ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வ கானங்கள்

+9
pon.sellamuththu
பார்த்திபன்
சிவா
krishnaamma
vasudevan31355
ayyasamy ram
மாணிக்கம் நடேசன்
ஹர்ஷித்
veeyaar
13 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அபூர்வ கானங்கள் - Page 4 Empty அபூர்வ கானங்கள்

Post by veeyaar Mon Dec 02, 2013 9:12 pm

First topic message reminder :

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.

இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.

விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்

veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down


அபூர்வ கானங்கள் - Page 4 Empty Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 Fri Dec 13, 2013 9:53 am

அன்பு வீயார் சார்,

அபூர்வ கானங்கள் வரிசையில் மிக அபூர்வ பாடலான அதுவும் எனக்கு மிக மிக பிடித்த பாடலான 'பாட்டெழுதட்டும் பருவம்' 'அண்ணாவின் ஆசை' படப் பாடலுக்கு என் ஆழ்ந்த நன்றி!
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

அபூர்வ கானங்கள் - Page 4 Empty Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 Fri Dec 13, 2013 10:15 am

அன்பு வீயார் சார்,

தாங்கள் பதிவிட்டுள்ளா 'அண்ணாவின் ஆசை' திரைப்படம் நடிகர் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த நடிகர் கே. பாலாஜி அவர்கள் தயாரித்த முதல் திரைப்படம் ஆகும். ஜெமினி, சாவித்திரி, பாலாஜி, கே.ஆர். விஜயா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்தார்கள். இந்தி நடிகர் அசோக் குமார் நடித்த ஒரே தமிழ்ப்படம் இது.

இப்போது இந்தப் படத்தைப் பற்றிய 'பேசும் படம்' இதழ் ஆவணத்தை அளிக்கிறேன். தங்கள் பதிவுக்கு இந்த ஆவணம் துணை புரியும் என்று நினைக்கிறேன்.

'பேசும் படம்' இதழ் Februvary 1966

அபூர்வ கானங்கள் - Page 4 Ima4_zpsebd6dd1f

அபூர்வ கானங்கள் - Page 4 Ima4_0001_zpsb16eb261

அபூர்வ கானங்கள் - Page 4 Ima4_0002_zpsc639797c

வாசுதேவன்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

அபூர்வ கானங்கள் - Page 4 Empty Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 Fri Dec 13, 2013 12:21 pm


'அண்ணாவின் ஆசை' திரைப்படத்தில் 'பூப்போல் மலர பொட்டு வைத்தாள்' என்ற சுசீலா அவர்களின் வளமான குரலில் ஒலிக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இளமை துள்ளும் கே.ஆர்.விஜயா, மகாதேவன் அவர்களின் மயக்கும் இசை இந்தப் பாடலை மிகவும் ரசிக்க வைக்கும். நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

அபூர்வ கானங்கள் - Page 4 Empty Re: அபூர்வ கானங்கள்

Post by ayyasamy ram Fri Dec 13, 2013 4:22 pm

அபூர்வ கானங்கள் - Page 4 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அபூர்வ கானங்கள் - Page 4 Empty Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar Mon Dec 16, 2013 5:50 pm

வாசு சார்
அண்ணாவின் ஆசை, பேசும்படம் பக்கங்கள், பூப்போல் மலர பொட்டு வைத்தாள் என்று, இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலை அதிகரித்து விட்டீர்கள். தங்களுடைய பதிவின் மூலம் அ்பூர்வமான பாடல்களை பகிர்ந்து கொள்ளும் இத்திரியின் மேன்மை கூடுகிறது. மிக்க நன்றி. பாராட்டுக்கள்.

அபூர்வ கானங்கள் ... தொடர்கிறது...

ஹீராலால்.. அந்தக் காலத்திய திரைப்படங்களில் இந்தப் பெயர் இடம் பெறாத நாளே இல்லை எனும் அளவிற்கு மிகப் பிரபலமான நடன இயக்குநர். இன்றைய நடன உத்திகளையெல்லாம் அன்றே நிறைவேற்றி விட்டார். ஏராளமான பிரபலமான பாடல்களின் நடனங்களில் இவருடைய முத்திரை பளிச்சிடும். அவர் நடனம் அமைத்த படங்களில் ஒன்று காசேதான் கடவுளடா. இப்படத்தில் இடம் பெற்ற அவள் என்ன நினைத்தாள் பாடல் காட்சிக்கு இவர் அமைத்துள்ள நடன அமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. மெல்லிசை மன்னரின் வித்தியாசமான தாளக்கட்டுக்கு, சற்றும் குறையாத தரத்தில் தன்னுடைய நடன அமைப்பை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் மென்மையாகவும் நளினமாகவும் இப்பாடலில் லக்ஷ்மியும் அவரது தோழிகளும் ஆடும் நடனம் அமைந்துள்ளது. பாருங்கள்.. நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இப்பாடலின் நடனத்திற்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.

பாடல் வரிகள் வாலி

veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

அபூர்வ கானங்கள் - Page 4 Empty Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 Thu Dec 19, 2013 9:05 am

வீயார் சார்,



எனக்கு மிக மிக பிடித்தப் பாடலான 'காசேதான் கடவுளடா' படத்தின் 'அவளென்ன நினைத்தாள்' பாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி! இந்தப் பாடலில் பிரபல மலையாள தமிழ் நடிகை சீமா துணை நடிகையாக லஷ்மியுடன் இணைந்து நடிப்பதைப் பார்க்கலாம்.

இதோ இன்னொரு பாடல்.

பல இசைக்கருவிகளின் பின்னணியில் மலர்ந்த ஒரு மறக்கவொண்ணா பாடல்.

'எங்க மாமா' படத்தில் பி.சுசீலா அவர்களின் ஈடு இணையில்லா குரலில் ஒலிக்கும் 'பாவை பாவைதான்' என்ற மனதை மயக்கும் பாடல். ஜெயலலிதாவின் அருமையான நடன அசைவுகள். விஸ்வநாதன் அவர்களின் மெய் மறக்கச் செய்யும் இசை. ஜெயலலிதாவுடன் ஆடும் நடன மாஸ்டரின் ஜாலியான கிறுக்குத் தனங்கள். பிரம்மாண்ட ஹோட்டல் செட். அருமையான வண்ணம் குழைத்த பாடல்.

அபூர்வமான பாடல் ஆனால் அனைவரையும் கிறங்கடிக்கும் பாடல்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

அபூர்வ கானங்கள் - Page 4 Empty Re: அபூர்வ கானங்கள்

Post by சிவா Thu Dec 19, 2013 3:51 pm

அனைத்தும் அருமையான பாடல்களின் தொகுப்புகள்!  நன்றி 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அபூர்வ கானங்கள் - Page 4 Empty Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar Fri Dec 27, 2013 10:56 pm

மற்றோர் அபூர்வ கானம்.

ஆசை அறுபது நாள், 1976ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். வி.குமாரின் இசையில் அருமையான பாடல்கள். இது கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் ஒரு நாளில் முடியாது என்று தொடங்கும். இனிமையான பாடல்


veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

அபூர்வ கானங்கள் - Page 4 Empty Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 Sat Dec 28, 2013 8:50 am

திரு.சோ அவர்களின் கை வண்ணத்தில் உருவான 'மிஸ்டர் சம்பத்' என்ற திரைப்படத்திலிருந்து திகட்டாத ஒரு பாடல். ஷூட்டிங் எடுப்பது போன்ற ஒரு காட்சி. இயக்குனராக நடிக்கும் முத்துராமன் நடிகையாக நடிக்கும் ஜெயாவை ஒரு காதல் டூயட் படமாக்கும் போது தன்னை ஹீரோவாக எண்ணி ஜெயாவுடன் ஆடிப் பாடி மகிழ்வது போன்ற பாடல். பாடலின் துவக்கத்தில் 'மெல்லிசை மன்னர்' இந்தப் பாடலுக்கு டியூன் போடுவது போன்ற காட்சிகள் சுவை. மயக்கும் எஸ்.பி.பியின் குரல், கிறங்கடிக்கும் சுசீலாவின் குரல் நம்மை இன்பத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். அருமையான மெலடி. "ஆரம்பம் யாரிடம்?.... உன்னிடம்தான்".... என்று தொடங்கும் என் சிந்தையை மயக்கிய பாடல். நீங்களும் பார்த்து மகிழுங்களேன்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

அபூர்வ கானங்கள் - Page 4 Empty Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 Sat Dec 28, 2013 8:55 am

அன்பு வீயார் சார்,

குமார் அவர்களின் இசையில்
'ஆசை அறுபது நாள்' படத்தில் இனிமையாக ஒலிக்கும் மிக மிக அபூர்வ பாடலான

'ஒருநாளில் முடியாதது
உறவாட சுகமானது'

பாடலை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி! இது போன்ற அதிகம் வெளிச்சத்திற்கு வராத சிறப்பான பாடல்களை இங்களித்து எங்களை சந்தோஷக் கடலில் மிதக்க வைப்பதற்கு தங்களுக்கு மிகவும் நன்றி! தொடரட்டும் தங்களுடைய அபூர்வ கானங்கள்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

அபூர்வ கானங்கள் - Page 4 Empty Re: அபூர்வ கானங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum