ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!

4 posters

Go down

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Empty ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!

Post by சிவா Fri Dec 06, 2013 1:49 am

முதல்வர் பிரசாரம்... நெரிசலில் இறந்த இருவர்
''ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!''


ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! LrZvxNJ5Sian9j1I80Xh+p2a

ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்தது சேலத்தை திகுதிகுக்க வைத்திருக்கிறது. அதோடு, தேர்தல் பிரசாரத்தின்போது, விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

கடந்த 28-ம் தேதி ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். ஏற்காடு மலைப் பகுதியைத் தவிர்த்து... மின்னாம்பள்ளி, வெள்ளாளக்குண்டம் பிரிவு, வாழப்பாடி, பேளூர் என, ஒரே நாளில் ஒன்பது இடங்களில் வாகனத்தில் இருந்தபடியே பிரசாரம் செய்துவிட்டு சென்றார். 

ஜெயலலிதா செல்லும் சாலைகளில் எல்லாம் ஸ்பீட் பிரேக்கர்கள் அகற்றப்பட்டிருந்தன. வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள சேலம் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் ஷாமியானா பந்தல் போட்டு பிரசாரம் செய்தார். இதற்காக இரண்டு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலை பிளாக் செய்யப்பட்டது. முதல்வர் வருவதற்கு முன்னர், காத்திருந்த கூட்டத்தினரை குஷிப்படுத்த குத்தாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் அருவருக்கத்தக்க வகையில் ஆட்டம் போட்டனர். ஆட்டம் போட்ட பெண்களின் இடுப்பில் ரூபாய் நோட்டுகளை கட்சிக்காரர்கள் சிலர் செருகினர்.சிலர் அவர்களோடு சேர்ந்து ஆடினார்கள்.

முதல்வரை வரவேற்க காரிப்பட்டி லேபிள் பிரைமரி நர்சரி ஸ்கூல் குழந்தைகளும், வாழப்பாடி முத்தம்பட்டியில் உள்ள வைகை ஸ்கூல் குழந்தைகளும், பேளூர் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் குழந்தைகளும் மதிய வெயிலில் நிற்க வைக்கப்பட்டார்கள். இதுவும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து சேலம் முதன்மை கல்வி அதிகாரி ஈஸ்வரனிடம் கேட்டோம். ''இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விளக்கம் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள், 'இது தற்செயலாக நடைபெற்றது. வெளியில் சென்ற குழந்தைகளை அழைத்து வரும்போது, ரோடு கிராஸ் செய்ய முடியாமல் நின்றுவிட்டோம்’ என்று பதில் அனுப்பி இருக்கிறார்கள். அதை கலெக்டருக்கும் அனுப்பி இருக்கிறோம்'' என்றார். ''இது நம்பும்படியாகவா இருக்கிறது?'' என்று கேட்கிறது தி.மு.க. தரப்பு.

இதைத் தொடர்ந்து இரண்டு மரணங்கள் சர்ச்சை ஆகியுள்ளன. உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினோம்.

வலசையூரில் இறந்துபோன இந்திராணியின் கடைசி மகள் தமிழ்செல்வி நம்மிடம் பேசினார். ''எங்க அம்மாவுக்கு 55 வயசு. அப்பா இறந்து 15 வருடம் ஆகுது. எங்க அம்மாவுக்கு நாங்க நாலு பொண்ணுங்க, ரெண்டு பசங்க. பெண்களுக்கெல்லாம் திருமணம் ஆயிருச்சு. பசங்கதான் கடைசி. அவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் திருமணம் ஆகலை. அம்மாதான் அவங்களுக்கு பாதுகாப்பா இருந்தாங்க. இப்ப அவங்க போயிட்டாங்க... என் தம்பிகளை யார் கவனிப்பாங்க? சி.எம். வர்றாங்கன்னு சொல்லி ரோட்டை மறிச்சுட்டாங்க. பத்து நிமிஷம் ஆம்புலன்ஸை விட்டிருந்தால் எங்க அம்மாவைக் காப்பாத்தி இருப்போம்'' என்று தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.

சற்று நேரம் கழித்து தொடர்ந்தவர், ''எங்கம்மா வீடு சேலம் சிவன் கோயில் பக்கத்துல இருக்கு. ஜெயலலிதா அம்மா சேலத்துக்கு எங்கே வந்தாலும் போய் பார்த்திடுவாங்க. அன்னைக்கும் அப்படித்தான் ஜெயலலிதா அம்மாவை பார்க்கணும்னு பள்ளிப்பட்டியில இருக்குற எங்க வீட்டுக்கு வந்தாங்க. காலையில் மூணு இட்லி, ஒரு தோசை சாப்பிட்டுதான் கிளம்பினாங்க. நான், எங்க அம்மா, என் மாமியார் மற்றும் எங்க ஊர்காரங்க 15 பேருக்கு மேல் வலசையூருக்கு காலை 11 மணிக்குப் போனோம். 

கட்டுக்கடங்காத கூட்டம். நிற்கக்கூட முடியலை. கும்பலைத் தாண்டி வெளியே வரவும் முடியலை. திடீர்னு நாலரை மணிக்கு எங்கம்மா மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாங்க. லோக்கல் டாக்டர் வந்து பார்த்தார். 'ஆக்சிஜன் வெச்சா காப்பாத்திடலாம். சேலம் எடுத்துட்டுப் போயிடுங்க’ன்னு சொன்னார். ஆம்புலன்ஸ் டிரைவர் எங்களுக்குத் தெரிஞ்சவர்தான். அவருக்கு போன் பண்ணி வரச் சொன்னோம். அயோத்தியா பட்டணத்தில் இருந்து ரோட்டை பிளாக் பண்ணிட்டதால, அவரால வரமுடியலை. போலீஸ்காரங்க ஒரு வண்டியைக்கூட விடலை. முதல்வர் 5.10-க்கு வலசையூர் வந்துட்டு போன பிறகு, 6.15-க்கு-தான் ஆம்புலன்ஸ் வந்தது. அதுக்குள்ள அம்மா இறந்துட்டாங்க. ஆம்புலன்ஸை விட்டிருந்தா, எங்கம்மாவைக் காப்பாத்தி இருக்க முடியும்'' என்று மீண்டும் கதறினார்.   

பேளூரில் இறந்துபோன சாலம்மாள் வீட்டுக்குச் சென்றோம். அவரது மகன் ராமச்சந்திரன், ''நாங்க கருமந்துரை பாப்பநாயக்கன்பட்டி ஏரி வலசு பகுதியில இருக்கோம். எங்க அம்மாவுக்கு 60 வயசு ஆகுது. எந்த நோய் நொடியும் இல்லாம, ஆரோக்கியமாகதான் இருந்தாங்க. எங்க அம்மாவுக்கு நாலு பொண்ணுங்க, ஒரு பையன். எல்லோருக்கும் திருமணம் ஆயிடுச்சு. எங்க அப்பா 10 வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டார். நாங்க எம்.ஜி.ஆர். காலத்துல இருந்தே அ.தி.மு.க-வைச் சேர்ந்தவங்க. பேளூர் கூட்டத்துக்கு ஜெயலலிதா அம்மாவை பார்க்க வந்தாங்க. கூட்டம் அதிகமாக இருந்ததால, நெரிசல்ல சிக்கி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அங்கேயே ஒரு டாக்டர்கிட்ட காட்டினோம். வாழப்பாடி எடுத்துட்டுப் போக சொன்னாங்க. ஆட்டோவுல ஏத்திகிட்டு போனோம். போலீஸ்காரங்க மெயின் ரோட்டு வழியா விடலை. பிறகு, காடு மேடு சுத்தி ஒரு மணி நேரம் கழிச்சு வாழப்பாடி மருத்துவமனைக்கு எடுத்துட்டுப் போனோம். மருத்துவமனை வாசல்லேயே அம்மாவோட உயிர் பிரிஞ்சுடுச்சு. இன்னும் அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்திருந்தா, காப்பாத்தி இருக்கலாம்னு டாக்டர் சொன்னார். மெயின் ரோடு வழியா போக விட்டிருந்தா... அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்திருப்போம். எங்க அம்மாவும் பிழைச்சிருப்பாங்க'' என்று கண்ணீர் மல்க சொன்னார். 

இதுபற்றி அ.தி.மு.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''இறந்துபோன இருவரும் வயதானவர்கள். ஏற்கெனவே அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்திருக்கிறது. அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறோம்'' என்றனர்.

வயதானவர்கள் என்றால், அவர்கள் இறந்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாமா? 

ஜூனியர் விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Empty Re: ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!

Post by சிவா Fri Dec 06, 2013 1:50 am

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! 825zzDPT8mith9tFQYzT+p3a
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Empty Re: ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!

Post by சிவா Fri Dec 06, 2013 1:51 am

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! DwRwOYFROmLrIgtfxJ40+p2
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Empty Re: ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!

Post by சிவா Fri Dec 06, 2013 1:52 am

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! C7SjX9tDQiKdiFMfkzvB+p4
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Empty Re: ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!

Post by தமிழ்செல்விஞானப்பிரகசம் Fri Dec 06, 2013 11:40 am

அ.தி.மு.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''இறந்துபோன இருவரும் வயதானவர்கள். ஏற்கெனவே அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்திருக்கிறது. அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறோம்'' என்றனர்.
மனசாட்சியும் மனிதநேயமும் இல்லாதவர்கள்.எதிர்ப்பு அநியாயம்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 29/07/2013

Back to top Go down

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Empty Re: ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!

Post by ஜாஹீதாபானு Fri Dec 06, 2013 12:22 pm

அடப்பாவிகளா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Empty Re: ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!

Post by amirmaran Fri Dec 06, 2013 4:00 pm


இதுபற்றி அ.தி.மு.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''இறந்துபோன இருவரும் வயதானவர்கள். ஏற்கெனவே அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்திருக்கிறது. அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறோம்'' என்றனர்.
உங்க கட்சி அம்மாவும் வயதானவர்கள் தானே, இப்படி ஒரு சிக்கலில் மாட்டி அந்த அம்மா இறந்தாலும் இதையே தான் சொல்லுவீங்களா?


அன்புடன் அமிர்தா

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Aஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Mஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Iஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Rஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Tஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Hஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க! Empty Re: ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum