமராஜுடன் ஒருநாள்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காமராஜுடன் ஒருநாள்... Poll_c10காமராஜுடன் ஒருநாள்... Poll_m10காமராஜுடன் ஒருநாள்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காமராஜுடன் ஒருநாள்... Poll_c10காமராஜுடன் ஒருநாள்... Poll_m10காமராஜுடன் ஒருநாள்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காமராஜுடன் ஒருநாள்... Poll_c10காமராஜுடன் ஒருநாள்... Poll_m10காமராஜுடன் ஒருநாள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
காமராஜுடன் ஒருநாள்... Poll_c10காமராஜுடன் ஒருநாள்... Poll_m10காமராஜுடன் ஒருநாள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமராஜுடன் ஒருநாள்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 2:43 am

காமராஜுடன் ஒருநாள்... SoQMr2sFSqO5MUIlAOoD+p67b 

இரண்டு மாதங்களுக்கு முன் காமராஜ் அவர்களைச் சந்திக்க நான் டெல்லிக்குப் போயிருந்தபோது, அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

சில தினங்கள் கழித்து மீண்டும் அவரை டெல்லியில் சந்தித்தேன். அப்போது அவர் முதலமைச்சராக அங்கு வரவில்லை. பதவியிலிருந்து விலகிவிட்ட வெறும் காமராஜராக வந்திருந்தார்.

அன்று மாலை காமராஜரைக் காண மெட்ராஸ் ஹவுஸுக்கு வந்திருந்தார் லால்பகதூர் சாஸ்திரி. வாசலில் நின்றுகொண்டிருந்த ரிசப்ஷன் ஆபீஸர் தீனதயாளைக் கண்டதும் அவர், ''காமராஜைப் பழையபடியே கவனித்துக்கொள்கிறீர்கள் அல்லவா? முன்பு அவர் தங்கியிருந்த அதே அறைதானே? உபசரிப்பில் ஒன்றும் குறைவில்லையே?'' என்று கேட்டுக்கொண்டே மாடிக்கு ஏறிச் சென்றார்.

காமராஜ் பதவியிலிருந்து விலகிவிட்டதால் எங்கே அவரைச் சரியாகக் கவனிக்காமல் இருந்துவிடுகிறார்களோ என்ற கவலையிலேயே சாஸ்திரி அவ்வாறு கேட்டார். ஆனால், உண்மையில் காமராஜுக்கு அங்கே முன்னைக் காட்டிலும் இரட்டிப்பு உபசாரம்.

மறுநாள் காலை. நான் மெதுவாக காமராஜ் தங்கியிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தேன். என்னைக் கண்டதும் ''என்...ன? வாங்க...'' என்று புன்முறுவலோடு அழைத்தார்.

விசிட்டர்கள் அதிகம் இல்லாத நேரமாகையால் நிம்மதியாக உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு யார் வரப்போகிறார்கள் என்பது பற்றி, பத்திரிகைகளில் ஏதேதோ செய்திகள் வெளியாகி இருந்தன. காமராஜரும் அப்போது அதுபற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்க வேண்டும்.

''லால்பகதூர் சாஸ்திரியையே காங்கிரஸ் தலைவராகப் போட்டுவிடலாமே...'' என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினேன்.

''ஆமாம்; போட்டுவிடலாம்; அப்படித்தான் நாங்களும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். (நாங்கள் என்பது சஞ்சீவ ரெட்டியையும், அதுல்யா கோஷையும் சேர்த்துச் சொன்னது.) சாஸ்திரியிடமும் கேட்டுப் பார்த்தோம். ஆனால், அவர் தலைமைப் பதவி தமக்கு வேண்டாம் என்கிறார். இன்றைக்கு மறுபடியும் சாஸ்திரியைச் சந்தித்து கன்வின்ஸ் பண்ண வேண்டும்'' என்றார்.

ஆனால், மறுநாள் காலைப் பத்திரிகைகளைப் புரட்டியபோது தலைமைப் பதவிக்கு காமராஜரையே காரியக் கமிட்டி தேர்ந்தெடுத்திருப்பதைக் கண்டபோது எனக்கு வியப்பு.

''என்ன இப்படி ஆகிவிட்டது?'' என்று காமராஜிடம் கேட்டேன்.

''எனக்கு ஒன்றுமே தெரியாது; காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அதுல்யா கோஷ§ம் சஞ்சீவ ரெட்டியும் காதைக் கடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த வேலை இது என்று எண்ணுகிறேன்'' என்றார்.

''எப்படி இருந்தாலும் நல்ல முடிவு'' என்று என் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு, விடைபெற்றேன். ''பதினைந்து நாட்களுக்கு முன்னால், முதலமைச்சராக இங்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னால் பதவியில்லாத சாதாரண மனிதராக வந்தார். இன்றைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பதவி தேடி வந்திருக்கிறது. இத்தனை மாறுதல்களும் இரண்டே வாரங்களில் நடந்துவிட்டன. ஆனாலும் அவரிடத்தில் எந்தவித மாறுதலையும் காண முடியவில்லை. பதவியில் இருந்தபோது, பதவியை விட்டபோது, பதவி அவரைத் தேடி வந்துள்ளபோது - ஆக எந்த நிலையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்'' என்றார் தீனதயாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 2:44 am

காமராஜுடன் ஒருநாள்... NRqduA4WTvKPx6gzQLX4+p67c 

மறுநாள் காலை காமராஜ் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். அவர் சோபா ஒன்றில் கால்களைச் சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டிருந்தார். சட்டைப் பித்தான்களைக் கழற்றிவிட்டு, வலது கையை முதுகுப் பக்கமாகச் செலுத்தி இடது தோளைத் தேய்த்தபடியே பத்திரிகை படிப்பதில் சுவாரஸ்யமாக இருந்தார்.

மேஜை மீது அன்றைய இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ் இவ்வளவு பத்திரிகைகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

''பத்திரிகைகளில் அரசியல் செய்தி மட்டும்தான் படிப்பீர்களா? அல்லது..''

''எல்லாந்தான். எந்த ஊரில் என்ன பிரச்னை என்று பார்ப்பேன். ஒரு ஊரில் தண்ணீர் இல்லை என்ற செய்தி இருந்தால், அதையும்தான் பார்ப்பேன். தண்ணீர் இல்லை என்பதும் அரசியல் சம்பந்தப்பட்டதுதானே?'' என்று சொல்லிக்கொண்டே எழுந்தார். எழுந்தவர் கவனமாக மின் விசிறியை நிறுத்திவிட்டு அடுத்த அறைக்குள் சென்றார். அதுதான் அவருடைய படுக்கை அறை. படுக்கை அறையை ஒட்டினாற்போல் இன்னொரு சின்ன அறை. அங்கேதான் அவருடைய பெட்டி இருந்தது. அந்தச் சின்ன அறைக்குள் இருந்த சிறு மேஜை, கோட் ஸ்டாண்ட், முகம் பார்க்கும் கண்ணாடி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கண்ணோட்டமிட்டேன்.

''என்ன... என்ன பாக்கறீங்க?'' என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

''ஒன்றுமில்லை; தங்களைக் கூடவே இருந்து கவனிக்கப் போகிறேன். இது என்னுடைய நெடுநாளைய ஆசை'' என்றேன்.

''ஓ, தாராளமா இருங்களேன். இப்படி வந்து உட்காருங்க'' என்று கூறிக்கொண்டே பெட்டியிலிருந்த சலவைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழேவைத்தார்.

அந்தப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் கூர்ந்து கவனித்தேன்.

INSIDE AFRICA - by John Gunther.
ENDS AND MEANS - by Aldous Huxley.
TIME MAGAZINE
NEWS WEEK
சிந்தனைச் செல்வம் - வி.ச.காண்டேகர்.

இவ்வளவும் இருந்தன. இவ்வளவையும் கவனிக்காததுபோல் கவனித்துக்கொண்டேன். நான் கவனிக்காததுபோல் கவனித்ததை அவரும் கவனிக்கத் தவறவில்லை.

அடுத்தாற்போல் பெட்டியிலிருந்து ஷேவிங் செட்டை எடுத்துக் கண்ணாடி முன் வைத்துக்கொண்டார். அந்த நித்திய கடமை முடிந்ததும், தமது சட்டையைக் கழற்றி ஒழுங்காக மடித்து அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைத்தார். அங்கு ஏற்கெனவே பல சட்டைகள் இந்த மாதிரி மடித்துவைக்கப்பட்டிருந்தன.

''ஒரு நாளைக்கு எத்தனை சட்டை மாற்றிக்கொள்வீர்கள்?''

''இரண்டு மூன்று முறை குளிக்க வேண்டும் எனக்கு. ஒவ்வொரு முறை குளித்து முடித்ததும் சலவைச் சட்டை போட்டுக்கொள்ள வேண்டும்'' என்றார்.

''இப்படி ஓயாமல் அலைந்து கொண்டிருக்கிறீர்களே! இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதில்லையா?''

''கிடையாது. நான் ஆகாரத்தில் ரொம்ப உஷாராக இருந்துவிடுவேன். காலையில் சூடாக ஒரு கப் காபி சாப்பிடுவேன். அப்புறம் கோட்டைக்குப் போவதாக இருந்தால், 11 மணிக்குள் சாப்பிட்டுவிடுவேன். அத்துடன் இரண்டு மணிக்கு ஒரு கப் காபி, இரவு இட்லியும் சட்னியும். இவ்வளவுதான் என் ஆகாரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 2:44 am

கிராமங்களில் சுற்றுப் பயணம் செய்யும் நாட்களில் சில சமயம் பகலில் மணி இரண்டுக்கு மேல் ஆகிவிடும். அந்த நேரத்தில் லேசாக வெறும் மோர் சாதம் சாப்பிட்டால் போதுமென்று தோணும். ஆனால், எனக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் மோர் சாதம் போதுமென்று சொன்னால் கேட்க மாட்டாங்க. இலையில் எல்லாவற்றையும் போட்டுக் கஷ்டப்படுத்திடுவாங்க. என் நிலையைப் புரிந்துகொள்ளாமல் தொந்தரவு கொடுப்பாங்க. இதற்காக நான் ஒரேயடியாகச் சாப்பாடே வேண்டாமென்று சொல்லிப் பட்டினி போட்டுவிடுவேன்.''

''தாங்கள் கைக் கடியாரம் கட்டிக்கொள்வதில்லையே, ஏன்?''

''அதெல்லாம் எதுக்கு! அவசியமில்லை. யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்க. கிராமங்களுக்குப் போகும்போது மட்டும் சில சமயம் நேரம் தெரியாமல் போய்விடும். அதற்காக ஒரு சின்ன டைம்பீஸ் வாங்கி வைத்திருக்கிறேன்'' என்றார்.

''தினமும் நூற்றுக்கணக்கான பேர் தங்களைத் தேடி வந்து தங்கள் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்களே. அவர்களெல்லாம் தங்களிடம் என்ன கேட்பார்கள்?''

''சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை எளிய மக்கள் கேட்கிற உதவிகள் எல்லாம் சுலபமாகச் செய்யக்கூடியதாக இருக்கும். முடிந்ததை நானும் செய்துவிடுவேன். படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க வந்து கேட்கிற காரியங்களில்தான் சிக்கல்  இருக்கும். அவங்களே வக்கீலிடம் கேட்டுக்கொண்டு வந்து 'இப்படிச் செய்யலாமே!’ என்று எனக்கு ஆலோசனை சொல்லுவாங்க. நான் 'ஆகட்டும், பார்க்கலாம்’ என்பேன். யாருக்காவது இரண்டொருவருக்குச் செய்துவிட்டு மற்றவர்களுக்குச் செய்யவில்லை என்றால்தானே கோபம் வருகிறது? ஆகையால், எல்லோருக்குமே சமமாக இருந்துவிடுவேன். யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். மார்க் கொஞ்சமாக வாங்கியிருப்பான். 'நீ வாங்கியிருக்கும் மார்க்கைவிடக் குறைந்த மார்க் வாங்கியுள்ள பையன் யாருக்காவது அட்மிஷன் கொடுத்திருந்தால் சொல்’ என்பேன். அப்படி இருக்காது. ஒருவேளை யாருக்காவது அம்மாதிரி அட்மிஷன் கொடுத்திருந்தால் அவனிடம், 'ஆமாம்,  நீ சொன்னது உண்மைதான்’ என்று ஒப்புக்கொள்வேன். அவன் அதிலேயே திருப்தியடைந்து போய்விடுவான்!''

''தினந்தோறும் இவர்கள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லி அனுப்புவது ரொம்பக் கஷ்டமான காரியம் ஆயிற்றே? அலுப்பாக இருக்குமே!''

''எனக்கு அலுப்பே கிடையாது. எவ்வளவு பேர் வந்தாலும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், இதில் எனக்குள்ள சங்கடம் பத்திரிகை படிக்க நேரம் இல்லாமல் போய்விடுவதுதான். ஆகையால், காலை வேளையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமலிருந்தால் நல்லது. பத்திரிகை படிக்கும் நேரம் எனக்கு ரொம்ப முக்கியம். விசிட்டர்களால் அது தடைப்பட்டுப் போகிறது. அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எப்போது வந்தாலும் பார்க்கத் தயார்'' என்றார்.

அன்றிரவு மணி 12 இருக்கும். காமராஜ் கட்டிலில் படுத்தவாறே மிக சுவாரஸ்யமாக ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். என்ன புத்தகம் என்று எட்டிப் பார்த்தேன். கம்ப ராமாயணம்!

சாவி @ விகடன் தீபாவளி மலர் 1963

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Dec 06, 2013 9:00 am

காமராசரைப் பற்றி படிக்கும்போது வேறு கவனம் வரவில்லை தல
இன்னும் தொடருங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக