ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவருக்கு சொந்த வீடில்லை சேவை செய்வதில் ஈடில்லை!

2 posters

Go down

இவருக்கு சொந்த வீடில்லை சேவை செய்வதில் ஈடில்லை! Empty இவருக்கு சொந்த வீடில்லை சேவை செய்வதில் ஈடில்லை!

Post by சாமி Sat 23 Nov 2013 - 16:00

சொந்தமாக வீடு இல்லாத நிலையிலும் மக்களுக்கான சேவைகளை முறையாகச் செய்து வருகிறார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர்

நிறைய பேர் பொழைக்கத் தெரியாதவன்னு என் காதுபடவே பேசத்தான் செய்யுறாங்க. அவங்க சொல்றத எல்லாம் நான் காதுல வாங்குறதே இல்ல. ஆண்டவன் இப்ப குடுத்துருக்க வசதியே போதுமுங்க. என் ஊர் மக்கள் என்ன நம்பித்தான் இந்தப் பொறுப்ப ஒப்படச்சுருக்காங்க. அவங்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். இன்னைக்கு நான் செய்யுற நல்லது, காலத்துக்கும் என்ன அவங்க மனசுல நிக்க வைக்கும். அது போதும் எனக்கு" என்கிற ராமையா, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த விளக்கனேந்தல் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர். அரசியலில் சின்னப் பதவி கிடைத்தாலே காரில் பவனி வருபவர்கள் மத்தியில், இன்று வரை அவருக்கென சொந்த வாகனம் கிடையாது. வாங்குவதற்கும் வசதியில்லை. எல்லா இடங்களுக்கும், அரசுக் கூட்டங்களுக்கும் நடந்தேதான் செல்கிறார்.

2006-ஆம் வருஷம் இந்தத் தொகுதியில தாழ்த்தப்பட்ட மக்கள்தான் நிக்கணும்னு அரசாங்கம் சொல்லிடுச்சு. எங்க சமூக மக்கள் யார நிக்க வைக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கப்ப, திடீர்னு நீ நில்லுனு என்னை சொல்லிட்டாங்க. நான் மறுத்தும் என்னை வற்புறுத்தி நிக்க வச்சுட்டாங்க. அந்தத் தேர்தல்ல ஜெயிச்சு பிரசிடெண்ட் ஆனேன்.

கொஞ்ச நாள்லயே மக்கள் என் மேல நம்பிக்கை வச்சு இந்தப் பொறுப்ப ஒப்படைச்சுருக்காங்கனு புரிஞ்சது. அத சரியா செய்யணும்னு நெனச்சு ஒவ்வொரு வேலையையும் ஆர்வத்தோட செஞ்சேன். இப்பவும் செஞ்சுட்டு இருக்கேன். எனக்குக் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அரசாங்க காசுல ஒரு பைசா கூட தொடமாட்டேன். அது மக்கள் பணம், அவங்களுக்குத்தான் போய்ச் சேரணும்" என்கிற ராமையாவின் கிளீன் இமேஜ், அவர் அடுத்த உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறக் காரணமாக அமைந்துள்ளது.

பல ஆண்டு காலம் இங்கு நிலவி வந்த தண்ணீர்ப் பிரச்சினை, ராமையா பொறுப்புக்கு வந்ததும் தீர்க்கப்பட்டது. இன்று வரை காலை, மாலை என இரு வேளைகளும் தண்ணீர் மோட்டார் போடுவது, ஒவ்வொரு பகுதிக்கும் தண்ணீர் திறந்துவிடுவது இவர்தான். இது அத்தியாவசியமான வேலை என்பதால் அவர் பெரும்பாலும் வெளியூர் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் இவரின் அப்பா அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

நான் இந்தக் கிராமத்துக்கு வந்து 35 வருஷம் ஆகுது. முன்னல்லாம் தண்ணிக்காக விடிய விடிய தூங்காமல் ஆறு கிலோ மீட்டர் வரை அலைவோம். ராத்திரியில எந்தக் கிணத்துல மோட்டார் ஓடுதுனு கண்டுபிடிச்சு அங்க போய் தண்ணி பிடிப்போம். குடிக்கிறதுக்கு, குளிக்கிறதுக்கும் ஒரே தண்ணிதான். ஆனா இவர் வந்ததுக்கு அப்புறம் தண்ணிப் பிரச்சினை இல்ல. ரொம்ப நிம்மதியா இருக்கோம்" என்கிறார், விளக்கனேந்தல் பஞ்சாயத்தைச் சேர்ந்த தங்கமணி என்கிற பெண்மணி.

அரசின் எல்லா திட்டங்களையும் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறார் ராமையா. அணுகுவதற்கு எளிதானவர் என்பதால் ஊர் மக்களும் ஆர்வத்தோடு அரசின் திட்டங்கள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர். குறிப்பாக 100 நாள் வேலைத் திட்டம் இங்கு சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. சம்பளம் குறைத்துக் கொடுப்பதாக இங்கு ஒரு நாள் கூட பிரச்சினை ஏற்பட்டதில்லை. இதற்காக பல அரசு அதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது விளக்கனேந்தல் ஊராட்சி.

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராமையாவிற்கு வாழ்வாதாரமே விவசாயம்தான். அரசுக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும்போது, இவரின் மனைவி விவசாய வேலைகளை கவனித்துக் கொள்கிறார். எந்த நேரமா இருந்தாலும் ஊர் வேலைன்னு கூப்புட்டா கிளம்பிப் போயிடுவாரு. விவசாய வேலைய விட்டுட்டு ஊர் வேலையா இவர் அலையும்போது கோவம் வரும். ஆனா ஊர்ல இவரப் பத்தி மத்தவங்க பெருமையா பேசும்போது அந்தக் கோவமெல்லாம் பறந்து போயிடும்" எனச் சிரிக்கிறார், அவரின் மனைவி செல்வி.

தெரு விளக்கு பழுதடைந்தால் இவரே மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்குகிறார். 100 நாள் வேலைத் திட்டப் பணிகளை மேற்பார்வையிடும்போது, வேலை பார்க்க முடியாமல் சோர்ந்து போயிருக்கும் முதியவர்களைப் பார்த்தால் இவரே அவர்கள் வேலையை செய்கிறார். சும்மா நிக்கிறதுக்கு கொஞ்சம் வேலை பாத்தா அவங்களுக்கு ஒத்தாசையா இருக்கும்ல" என்கிறார்.

இப்போது வரை விளக்கனேந்தல் கிராமத்திற்கு சீரான பேருந்து வசதி கிடையாது. பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்றால் விளக்கனேந்தலில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு 3 கி.மீட்டர் நடக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் அதே நிலைமைதான். பஸ் இல்லாத சமயங்களில் ஆட்டோவில்தான் வர வேண்டும். நள்ளிரவு நேரம் என்றால் டபுள் சார்ஜ். தற்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் இருக்கிறார். ராமையாவிற்கு பல ஆண்டு காலமாக ஓர் ஆசை உள்ளது.

சொந்தமா ஒரு வீடு கட்டணும்னு ரொம்ப நாள் ஆசை. இப்ப இருக்கிற வீடு 97-ஆம் வருசம் அரசு உதவியில கட்டுனது. ரெண்டு பேர் மட்டும்தான் கால் நீட்டிப் படுக்க முடியும். பரண் இல்லாததால வீட்டுல பாதி இடத்தை பாத்திரமும், துணிமணியும் அடைச்சுட்டுருக்கு. சென்ட்ரிங் விரிசல் விட்டுருச்சு. ஒரு சின்ன மழை பெய்ஞ்சா கூட ஒழுகும். பிள்ளை குட்டிகள வெச்சுக்கிட்டு கஷ்டமா இருக்கும். மழைக் காலத்துல நிம்மதியா தூங்கவே முடியாது. நானும் ஒரு பத்து வருசமா புது வீடு கட்டணும்னு முயற்சி பண்றேன். ஆனா பணம் கிடைக்கல.

ஆனா கடவுள் புண்ணியத்துல இந்த வருசம் வட்டிக்கு ரெண்டரை லட்சம் கடன் வாங்கி, என் மனைவி நகையெல்லாம் அடகு வெச்சு வீடு கட்ட ஆரம்பிச்சுருக்கேன். இன்னும் ரெண்டு லட்ச ரூபாய் தேவப்படுது. கண்டிப்பா கிடைச்சுடும்னு நம்பிக்கை இருக்கு.அடுத்த வருசம் எப்படியும் புது வீட்டுக்குப் போயிடுவேன்" என்கிறார் அப்பாவியாய். தொடர்புக்கு: 96291 49325 - புதியதலைமுறை - எம். செந்தில்குமார்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இவருக்கு சொந்த வீடில்லை சேவை செய்வதில் ஈடில்லை! Empty Re: இவருக்கு சொந்த வீடில்லை சேவை செய்வதில் ஈடில்லை!

Post by சிவா Sat 23 Nov 2013 - 17:10

எதற்கும் நன்றாக விசாரித்துச் சொல்லுங்கள்!

பினாமி என்று ஒரு வார்த்தையும் உள்ளது! அப்படி இவருக்கு யாராவது....!!!

 - காந்தியையும் சந்தேகப்படுவோர் சங்கம்! அய்யோ, நான் இல்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum