புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_lcapமனித இனத்தின் ஆதி வரலாறு  I_voting_barமனித இனத்தின் ஆதி வரலாறு  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித இனத்தின் ஆதி வரலாறு


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Nov 21, 2013 4:00 pm

'சமஸ்கிருதமா, அது தமிழர்கள் (திராவிடர்கள்) தாங்கள் மற்ற மக்களிடத்தில் (கிரேக்க, ரோம, யூத மற்றும் பாரசீக மக்களிடத்தில்) கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ள அது இயற்கையோடு ஒன்றிப்போன மொழி அதனால் அது எப்பொழுது தோன்றியது என்பது அறிய முடியாது" என்றும் 'ஏன் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வேதங்களின் உலக ஆரம்பத்தின் வரலாற்றுபடி குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்ததாகவும் அங்கேதான் ஆதாம் மற்றும் ஏவாள் என்று மனுக்குலமே உருவானது" என்றும் 'உலக இனங்களே தமிழினத்தின் தொடர்ச்சியே என்றும் உலகிலே தூய தமிழ்மொழி மற்றும் திரிந்த தமிழ் மொழி (ஆங்கிலம், ஜப்பானிய, சீன, ஜெர்மானிய என்ற அனைத்தும்) என்று இரண்டே மொழிதான் உண்டென்றும்" மார்தட்டிக்கொண்டே அலையும் ஒரே இனம் நம் தமிழ் இனம்தான், என்று நானறிந்த வகையில், நினைக்கிறேன்.

உலகில் உள்ள அனைவருக்கும் தன்னைச் சார்ந்தவைதான் சிறந்தது என்ற எண்ணம் இருந்தாலும் நமக்கு கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. நாம் இவ்வாறு சொல்லித்திரிந்தாலும் இதுநாள் வரையில் 'இல்லை இல்லை எங்கள் மொழிதான் ஆதிமொழி" என்று யாரும் சொல்ல முன்வரவில்லை, ஆதலால் நம் மொழிதான் ஆதிமொழி என்பது சிலரது வாதம். இப்படி பீத்திக் கொண்டு அலைந்தாலும் நம்மைப் போல ஒற்றுமையின்மைக்கு எடுத்துக்காட்டாக எந்தவொரு இனத்தையும் அடையாளம் காட்டமுடியாது என்பது வேதனைக்குரிய விடயம்.

எது எப்படியோ, ஒரே இடத்திலிருந்துதான் மனுக்குலம் தோன்றியிருக்கவேண்டும், ஒரே மொழியிலிருந்துதான் பல மொழிகள் பிரிந்துசென்றிருக்க வேண்டும் என்பதும் பெரும்பான்மையான மக்களின் கருத்து. சிலபேர் (இப்போதைக்கு) அந்த இடம் குமரிக் கண்டமாயிருக்கக்கூடும் என்றும் அந்த மொழி தமிழ் மொழியாயிருக்கக்கூடும் என்ற கருத்துடையவர்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துப்பொய்யா மெய்யா என்பதை ஆய்வுகளை அடுத்தது. இந்தக் கட்டுரையில் அந்த இடம் (மொழியைப் பற்றி பிரிதொரு கட்டுரையில் பார்க்கலாம்) எதுவாயிருந்திருக்கலாம் என்பதைப் பற்றி சமீபத்தில் வெளியான சில அறிவியல் கட்டுரைகளின் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

பரிணாமவளர்ச்சிக் கொள்கையின்படி ஆப்பிரிக்காவிலிருந்தே மனிதனாக தன்னுடைய மூதாதையர்களிடமிருந்து பரிணமிக்கிறான். இதற்கு மாற்றாக ஆப்பிரிக்காவிலிருந்து மட்டுமல்ல பல்வேறு இடங்களிலிருந்தும் பரிணாம வளர்ச்சி இருக்கத்தான் செய்கிறது என்ற கொள்கையும் சில பேரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது. தற்போதுள்ள அறிவியல் ரீதியான புரிந்துகொள்ளுதலின்படி ஹோமோ ஹாபிலிஸ் (homo habilis) என்ற முன்னோரிடமிருந்து ஹோமோ எரெக்டஸ் (homo erectus) என்ற நேரே நிற்கக்கூடிய ஆதிகால மனிதன் பரிணமித்ததாக இதுவரை கிடைத்த ஆதாரங்களின் மூலம் கருதப்படுகிறது.

எரெக்டஸ் 1.8 மில்லியன் (1,80,00,000@ ஒரு கோடியே எண்பது இலட்சம்) ஆண்டுகளுக்கு முன்னர் பரிணமித்து பின்னர் அவற்றிலிருந்து ஹோமோ நியான்டர்தால்களும் ஹோமோ சேபியன்களும் பரிணமித்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஹோமோ நியான்டர்தால்கள் (homo neanderthalensis) ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குள் சென்றதாக கருதப்படுகிறது. ஹோமோ சேபியன்கள் (homo sapiens) காலப்போக்கில் பரிணாமவளர்ச்சி கண்டு நவீன மனிதர்களாக 0.2 மில்லியன் (2 இலட்சம்) ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து உலகின் பல்வேறு இடங்களுக்கும் பரவிச் சென்றார்கள் என்பதுதான் தற்போதைய புரிந்துகொள்ளுதல்.

இதன்படி 1,25,000 ஆண்டுகளுக்கு முன் (இப்போதிலிருந்து) ஆசியாவுக்கும், 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவிற்கும், 43,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவிற்கும் மற்றும் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆசியாவற்கும் சென்று குடியேறியதாக அறிந்துகொள்ளப்படுகிறது. 43,000 ஆண்டிற்குப் பிறகு ஐரோப்பா சென்ற ஹோமோ சேபியன்ஸ் ஏற்கெனவே அங்கிருந்த நியான்டர்தால்களை அப்புறப்படுத்தினர். இந்த கணக்கின்படி பார்த்தால் இந்தியாவிற்கு 1,25,000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நவீன மனிதர்கள் வந்திருக்கவேண்டும். இவர்களை வகைப்படுத்துவதற்கு அவர்களின் தலை அமைப்பும் அவர்கள் பயன்படுத்திய கருவிகளும் பயன்படுகின்றன.

உதாரணமாக ஹோமோ ஹாபிலிஸ் என்னும் உயிரினம் ஓல்டோவன் (oldowan) எனப்படும் கருவிகளையும்ஹோமோஎரெக்டஸ்அச்சுவெலியன்(achuelian)எனப்படும் கைக்கோடரிகளையும் பயன்படுத்தியதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியிருக்கின்றனர். கீழேக் காணப்போகும் இரு தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் இந்த புரிந்துகொள்ளுதல்களை தகர்த்தெறிந்து ஒரு கருதுகோள் பெயர்ச்சியை (paradigm shift)

ஆந்த்ரபாய்டுகள் என்பவை குரங்குகள், மனிதக்குரங்குகள் மற்றும் மனிதனை உள்ளடக்கியதாகும். பர்மாவின் ஒரு கிராமத்தில் ஒரு ஆராய்ச்சிக் குழு ஆறு வருடங்களாக தேடியதன் விளைவாக நான்கு கடவாய்ப் பற்கள் கிடைத்தன. அவற்றை ஆராய்ந்து பார்த்தபொழுது அவை 37 மில்லியன் வருடங்களுக்கு முந்தையதாகவும் ஆப்ரேஸியா (afrasia) என்ற இனத்தைச் சார்ந்த உயிரினத்தின் பல் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (சைமானீ மற்றும் பலர், 2012). இந்தப் பல்லின் அமைப்பானது கிட்டத்தட்ட அதே காலத்தில் வாழ்ந்த ஆப்ரடார்ஸியஸ் (afrotarsius) என்ற உயிரினத்தின் பல் அமைப்பிற்கும் ஒத்துப்போகிறது இது கண்டுபிடிக்கப்பட்டது லைபீரியாவில்.

லிபியாவில் பல்வகையான ஆந்த்ரபாய்டுகள் இருப்பதாலும் ஆப்ரேஸியாவின் பல் அமைப்பானது ஆப்ரடார்ஸியஸின் பல் அமைப்பை விட முந்தையதாக இருப்பதாலும் ஆப்ரேஸியாவே முந்தையாகவும் கணிக்கின்றனர். இதனால் ஆப்பிரிக்காவிலிருந்துதான் உயிர்கள் பரிணாமவளர்ச்சி அடைந்தன என்ற கொள்கை இதனால் அடிபடுகிறது. மனிதனின் பரிணாமவளர்ச்சி ஆப்பிரிக்காவிலே நடந்தாலும் மனிதனுக்கு முந்தைய இனம் ஆசியாவிலே தான் என்பது புதிய அறிவியல்.

இதன்படி, இந்த ஆப்ரேஸியாக்கள் ஏதோ ஒரு வகையில் ஆசியாவை விட்டு ஆப்பிரிக்காவினுள் காலடி எடுத்துவைத்துவிட்டது. பின்னர் பூச்சி தின்னும் இந்த வகையான இந்த ஆந்த்ரபாய்டுகள் மனிதனாக படிப்படியான பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன என்று பரிணாம வளர்ச்சியின் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் ஆப்பிரிக்காவிலிருந்து (out of africa) என்ற பதம் ஆசியாவிலிருந்து (out of asia) என்று மாறியிருக்கிறது. ஆசியாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு இந்த ஆந்த்ரபாய்டுகள் சென்று பின்னர் மனிதனாக பரிணாமவளர்ச்சி அடைந்தனவா அல்லது இங்கேயும் பரிணாமவளர்ச்சி அடைந்தனவா என்பன வருங்கால ஆராய்ச்சி.

சென்னைக்கருகே உள்ள அத்திரம்பாக்கம் என்னும் இடத்தில் அகழ்வாரய்ச்சியானது முனைவர் சாந்தி பாப்பு என்பவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. கி.பி. 1860-களில் ராபர்ட் புரூஸ் ஃபுட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோர் கண்டுபிடித்திருந்த இடத்தில், கிட்டத்தட்ட 10 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டது. ஐந்து மீட்டர் ஆழத்திலிருந்து 10 மீட்டர் வரைக்குமான ஆழங்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட (3528) அச்சுவெலியன் எனப்படும் இருபுறமும் சப்பையான கல்லலான கருவிகள் (வெட்டவும் கீறவும் பயன்படுத்தப்படும்) கண்டெடுக்கப்பட்டன. ஏற்கெனவே ஆரம்பத்தில் பார்த்தது போல இந்தவகையான தொழில்நுட்பம் ஆப்பிரிக்காவிலிருந்துதான் பரவிவந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

இவை ஹோமோ ஹாபிலிஸ்கள் பயன்படுத்திய ஓல்டோவன் கருவியைக் காட்டிலும் தொழில்நுட்பத்தில் சிறந்தவை. கிட்டத்;தட்ட 1.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆப்பிரிக்காவில் ஹோமோ எரெக்டஸ் எனப்படும் மனித மூதாதையர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகவும், அந்தத் தொழில்நுட்பம் இந்தியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அதாவது 0.6 மில்லியன் (6 இலட்சம்) ஆண்டுகளுக்கு  முன்தான் வந்திருக்க வேண்டும் என்றும் கணித்திருந்தனர்.

ஆனால் அத்திரம்பாக்கத்தில் கிடைத்த மாதிரிகளை தொல்காந்தவியல் (palaeomangnetism) கணிப்பு முறையின்படியும் (49 மாதிரிகள் மூலம்), அண்டக்கதிர்களின் மூலம் உருவாகியிருக்கும் கதிரியக்க அணுக்கருக்களின் எண்ணிக்கையையும் (cosmogenic radionuclides;10B/26A1) கொண்டு அவற்றின் (6 அச்சுவெலியன் கற்கருவிகள்) வயதை கணக்கிடும் பொழுது அவை 1.07 மில்லியன் ஆண்டுகளுக்கும் முந்தையதாகவும் கண்டார்கள் (பாப்பு மற்றும் பலர், 2011@ டென்னல், 2011). இதுநாள் வரைக்கும் ஆதிமனிதர்கள் இந்தியாவிற்குள் வந்து 50,000 ஆண்டுகள்தான் ஆகின்றன என்ற இந்தக் கணக்கு இப்பொழுது அதைவிட இரண்டு (அல்லது மூன்று) மடங்கு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கின்றனர் என்பது பெரிய மாற்றம்தான் மேலும் இந்தியாவிற்கு வந்தபின்புதான் இந்தத் தொழில்நுட்பம் ஐரோப்பாவிற்குச் சென்றிருக்கிறது என்பதும் புதிய செய்தி. இந்தத் தொழில்நுட்பம் வேறெங்கேயோயிருந்து இந்கு வந்திருக்கின்றதா அல்லது இங்கேயேயிருந்திருந்ததா என்பது வருங்காலத்தைய ஆராய்ச்சிக்கான கரு. கடந்த காலங்களில் இந்த வகை ஆராய்ச்சிகளுக்கு பல்வேறு வகைகளில் (தொழில்நுட்பமின்மை, அதிகாரிகளின் குழப்பமான நடவடிக்கைகள், இந்த விடயங்களில் நாட்டமின்மை மற்றும் நிதிப்பற்றாக்குறை) தடங்கல்கள் இருந்தன என்றும் தற்காலத்தில் இந்தவிதமான தடங்கல்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன (சௌகான், 2006) என்பதில் கொஞ்சம் உண்மையிருந்தாலும் நம்முடைய வரலாற்றின் மீது நமக்கு நாட்டமில்லை என்பது இன்னும் உண்மையாகவேயிருக்கிறது.

தேசிய கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Institute of Oceanography,NIO; கோவா ) மூலம் 1991-1993-ல் நடைபெற்ற கடலடி அகழ்வாராய்ச்சியின் விளைவாக தரங்கம்பாடி-பூம்புகார் கடற்கரையிலிருந்து 5 கிமீ தூரத்தில் வங்காள விரிகுடாவில் 23 மீட்டர் (கிட்டத்தட்ட 70 அடி) ஆழத்தில் மனிதர்களால் செய்யப்பட்ட ஒரு 'U" வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த உயரம் 5 மீட்டர்களாகவும், 'U" வடிவத்தின் இரண்டு கொம்புகளுக்குமிடையே உள்ள தூரம் 13 மீட்டர்களாகவும் இருந்தது (கௌர் மற்றும் சுந்தரேஷ், 1997). அதன் சில இடங்களில் கட்டிடவேலை நடைபெற்றிருப்பதற்கான அறிகுறியும் தென்பட்டிருக்கின்றன.

கடல் மட்டம் உயரும் வேகத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தாலோ அல்லது தரைப்பகுதி பூமிக்குள் இறங்கும் வேகத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தாலோ சுமார் கி.மு. 9000-க்கு மேல் அந்தப் பகுதி கடலினுள் மூழ்கியிருந்திருக்கவேண்டும் என்று கனடாவைச் சார்ந்த கடலியல் வல்லுநர் முனைவர் கிளென் மில்ன் கணிக்கின்றார். இவ்வகை வடிவங்களைச் செய்வதற்கு முன்னேறிய தொழில்நுட்பம் தேவைப்பட்டிருக்க வேண்டும் எனவும் அது 11,000 வருடங்களுக்கு முன்பு எப்படி சாத்தியப்பட்டிருக்கும் என்றும் NIO-வின் இயக்குநர் முனைவர் கௌர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த 'U" வடிவத்தை நீச்சல் வீரர்கள் கண்டுள்ளனர் ஆனால் இதே போல 20-க்கும் மேற்பட்டவை 30 மீட்டர் ஆழங்களில் இருப்பதாக தொழில்நுட்பம் மிகுந்த பெரிய பரப்பளவுகளை ஊடுகதிர் மூலம் ஆராய உதவும் சோனார் (side scanning sonar) கருவிமூலம் கண்டறியப்பட்டதாகவும் தெரிகிறது.

ஆனால் இன்றுவரை அந்தப் பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்றதாகவும் அந்த 'U" வடிவம் எப்பொழுது வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் கணிக்க அதிலிருந்து மாதிரிகளை (samples) எடுத்ததாகவும் தெரியவில்லை. கடற்கரையில் 2 மீட்டர் ஆழங்களில் கிடைக்கும் வடிவங்களையே மிகுந்த சிரத்தை எடுத்து ஆராய்ச்சி செய்து பிரசித்திப் பெற்ற இதழ்களில் கட்டுரைகளாக வெளியிட்டுவரும் நிலையில், அரிதான இந்த ஆதாரங்களை அலட்சியம் செய்வது ஆச்சரியத்தை அளிப்பதாக இங்கிலாந்தைச் சார்ந்த சர்ச்சைக்குரிய கடலியல் வல்லுநர் கிரஹாம் ஹேங்காக் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டிணம் பகுதியில், கடற்கரைக்கும் வங்காள விரிகுடாவின் ஆழக்கடலுக்குமிடையே சில கிலோ மீட்டர்களுக்குள் (offshore) நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இப்போதைய கடல் மட்டத்திற்குக் கீழே 100 மற்றும் 85 மீட்டர்களில் கார்பனேட்டுகளாலான பாறை அடுக்குகள் (carbonate reefs) இருப்பதாகக் கண்டறியப்பட்டன (மூர்த்தி, 1989). அந்த அடுக்குகளை கதிரியக்கக் கார்பன் (14C) வயது கணிப்பின்படி முறையே 12,500 மற்றும் 10,700 வருடங்கள் என்று கண்டறியப்பட்டன.

மேலும் அதே பகுதியில் 100 மீட்டர் ஆழத்தில் 2-8 மீட்டர் உயரமான சமமான மண்திட்டுகள் (terraces/benches) இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது (குக்குட்டேஷ்வர ராவ் மற்றும் லா ஃபான்டு, 1954). ஆந்திரா மற்றும் ஒடிசாவின் ஆழமற்றக் கடல் பகுதிகளில் 100 மற்றும் 145 மீட்டர் ஆழங்களில் ஊலைட்டுகளால் ஆன மணல் காணப்படுகிறது (சுப்பா ராவ், 1958). அதே பகுதியில் 128 மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட ஊலைட்டுகளை கதிரியக்கக் கார்பன் முறைப்படி கணித்ததில் அவை 10,800 வருடங்களுக்கு முன்பு உருவாகியிருக்கின்றன என்று தெரியவந்தது (நாயுடு, 1968). இந்த ஊலைட்டுகள் கடற்கரையில்தான் 2 மீட்டர் ஆழத்தில் உருவாகும் தன்மையுடையது (நேவல் மற்றும் பலர், 1960). இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 12,500 வருடங்களுக்கு முன்னர் கடல் மட்டம் இப்போதைக்கு இருப்பதைவிட 100 மீட்டர்களுக்கும் கீழேதான் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது லும் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மற்ற இடங்களைப்போல அதிகமான ஆராய்ச்சிகள் கடந்த நாற்பது வருடங்களாக நடைபெறவில்லை என்பது கசப்பான உண்மை
மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சிகளின் முக்கிய கூறுகளை நாம் எடுத்துக்கொண்டால் 1) ஆசியாவிலிருந்தே மனிதனுக்குரிய முன்னோர்கள் (ஆந்த்ரபாய்டுகள்) தோன்றியுள்ளனர், 2) இந்தியாவில், அதுவும் தமிழகத்திலேயே, கிட்டத்தட்ட 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆதி மனிதர்கள் இருந்துள்ளனர், 3) 11,000 வருடங்களுக்கு முன்பே மனிதர்களால் சிக்கலான விதத்தில் (எளிய இயற்கையான முறையில் அல்ல) செய்யப்பட்டு இப்பொழுது கடலுக்கடியில் புதைந்திருக்கும் பல மிகப்பெரிய வடிவங்கள், 4) கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில் கடலும் 100 மீட்டருக்கும் கீழே இருந்திருக்கக்கூடிய புவியியல் மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று தெரியவருகிறது. இந்த நேரத்தில் நம் சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன என்று பார்ப்பது நலம் பயக்கும்.

நம் சங்க கால இலக்கியங்கள் கூறுவது போல, மூன்று சங்கங்களை அமைத்து நம் முன்னோர்கள் தமிழ் வளர்த்திருக்கிறார்கள். 89 அரசர்களை கண்ட முதல் சங்கம் கிட்டத்தட்ட 4,400 ஆண்டுகளாக தென்மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறது. இரண்டாவது (இடைச்) சங்கம் கவாடபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 3,700 ஆண்டுகள் செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த இரு சங்கங்களும் அதனால் படைக்கப்பட்ட இலக்கியங்களும் கடற்கோள் என்னும் சுனாமி மாதிரியான கடல் சீற்றங்களால் அழிந்துவிட்டன. இரண்டாவது சங்கத்தின் இலக்கியமான தொல்காப்பியம் (தமிழ் இலக்கண நூல்) மட்டுமே இப்போதைக்கு நம்முடையே இருக்கும் பழைய நூல். இறுதியாக கடைச்சங்கமானது வடமதுரையை (இப்போதுள்ள) தலைமையிடமாகக் கொண்டு 1850 வருடங்கள் செயல்பட்டு வந்துள்ளது.

கிபி 300-ல் சங்க காலம் முடிவுக்கு வந்திருப்பதாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் ஒரு இடத்தில், பக்ருளி ஆறும் சிறு சிறு குன்றுகளால் சூழப்பட்ட குமரி மலையும் சீறும் கடலினுள் புதைந்தது என்று விவரிக்கப்பட்டுள்ளது. கலித்தொகையில் கடலின் சீற்றத்தால் நாட்டின் பரப்பளவை இழந்த பாண்டிய மன்னன் வடக்கே சேர மற்றும் சோழ மன்னருடன் போரிட்டு நாட்டை விரிவுபடுத்தினான் என்று கூறுகிறது. தொல்காப்பிய விளக்கவுரையில் நச்சினார்க்கினியார் கடல் சீற்றம் 49 நாடுகளை (மாவட்டங்களை) விழுங்கியது என்று கூறுகிறார். அடியார்க்குநல்லார் பக்ருளி ஆற்றுக்கும் குமரி மலைக்கும் இடையே வனமும் குடியிருப்புகளும் உள்ள 1000 மைல்கள் கொண்ட பரப்பளவு இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆக 11,562 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் சங்க காலம் ஆரம்பித்திருக்க வேண்டும். இது வங்காள விரிகுடாவில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் முடிவுகளுக்கு அப்பாற்பட்டவையாக தெரியவில்லை.

இங்கே ஒரு கோடியே எண்பது இலட்சம் ஆண்டுகளில் இருந்து கி. பி 300 வரைக்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒன்று இந்தத் தொடர்பு இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். இருந்திருந்தால் ஒரு தமிழனாக மிக்க மகிழ்ச்சியுடன் நம் வரலாற்றை எண்ணி எண்ணிச் சுவைப்பேன், பகிர்வேன். இல்லையேல் (மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின்) குமரிக்கண்டம் என்பது உண்மையிலேயே பொய்யான தரவுகளின்மேல் வடிவமைக்கப்பட்ட கொள்கை என்பதை உணர்ந்து கொண்டு, அதையும் பகிர்வேன். இதை மேலும் ஆராய்ச்சிகளால் செழுமைப்படுத்தலாம் என்று சிந்தித்தால், வாருங்கள் சேர்ந்து உழைப்போம். இது நம் காலம். இந்தக் காலத்தில் நாம் மௌனமாயிருந்தால் நம் வரலாறு வேறு எங்கோவுள்ள மனிதர்களால் நிச்சயம் ஒருநாள் தெரியவே வரும் (சிந்து சமவெளி நாகரீகத்தைப் போல), அப்பொழுது நாம் கைகாட்டுகிறவர்களாக அல்லாமல் மீண்டும் கைதட்டுகிறவர்களாகவே இருந்துவிடுவோம். வாருங்கள் தோண்டுவோம், தமிழர்களே!
-ராமியா



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 4:08 pm

தமிழ் மூத்த மொழி...
-
ஆனால் அதிலிருந்த பிரிந்த தெலுங்குதான்
இந்தியாவில் தமிழை விட அதிகம் பேர் பேசும்
மொழியாம்...!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக