ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 10 Poll_c10எங்கள் சிவாஜி - Page 10 Poll_m10எங்கள் சிவாஜி - Page 10 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவாஜி

+16
balakarthik
myimamdeen
அன்பு தளபதி
M.M.SENTHIL
SENTHIL_BLORE
சிவா
ayyasamy ram
jayaravi
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
பாலாஜி
vasudevan31355
ராஜா
S.VINOD
veeyaar
20 posters

Page 10 of 20 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 20  Next

Go down

எங்கள் சிவாஜி - Page 10 Empty எங்கள் சிவாஜி

Post by veeyaar Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்

veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down


எங்கள் சிவாஜி - Page 10 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar Fri Jan 10, 2014 10:22 pm

கூட்டுக் குடும்பம் ..

இந்திய, குறிப்பாகத் தமிழ்க் கலாச்சாரத்திற்கு ஆணவேராக விளங்குவது. முந்தைய தலைமுறை வரையிலும் அநேகமாக ஒவ்வொரு குடும்பமும் இந்த முறையில் தான் வாழ்ந்திருந்தது. தந்தை தாய், மகன், மருமகள், பேரன், பேத்தி என ஒன்றாய் வாழ்ந்து, அவரவர் சுக துக்கங்களில் பங்கு கொண்டு வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களிலும் ஒன்றாய் அணுகி, ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்ந்து வந்த முறை இன்றைக்கு நினைத்தாலும் புல்லரிக்கிறது. இனிமேல் அப்படி ஒரு வாய்ப்பு வருமா என்பது நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்த கூட்டுக் குடும்பத்தின் சிறப்பை எழுத பக்கங்கள் போதாது. நடிகர் திலகத்தின் படங்களும் சரி, அவருடைய வாழ்க்கையும் சரி, சமுதாயத்தின் ஆணிவேரான கூட்டுக் குடும்பத்தின் மாண்பை மிகவும் ஆழமாய் வலியுறுத்தின. அவர் சொன்னதை செய்யும் இறைவனல்லவா. அவருடைய வாழ்க்கையிலும் இதனைக் கடைப்பிடித்தார்.

நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் பலவற்றில் இந்தக் கூட்டுக் குடும்பத்தின் பெருமை பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் தலைவனாக விளங்குபவரை வீட்டில் உள்ளவர்கள் இறைவனாகவே கருதினார்கள். அந்த அளவிற்கு அவருக்கு மரியாதை தந்தார்கள்.

அப்படி ஒரு மரியாதையை ஒரு குடும்பத் தலைவனுக்குத் தரும் பாடல் காட்சியைத் தான் தற்போது நீங்கள் காண உள்ளீர்கள். ஆனந்தக் கண்ணீர் ... நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களில் ஒன்று. 80களுக்குப் பிறகு வந்த நடிகர் திலகத்தின் அருமையான படங்களில் ஆனந்தக் கண்ணீர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம். இப்படத்தில் இடம் பெற்ற எங்கள் குடும்பம் என்ற இந்தப் பாடல் சங்கர் கணேஷ் இசையில் என்றென்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும் இனிமையான பாடல். மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் பாடிய இப்பாடலை என் விருப்பப் பாடலாக இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 10 Empty Re: எங்கள் சிவாஜி

Post by jayaravi Sat Jan 11, 2014 12:16 am

வீயார் சார் - அருமை - கூட்டு குடும்பத்தின் மதிப்பு , இன்றய தலைமுறைக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை - கொஞ்சம் வயதானாலே , முதியோர்கள் இல்லத்தில் சேர்த்து விட்டுதான் மறு வேலை..   என் அனுபவத்தில் சொல்கிறேன் , எழுதும் போதே கண்ணீர் தெளும்பிகின்றது- இது துரதிஷ்டவசமாக ஆனந்த கண்ணீர் அல்ல - இரத்த கண்ணீர் - வாரணாசியில் நடந்தது -

ஒரு இளம் வாலிபரும் அவரது மனைவியும்  ஒரு வயதான மூதாட்டியுடன்  ஹனுமான் ghatt வந்திருந்தனர்  - நங்கள் குளித்துவிட்டு   மேலே வருகையில் , அந்த மூதாட்டி தனியாக    அமர்ந்து  இருந்தார் -
யாருமே அருகில் இல்லாததால் l சிறிதே பேச்சு கொடுத்தேன்  - அவள் சொன்னது என்னை பிரம்பால்  அடித்தது போன்று இருந்தது - அவளுக்கு தெரிந்தே இருந்தது - அவளுடைய மகன்  அந்த கங்கை கரையில் அவளை தனியாக விட்டு விட்டு செல்வான்  என்று - ஆனால் அவள் எதிர் பார்க்காதது கையில் கொஞ்சம் கூட பணம் தராமல் அவன் போவான்  என்று - என்னிடம் சங்கர மடத்திற்கு  கூட்டி செல்லமுடியுமா என்று கேட்டாள் - அவள் கண்ணீரின் வேகம் அந்த கங்கையின் வேகத்தைவிட பல ஆயிரம்  மடங்கு  அதிகமாகவே  இருந்தது  - மனம் கணத்து கூட்டி  சென்றேன் - என் தாயை  அங்கே விடுவதை  போல நடை பிணமாக அவளை கூட்டி சென்றேன் - கையில் இருந்த பணத்தை அவளிடம் தந்து அவளை நன்றாக  பார்த்து கொள்ளும் படி சங்கர மட அதிகாரிகளை வேண்டி கொண்டேன் . எங்கே  சார் போனது அன்னையும்  பிதாவும் முன்னறி தெய்வம் என்ற வார்த்தைகள் ? எங்கு தொலைந்தது நம் பாரம்பரியம் ?  எந்த திசையை நோக்கி போய்கொண்டுஇருகின்றோம் ? இப்படி  பட்ட பிள்ளைகள் இருந்தும்  என்ன  பயன் ?  காசியில்யில் விசாலாட்சியை பார்க்க வந்தவன் , அண்ண பூரணியான  தாயை கங்கை கரையினில் தாரை வார்த்து  விட்டு , பணத்தை எண்ண  போய்விட்டானே ?  படங்களை பார்த்து உருகும்  நாம் , நம் சொந்த வாழ்கையில் தாயை  ஏன் ஏலம் போடுகிறோம் ?  கூட்டாவது ? குடும்பமாவது ? - எல்லாமே தலைவருடன் முடிந்து  விட்டது சார் -அவர் குடும்பம் ஒரு விதி விளக்கு - பல குடும்பங்கள் இன்று வெறும் தெரு விளக்காக உள்ளதே - காசி சொல்லும்  என் வார்த்தைகள்  எவள்ளவு  உண்மை  என்று

அன்புடன் ரவி
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 10 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 Sat Jan 11, 2014 9:42 am

வீயார் சார்,

அருமையான காட்சியை அளித்துள்ளீர்கள். 'ஆனந்தக் கண்ணீர்' சிறந்த ஒரு குடும்பச் சித்திரம். மகளின் திருமண வரதட்சணைக்காக தன்னையே அழித்துக் கொள்ளச் சித்தமாகி விட்ட ஒரு தந்தையின் பாசக் காவியம். கண்ணீர்க் கதை. கூட்டுக் குடும்பங்கள் பிள்ளைகளால், மருமகள்களால் பிரியும் வேதனைகள் இனியும் தொடராமல் இருக்கட்டும். பாசத்தை வலியுறுத்தும் தங்கள் பதிவுக்கும், அதற்கேற்ற காட்சியை இங்கு பதிவிட்டதற்கும் மிக்க நன்றி!


Last edited by vasudevan31355 on Sat Jan 11, 2014 9:45 am; edited 1 time in total
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 10 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 Sat Jan 11, 2014 9:44 am

ரவி சார்,

உண்மை. தங்கள் காசி அனுபவம் போல இன்றளவும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பாசம் எல்லாம் மரித்துப் போய் விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.  தங்களின் உதவும் தயாள குணம் அதைப் பொய்யாக்குகிறது.

ஒருமுறை தலைவரிடம் நான் பேசிக்கொண்டு இருக்கையில் "அண்ணே! உங்கள் தலைமுடி அற்புதமாக அடர்த்தியாக இருக்கிறதே! அதன் ரகசியம் என்ன?" என்று கேட்டேன். அதற்கு நடிகர் திலகம் "அது அம்மா முடிடா" என்றார் பெருமையாக. அப்போதுதான் அவர் முகத்தில் எவ்வளவு சந்தோஷம்! பூரிப்பு! அம்மாவுக்கு உள்ள அடர்த்தியான முடி போலவே தனக்கும் இருக்கிறது என்ற பெருமை! அவ்வளவு பாசம் தன் தாயின் மேல். அப்படிப்பட்ட புண்ணிய மகன்கள் ஒரு சில பேர் இருந்ததால்தான் இன்றளவும் பாசம் தழைத்தோங்கி வளர்ந்து இன்றளவும் அழிந்து போகாமல் இருக்கிறது.

பேச்சில் மட்டுமல்ல....செயலிலும் பாசமுடன் குடும்பத்தை நடத்திச் சென்ற பல்கலைக் கழகம் நடிகர் திலகம் அவர்கள். அதனால்தான் அவர் குடும்பத்தை 'அன்னை இல்லம் நல்லதொரு குடும்பம்... அது ஒரு பல்கலைக் கழகம்' என்பார்கள்.

தங்கள் அற்புதமான பதிவுக்கு என் நன்றி!
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 10 Empty Re: எங்கள் சிவாஜி

Post by jayaravi Sat Jan 11, 2014 1:40 pm

அன்புள்ள வாசு - உங்கள் முயற்சி பெரும் வெற்றி காண அந்த இறைவனை மனமார வேண்டுகிறேன் . என்ன முயற்சி!!! - யாருக்கு இப்படி வரும்!! - பலனை எதுவுமே எதிர்பார்க்காமல்------ உள்ளத்தில் நல்ல உள்ளம் - சற்றே உறங்க முயற்சி செய்யுங்கள் -இடை விடாத உழைப்பு உடல் நலத்தை பாதிக்க கூடாது - உங்களை நம்பி உங்கள் குடும்பம் ஒன்று இருப்பது போல் ,உங்களை நம்பி உங்கள் ரசிகர்கள் நாங்களும் இருக்கிறோம் ---

அன்புடன்
ரவி
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 10 Empty Re: எங்கள் சிவாஜி

Post by jayaravi Sat Jan 11, 2014 2:02 pm

தன்னடக்கத்தின் மறு  பெயர் என்ன என்று  என்னை  யாராவது  கேட்டால் என்னால் இரண்டு பெயர்களைத்தான் சொல்ல முடியும் - ஒன்று வீயார்  அடுத்தது வாசு -   - இருவருமே  ஒரு தங்க  சுரங்கமாக மின்னுகிறார்கள் - இன்னும்  இந்த பதிவை  இங்கே போடாமல் இருக்கும்  போதே  வாசுவின்  தன்னடக்கம்  எவ்வளவு என்று  புரிகின்றதல்லவா ஒரு முயற்சியின் பிரமாண்டம் - உழைப்பின் தன்னடக்கம் - அதுதான் வாசு - அவரின் ரசிகராக இருப்பதில் என்ன ஆச்சிரியம் இருக்க போகிறது ??

அன்புடன் ரவி


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 10 Empty Re: எங்கள் சிவாஜி

Post by jayaravi Sat Jan 11, 2014 9:09 pm

எல்லா நல்ல உள்ளங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு / பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன் ரவி
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 10 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar Sun Jan 12, 2014 8:40 am

ரவி
தங்கள் பாராட்டிற்கு என் உள்ளம் கனிந்த நன்றி.
தன்னடக்கத்திற்கு சிறந்த உதாரணம் நடிகர் திலகம். அவருடைய ரசிகர்களும் அவரைப் போலவே இருந்தால் அது மகிழ்ச்சியே.
அன்புடன்
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 10 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar Sun Jan 12, 2014 8:41 am

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் கோயிலருகில் நடிகர் திலகத்தின் நிழற்பட கட்அவுட் பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டு ரூபாய் மாலை அணிவித்து வருகின்றனர் திருச்சி மாவட்ட சிவாஜி மன்றத்தினர். இந்த ஆண்டும் அதே போல் நடத்தியுள்ளனர். 11.01.2014 அன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் நடிகர் திலகத்தின் கட்அவுட்டிற்கு ரூபாய் மாலை அணிவிக்கப் பட்ட காட்சி. நிழற்படத்தை நமக்கு அனுப்பிய திரு அண்ணாதுரை அவர்களுக்கு நமது நன்றி. மற்றும் மாவட்ட சிவாஜி மன்றத்தினருக்கும் உறுப்பினர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.

எங்கள் சிவாஜி - Page 10 VESri201401_zps47b28d12

எங்கள் சிவாஜி - Page 10 VESri201402_zpsb9209c25
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 10 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 Sun Jan 12, 2014 10:25 am

கண்கொள்ளாக் காட்சி. நன்றி வீயார் சார்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 10 Empty Re: எங்கள் சிவாஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 20 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 20  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum