புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
100 Posts - 48%
heezulia
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
7 Posts - 3%
prajai
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
2 Posts - 1%
Barushree
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
2 Posts - 1%
sanji
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
227 Posts - 51%
heezulia
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
29 Posts - 7%
T.N.Balasubramanian
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
18 Posts - 4%
prajai
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
2 Posts - 0%
Barushree
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_m10நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Nov 28, 2013 12:18 pm

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். Sivaji-Ganesan

நடிகர் திலகத்தின் சிலையை அகற்றுவது என்பது ஒரு கண்ணியமற்ற செயல். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்ற காரணம் உண்மையாக இருக்குமானால் தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான சிலைகள் அதுவும் சாலைகளின் நடுவே ஆக்கிரமித்திருக்கும் அனைத்து சிலைகளும் அதே போல அகற்றப்படவேண்டும். ஆனால் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது என்பது ஏதோ காழ்ப்புணர்ச்சியிலும், தனி மனித விரோத போக்கு என்ற ரீதியின்படியும் இருப்பது போல் உள்ளது. தவிர நாம் வணங்கும் தெய்வங்கள், வரலாற்று நாயகர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்று அனைவரையும் நம் கண் முன் அச்சு அசலாக நிறுத்திக் காட்டி பெரியவர் முதல் சிறியோர் வரை இப்படித்தான் கட்டபொம்மன் இருந்திருப்பார், இப்படித்தான் கப்போலோட்டிய தமிழன் இருந்திருப்பார் இப்படித்தான் சிவபெருமான் இருப்பார், இப்படித்தான் வீர சிவாஜி இருந்திருக்கக் கூடும்  என்று அனைவரது மனக்கண்களிலும் அவர்களை நிறுத்திய அந்த மகாநடிகனும் கூட அவருக்கு சிலை நிறுவுமளவிற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தவரே. கடற்கரை சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் அந்த கண்ணியமான நடிகரின் சிலை அந்த பகுதிக்கே ஒரு அழகையும், கம்பீரத்தையும், பெருமையையும் தருகிறது என்பது மறுக்க இயலாத ஒன்று. தவிர நமது தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளச் சின்னமாகவும் அது விளங்குகின்றது. தவிரவும் உலக நடிகர்களை மிஞ்சும் வண்ணம் நடித்துக் காட்டி அனைவரது அன்பிற்கும் தான் ஏற்ற பாத்திரங்களால் பாத்திரமாகி பாரதத்திற்கே பெருமைத் தேடித் தந்த அந்த மாபெரும் நடிகரின் சிலை அங்கிருக்க மிகவும் தகுதியானது. இதில் மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் உள்ளது என்ற விகண்டாவிவாதம் ஏற்புடையது அல்ல. சிவாஜி மகாத்மாவுக்கு நிகரானவரா என்ற அர்த்தமற்ற கேள்விகளை சிலர் எழுப்புகிறார்கள். மகாத்மாவுக்கு சமமாக இருப்பவர்களுக்குத்தான் கடற்கரையில் சிலைக்கு இடம் என்றால் அங்கு எம்ஜியார் அவர்களுக்கோ, அறிஞர் அண்ணா அவர்களுக்கோ மற்றும் பிறருக்கு சிலைகளுக்கோ, நினைவுச் சின்னங்களோ, சமாதியோ அமைத்திருக்க முடியாது. எல்லோரும் மகாத்மாக்கள் ஆகி விட முடியாது. அவரவர்களும் ஒவ்வொரு விதத்தில் போற்றத்தக்கவர்கள். மக்களுக்காக வாழ்ந்தவர்கள். போராடியவர்கள். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். அவர்களும் மதிக்கப்பட்டு அவர்களுக்கு சிலைகள், நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டிருப்பதும் வெகு நியாயமே!

நடிகர் திலகத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த ஜனத்திரளைப் பார்த்து தமிழ்நாடே ஸ்தம்பித்தது. அரசியலில் தோல்வி அடைந்தாலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன் அசத்தலான நடிப்பின் மூலம் நம் தமிழக நெஞ்சங்களில் கொலு வீற்றிருக்கும் அந்த மாபெரும் கலைஞனின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த கூட்டம் ஒன்றே தமிழகம் அவர் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு  சான்று.

அப்பேற்பட்ட கலைஞனின் சிலையில் கைவைக்க தமிழக அரசு துணிந்திருப்பது துரதிருஷ்ட வசமானது. நடிகர் திலகத்தின் அந்த அழகிய சிலையைக் காண அவரது ஆத்மார்த்தமான பக்தர்கள் பலர் பேருந்துகளில் இதற்காகவே ஏறி சிலையை வணங்கிச் செல்வதும் உண்டு. சிவாஜி ரசிகர்களுக்கென்று அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் தலைவனைப் பற்றி பேசி மகிழ அவர்கள் உரிமையுடன் தேர்ந்தெடுத்திருப்பது மூன்று இடங்கள். ஒன்று சிவாஜி அவர்களின் சொந்தத் திரையரங்கான சாந்தி திரை அரங்கம். கிட்டத் தட்ட அவர்களுக்கு அது ஒரு புண்ணியஸ்தலம். சிவாஜி ரசிகர்களின் அடுத்த கோவில் சிவாஜி அவர்களின் வீடான 'அன்னை இல்லம்'. இதையும் அவரது ரசிகர்கள் கோவிலாக வழிபட்டு வருகிறார்கள். அடுத்து கடற்கரையில் நிற்கும் சிவாஜி சிலை. இங்கே குழுமிக் கூடி அவர்கள் சிவாஜி அவரகளைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது உண்டு யாருக்கும் இடைஞ்சல் தராமல்.

நாட்டில் எவ்வளவோ வேலைகள் பாக்கி இருக்க சிவாஜி சிலையை அகற்ற மட்டும் இந்த அரசு இவ்வளவு தீவிரம் காட்டுவதேன் என்ற கேள்வி எல்லோரது நெஞ்சிலும் எழுந்துள்ளது. சிவாஜி அப்படி என்ன தவறு செய்தார்? அவரது சிலை என்ன பாவம் செய்தது? அவரது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரே நினைவுச் சின்னமாக விளங்கும் அந்த சிலையையும் நொண்டிச் சாக்குகள் சொல்லி எடுப்பதால் இந்த அரசுக்குக் கிடைக்கக் கூடிய லாபதான் என்ன? நடிகர்களின் பிதாமகரின் சிலை பற்றி வாய் திறக்காமல் வாய் மூடி மௌனியாக நடிகர் சங்கம் இருப்பதின் பின்னணி என்ன? சரத்குமார், சிவாஜியின் மேல் உயிரையே வைத்திருக்கும் ராதாரவி போன்றோர்கள் அரசியல் பிழைப்புக்காக வாய் திறவாமல் இருக்கிறார்களா? அல்லது பயத்தின் காரணமாகவா?  நான் சிவாஜி தோளில் வளர்ந்தேன்... நான்தான் சிவாஜியின் முதல் பிள்ளை ராம்குமார், பிரபு எல்லாம் எனக்குப் பிறகுதான் என்று பேட்டிகளில் முழங்கும் சீனியர் நடிகர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எல்லாம் பேச்சளவிலும், ஏட்டளவிலும் தானா என்ற கேள்வியும் எழுகிறது.  

நிஜமாகவே போக்குவரத்திற்கு இடைஞ்சல் என்றால் சிலை எடுப்பதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபணையும் இல்லை. போக்குவரத்து இடைஞ்சல்களை மீறி அந்த சிலை இருக்க வேண்டும் என்று வாதிடுவது  நியாமும் ஆகாது. இறந்து போனவர்களின் சிலைகளை விட வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனித உயிரும் முக்கியமானது. விலை மதிப்பற்றது. விபத்து என்பது பல வழிகளில் நடை பெறுகிறது. குடிபோதை, கவனமின்மை, போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமை, சரியான ஓட்டும் பயிற்சி இல்லாமை என்று. அத்தகைய காரணங்களால் நடைபெறும் விபத்துகளுக்கு சிலைகள் எப்படி பொறுப்பாக முடியும்? அதுவும் சிவாஜி சிலையால் மட்டுமே சிட்டியில் விபத்து ஏற்படுகிறது என்று சொல்வது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இல்லை?! ஆனால் இதைப் போல பல சிலைகள் போக்குவரத்திற்கு இடைஞ்சல் தருகின்றனவே! அவைகளை மட்டும் விட்டு வைக்கப் படுவது எந்த வகையில் நியாயம்?

சிவாஜி ரசிகர்கள் பொதுவாகவே வம்புதும்புவிற்குப் போகாதவர்கள். அவர்களுக்கு கல்லெறியத் தெரியாது, கறுப்புக் கொடி பிடிக்கத் தெரியாது. போராட்டங்கள் நடத்தத் தெரியாது. வாகனங்களைக் கொளுத்தத் தெரியாது. அப்படி அவர்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை பயந்து போய் சிலைப் பற்றி எதுவும் செய்யாமல் 'கம்'மென்று விட்டிருப்பார்களோ என்னமோ? அவர்களுக்கு எந்த பக்க பலமாக எந்தப் பின்னணியும் கிடையாது. பெரும்பாலும் அவர்கள் அமைதியானாவர்கள்தான். இப்போதும் அவர்கள் கண்ணியம் காக்கிறார்கள். முறையாக சிவாஜி சமூக நலப் பேரவை என்ற அமைப்பு சட்ட ரீதியாக இந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறது. சிவாஜி அபிமானிகள் தங்கள் மதிப்பிக்குரியவரின் சிலை என்ன கதிக்கு ஆளாகுமோ என்று கலங்கி நிற்கிறார்கள். அவர்களின் உணர்வுகள் கண்டிப்பாக மதிக்கப் பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அது மட்டுமல்ல. சிவாஜி ரசிகர்களின் வேதனைக் குரலை ஒரு புறம் புறந்தள்ளி விட்டாலும் சிவாஜியின் புதல்வர்கள் ராம்குமார், பிரபு இவர்களின் மன நிலைமை எவ்வாறு இருக்கும் என்று சற்று யூகியுங்கள். தங்கள் தந்தையின் சிலைக்கு நேரும் அவமானங்களை அவர்கள் அமைதியாக கண்ணீருடன் பார்ப்பதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழி தோன்ற வாய்ப்பில்லை. அப்படி வன்முறையைத் தூண்டும் பிள்ளைகளும் இல்லை அவர்கள்.

கடந்த ஆட்சியாளர்களால் வைக்கப் பட்ட சிலை... அது எடுக்கப் பட்டே தீர வேண்டும் என்ற பழி சொல்லுக்கு இந்த அரசு ஆளாகி விடக் கூடாது என்பதே நமது விருப்பம். அது முறையான செயலும் அல்ல. இப்போது இன்னொரு கேள்வி மனதில் எழாமல் இல்லை. சிவாஜி சிலை தற்சமயம் இருக்கும் இடத்தில் வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஜாதிய பின்னணித் தலைவர்கள் சிலைகள் இருக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்போது இந்த அரசு அப்படிப்பட்ட தலைவர்களின் சிலையைத் தூக்குமா? அப்படி தூக்கினால் சம்பந்தப்பட்ட அரசியல்கட்சிகள் சும்மா இருக்குமா? போராட்டம் வெடிக்காதோ? ஓட்டுக்களை முன்னிட்டாவது அந்த சிலைகளின் மேல் கை வைக்க மாட்டார்கள். ஆனால் சிவாஜி?.... இளிச்சவாயர் ஆயிற்றே! கேக்க யாருமே இல்லையே! அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர் இல்லையே! கேவலம் ஒரு சாதாரண நடிகர் தானே! அவர் சார்பாக என்ன பெரிய ஓட்டு வங்கி இருக்கிறது? அவரால் யாருக்கும் ஒரு ஆதாயமும் இல்லையே? அதனால் சிலையை எடுத்தால் போயிற்று. யார் இருக்கிறார்கள் கேட்க? உண்மையான சிவாஜி விசுவாசிகளைத் தவிர.

மொத்தத்தில் நியாயமான காரணமாக இருப்பின் அந்த சிலை அகற்றப்படலாம். வீம்புக்கு என்றால்?....

தமிழ்செல்விஞானப்பிரகசம்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 29/07/2013

Postதமிழ்செல்விஞானப்பிரகசம் Thu Nov 28, 2013 2:45 pm

உண்மையான சிவாஜி ரசிகர்களின் மனநிலையை எடுத்துக் காட்டியுள்ளது, தங்களது கட்டுரை. அரசின் முடிவில மாற்றம் ஏற்படவேண்டுமென்பதே நமது விருப்பம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 8:24 pm

-
நியாயமான காரணம் கோர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது...
-
சிறந்த நடிகர் என்ற எல்லையைத் தாண்டி
இவர் என்ன சமூக சேவைகள் செய்துள்ளார்..
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Nov 29, 2013 2:04 pm

நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சமூக உதவிகள்

அன்புள்ள அய்யாசாமி அய்யா அவர்களே!

தங்களுடைய கேள்வி நியாயமானதே! நடிகர் திலகம் நடிகர் என்ற எல்லையைத் தாண்டி பலதரப்பட்ட ஏராளமான நிதி உதவிகளை அவர் இந்நாட்டிற்கு செய்திருக்கிறார். பல சமூக அமைப்புகளுக்கு நிறைய நிதி உதவிகளும், பொருளுதவிகளும் அளித்துள்ளார். நடிகர் திலகம் எப்போதுமே தான் செய்யும் தர்ம காரியங்களை விளம்பரப்படுத்த விரும்பாதவர் என்பது அவரைப்  பற்றி நன்கு உணர்ந்தவர்களுக்குத் தெரியும். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் பலருக்கு உதவிகளை அள்ளி அள்ளி வழங்கியவர் அவர். இதை சிவாஜி ரசிகனாகிய என்னை போன்றோர் கூறினால் அவ்வளவாக நன்றாக இருக்காது. தவிரவும் தங்கள் அபிமான நடிகரைப் பற்றி இவர்கள் உயர்த்தித்தான் சொல்வார்கள் என்ற அவநம்பிக்கையும் எங்கள் மேல் பலருக்கு ஏற்படும் வாய்ப்பு உண்டு. .அதனால் நடிகர் திலகத்தின் மனிதாபிமானத்தைப் பற்றியும், அவர் நாட்டிற்கு செய்த பல்வேறு சமூக உதவிகளைப் பற்றியும் கூறும் பொதுவான ஒரு சிறு பதிவை ஆதாரமாக நான் இங்கு தங்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் படித்து தெரிந்து கொள்ள இங்கே இடுகை செய்கிறேன்.

மறைந்த புகழ் பெற்ற எழுத்தாளரும், கல்கண்டு பத்திரிக்கையின் ஆசிரியருமாகிய தமிழ்வாணன் அவர்கள் 1983 ஆம் ஆண்டு 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்ற ஒரு சிறப்பான நூலை எழுதி முதல் பதிப்பாக வெளியிட்டார். பொதுவாகவே தமிழ்வாணன் துணிச்சலாக எழுதக் கூடிய நபர் என்று பெயர் எடுத்தவர். யாரையும் விமர்சனம் செய்யத் தயங்காத நபர் இசை மேதை சுப்புடு போல. அவ்வளவு எளிதில் அவர் வாயால் எவரும் பாராட்டுப் பெற்று விட முடியாது. அவர் தான் எழுதிய அந்த நூலில் நடிகர் திலகத்தின் கொடைத்தன்மையைப் பற்றி இரண்டு பக்கங்கள் எழுதியுள்ளார். அதில் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் சிவாஜியின் கொடைத்தன்மையைப் பற்றி எழுதிய கவிதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

பிரபல எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள் எழுதிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற நூலில் இருந்து சில பக்கங்கள்

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். 2_zps418bd11b

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். 4_zps3033f0dc

சிவாஜி அவர்கள் 1960 களிலேயே, நடிக்க வந்த எட்டு வருடங்களிலேயே, கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய்கள் சமூகப் பணிகளுக்காக செலவிட்டுள்ளார் என்று தமிழ்வாணன் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அப்போதே 20 லட்ச ரூபாய் (ஏன் இப்போதும் இருபது லட்ச ரூபாய் என்பது பெரும்தொகைதானே!) என்பது நடக்கும் 2013-ஆண்டில் எவ்வளவு மதிப்புள்ள கோடிகளாக இருந்திருக்கும் என்பதை நீங்களே கணக்கில் கொள்ளுங்கள். தமிழ்வாணன் போன்ற ஒரு பொதுவாதியே இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றால் சிவாஜி அவர்களின் கொடைத் தன்மையைப் பற்றி மேலும் அறிய வேண்டுமோ!

இது ஒரு சிறு உதாரணம்தான். நடிகர் திலகம் இந்த நாட்டிற்காக தந்த கொடைகள் ஏராளம். தனக்கு விளம்பரமே தேடிக் கொள்ளாமல் அவர் செய்த நற்பணிகளும், அவர் மன்றங்கள் செய்த நற்பணிகளும் கணக்கிலடங்கா. நடிகராக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த தேசியவாதியாகவும் வாழ்ந்தவர் அவர். சுதந்திரப் போராட்ட தியாகி சின்னையா மன்றாயர் அவர்களின் புதல்வர். நல்லதொரு குடும்பத்திற்கு பல்கலைக் கழகமாக உதாரணமாக அவருடைய 'அன்னை இல்ல'த்தைத்தான் அனைவரும் குறிப்பிடுவார்கள்.

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். 23awa

லால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் நடிகர் திலகம் 100 சவரன் எடையுள்ள தங்கப் பேனாவை வழங்கும் போது

நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள். 55_zpsbf844f79

1964-இல் இந்தியா சீன யுத்தத்தின் சமயம் சிவாஜி அவர்கள் லால்பகதூர் சாஸ்திரி பிரதம மந்திரியாக இருந்த போது தன்  மனைவி கமலா அம்மாள் அவர்களின் நகைகள் அனைத்தையும் (கிட்டத்தட்ட 200 பவுன். இப்போதைய மதிப்புகள்????!!!) யுத்த நிதிக்காக வழங்கியவர். தாலிச்சரடைக் கூட கழற்றி கொடுக்கத் தயாராகி விட்ட நிலையில் 'தாலிச்சரடை எல்லாம் கழற்றக் கூடாது' என்று  சாஸ்திரி சிவாஜி, கமலா அம்மாவிடம் மனமுருகி அன்புக் கட்டளை பிறப்பித்தார். அது போல 'ஸ்கூல் மாஸ்டர்' கன்னட, மலையாளப் படங்களில் கௌரவ வேடம் ஏற்று நடித்து நடிகர் திலகம் பெருமைப் படுத்தியதால் தயாரிப்பாளர், இயக்குனர் திரு பி.ஆர்.பந்துலு அவர்கள் பரிசாக தனக்களித்த 100 சவரன் எடையுள்ள தங்கப் பேனாவையும் யுத்த நிதிக்காக சாஸ்திரிகளிடம் வழங்கிய வள்ளல் சிவாஜி அவர்கள்.

ஒருமுறை மகாராஷ்டிரத்தில் உள்ள கொய்னா அணைக்கட்டு உடைந்து விட, அப்போதைய  மகாராஷ்டிர முதல் மந்திரி திரு ஒய்,பி. சவான் அனைவரிடமும் உதவி கேட்க சிவாஜி அவர்கள் சற்றும் தாமதியாமல் அப்போதே ரூபாய் 1100000 த்தை சவானுக்கு அனுப்பி வைத்தார் சிவாஜி.

1964- இல் மும்பையில் வீர சிவாஜிக்கு சிலை அமைத்தார் நடிகர் திலகம் சிவாஜி. அது மட்டுமல்ல. மும்பையில் பல இடங்களில் வீர சிவாஜி சிலைகள் நிறுவ பொருளதவி செய்தவர் நடிகர் திலகம்.

1971-இல் வீரபாண்டியக் கட்ட பொம்மனுக்கு கயத்தாறில் சிவாஜி நினைவு மண்டபம் அமைத்தார். கட்ட பொம்மனுக்கு சிலையும் நிறுவினார். பெருந்தலைவர் காமராசருக்கு பல சிலைகளைத் திறந்து வைத்த பெருமைக்கு உரியவர் சிவாஜி.

பல்வேறு நட்சத்திரக் கலை விழாக்களை தன் சொந்தப் பொறுப்பில் இரவென்றும், பகலென்றும் பாராமல்  நடத்தி, நாட்டில் பஞ்சம், வெள்ளம் போன்ற பாதகமான சூழ்நிலைகளின் போது கோடி கோடியாய் வசூல் செய்து நாட்டின் நலனுக்காகக் கொடுத்தவர் சிவாஜி.

தேச நலனின் மீது கொண்ட அக்கறையினால் யுத்த களத்தில் சோர்வுற்றிருந்த ராணுவ வீரர்களுக்கு நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கே சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை உற்சாகப் படுத்தியவர் சிவாஜி.  

காமராஜர் அவர்கள் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்த போது பிரதம மந்திரி நேரு அவர்களிடம் உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை நிதியாக தந்தவர் சிவாஜி.

சென்னை அடையாறில் டாக்டர் சஞ்சீவி அவர்கள் தொடங்கிய இலவச மருத்துவமனைக்கு அஸ்திவாரம் போட அனைத்து உதவிகளையும் செய்தவர் சிவாஜி.

1977-இல் தமிழக முதல்வராக இருந்த எம்ஜியார் அவர்களிடம் ரூபாய் 4 கோடியை கொடி நாள் நிதியாக வசூலித்து வழங்கினார் சிவாஜி.

நான் இங்கு சொன்னதெல்லாம் கடுகளவே. அவர் அள்ளித் தந்த கோடிகளுக்கு கணக்கே இல்லை. ஆனால் அவர் புகழ் விரும்பா புருஷராக இருந்ததால் பல விஷயங்கள் சந்தைக்கு வரவில்லை. அதையும் மீறி அவர் செய்த தான தர்மங்கள் பலவற்றிற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

பத்திரிகை ஆசிரியர் எனது அன்பிற்குரிய சகோதரர் 'பம்மலார்' என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படும் திரு 'பம்மல்' சுவாமிநாதன் அவர்களிடம் சிவாஜி அவர்கள் செய்த அத்துணை நற்காரியங்களின் விவரங்கள், அவர் அள்ளிக் கொடுத்த கொடைகள், தான தர்மங்கள், சமூக நற்பணிகள் என்று அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன.

அதுமட்டுமல்ல. தஞ்சாவூரைச் சுற்றியுள்ள அவரது கிராமப் பகுதிகளை சார்ந்த பலருக்கு நல்வாழ்வு அமைத்துக் கொடுத்தவர் சிவாஜி அவர்கள். குறிப்பாக விதவைகள், விதவைத் தாய்மார்கள் பலருக்கு சிவாஜி அவர்கள் வேலை வாய்ப்பு உதவிகள் செய்து அவர்கள் குடும்பம்  வறுமையில்லாது வாழ வழிவகைகள் செய்துள்ளார்.

இது போன்ற பல்வேறு உதவிகளை பல்வேறு கால கட்டங்களில் அமைதியாக சிவாஜி அவர்கள் செய்துள்ளார்.

ஆனால் விளம்பரம் தேடா விந்தை மனிதராக சிவாஜி அவர்கள் இருந்ததனால் அவரின் பல்வேறு சமூக உதவிகள் வெளிச்சத்திற்கு வராமலேயே போய் விட்டது. அவரது ரசிகர்களாகிய நாங்கள் அவற்றையெல்லாம் வெளிக் கொணர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே சிவாஜி அவர்களின் கொடைத் தன்மையை கண்டிப்பாக ஆதாரங்களுடன் வெளியிடுவோம். வெளியிட்டிருக்கிறோம்.

முக்கியமாக இப்படிப்பட்ட நடிகர் திலகத்தின் கொடைத் தன்மையை விளக்கும் ஒரு  பதிவை வெளியிடச் செய்தமைக்காக தங்களுக்கு மிக்க நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் அய்யாசாமி அவர்களே!

நன்றி!

அன்புடன்  
நெய்வேலி வாசுதேவன்


veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Nov 29, 2013 10:01 pm

வாசு சார்
நடிகர் திலகத்தின் சிலை பற்றியும், அவருடைய கொடைத்தன்மை பற்றியும் தங்கள் பதிவுகள் மிகச் சிறப்பாக உள்ளன. இது வரை அறிந்திராத தகவல்களாக பலருக்கு இது தெரிய வரும். தங்களுக்கு என் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள். நடிகர் திலகத்தின் திருவுருவச்சிலையின் அமைப்பு பற்றிய தங்கள் கருத்துக்களில் அனைத்து அம்சங்களையும் விரிவாக எடுத்துச் சொல்லி விட்டீர்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Nov 30, 2013 6:44 am

மிக்க நன்றி வீயார் அவர்களே.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Sat Nov 30, 2013 8:13 am

வாசு சார் மற்றும் நண்பர்களுக்கு,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை பற்றி வழக்கு நடந்து கொண்டிருப்பதால், உணர்ச்சி வசப்பட்டு காரியத்தைக் கெடுத்து விடாமல், சட்ட பூர்வமாக அதனை எதிர் கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. என்னால் முடிந்த பங்களிப்பினை அதில் தந்து வருகிறேன். நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தங்களைப் போன்ற உண்மையான ரசிகர்களின் ஆதரவும் வாழ்த்தும் இருக்கும் போது நிச்சயம் நாம் வெற்றி கொள்வோம்.
நன்றி
ராகவேந்திரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 30, 2013 1:21 pm

vasudevan31355 wrote:நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சமூக உதவிகள்
அறியாத பல செய்திகளை வழங்கியுள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 01, 2013 8:39 am

மிக்க நன்றி ராகவேந்திரன் சார் மற்றும் ராஜா சார்.

Barrister Rajinikanth
Barrister Rajinikanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013

PostBarrister Rajinikanth Sun Dec 01, 2013 3:49 pm

திரு வாசு அவர்கள்,

திரு அய்யாசாமி அவர்களின் கேள்விகளுக்கு உரிய முறையில் விளக்கம் அளித்தீர்கள். சமூகத்திற்கு மற்ற எந்த நடிகரை காட்டிலும் நடிகர் திலகம் அவர்கள் உண்மையிலயே பல நல்ல காரியங்கள் செய்துள்ளதை அவர் அறிந்திருக்க மாட்டார்.
விளம்பரம் செய்து கடையேழு வள்ளல்களுக்கு பிறகு எட்டாவது வள்ளல் என்று வேண்டுமானால் புகழ் பாட வைக்கலாம். ஆனால் உண்மையான வள்ளல்தன்மை செய்யும் நல்ல காரியங்களை விளம்பரப்படுத்த எவன் ஒருவன் விரும்பமாடானோ அவனே வள்ளல். தமிழகத்தின் உண்மையான நடிக வள்ளல் சிவாஜி ஒருவர் தான்.

மேலும் அவர் சிலையை அகற்ற அரசு தரப்பில் கூறும் காரணம் " அந்த இடத்தில் 10 விபத்துக்கள் நடந்துள்ளன என்று. கிட்டத்தட்ட சுமார் 45,000 மேல் ஒரு நாளில் வாகனங்கள் அந்த சாலையில் பயணிக்கின்றன.
அப்படி உண்மையிலயே சிலை ஒரு தடை என்றால் ஒரு வருடத்தில் சுமார் குறைந்தது 250 முதல் 500 விபத்துக்கள் அல்லவா நடந்திருக்கவேண்டும்? அரசு தரப்பில் கூறும் இந்த காரணத்தை மேலும் ஆராய்ந்தால் இரவு 11 மணிக்கு மேல் விபத்து நடைபெறுவதை கூறுகிறார். இரவு 11 மணிக்கு சுமார் 40 கிலோ மீட்டர் வேகம் ஓட்டுபவர் கூட சாலை காலியாக இருக்கும் patchathil 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டுவதை நாம் பார்க்கிறோம். இது ஓட்டுபவர் தவறே தவிர சிலை தவறு கிடையாது.
TRAFFIC POLICE முக்கால் வாசி நேரம் வசூலில்தான் மும்மரமாக ஈடுபடுகிறார்களே தவிர போக்குவரத்தை சீர் செய்ய அல்ல என்பதை நாம் கண்கூடாக பல இடங்களில் பார்க்கிறோம்.
சிலையால் விபத்து என்றால் போக்குவரத்து முதலில் எடுக்கவேண்டிய சிலை மவுண்ட் ரோட்டில் உள்ள அண்ணா சிலை, நந்தனத்தில் உள்ள தேவர் சிலை மற்றும் எழும்பூரில் உள்ள தீரன் முத்துகொனே சிலைகளாகும். மேற்கூறிய சிலைகளால்தான் மக்களுக்கு என்றுமே உண்மையான தொல்லை. அதை விடுத்து சிவனே என்றிருக்கும் சிவாஜி சிலையால் விபத்து என்பது எள்ளி நகயாடவேண்டிய ஒரு விஷயமாகும்.

மனுதாரர் உண்மையிலயே சமுதாய அக்கறை கொண்டிருப்பவறேன்றால் மேற்கூறிய எல்லா சிலைகளை பற்றி அல்லவா வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும் ? அல்லது தெருவுக்கு தெரு உள்ள TASMAC கடைகள் பற்றி வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும் அல்லது சென்னை நகரில் உள்ள முக்கால் வாசி சாலைகள் கேவலமாக உள்ளதால் விபத்துக்கள் நிகழ்வது பற்றி PWD மீது வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும்.
அல்லது ஆட்சியில் அமர்ந்தது முதல் மக்களுக்கு மின்சார கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, மின்சார டெபொசிட் தொகை அதிகரிப்பு, காய் கனிகள் விலைகள் உயர்வு, அரிசி விலை உயர்வு இப்படி அதியவச்ய பொருள் அனைத்தும் விலை உயர்வதற்கு காரணமாக விளங்கும் இந்த ADMK அரசின் பொதுமக்கள் அணுகுமுறை குறித்தல்லவா பொதுநல வழக்கு தொடரபட்டிருக்கவேண்டும்? அதை விடுத்து சிவாஜி சிலை மீது தொடர்ந்திருப்பது தமிழகத்தின் உண்மை தமிழனாம் சிவாஜி அவர்கள் மீது மனுதாரர் கொண்டுள்ள வயிற்றெரிச்சலையும், காழ்புனர்ச்சியையும் காட்டுகிறது ! மனுதாரர் சார்பில் வாதாடும் வக்கீல் இப்படி ஒரு இழிவான மானங்கெட்ட தமிழின எதிரியாக இருக்கிறார் இவர் பெயர் காந்தி வேறு !!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக