புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
21 Posts - 58%
heezulia
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
1 Post - 3%
viyasan
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
213 Posts - 41%
heezulia
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
208 Posts - 40%
mohamed nizamudeen
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
21 Posts - 4%
prajai
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகேந்திர மலை Poll_c10மகேந்திர மலை Poll_m10மகேந்திர மலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகேந்திர மலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 12:59 am

மகேந்திரமலை எது?

மகேந்திர மலை என்பது இமய மலைச்சாரலில் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஒன்று என்பதும், அதன் அடிவாரத்திலேயே சிவன் ஆகமங்களை தத்துவ ஞானத்தை உபதேசித்தான் என்பதும், அந்த இடம் அர்ச்சுனன் பாசுபதம் வேண்டி தவம் இருந்த இடம் என்பதும், அவ்விடம் நீரருவிகளும், பறவைகளும், மான்களும் உள்ள இடம் என்பதும் அறியப்படுகின்றது. ஆகவே இது தென்னிந்தியாவில் உள்ள பொதியமலையோ அல்லது விந்திய மலைத்தொடரோ அல்ல. அதே சமயம் உயர்ந்த கைலாச மலையும் அல்ல என்பது தெளிவு. ஆனால் சிவன் ஆகமங்களையும், தத்துவஞானத்தையும் உபதேசித்த மகேந்திர மலை அர்ச்சுனனின் தவத்துடன் தொடர்புபடுவதாலும், மாமல்லபுரச் சிற்பம் இமயமலையடிவாரக் காட்சிகளையே காட்டுவதாலும், இது காஷ்மீர தேசத்தை அண்டிய மலைத் தொடர் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

மகேந்திர மலை பற்றிய குறிப்புகள் எமது சைவத்திருமுறைகளில் பல இடங்களில் காணப்படுகின்றன.

"மன்னு மாமலை மகேந்திர மதனில்                              

சொன்ன ஆகமந் தோற்றுவித்(து) அருளியும்"

என்பது திருவாசகம். இதனால் இறைவன் மகேந்திர மலைச்சாரலில் இருந்து ஆகமங்களை உபதேசித்தான் என்று தெரிகின்றது. ஆனால் இந்த மகேந்திர மலை எது என்று தெரியவில்லை. சிலர் மகேந்திர மலை என்பது தெற்கில் உள்ள விந்திய மலைச்சாரலில் உள்ள ஒன்று என்றுகூறுகின்றனர்.  வேறு சிலர் மகேந்திர மலை இமயமலையின் கைலாசம் சார்ந்த மலைத்தொடர்களில் ஒன்று என்று கூறுகின்றனர்.

"தத்துவ ஞானம் உரைத்தது தாழ் வரை"

என்கின்றது திருமந்திரம். ஆகவே இந்த தத்துவ ஞானத்தை இறைவன் உபதேசித்தது உயர்ந்த கைலாய மலையில் இருந்து அல்ல; தாழ்ந்த மலைச்சாரலில் இருந்து என்ற புவியியல் விபரம் பெறப்படுகின்றது. இந்த தாழ் வரையை காஷ்மீர் சார்ந்த மலைத்தொடர் என்று ஒரு சாரார் கூறுவர். உண்மையில் பாரதத்தின் வட எல்லையாக இருக்கும் விரிந்து பரந்த இமய மலையின் அடிவாரம் கிழக்கில் காஷ்மீரில் இருந்து மேற்கில் நேபாளம் வரை விரிந்துள்ளது.

இந்த பரந்து விரிந்த மலைச்சாரலில் மகேந்திர மலை எங்கு இருந்திருக்கலாம் என்றால் அது அர்ச்சுனன் பாசுபதம் வேண்டி சிவனை நோக்கித் தவம் இருந்த இடம் என்ற குறிப்பு ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் காணப்படுகின்றது.

"வண்டார் குழல் உமை நங்கை முன்னே

மகேந்திரச் சாரல் வராகத்தின் பின்

கண்டால் கவல வில்லாடி வேடர்

கடி நாயுடன் வந்தாய்"

என்று திருமாளிகைத் தேவர் பாடிய திருவிசைப்பா பாடலில் இறைவன் தேவி சமேதராய், நாய்களுடன் வேட்டுவ வடிவில் பன்றியைக் கலைத்துக்கொண்டு தவம் செய்த அர்ச்சுனனிடம் வந்த வரலாற்றைக் குறிப்பிடுகின்றது. இந்த இடம் மகேந்திரச் சாரல் என்று இங்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

" திரு நீறிடா" என்று தொடங்கும் இன்னொரு திருவிசைப்பா பாடலில் இவர்

"வரு நீர் அருவி மகேந்திரப் பொன்

மலையில் மலைமகளுக்கருளும் குரு நீ"

பாடுகின்றார். இங்கு மகேந்திர மலையில் இறைவன் உமைக்கு குருவாக இருந்து உபதேசித்த வரலாறு கூறப்படுவதோடு நீர் அருவி பாயும் மகேந்திர மலை என்ற புவியியல் குறிப்பும் காணப்படுகின்றது.

"மணி நீரருவி மகேந்திர மாமலை மேல் உறையும் குறவா"

"மகேந்திர வெற்பா"

"வானே தடவும் நெடுங் குடுமி மகேந்திர மாலை மீதிருந்த தேனே"

"மறியேறு சாரல் மகேந்திர மாமலை மேல் இருந்த மருந்தே"

"அழுந்தா மகேந்திரத்து அந்தரப் புட்கு அரசுக் கரசே"

"வராகம் முன்னோடு விளியுளைப்ப நடப்பாய் மகேந்திர நாத"

"மாவேந்து சாரல் மகேந்திரத்தில் வளர் நாயகா"

"எங்கும் மழை சூழ் மகேந்திர மாமலைமேல் கரவா"

"சுற்றாய சோதி மகேந்திரம் சூழ"

"ஆறார் சிகர மகேந்திரத்து"

என்ற வரிகளும் இதே திருவிசைப்பா பதிகத்தில் காணப்படுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:00 am


மாமல்ல புரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள் ஒன்றில் அர்ச்சுனன் தபசு ஒரு பாறையில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. அங்கு ஆறுகளும் அருவிகளும் மட்டுமல்லாது இமயமலை அடிவாரத்தில் வாழும் யானைகள், எலிகள் போன்ற விலங்குகளும் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். கைலாசத்தில் உள்ள மானஸசரோவருக்கு அன்னங்கள் பறந்து செல்வதற்கு நுழைவாயிலாகப் பரசுராமரால் அமைக்கப்பட்ட ஹம்ஸத்துவாரம் இன்றும் அன்னப்றவைகளின் இடம்பெயர் வழியாக உள்ளது. இந்த நுழைவாயிலும் அதன் வழிச்செல்லும் அன்னப்பறவைகளும் கூட இந்த மாமல்லபுரத்து அர்ச்சுனன் தபசு சிற்பத்திலே செதுக்கப்பட்டுள்ளன. இதே போன்ற இன்னொரு நுழைவாயில் தான் கிரௌஞ்ச மலைத்துவாரம். இது சீனாவில் இருந்து வருகின்ற அன்னப்பறவைகளின் நுழைவாயில் இதுவே முருகன் கிரௌஞ்ச மலையை தனது வேலால் பிளந்த பொழுது உருவான துவாரம். இதனால் முருகனுக்கு தாரணர் - துளைப்பவர் என்ற பெயர் உருவானது. "சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் தொளைத்த மன்ன" என்று அருணகிரியின் கந்தரலங்காரம் கூறுகின்றது. சிற்பத் தொகுதியில் உள்ள அன்னங்கள் இமயத்தில் வாழும் வரித்தலை அன்னங்களாகும் (Bar-headed Goose - Anser indicus). சமீபத்தில் 2005-2006 களில் உலகை Avian Influenza என்ற பறவைக்காய்ச்சல் தாக்கியது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். இது பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்டதோடு ஆயிரக்க்கணக்கில் இந்த வரித்தலை அன்னங்களையும் கூடப் பலிகொண்டது. அப்போது இவை பற்றிய குறிப்புகளும், இவற்றின் இடப்பெயர்வு பாதை பற்றிய குறிப்புகளும் வெளியாயின.

சுவர் போன்ற இமயமலைத் தொடர்கள் பறவைகள் புலம் பெயர்வதற்குப் பெரும் தடையாக உள்ளன. ஆனால் வரித்தலை அன்னங்கள் அதிக உயரத்தில் பறக்கும் திறனை இயற்கையாகவே கொண்டுள்ளன. அவை இந்தியா மற்றும் நேபாளப் பகுதிகளில் இருந்து மார்ச்சு ஏப்பிரல் மாதங்களில் இமய மலையை அகன்ற தாழ்மலைப்பகுதியால் கடந்து தீபெத்திய பீடபூமிக்குச் சென்று அங்கு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இனப்பெருக்க காலம் முடிந்து குஞ்சுகள் பறக்கும் அளவுக்கு வளர்ந்தபின் அவற்றுடன் மீண்டும் தமது இருப்பிடத்துக்கு திரும்புகின்றன. இந்த தகவல்கள் பறவை இடப்பெயர்வு ஆய்வாளர்களாலும், செய்மதித் தகவல்களாலும் உறுத்திப்படுத்தப்பட்டவை. இந்த பறவைகள் இடம் பெயர்வது பரசுராமர் அமைத்த ஹம்ஸதுவாரத்தினூடாகவும், முருகன் அமைத்த கிரௌஞ்சமலைத் துவாரத்தின் ஊடாகவும் என்று மகாபாரதமும், புராணங்களும் கூறுகின்றன.

வடமொழிப் புலவரான காளிதாசர் தான் பாடிய மேகஸந்தேச என்ற காவியத்தில் " மேகமே! இமய மலையின் சிகரத்தைச் சூழ்ந்துள்ள இடங்களில் பார்கத்தக்க பலவற்றையும் கண்டு அவற்றையெல்லாம் கடந்து மானஸரோவர் செல்லும் அன்னப்பறவைகளுக்கு நுழைவாயிலாக இருக்கும் பரசுராமரால் துளைக்கப்பட்ட கிரௌஞ்ச மலையின் குஹைவரைப்பாதை வழியாக உன் உடலை நுழைத்துக்கொண்டு வடக்கு நோக்கிச் செல்" என்று பாடியுள்ளார்.

பரசுராமர் இந்த நுழைவாயிலை அமைத்த செய்தியும், அவர் அங்கே வாழ்ந்த செய்தியும், அந்த இடம் காசுமீர தேசத்தைச் சார்ந்தது என்ற செய்தியும் மகாபாரதத்தில் உள்ளது. தர்மருக்கு இமயமலையின் சிறப்புகளைச் சுட்டிக்காட்டிச் சொல்லும் லோமேசர் அவருக்கு பின்வருமாறு கூறுகின்றார்.

காச்மீர மண்டலம் சைதத் ஸர்வபுண்யமரிந்தம்
மஹர்ஷிபிச்சாத்யுஷிதம் பச்யேதம் ப்ராத்ருபி; ஸஹ


எதிரிகளை அடக்கும் ஓ தருமனே! மகரிஷிகளின் இருப்பிடமான, புண்ணியத்தைக் கொடுக்கும் இந்தக் காஷ்மீர மண்டலத்தை உன் சகோதரர்களுடன் பார்.

யதரோத்தராணாம ஸாவேஷாம ரிஷணாம நாஹூஷஸ்யச
அக்னேஸ்சைவாத்ர ஸவாத; காச்யபஸ்ய ச பாரத


இங்குதான் எல்லா ரிஷிகளுக்கும், யயாதிக்கும், அக்னிக்கும், காசியபருக்கும் இடையிலான சம்வாதம் நடைபெற்றது.

ஏதத் த்வாரம் மஹாராஜ மானஸ்ய ப்ரகாசதே
வர்ஷமஸ்ய கிரேர்மத்யே ராமேண ஸ்ரீமதா க்ருதம்


பரசுராமரால் மலைக்கு நடுவில் மழை பொழியும்படி செய்யப்பட்டு ஐஸ்வர்யங்கள் நிரம்பும்படி செய்யப்பட்ட மானஸ நுழைவாயிலாக இது பிரகாசிக்கின்றது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:00 am


ஆயினும் காளிதாசர் அவரது நூல்களில் மகேந்திர மலை கலிங்கத்தில் உள்ளது என்ற கருத்துப்பட கூறியுள்ளார் என்கின்றார்கள். இதனால் கலிங்கத்தில் உள்ள கஞ்சாம் (Ganjam) மாவட்டதில் உள்ள மலையே மகேந்திர மலை என்று சிலர் கூறுவர். கஞ்சாத்தில் இருந்து தெற்கே தொலை தூரத்தில் உள்ள பாண்டிநாடு வரை கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடராக இது நீளுகின்றது. இதையே விந்திய மலைத்தொடர் என்பர். இது கங்கை கடலில் சங்கமிக்கும் இடத்துக்கும் சப்த கோதாவரிக்கும் இடையில் உள்ளது. கஞ்சாத் அருகில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஒரு பகுதி இன்றும் மகேந்திர மலை என்றே அழைக்கப்படுகின்றது. ஆகவே விந்திய மலைத்தொடரின் ஒரு பகுதியாகவும் ஒரு மகேந்திர மலை இருக்கலாம் என்று தெரிகின்றது. இந்த மகேந்திர மலை கலிங்க- ஒரிசாப் பகுதியில் இருப்பதால் இதற்கும் இமயமலை அடிவாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காளிதாசர் கலிங்க அரசனைக் குறிக்கும்போது மகேந்திரநாத அதாவது மகேந்திரத்தின் தலைவா என்றே குறிப்பிடுவது அவன் காஷ்மீர தேசத்தை அல்லது அதன் மகேந்திர மலைப்பகுதியை வெற்றி கொண்டதனாலும் இருக்கலாம். கங்கை கொண்ட சோழபுரம் என்றால் கங்கை சோழபுரத்தில் உள்ளது என்று அர்த்தமல்ல; கங்கையை வெற்றி கொண்ட சோழபுரம் என்பதே அர்த்தம்.

இதேபோல ஆந்திர மாநிலத்தில் கடப்பை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியும் மகேந்திர மலை என்றே அழைக்கப்படுகின்றது. இது பற்றிய குறிப்பு எமது பரமகுரு கோவைப்புதூர் சர்வோத்தம சச்சிதானந்த நாதேசுர சுவாமிகளின் சிவக்குடில் வெளியீடான சி.சு. கண்ணாயிரம் அவர்கள் எழுதி வெளியிட்ட திருவாசகம் விளக்கவுரையில் காணப்படுகின்றது. இராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் கூறப்படும் மகேந்திரமலை பற்றிய விபரங்கள் இந்த மலைத்தொடர் பற்றியதாக இருக்கலாம். ஏனெனில், பாரதத்தின் தென்கோடியில் இலங்கைக்கு கடல் தாண்டித் தாவும் முன்னர் அனுமன் வந்து வானர சேனையுடன் தங்கிய இடம் மகேந்திர மலை என்று இராமாயணம் கூறுகின்றது.

மின்னெடும் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்பத்
தன்னெடுந் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ
வன்னெடுத் சிகர கோடி மகேந்திரம் அண்டம் தாங்கும்
பொன்னெடுந் தூணின் பாத சிலையெனப் பொலிந்து நின்றான்


-கம்ப இராமாயணம், கிட்கிந்தா காண்டம், மகேந்திரப் படலம்-.

இதேபோல கந்தபுராணத்திலும் மகேந்திரப்படலத்தில் முருகனுக்கும் சூரபத்மனுக்கும் நடந்த போரில் இலங்கையை வெற்றிகொண்ட பின்னர் முருகனின் சேனாபதியாகிய வீரவாகு அங்கிருந்து வான்வழியாக மகேந்திரமலைக்கு வந்ததாக கூறப்படுகின்றது. இந்த மகேந்திரமலையும் முன்னர் இராமாயணத்தில் குறிப்பிட்ட தென்னிந்தியாவில் உள்ள மகேந்திரமலையாக இருக்கலாம்.

நேரில் வீரமா மகேந்திரம் போவது நினைந்தே
ஏரு லாவரும் இலங்கையின் எல்லை நீத் தெழுந்தான்
இன்ன தாகிய இலங்கைமா புரத்தைநீத் தெழுந்து
பின்னு மாயிரம் யோசனை வானிடைப் பெயர்ந்து
பொன்னு லாவுறு வாகையம் புயத்தவன் புலவோர்
ஒன்ன லானுறை மகேந்திர வரைப்பின்முன் னுற்றான்


- கந்த புராணம், மகேந்திர காண்டம்-

இதே கந்தபுராணம் அகத்தியர் கைலாயத்தில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரும்போது முதலில் கிரௌஞ்சமலையைத் தாண்டியதும், பின்னர் காசிக்குச் சென்று கங்கையில் நீராடியதும், அதன் பின்னர் விந்திய மலையின் செருக்கடக்கி அதைக் கடந்து தமிழ்நாடு வந்ததையும் கூறுகின்றது.

சிவன் அமர்ந்துள்ள மலைகளைப் பற்றிக்கூறும் திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் ஒன்று கயிலை மலை வேறு, விந்திய மலை வேறு, பொதிய மலை வேறு, மகேந்திர மலை வேறு என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது.

கந்தமாதனம், கயலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், கண்ணா(ர்) அண்ணா,
மந்தமாம் பொழிற் சாரல் வடபர்ப்பதம், மகேந்திரமாமலை, நீலம், ஏமகூடம்,
விந்தமாமலை, வேதஞ், சையம், மிக்க வியன் பொதியின் மலை, மேருஉதய(ம்), மத்தம்
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவாம் இடர்கெட நின்(று) ஏத்துவாமே

- திருநாவுக்கரசர் தேவாரம்-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:01 am


இதலே கந்தமாதன மலை, கயிலை மலை, கேதாரமலை, காளத்திமலை, திருக்கழுக்குன்றம், அண்ணாமலை, திருப்பருப்பதம், மகேந்திரமலை, இந்திரநீலம், ஏமகூடம், விந்தியமலை, வேதாசலம் (இது எதுவென்று தெரியவில்லை), சையம் (காவிரி பிறக்கும் மலை), பொதியமலை, மேருஉதயம், மத்தம் என பதினாறு மலைகளைப் பற்றி திருநாவுக்கரசர் குறிப்பிடுகின்றார். இதிலருந்து மகேந்திர மலையானது கயிலாய மலை, விந்திய மலை, பொதிய மலைகளிலிருந்து வேறான ஒரு தனியான மலை என்பது ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாகின்றது.

முடிவாக மகேந்திர மலை என ஒன்றுக்கு மேற்பட்ட மலைகள் இருந்தன என்பதும், இவற்றுள் வடக்கில் உள்ள மகேந்திரமலை இமய மலைச்சாரலில் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஒன்று என்பதும், அதன் அடிவாரத்திலேயே சிவன் ஆகமங்களை, தத்துவங்களை, ஞானத்தை உபதேசித்தான் என்பதும், அந்த இடம் அர்ச்சுனன் பாசுபதம் வேண்டி தவம் இருந்த இடம் என்பதும், அவ்விடம் நீரருவிகளும், பறவைகளும், மான்களும் உள்ள இடம் என்பதும் தெரிகின்றது. ஆகவே இது தெற்கில் உள்ள பொதியமலையோ அல்லது விந்திய மலைத்தொடரோ வடக்கே உள்ள உயர்ந்த கைலாச மலையோ அல்ல. சிவன் ஆகமங்களையும், தத்துவஞானத்தையும் உபதேசித்த மகேந்திர மலை அர்ச்சுனனின் தவத்துடன் தொடர்புபடுவதாலும், மாமல்லபுரச் சிற்பம் இமயமலையடிவாரக் காட்சிகளையே காட்டுவதாலும், இது காஷ்மீர தேசத்தை அண்டிய மலைத் தொடர் என்பது தெளிவாகின்றது. இதேபோல தென்னிந்தியாவில் விந்திய மலையின் ஒரு சிகரமாக உள்ள மகேந்திர மலையானது இராமாயணத்திலும் கந்த புராணத்திலும் குறிப்பிடப்படுகின்ற மகேந்திர மலையாக இருக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:02 am

மகேந்திர மலை - மொழிகளின் பிறப்பிடம்

மகேந்திர மலை என்பது இமய மலைச்சாரலில் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஒன்று என்பதும், அதன் அடிவாரத்திலேயே சிவன் ஆகமங்களையும் தத்துவ ஞானத்தையும் உபதேசித்தான் என்பதும், அந்த இடம் அர்ச்சுனன் பாசுபதம் வேண்டி தவம் இருந்த இடம் என்பதும், அவ்விடம் நீரருவிகளும், பறவைகளும், மான்களும் உள்ள இடம் என்பதும் அறியப்படுகின்றது. ஆகவே இது தெற்கில் உள்ள பொதியமலையோ அல்லது விந்திய மலைத்தொடரோ அல்ல. அதே சமயம் உயர்ந்த கைலாச மலையும் அல்ல என்பது தெளிவு. ஆனால் சிவன் ஆகமங்களையும், தத்துவஞானத்தையும் உபதேசித்த மகேந்திர மலை அர்ச்சுன்னின் தவத்துடன் தொடர்புபடுவதாலும், மாமல்லபுரச் சிற்பம் இமயமலையடிவாரக் காட்சிகளையே காட்டுவதாலும், இது காஷ்மீர தேசத்தை அண்டிய மலைத் தொடர் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஆகமங்களுக்கும் மகேந்திர மலைச்சாரல் காஷ்மீரத்துக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி முன்னர் பார்த்தோம். இதேபோல காஷ்மீரத்துக்கும் திராவிட மொழிப் பாரம்பரியத்துக்கும்கூட நெருங்கிய தொடர்புகள் இருந்திருக்கின்றன. மொழியியலாளர் இந்திய மொழிகளை இந்தோ ஐரோப்பிய மொழிகள் என்றும், திராவிட மொழிகள் என்றும் பிரிப்பர். தமிழ் திராவிட மொழிகளில் மிகவும் பழமையான செம்மொழி என்பது எமக்குத் தெரியும். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பனவும் திராவிட மொழிக்கூட்டத்து மொழிகளே. வட இந்தியா முழுவதும் பேசப்படுகின்ற ஹிந்தி, குஜராத்திய, மராட்டிய, வங்காள மொழிகள் இந்தோ ஆரிய அல்லது இந்தோ ஐரோப்பிய மொழிக்குழுமத்தைச் சேர்ந்த மொழிகளாகும். ஐரோப்பா எங்கும் வழங்கும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், ஸ்பானிஷ் மொழிகளும்கூட இந்தோ ஐரோப்பிய மொழிக்கூட்டத்தைச் சார்ந்த மொழிகளே. ஆனால் காஷ்மீருக்கு அண்மித்த பலுச்சிஸ்தான் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் பேசும் பல மொழிகள் திராவிட மொழிக் குழுமத்தைச் சார்ந்தவை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அது எப்படி தென்னிந்தியாவில் பரவலாக விளங்கும் திராவிட மொழி இவ்வளவு தூரம் கடந்து காஷ்மீரத்துக்கு அண்மித்த பகுதிகளில் காணப்படுகின்றது என்பது பெரும் புதிர். உண்மை என்னவென்றால் திராவிட மொழிகளின் தாய் மொழியாம் தமிழையும், இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தாய்மொழியாம் சமஸ்கிருதத்தையும் சொல்லிக்கொடுத்ததே சிவன்தான். சிவன் இம்மொழிகளை உமைக்கு சொல்லிக்கொடுத்ததாக திருமந்திரம் கூறுகின்றது.

"ஆரியமுந் தமிழும் உடனே சொலிக்
காரிகையார்க்கு கருணை செய்தானே'


- திருமந்திரம் 65ம் பாடல்-.

ஆகவே உமைக்கு ஆகமங்களை மகேந்திர மலைச்சாரலில் சொன்ன சிவன் தமிழையும் ஆரியத்தையும்கூட அங்கு சொல்லியிருக்கின்றான். இதனால்தான் அப்பகுதிகளில் இன்றும் திராவிட மொழிக்குழுமங்கள் காணப்படுகின்றன.

சிவன் தமிழ் மற்றும் வட மொழிகளில் மட்டுமல்லாது பதினெட்டு பாஷைகளில் மெய்யியல் உண்மைகளை விளக்கியிருக்கின்றார். இவையே இன்று இந்திய துணைக்கண்டம் மட்டுமல்லாது உலகெங்கணும் விரிந்து பரந்து விளங்கும் பல வேறு மொழிக்கூட்டங்களின் பிறப்பிடம். இந்த விபரமும் திருமந்திரத்திலேயே காணப்படுகின்றது.

"பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதாலன் அறஞ் சொன்னவாறே"

- திருமந்திரம் பாடல் 59-.

கிறிஸ்தவ மத தாபகர் இயேசு கிறிஸ்துவின் சமாதி கூட காஷ்மீரில்தான் காணப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவை இமயமலைச்சாரலில் சாலிவாகனன் என்ற மன்னன் சந்தித்து உரையாடிய விபரம் பவிஷ்ய புராணத்தில் காணப்படுகின்றது.

காஷ்மீரத்தின் மகேந்திர மலைச்சாரல் ஆகமங்களுக்கும், மெய்யியல் தத்துவ ஞானத்துக்கும் மட்டுமல்ல, திராவிட ஆரிய மொழிகளுக்கும் உலகெங்கும் பரந்துள்ள பல்வேறு மொழிக்கூட்டங்களுக்கும்கூட பிறப்பிடமாக இருந்திருக்கின்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:03 am

மகேந்திர மலையும் சைவ ஆகமங்களும்

மகேந்திர மலை என்பது இமய மலைச்சாரலில் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஒன்று என்பதும், அதன் அடிவாரத்திலேயே சிவன் ஆகமங்களை தத்துவ ஞானத்தை உபதேசித்தான் என்பதும், அந்த இடம் அர்ச்சுனன் பாசுபதம் வேண்டி தவம் இருந்த இடம் என்பதும், அவ்விடம் நீரருவிகளும், பறவைகளும், மான்களும் உள்ள இடம் என்பதும் பெறப்படுகின்றது. ஆகவே இது தெற்கில் உள்ள பொதியமலையோ அல்லது விந்திய மலைத்தொடரோ அல்ல. அதே சமயம் உயர்ந்த கைலாச மலையும் அல்ல என்பது தெளிவு. ஆனால் சிவன் ஆகமங்களையும், தத்துவஞானத்தையும் உபதேசித்த மகேந்திர மலை அர்ச்சுனனின் தவத்துடன் தொடர்புபடுவதாலும், மாமல்லபுரச் சிற்பம் இமயமலையடிவாரக் காட்சிகளையே காட்டுவதாலும், இது காஷ்மீர தேசத்தை அண்டிய மலைத் தொடர் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

மகேந்திர மலை பற்றிய விளக்கங்கள் எமது தமிழ்நாட்டு சைவ சித்தாந்த ஆகமங்களுக்கும் காஷ்மீருக்கும் இடையில் இருந்து வந்த நெருக்கமான தொடர்புகளையும் விளக்குவதாக உள்ளது. தமிழில் சிவஞானபோத நூலைச் செய்த பதின் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மெய்கண்டாருக்கு முன்னர் சைவத்தின் இணையற்ற ஆச்சாரியார்களாகத் திகழ்ந்தவர்கள் காஷ்மீர தேசத்து ஆச்சாரியார்களான சத்யஜோதி சிவாச்சாரியார், உக்கிரஜோதி சிவாச்சாரியார், இராமகண்ட சிவாச்சாரியார் போன்றவர்களே. இவர்கள் பல சைவ ஆகம நூல்களுக்கு உரை எழுதியிருப்பதுடன் ஆகமக்கிரியைகளின் கைநூல்களான பத்ததிகள் பலவற்றையும் கூட எழுதியுள்ளார்கள்.

     சர்த்தா-திரிசதி-காலோத்தராகமம் என்பது காலோத்தராகமத்தின் உப ஆகமம் ஆகும். இதில் முந்நூற்றைம்பது பாடல்கள் இருபத்தேழு அத்தியாயங்களாக உள்ளன. இந்த ஆகமமும் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த காஷ்மீரத்து இராம கண்ட பட்டரின் விளக்க உரையுடனும், பிரெஞ்சு மொழிபெயர்ப்புடனும் பாண்டிச்சேரி பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தினால் பதிப்பித்து 1979இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆகமம் மந்திரங்களின் தோற்றமும் உள்ளடக்கமும், விபூதியாலும் தண்ணீராலும் செய்யப்படும் சுத்திகள், சிவ வழிபாடு, அக்கினி வழிபாடு, விசேட கிரியைகளிலே பாவிக்கப்படும் வரைபடங்களும் அவற்றின் பூசை விதிகளும், தீட்சை, தண்ணீரினால் தர்ப்பணம் செய்தல், காலச்சக்கரம், உடலின் நாடிச்சக்கரம், சிவமந்திரங்களின் எட்டு வகைகள் பற்றிக் கூறுகின்றன.

     கிரண ஆகமத்தை பாண்டிச்சேரி பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனம் தென்னிந்தியாவிலும், நேபாளத்திலும் கிடைத்த இருபத்துநான்கு ஏட்டுப்பிரதிகளையும், தென்னிந்தியாவில் கிடைத்த நான்கு விளக்க உரைகளின் ஏட்டுப்பிரதிகளையும் ஆராய்ந்து டொமினிக் கூடோல் (Dominic Goodall) அவர்களின்ஆங்கில மொழிபெயர்ப்புடன் முழுமையாகப் பதிப்பித்து இருக்கின்றார்கள். இதனுள் முதல் ஆறு அத்தியாயங்களுக்கும் காஷ்மீரத்து இராமகண்ட பட்டர் எழுதிய விளக்க உரையும் அடங்குகின்றது. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பதாக எழுத்துருப் பெற்ற இந்த ஆகமத்தின் வித்யாபாதம் பதி, பசு, மாயை, கர்மா, சத்திநிபாதம், தீட்சை, மந்திரம், தந்திரம், யந்திரம் பற்றிக் கூறுகின்றது. கிரியாபாதம் தனிமனிதன் வீட்டில் செய்ய வேண்டிய ஸ்நானம் முதலான அன்றாட விதிகளைக் கூறுகின்றது. வீட்டு அமைப்பைப் பற்றி மட்டும் தனி அத்தியாயம் உள்ளது. சரியாபாதம் சரஸ்வதி பூசை, மிருத்யுஞ்சய பூசை, குருவிற்குரிய இலட்சணங்கள் பற்றிக் கூறுகின்றது. யோகபாதம் யோகம் செய்யும் முறை, எண்வகை ஆசனங்கள், பிராணாயாமம் என்ற மூச்சுப்பயிற்சி பற்றி விளக்குகின்றது.

            பரமேஸ்வர ஆகமம் சைவத்தின் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களையும் கொண்ட அருமையாகக் கிடைத்த முழுமையான ஆகமம். கிரியாபாதம் தீட்சை, சுத்தி, சிவ வழிபாடு, அக்கினி வழிபாடு, லிங்கப் பிரதிஷ்டை, விக்கிரக விதிகள், கனவுகளின் விளக்கம் பற்றிப் பேசுகின்றது. ஏழு அத்தியாயங்களைக் கொண்ட யோகபாதம் யோகத்தின் பொதுவான அம்சங்கள், யோகத்தின் ஆறு பகுதிகள், யோக சாரம், உண்மைநிலைகளைத் தன் வசப்படுத்தல், சிவானுபவத்தை அடையும் வழிகள், மூச்சுப் பயிற்சி, யோகத்தின் அதீத செயற்பாடுகள் பற்றிப் பேசுகின்றது. ஆறு அங்க யோகம் பற்றிக்கூறுவதால் இது பதஞ்சலி யோகசூத்திரத்திலும், சுப்பிரபேத ஆகமத்திலும் கூறப்படும் பிரபலமான அட்டாங்க யோகத்தில் இருந்து வேறுபடுகின்றது. சரியாபாதம் சைவத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு விதிமுறைகளையும், பிராயச்சித்தங்களையும், துறவிகளுக்கான உணவுகளைப் பற்றியும், சாதகர்களுக்கான யாத்திரைகள் பற்றியும் பேசுகின்றது. இது 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த காஷமீரத்து இராமகண்ட பட்டரின் விளக்க உரையில் கிடைக்கப் பெற்ற பகுதிகளுடன் பாண்டிச்சேரி பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தினரால் ஆங்கில முகவுரையுடனும், பிரெஞ்சு மொழிபெயர்ப்புடனும் பதிப்பிக்கப்பட்டு 1982இல் வெளியிடப் பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:04 am

ஸ்வாயம்புவ ஆகமம் ரௌரவ ஆகமத்தில் மேற்கோள் காட்டப்படுவதால் (3.14) அதற்கு முந்தியதாக இருக்க வேண்டும். இந்த ஆகமத்தின் வித்தியாபாதம் காஷ்மீரத்து சத்யஜோதி சிவாச்சாரியார் எழுதிய விளக்கவுரையுடன் கிடைக்கப்பெற்று பேராசிரியர் பியரே-சில்வியன் ஃபிலியோசட் (Prof. Pierre- Sylvian Filliozat) அவர்களினால் ஆங்கில மொழிபெயர்ப்புடன் பதிப்பிக்கப்பட்டு இந்திராகாந்தி தேசிய பண்பாட்டு மையத்தினால் (Indra Ghandi national centre for the arts) 1994 இல் வெளியிடப்பட்டுள்ளது. இது ஆன்மாவின் இயல்பு, பாசத்தின் இயல்பு, அருளின் இயல்பு, சிவத்தை அடையும் வழி என்பன பற்றிப் பேசுகின்றது.

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த காஷ்மீரத்து இராமகண்டர் தனது நூல்களில் சத்யஜோதியினது மோக்ஷ காரிகா, பரமோக்ஷ நிராச காரிகா என்ற நூல்களை மேற்கோள் காட்டியுள்ளார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் வாழ்ந்த தமிழரும், தமிழ் வட மொழி சைவ சித்தாந்த பாரம்பரியங்களை இணைத்து வைத்தவருமான அகோரசிவாச்சாரியார் இவரது போக காரிகா என்ற நூலுக்கு உரை எழுதியிருப்பதுடன் இவரது தத்வ சங்கிரகா, தத்வ திரய நிர்ணயா என்ற நூல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இதனால் சுவயம்புவ ஆகமத்துக்கு உரை எழுதிய சத்யஜோதி அவர்கள் இவர்களுக்கு முற்பட்டவராக இருந்திருக்க வேண்டும். இவர் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

           யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் தமது சைவ வினாவிடை இரண்டாம் புத்தகத்திலே 85வது வினாவிடையிலே சிவாகமங்களுக்குச் சார்பு நூல்களாக அட்டப்பிரகரணம் என்னும் எட்டு நூல்களில் இவரது மோக்ஷ காரிகை, பரமோக்ஷ நிராச காரிகை, போக காரிகை, தத்துவ சங்கிரகம், தத்துவத்திரய நிர்ணயம் என்ற ஐந்து நூல்களையும் குறிப்பிட்டுள்ளார்.  இவற்றில் போக காரிகை சிதம்பரம் அகோர சிவாச்சாரியார் எழுதிய உரையினது டபிள்யு. ஏ.பொரோடி (W. A. Borody)என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் மோதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தினரால் (Motilal Banarsidas Publishers Pvt. Ltd,New Delhi) 2005 இல் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

      அஜித ஆகமம் கிடைக்காமலிருந்து இப்போது பதிப்பிக்கப்பட்டு பாண்டிச்சேரியிலிள்ள பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தினால் பத்தாம் நூற்றாண்டின் காஷ்மீர் இராமகாந்த பட்டர் எழுதிய விளக்கவுரையுடன், ஆங்கில முகவுரையுடன் கூடிய பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது (Sanscrit edition with explanatory commentary of Bhatta Ramakantha of 10th century AD from Kashmir, published by Instt. Francais D' Indologie, Pondichery). முதலாவது தொகுதி முப்பத்தைந்து அத்தியாயங்களைக் கொண்டிருக்கின்றது. இது லிங்கங்களைப் பற்றியும் இவற்றின் வகைகள், தாபித்தல், வழிபாடுகள் பற்றியும் விரிவாகப் பேசுகின்றது. இரண்டாவது தொகுதி பத்தொன்பது அத்தியாயங்களைக்கொண்டது. இது சிவன் மற்றைய கடவுள்களின் விக்கிரக அமைப்பு, தாபிதம், பூசை, கட்டட அமைப்பு பற்றி விரிவாகப் பேசுகின்றது. மூன்றாவது தொகுதி கிடைத்த ஒரே ஒரு பிரதியில் இருந்த முழுமையில்லாத அத்தியாயங்களையும், மற்றைய நூல்களிலே மேற்கோள் காட்டப்பட்ட பாடல்களையும் கொண்ட தொகுப்பு ஆகும். இதிலே இரண்டு அத்தியாயங்கள் விஷ்ணு மற்றும் ஷேத்திரபாலர்களின் விக்கிரகப் பிரதிஷ்டை பற்றிக் கூறுகின்றது. இதேபோல பாண்டிச்சேரி பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தின் தாபகரும், சைவ நூலாராய்ச்சியாளருமாகிய காலஞ்சென்ற வைத்திய கலாநிதி ஜீன் பிலியோசட் (Dr. Jean Filliozat 1906-1982), அவரது மகன் பேராசிரியர் பியரே-சில்வியன் பிலியோசட் (Prof. Pierre- Sylvain Filliozat), இதே நிறுவனத்தைச் சேர்ந்த என். இராமச்சந்திர பட்டர் (N. Ramachandra Bhatt) ஆகியோரினால் இந்திராகாந்தி தேசிய பண்பாட்டு மையமும், மோதிலால் பர்னாசிதாஸ் பதிப்பகமும் இணைந்த கூட்டு முயற்சியாக  (Indra Ghandi National Centre for the Arts &  Motilal Banarsidas Publishers Pvt. Ltd) அஜித ஆகமம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஐந்து தொகுதிகளாக 2005 இல் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றில் இருந்து காஷ்மீருக்கும், அங்குள்ள மகேந்திர மலைக்கும், எமது சைவ ஆகம மரபுக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகள் விளங்குகின்றன.

இ. லம்போதன் MD

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 21, 2013 12:44 pm

வாவ் .... நல்ல பதிவு... முற்காலத்தில் வடக்கில் அதிகமாக லிங்கங்களை தான் பூஜித்தார்களாம்.... பின்னர் சமானமாக மாறியதாகவும் படித்த நியாபகம் உள்ளது...
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் amirmaran



அன்புடன் அமிர்தா

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக