ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை சூப் !

4 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

30 வகை சூப் ! - Page 2 Empty 30 வகை சூப் !

Post by சிவா Thu Dec 05, 2013 4:34 am

First topic message reminder :

மழைக் காலம்... குளிர் காலம்... என்று வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால்தான் திருப்தி! அது, முழுக்க முழுக்க நம் உடலுக்கு நன்மை தருவதாக இருந்தால்... டூ இன் ஒன் மகிழ்ச்சிதானே! இதோ... சுண்டியிழுக்கும் சுவை ப்ளஸ் ஆரோக்கிய குணம் இரண்டும் கொண்ட 30 வகை சூப்கள் இங்கே அணிவகுக்கின்றன.

''பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், நீங்கள் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்'' என்று உத்தரவாதம் தருகிறார் 'சமையல் கலை நிபுணர்' உஷாதேவி. அவருடைய ரெசிபிகளை அழகு மிளிர அலங்கரிக்கிறார் செஃப் ரஜினி.

ஃபிரெஞ்சு ஆனியன் சூப்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 4, வெண்ணெய் - 50 கிராம், வெள்ளை வெங்காயம் - 2 (பெரியது), சீஸ் (அ) பனீர் - 50 கிராம், காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், சர்க்கரை - சிறிதளவு,  உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: 'மைக்ரோவேவ் அவன்’-ஐ 'ப்ரி-ஹீட்’  செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

30 வகை சூப் ! - Page 2 1
கடாயில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். இதில் சர்க்கரை, உப்பு சேர்த்து, பொன்னிறமாக ஆகும் வரை மேலும் வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து,  கெட்டியானவுடன் இறக்கவும். வறுத்த பிரெட் துண்டுகளை கப்பில் வைத்து, அதன் மேல் சூப் ஊற்றி, மிளகுத்தூள், சிறிதளவு துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.

குறிப்பு: 'மைக்ரோ அவன்’ இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி இதை செய்யலாம்.



காய்கறி வேகவைத்த தண்ணீர் தயாரிக்க: வெங்காயம், செலரி, கேரட், டர்னிப், தக்காளி - தலா ஒன்று ( பெரிதாக நறுக்கவும்), பூண்டு - 2 பல் (தட்டவும்), பிரிஞ்சி இலை - ஒன்று, தைம் இலை - ஒரு டீஸ்பூன், பாஸில் இலை - ஒரு டீஸ்பூன், மிளகு - 3 டீஸ்பூன், லவங்கம் - 2, பட்டை - ஒன்று, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 3 லிட்டர் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை போட்டு முதலில் அதிக தீயில் 5 - 10 நிமிடம் கொதிக்கவிட்டு, பிறகு மிதமான தீயில் 30-45 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


30 வகை சூப் ! - Page 2 Empty Re: 30 வகை சூப் !

Post by சிவா Thu Dec 05, 2013 4:40 am

 ஹாட் அண்ட் சோர் சூப்

தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 5, கோஸ் - 100 கிராம், வெங்காயம், பிரிஞ்சி இலை -  தலா ஒன்று, வினிகர் - கால் கப், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 12, அஜினமோட்டோ - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயில் பாதி அளவு எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியவுடன் சிறிதளவு வினிகர், கெட்சப் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். மீதம் உள்ள மிளகாயை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

30 வகை சூப் ! - Page 2 11
கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடித்த மிளகாயை போட்டு அடுப்பை அணைத்து விடவும். ஒன்றன்பின் ஒன்றாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும். இதில் மீதமுள்ள வினிகர், அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ், காய்கறி தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், அஜினமோட்டோ சேர்த்து கொதிக்க வைக்கவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்த்து கட்டி விழாமல் கொதிக்கவிடவும்.

இறக்கும்போது மறுபடியும் அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி... மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் ஒரு முட்டையை அடித்து கலக்கி இதில் சேர்த்துக் கிளறி பரிமாறலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை சூப் ! - Page 2 Empty Re: 30 வகை சூப் !

Post by சிவா Thu Dec 05, 2013 4:40 am

 ஆஸ்பரகஸ் சூப்

தேவையானவை: ஆஸ்பரகஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - அரை டின், கிரீம் - ஒரு கப், மைதா மாவு, வெண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 2 12
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி,  உருகியதும் மைதா மாவை சேர்த்து நன்கு கலக்கி, உப்பு, ஆஸ்பரகஸ் சேர்த்து, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர்  விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். பரிமாறும்போது கிரீம் சேர்க்கவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை சூப் ! - Page 2 Empty Re: 30 வகை சூப் !

Post by சிவா Thu Dec 05, 2013 4:40 am

 உருளைக்கிழங்கு சூப்

தேவையானவை: வேக வைத்து, தோலுரித்த உருளைக்கிழங்கு - ஒரு கப் வெண்ணெய், மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கிரீம், சீஸ், பால் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 2 13
செய்முறை: கடாயில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி, மைதா மாவை சிறிது சிறிதாக தூவி வறுத்து அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டியில்லாமல் கிண்டி மறுபடியும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். (சூப் கெட்டியாக இருந்தால் காய்கறி வேக வைத்த தண்ணீரை  சேர்த்துக் கொள்ளலாம்). இதில் உப்பு, மிளகுத்தூள், சீஸ் சேர்த்து, சீஸ் உருகும் வரை வைத்திருந்து இறக்கி, கிரீமுடன் பரிமாறவும்.

குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிது எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சேர்த்தும் சூப் செய்யலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை சூப் ! - Page 2 Empty Re: 30 வகை சூப் !

Post by சிவா Thu Dec 05, 2013 4:41 am

ஆவகாடோ  கார்ன் சூப்

தேவையானவை: ஆவகாடோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)   - ஒன்று, உதிர்த்த ஸ்வீட் கார்ன்  - ஒரு கப், பூண்டு - 2 பல், காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு,

30 வகை சூப் ! - Page 2 14
செய்முறை: ஆவகாடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும். மிக்ஸியில்... ஆவகாடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதில் அரைத்த ஆவகாடோ கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து... அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி... பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.

குறிப்பு: ஆவகாடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப் பை சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். கொலஸ்ட்ரலைக் குறைக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை சூப் ! - Page 2 Empty Re: 30 வகை சூப் !

Post by சிவா Thu Dec 05, 2013 4:41 am

 தக்காளி சூப்

தேவையானவை: தக்காளி -  கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், பால், நறுக்கிய கொத்தமல்லி தழை - தேவையான அளவு

30 வகை சூப் ! - Page 2 15
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி... அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி, மற்றொரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி - வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி... உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை சூப் ! - Page 2 Empty Re: 30 வகை சூப் !

Post by சிவா Thu Dec 05, 2013 4:41 am

 தக்காளி கிரீம் சூப்

தேவையானவை: தக்காளி - 3, வெங்காயம் - ஒன்று, செலரி - சிறிதளவு, நறுக்கிய குடமிளகாய் - சிறிதளவு, பூண்டு - ஒரு பல், பாஸில் இலை, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மைதா - 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், கிரீம், பிரெட் துண்டு, உப்பு - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 2 16
செய்முறை: கடாயில் சிறிதளவு வெண்ணெயை போட்டு, உருகியதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு, செலரி, குடமிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பாஸில் இலை, மிளகுத்தூள் சேர்த்து, கொதி வந்தவுடன் இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுக்கவும்.

மற்றொரு கடாயில் மீதமுள்ள வெண்ணெயை போட்டு, உருகியதும் மைதா சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, வடிகட்டி வைத்துள்ள சாறுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி, கிரீம் மற்றும் வறுத்த பிரெட் துண்டு சேர்த்துப் பரிமாறவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை சூப் ! - Page 2 Empty Re: 30 வகை சூப் !

Post by சிவா Thu Dec 05, 2013 4:42 am

மேன்சௌ சூப்

தேவையானவை: பீன்ஸ் - 5, கேரட், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று, கோஸ் - 100 கிராம், பேபி கார்ன் - 2, வெங்காயத்தாள் - சிறிதளவு, வினிகர், தக்காளி சாஸ், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - காரத்துகேற்ப, அஜினமோட்டோ - சிறிதளவு, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், சில்லி பேஸ்ட் - காரத்துக்கேற்ப, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 2 17
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி,  நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். காய்கறிகள் பாதி வெந்தவுடன் அதில் சில்லி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி,  சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். ஒரு கிண்ணத்தில் சோள மாவு, சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், அஜினமோட்டோ, உப்பு, மிளகுதூள் சேர்த்துக் கலந்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறி, நன்கு கொதித்தவுடன் இறக்கி... மேலே வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

குறிப்பு: சில்லி பேஸ்ட் தயாரிக்க... வெங்காயம் ஒன்று, பூண்டு ஒரு பல், தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த காய்ந்த மிளகாய் ஐந்து, புளி நெல்லிக் காய் அளவு எடுத்து... தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை சூப் ! - Page 2 Empty Re: 30 வகை சூப் !

Post by சிவா Thu Dec 05, 2013 4:42 am

புரூக்கோலி  கிரீம் சூப்

தேவையானவை: புரூக்கோலி - ஒரு கப், காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப், வெண்ணெய், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்),  தைம் இலை - சிறிதளவு, கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, துருவிய சீஸ் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,

30 வகை சூப் ! - Page 2 18
செய்முறை: கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் தைம் இலை சேர்த்து, நன்கு வதங்கியவுடன் மைதா சேர்த்து வறுக்கவும். பச்சை வாசனை போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு புரூக்கோலி சேர்த்து வேகவிடவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும்.

வெந்தவுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி... கிரீம், துருவிய சீஸ், கொத்தமல்லி சேர்த்து, கப்பில் ஊற்றி பரிமாறவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை சூப் ! - Page 2 Empty Re: 30 வகை சூப் !

Post by சிவா Thu Dec 05, 2013 4:43 am

 பப்பாளி  இஞ்சி சூப்

தேவையானவை: பப்பாளி பழம்- சிறியது (பாதி), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி தழை, கிரீம் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 2 19
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி... வெங்காயம், இஞ்சி, மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும்  சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி... சூப் கப்பில் ஊற்றவும். அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை சூப் ! - Page 2 Empty Re: 30 வகை சூப் !

Post by சிவா Thu Dec 05, 2013 4:43 am

 க்ளியர் சூப்

தேவையானவை: வெங்காயம், கேரட் - தலா ஒன்று, செலரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு, முட்டை - ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை சூப் ! - Page 2 20
செய்முறை: முட்டையை உடைத்து வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில்  காய்கறி வேக வைத்த தண்ணீர், நறுக்கிய வெங்காயம், கேரட், இஞ்சி - பூண்டு, முட்டை - வினிகர் கலவை, உப்பு எல்லாம் சேர்த்து, அடுப்பை அதிக தீயில் வைத்து கரண்டியால் கிளறாமல் கொதிக்க வைத்து... பிறகு மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். காய்கறி, முட்டை வெந்து மேலே வரும்போது இறக்கி, சூப் கப்பில் ஊற்றி பரிமாறவும். விருப்பப்பட்டால் வடிகட்டியும் பரிமாறலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை சூப் ! - Page 2 Empty Re: 30 வகை சூப் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum