புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சஞ்சிக்கூலி
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
சஞ்சிக்கூலி என்பது 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில், தென்னிந்தியாவில் இருந்து மலாயாவுக்கு கூலி வேலைகள் செய்ய கொண்டு வரப்பட்ட இந்தியர்களைக் குறிக்கும் ஒரு வழக்குச்சொல் ஆகும். இது சஞ்சி (மலாய்: Janji) எனும் மலாய்ச் சொல்லில் இருந்து உருவானது. தமிழில் ஒப்பந்தம் என்று பொருள்படும்.
மலாயாவில் இருந்த பிரித்தானியத் துரைமார்கள் தென்னிந்தியாவிற்கு கங்காணிகளை அனுப்பி வைத்தனர். தென்னிந்தியாவில் இருந்து ஆள் பிடித்து வருமாறு இந்தக் கங்காணிகள் பணிக்கப் பட்டனர். ’மலாயாவில் காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் தொங்குகிறது’ எனும் கங்காணிகளின் ஆசை வார்த்தைகளை நம்பிய தென்னிந்திய மக்கள், மலாயாவுக்குள் ஆயிரக்கணக்கில் அழைத்து வரப்பட்டனர்.
இப்படி அழைத்து வரப்படுவற்கு கங்காணி முறை என்று பெயர். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் சஞ்சிக்கூலிகளாய் மலாயாவுக்கு வந்தார்கள். மலேசிய வரலாற்றில் சஞ்சிக்கூலிகள் ஒரு துயர அத்தியாயத்தின் முதல்பக்கம்.
1900களில் மலாயாவில் சஞ்சிக்கூலிகள்
உலகளாவிய பின்னணி
1826-ஆம் ஆண்டு இந்திய மாக்கடலில் இருக்கும் ரியூனியன் தீவுக்கூட்டத்தில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். ஆகவே, பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டு வருவதற்கு முதல் அஸ்திவாரத்தைப் போட்டனர். போக விரும்புகிறவர் நீதிபதியின் முன்னால் நின்று தான் சுய விருப்பப்படி அங்கு போக விரும்புவதாக அறிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதத்திற்கும் சம்பளம் எட்டு ரூபாய்கள். ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம். 1830க்குள் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து 3,012 இந்தியத் தொழிலாளர்கள் ரியூனியன் தீவுக்கூட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். இதே போல 1829-இல் மொரிசியஸ் தீவிற்கும் ஆட்களைக் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை தோல்வியில் முடிந்தன.
தென்னிந்தியா
1834-இல் பிரித்தானிய பேரரசின் ஆளுமையில் இருந்த நாடுகளில் பெரும்பான்மைப் பகுதிகளில் அடிமைத்தனம் ரத்து செய்யப்பட்டதும், இந்தியத் தொழிலாளர்களை மொரிசியஸ் தீவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். 1838க்குள் 25,000 இந்தியத் தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டனர்.
18ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், தென்னிந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1858-இல் ஐக்கிய ராச்சியம் என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் நேரடியான ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது. இந்த இரு ஆட்சிகளின் மூலமாகத் தமிழ்நாட்டின் கிராமப்புற வேளாண்மைத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டன.
நீர்ப் பாசன வசதிகள் புறக்கணிக்கப்பட்டன.
ரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய நிலக்கிழார்கள் உருவாயினர்.
இயற்கை தட்பவெப்ப நிலையில் ஏற்பட்ட எதிர்பாரா மாற்றங்களின் காரணமாகத் தொடர்ச்சியானப் பஞ்சங்கள் ஏற்பட்டன. இதன் உச்சக்கட்டமாக 1878-இல் தாது வருடப் பஞ்சம் என்ற ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது.
நிலக்கிழார்கள், லேவாதேவிக்காரர்களின் பிடியில் சிக்கிய சாதாரண விவசாயிகள், சிறுநிலக்காரர்கள் தம் நில உரிமைகளை இழந்தனர். அவர்கள் அற்றைக்கூலி விவசாயத் தொழிலாளர்களாக மாறினர். சிலர் சிறுநகரங்களுக்கும் பெருநகரங்களுக்கும் இடம் பெயர்ந்தனர்.
ஏற்கனவே நில உரிமை இல்லாமல் இருந்த விவசாயத் தொழிலாளர்கள், பண்ணை அடிமைகளாகவும் மாறினர்.
நில வரியைத் தானியமாகச் செலுத்தி வந்த நிலைமை மாறி பண வடிவில் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
விளை பொருள்களின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமைகளை விவசாயிகள் இழந்தனர். இந்த உரிமைகள் இடைத் தரகர்களிடம் சென்று அடைந்தன.
உற்பத்தியாளர்களைவிட இடைத்தரகர்களே அதிமான லாபத்தைப் பெற்றனர்.
நாடு கடத்தல்
1910களில் சஞ்சிக்கூலிகள் வரிசை பிடித்து நிற்கின்றனர்
இவற்றின் விளைவாகத் தமிழகக் கிராமப்புறங்களில் வாழ்ந்த குத்தகை விவசாயிகள், சிறு நில உரிமையாளர்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களில் குறிப்பாகத் தலித் மக்கள் அதிகமாகவே பாதிக்கப்பட்டனர். கிராமங்களை விட்டு வெளியேறி உயிர் பிழைக்கலாம் எனும் உணர்வுகள் அவர்களிடம் மேலோங்கி நின்றன.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்ப் பகுதிகளிலும், ஸ்ரீலங்காவின் மலையகப் பகுதிகளிலும், மலாயாவிலும் ரப்பர், தேயிலை, காபித் தோட்டங்களை உருவாக்கினர். 19-ஆம் நூற்றாண்டில் பர்மா எனும் மியன்மாரில் ரப்பர் தோட்டங்களும், மொரிசியஸ் நாட்டில் கரும்புத் தோட்டங்களும் உருவாக்கப்பட்டன.
அந்த வகையில், புதிதாக மலைத் தோட்டங்களை உருவாக்குவதற்கு, இயற்கைக் காடுகள் திருத்தி அமைக்கப்பட வேண்டி இருந்தன. அடுத்து அங்கு பயிரிடப்பட்ட காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களைப் பராமரிக்கவும், அவற்றின் அறுவடைகளைச் சேகரிக்கவும் மிகுதியான அளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்
இந்திய ஒப்பந்தக் கூலிகளை
இறக்குமதி செய்த காலனி நாடுகள்
காலனியின் பெயர் அனுப்பப்பட்ட தொழிலாளர்கள்
மவுரிசியஸ் 453,063
பிரிட்டிஷ் குயானா 238,909
டிரினிடாட் 143,939
ஜமாய்க்கா 36,412
கிரேனடா 3,200
செயிண்ட் லூசியா 4,350
நாட்டால் 152,184
செயிண்ட் கிட்ஸ் 337
செயிண்ட் வின்செண்ட் 2,472
ரியூனியன் 26,507
சுரிநாம் 34,304
பீஜி 60,965
தென்னாப்பிரிக்கா 32,000
செய்சீல்ஸ் 6,315
மொத்தம் 1,194,957
சஞ்சிக்கூலிகளின் மனித உரிமைகள்
நாடு விட்டு நாடு கடந்து வந்ததால், சஞ்சிக்கூலிகளின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டன. அவர்களின் அடிப்படையானத் தேவைகளும் மறுக்கப்பட்டன. அப்படி வந்தவர்களில் பலர், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கேட்டனர். அதனால் பிரித்தானியர்கள் மிரட்சி அடைந்தனர்.
உரிமைப் போராட்டவாதிகள் பலர் மியான்மார், தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசியா[16] நாடுகளுக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் நாடு கடத்தப்பட்டனர். அவர்களில் சிலர் எங்கே அனுப்பப்பட்டார்கள் என்ற விவரம் தெரியாமல், இன்று வரையிலும் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
உலகத்தில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்கள், ஒரு காலக் கட்டத்தில் இரு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். முதலாவதாக, போர்களின் காரணமாக இடம் தேடி, தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புலம் பெயர்ந்தவர்கள். அந்த வகையில் இலங்கையில் இருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்களைச் சொல்லலாம்.
சஞ்சிக் கூலிகளின் வாரிசுகள்
இரண்டாம் வகை: போர் காலக்கட்டத்தில் வெள்ளையர்களின் தோட்டங்களிலும் காடுகளிலும் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர்கள். அப்படி அழைத்து வரப்பட்டவர்களில் ஒரு பகுதியினர், மலேசியக் காடுகளில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் காடுகளிலேயே குடிசைகள் அமைத்து தங்கிக் கொண்டனர்.
இன்னொரு பிரிவினர் மலேசியத் தோட்டப் புறங்களில் குடியமர்த்தப்பட்டனர். 1930களில் மலாயாவுக்கு வந்த தமிழர்களுக்கு தோட்டப் புறங்களிலேயே கோவில், பள்ளிக்கூடம், கல்லுக்கடை எனும் சலுகைகள் வழங்கப்பட்டன. அவர்கள் தோட்டத்தைவிட்டு வெளியே போகாதபடி உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளானார்கள்.
அதே போல இந்தியக் கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக மலாயா தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட இரக்கமற்ற வரலாறும் உள்ளது. ஒரு துயரவெளியில் பெரும் அவலக் குரல்கள். அந்தச் சஞ்சிக் கூலிகளின் வாரிசுகள் இன்றும் மலேசியாவில் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர்
பினாங்குத் தீவு
1786-இல் பினாங்குத் தீவு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்த பின்னர், இந்தியாவில் இருந்து தமிழர்களைப் பெருமளவில் குடியேற்றும் வாய்ப்பு ஏற்பட்டது.[20] பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், டச்சு போன்ற நாடுகள் தங்களின் பேராதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகப் பல திட்டங்களைத் தீட்டின. கடல் கடந்து உலகின் பல நாடுகளைக் கைப்பற்றின. பல காலனித்துவ ஆட்சிகளைத் தோற்றுவித்தன.
இவ்வாறு கைப்பற்றிய நாடுகளின் இயற்கை வளங்களையும், கனிம வளங்களைத் தமது நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு விவசாயப் பண்ணைகளையும் தோட்டங்களையும் சுரங்கங்களையும் அமைக்கத் தொடங்கினர். அதற்காக உழைக்கும் மக்கள் தேவைப்பட்டனர். அவர்களை உழைக்கும் மக்கள் என்றும் ஒத்து போகும் அடிமைகள் என்றும் அழைக்கிறார்கள்
தந்தை பெரியார் வருகை
1929-இல் தந்தை பெரியார் மலாயா நாட்டிற்கு வருகை புரிந்தார். அதன் பிறகு மலாயாத் தமிழர்களின் வாழ்வில் புதிய வேகமும் புதிய சிந்தனை மாற்றமும் உருவாகின. மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. புதிய இலக்கியப் போக்குகள் தோற்றம் கண்டன. நகர்ப்புற மக்களிடம் மட்டும் அல்லாமல் தோட்டப்புறங்களிலும் பெரியாரின் சிந்தனைகளும் பேச்சுகளும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தின.
பல மொழிகள் பேசப்பட்ட இந்தியர்கள் மலாயாவில் பெரும்பான்மையினராக இருந்தாலும், அவர்கள் தமிழர்களாக இருந்த காரணத்தினால், இந்தியர்களின் பொது மொழியாக தமிழ்மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொரியாரின் வருகை மலேசியத் தமிழர்களின் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
2000ஆம் ஆண்டுகளில் சஞ்சிக்கூலி வாரிசுகள் உரிமைப் போராட்டம்
அடக்குமுறை ஆணவங்கள்
தொடக்க காலத்தில் இருந்தே இவர்களின் வாழ்க்கையில் தோட்ட நிர்வாகத்தினரின் கெடுபிடிகள், அடக்குமுறை ஆணவங்கள், சம்பளப் பிரச்சனைகள், கங்காணிகளின் கொடுக்குப்பிடிகள் போன்றவை இவர்களின் வாழ்வைச் சிதறடித்து வந்தன. அதனால் அவர்களின் வாழ்கைத் தரம் மிகவும் பின் தங்கிய வறிய நிலையிலேயே இருந்தது. தோட்டங்களில் அடிப்படை வசதிகளற்ற சிறுவீடுகளில், விலங்குகள் போல் அடைத்து வைக்கப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களின் ரப்பர் தோட்டங்களில் இரவு பகலாய், ஓய்வு ஒழிச்சலின்றி ஆடு மாடுகளைப் போல வேலைகள் செய்தனர். பொதுவாக, இவர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்டனர் என்று வரலாற்று ஆவணங்கள் சான்று பகிர்கின்றன.
மலேசியாவில் அந்தச் சஞ்சிக்கூலிகளின் வாரிசுகள் இன்னமும் உரிமைப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இருப்பினும் அவர்களின் நான்காம் ஐந்தாம் தலைமுறையினர், மற்ற இனங்களுக்குச் சவால்விடும் அளவிற்கு, கல்வித் தரங்களில் வளர்ச்சி அடைந்து சாதனை படைத்து வருகின்றனர். ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி எனும் நிலைமை பரவலாகி வருகிறது.
wikipedia

- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|