ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

+25
கிருஷ்ணா
அனுராகவன்
பாலாஜி
myimamdeen
SenthilMookan
காயத்ரி வைத்தியநாதன்
illayatamil
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
jenisiva
உதயசுதா
KINGUMAR
பூர்ணகுரு
T.N.Balasubramanian
sankarraja
பார்த்திபன்
சிவா
ஹர்ஷித்
krishnaamma
விஸ்வாஜீ
ராஜா
ayyasamy ram
ஜாஹீதாபானு
N.S.Mani
M.M.SENTHIL
29 posters

Page 22 of 28 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 28  Next

Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Empty என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Thu Feb 13, 2014 5:42 pm

M.M.SENTHIL wrote:கிட்டத்தட்ட அனைத்தயும்
சொல்லிவிட்டேன் என்று
நினைக்கிறேன்!
இப்படித்தான் வாழ வேண்டும்
என்று எனக்கு
கொள்கை ஏதும் இல்லை,
திருடக்கூடாது
அடுத்தவரை ஏமாற்றி
பொழைக்க கூடாது!!
நாலு நாள் பொழச்சாலும்
நல்ல பொழப்பா இருக்கணும்,
மத்தபடி ஏதும் இல்லை!!
அந்த நல்ல பொழப்பை
என் மகள் வந்த பின்தான்
நான் பிழைக்க ஆரம்பித்துள்ளேன்!!
இனி கட்டையில் போகும்வரை
அப்படியே இருந்துவிட்டு போகிறேன்!!

நல்வழியை விட்டு கெட்ட வழியில் என் மனதை தடம் புரளச் செய்து விடாதே இறைவா என்று தினமும் இறைவனை வேண்டுங்கள். நல்லதே நடக்கும் செந்தில்புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Feb 13, 2014 5:56 pm

என் வாழ்க்கையை திரும்பி
பார்த்து வந்தேன் இத்தனை நாள்,
தற்காலிகமாக முடிவுரை
எழுதும் முன்,
என் சொந்தங்கள் இருவர்க்கு
ஒரு சவால்!!
நீ உன் வாழ்வில்
என்றுமே உயரப் போவதில்லை
என்று கேலி பேசிய அத்தை,
உனக்கும், மணமாகி நீயும்
குழந்தை பெற்று? ம்...
இதெல்லாம் நடக்குமா?
என்றென்னை கேவலப்படுத்திய
என் சின்னம்மா!
இவர்கள் இருவருக்குத்தான்
என் சவால்,
முதலில் அத்தைக்கு
என் வாழ்வில் என்றுமே
நான் உயரப் போவதில்லை
என்று சபித்த அத்தையே,
இன்று என்ன ஆனது
உந்தன் மகனின் நிலை,
நான் குடிகாரனாய்
இருந்த சமயத்திலும்
சொந்தங்களை விட்டுக்
கொடுத்து பேசியதில்லையே,
நீ மட்டும் அன்று ஏன்
அப்படி பேசினாய்!!
கடன்காரந்தானே நீ என்றாயே
இதோ இன்று கூட நான்
வங்கியில் பத்து லட்சம்
கடன் கேட்டுவிட்டுதான் வருகிறேன்!!
அந்த கடனை வாங்க
எனக்கு தகுதி இருப்பதாய்
மேலாளர் சொன்னார்,
இனிமேலாவது ஒருவரை
அப்போதைய நிலை கண்டு
கேவலம் சொல்லாதே,
குப்பையில் இருப்பவனும்
நாளை குபேரனாகலாம்,
குபேரன் ஒருநாள்
குப்பைக்கு வரலாம்!!
சவால் என்றேனே அது
என்ன என்கிறாயா?
இன்னும் இரண்டு வருடம்
கழித்துப் பார்ப்போம்,
வங்கிக் கணக்கில்
வரவு எவ்வளவு என்று,
உங்களை விட நான்
ஒரு ரூபாயேனும் அதிகம்
வைத்திருப்பின் – உங்கள்
வார்த்தை உங்களுக்கே
நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்!!
இந்த இரண்டு வருட இடைவெளி
என் கதையை தங்கள் மகன்
படிக்க நேரின் – அவனும்
மீண்டு வர கொடுத்த கால அவகாசம்!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Feb 13, 2014 5:59 pm

ஜாஹீதாபானு wrote:
நல்வழியை விட்டு கெட்ட வழியில் என் மனதை தடம் புரளச் செய்து விடாதே இறைவா என்று தினமும் இறைவனை வேண்டுங்கள். நல்லதே நடக்கும் செந்தில்புன்னகை

இறைவன் விசித்திரமானவன் என்று நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன் மேடம், இறைவன் நல்லதையே செய்வான், நம்புகிறேன். உங்கள் ஆசிர்வாதம் எனக்கு உதவட்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Thu Feb 13, 2014 6:04 pm

M.M.SENTHIL wrote:என் வாழ்க்கையை திரும்பி
பார்த்து வந்தேன் இத்தனை நாள்,
தற்காலிகமாக முடிவுரை
எழுதும் முன்,
என் சொந்தங்கள் இருவர்க்கு
ஒரு சவால்!!
நீ உன் வாழ்வில்
என்றுமே உயரப் போவதில்லை
என்று கேலி பேசிய அத்தை,
உனக்கும், மணமாகி நீயும்
குழந்தை பெற்று? ம்...
இதெல்லாம் நடக்குமா?
என்றென்னை கேவலப்படுத்திய
என் சின்னம்மா!
இவர்கள் இருவருக்குத்தான்
என் சவால்,
முதலில் அத்தைக்கு
என் வாழ்வில் என்றுமே
நான் உயரப் போவதில்லை
என்று சபித்த அத்தையே,
இன்று என்ன ஆனது
உந்தன் மகனின் நிலை,
நான் குடிகாரனாய்
இருந்த சமயத்திலும்
சொந்தங்களை விட்டுக்
கொடுத்து பேசியதில்லையே,
நீ மட்டும் அன்று ஏன்
அப்படி பேசினாய்!!
கடன்காரந்தானே நீ என்றாயே
இதோ இன்று கூட நான்
வங்கியில் பத்து லட்சம்
கடன் கேட்டுவிட்டுதான் வருகிறேன்!!
அந்த கடனை வாங்க
எனக்கு தகுதி இருப்பதாய்
மேலாளர் சொன்னார்,
இனிமேலாவது ஒருவரை
அப்போதைய நிலை கண்டு
கேவலம் சொல்லாதே,
குப்பையில் இருப்பவனும்
நாளை குபேரனாகலாம்,
குபேரன் ஒருநாள்
குப்பைக்கு வரலாம்!!
சவால் என்றேனே அது
என்ன என்கிறாயா?
இன்னும் இரண்டு வருடம்
கழித்துப் பார்ப்போம்,
வங்கிக் கணக்கில்
வரவு எவ்வளவு என்று,
உங்களை விட நான்
ஒரு ரூபாயேனும் அதிகம்
வைத்திருப்பின் – உங்கள்
வார்த்தை உங்களுக்கே
நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்!!
இந்த இரண்டு வருட இடைவெளி
என் கதையை தங்கள் மகன்
படிக்க நேரின் – அவனும்
மீண்டு வர கொடுத்த கால அவகாசம்!!

 சூப்பருங்க சூப்பருங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by கிருஷ்ணா Thu Feb 13, 2014 6:08 pm

சவாலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் செந்தில் :-) நீங்கள் முன்னேற இந்த மனப்பாண்மை நிச்சயமாக வேண்டும். இந்த சவால்தான் உங்கள் முன்னேற்றத்தின் தூண்டுகோல்.


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ayyasamy ram Thu Feb 13, 2014 6:27 pm

-
Where there is will there is away...
-
மனமிருந்தால் மார்க்கமுண்டுன்னும் சொல்லலாம்..!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Feb 13, 2014 9:56 pm

தங்கள் மகனை விட நான்
ஒரு ரூபாய் குறைவெனில்
நான் செய்யும் தோழில்
அத்தனையும் விட்டு, விட்டு
தங்கள் மகனிடம்
வேலைக்கு வருகிறேன்,
கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையாயினும்!!
அடுத்ததாய் சின்னம்மா,
நீங்கள் பேசிய அற்ப பேச்சை
மீண்டும் நான் பதிய விரும்பல,
மணமுடித்தேன் – இதோ
இரண்டரை வயதில் எனக்கு மகள்,
ஆண்மை பற்றி பேசினாயோ
என் ஊனம் பற்றி பேசினாயோ
எதையும் நானறியேன்,
இப்போது நான் சமுகத்துக்கு
குடும்பஸ்தன் – என் பிள்ளைக்கு
ஒரு தகப்பன்!
உன் பேச்சை பொய்யாக்கி விட்டேன்
நீ செத்தாலும் உன் முகத்தை
காண கூடாது – என் மனதில்
அப்படி ஒரு வெறி!
எடுத்தெறிந்து பேசிவிட்டாய்
சொல்லை மிக கடுமையாய்
பிரயோகித்து விட்டாய்,
அசிங்கமல்லவா – நான்
உனக்கு மகன் முறையல்லவா!!
நீ பெற்றால்தான் பிள்ளையா,
சின்னம்மா என நான் அழைக்கும்போது
எனக்கும் நீ தாய்தானே?
உனக்கு ஒத்த புள்ள
நான் சபிக்க விரும்பல,
என் சாபம் பலிக்குமுன்னு
பேசவும் தோணல!
முப்பத்தி ரண்டு பல்லுல
ஒரு பல்லு பலிச்சாலும்
பாவம் எனக்குத்தான்!!
சொந்தத்துல சண்டை வந்தா
இன்னொரு நாள் சேரமாட்டோமா?
சிறு பிள்ளை என் புத்தியில் உறைத்தது
உனக்கேன் உறைக்கவில்லை!
இப்போது பார்த்தாயா
இந்த பழனியம்மாள் பேரன்
நல்லவனாகி விட்டேன்,
உன் மகன் பேரைக் கெடுத்து
ஊரை விட்டு ஓடிப்போய்,,,,,,,
என்னென்னமோ நடந்து விட்டது
இந்த ஐந்து வருடத்தில்,
உனக்கும் இப்போது ஒரு சவால்
ஊரையும், உறவினரையும் கூட்டி
நான் மணமாலை சூடியது போல்,
உன் மகனுக்கும் செய்யேன் பார்க்கிறேன்!!
உனக்கு வலிக்க வேண்டும்
என நான் சொல்லவில்லை
என் வலியை கொஞ்சம்
இறக்கி வைக்கிறேன்!!


Last edited by M.M.SENTHIL on Thu Feb 13, 2014 10:20 pm; edited 1 time in total


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Feb 13, 2014 10:11 pm

என் வாழ்வை நான்
திரும்பி பார்த்து விட்டேன்
என நினைக்கிறேன்,
என்னைப் பற்றி கொஞ்சம்:
கோபக்காரன் இன்றுவரை,
மகள் வந்த பின் பாதியளவு
குறைந்து விட்டதை உணர்கிறேன்!
பாசம் வைத்து விட்டால்
உயிரையும் கொடுப்பேன்,
உண்மை அன்புக்கு அடிமை!!
கோபமோ, அழுகையோ
அதை கொட்டிவிடுவேன்!!
கோபம் ஆண்களுக்கானது
அழுகை பெண்களுக்கானது
என்பதில் உடன்பாடில்லை,
இருவருக்கும் இரண்டுமே வேண்டும்!!
ஆணாகிலும் அழ வேண்டிய நேரத்தில்
கண்டிப்பாக அழுது விட வேண்டும்,
நான் அப்படியே!!
கோபம் கொப்பளிக்கும்போது
அமைதிப் படுத்த மாட்டேன்
அதையும் காட்டி விடுவேன்!!
செய்யும் தொழிலில்
நஷ்டம் வந்தாலும்
மனம் தளராமல்
மீண்டும் உழைப்பேன்
அடுத்த இலக்கை நோக்கி!!
கொஞ்சம் கவிதை எழுத தெரியும்,
பேச்சில் நல்ல வார்த்தைகளை
தேர்ந்தெடுத்து பேசுவேன்!!
மனம் வாடும்போது
புத்தகம் படிப்பேன்!!
தினமும் என் பாட்டி பழனியம்மாள்
படத்தின் முன் நின்று
முந்தைய நாள் குறைகள்
ஏதேனும் இருப்பின் – அதை
சரியாக்க இந்த பேரனுக்கு
நல்ல அறிவைக் கொடு என்று பேசி நிற்பேன்!!
குடும்பம் வேறு
வியாபரம் வேறு,
குடும்பத்துக்காய்
அதிக நேரம் செலவிடுவேன்!
வியாபாரம் எனும்போது
குடும்பத்தை கொஞ்சம் மறந்து விடுவேன்!!
இன்னும் எத்தனை
இன்னல் வந்தாலும்
எதிர்த்து நிற்கும்
தில் இருக்கிறது!!
என் பெயர் செந்தில் குமார்
என்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்,
ஏனெனில் அதில் “தில்” வருவதால்!!
மற்றபடி வாழ்க்கையை
ரசித்து வாழும்
ஆயிரக் கணக்கானோரில்
நானும் ஒருவனே!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Feb 13, 2014 10:22 pm

மனைவி, மகள் பற்றி:

மனைவி அமைவது
இறைவன் கொடுத்த வரம்
என்பது உண்மையான கூற்றெனில்
எனக்கு இறைவன்
நல்ல வரத்தை கொடுத்துள்ளான்!!
என் மனதை நன்கு புரிந்து
அவளை மாற்றிக் கொள்ளும்
வித்தைக்காரி என் மனைவி!!
மனதிலுள்ளதை
மறைக்காமல் சொல்லுவாள்,
அன்பால் என்னை வெல்லுவாள்!!
சகிப்புத்தன்மை அதிகம்
எடுத்தெறிந்து பேசாதவள்,
எதையும் ஆழமாய்
யோசிக்க வேண்டும்
ஒவ்வொரு செயலிலும்
என்ற எண்ணம் கொண்டவள்!!
மொத்தத்தில் மனைவி
எனக்கு சரியான துணைவி!!
அடுத்ததாய் மகள்
அப்பன் எட்டடி பாய்ந்தா
குழந்தை பதினாறடி பாயும் என்பார்கள்,
நான் எட்டடிக்கும் மேல்
பாய்ந்திருக்கிறேன்,
என் மகள் என்னைவிட அதிகம்!!
துடுக்குத்தனம்
என்னைப் போலவே கோபம்!!
எனக்கும் என் செல்லத்துக்கும்
இரண்டு ஒற்றுமை இருக்கிறது
ஒன்று
சிரித்தாள் இரு பக்கமும்
விழுகின்ற கன்னக் குழி,
மற்றொன்று இடது கை ரேகை
ஒரே மாதிரி நேர் கோட்டில் இருக்கும்!!
மற்றபடி என் எண்ணத்தின் நகல்,
என் குணத்தின் அசல்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Fri Feb 14, 2014 12:55 pm

அருமை செந்தில் முற்றுமா? தொடருமா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 28 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum