புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
156 Posts - 79%
heezulia
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
3 Posts - 2%
Pampu
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
321 Posts - 78%
heezulia
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
8 Posts - 2%
prajai
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
3 Posts - 1%
Barushree
சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_m10சித்தமருத்துவ  சங்கதிகள்    Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தமருத்துவ சங்கதிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Mar 20, 2013 7:03 pm

சித்தமருத்துவ சங்கதிகள் -1
அண்ணாமலை சுகுமாரன்


சித்தமருத்துவ சங்கதிகள் எனும் இந்தத் தொடரை ,சித்தமருத்துவத்தின் பல்வேறு கூறுகளையும் ,பெருமைகளையும் திரட்டும் நோக்கில் ஆரபிக்கிறேன் .
ஒரே தலைப்பின் கீழ் இருக்குமானால் பின்னாளில் தேடிப்படிக்க எளிதாக இருக்கும் .எனவே ஒரெத்தலைப்பில் திரட்ட எண்ணுகிறேன் .
இது ஆய்வுகளுக்கும் ,அனுபானங்களுக்கும் உதவிடும் .

முதலில் சித்தமருத்துத்தில் பயன் படுத்தப்பெறும் காலம் .அளவு ,புடம் போடுதல் குறித்த விபரங்கள் மற்றும் எரிப்பு முறைகளை பார்ப்போம்.

இந்ததொடரில் எழுதப்பெறும் அத்தனை விபரங்களும் ,மூல நூல்களில் இருந்து பெறப்பட்டவை மட்டுமே ஆகும் .அத்தனையும் மிகப்பழைய ,புத்தகங்களில் இருந்தும் ,சுவடிகளில் இருந்து மூல நூலாகப் பதிக்கபட்டவைகளைளில் இருந்து மட்டுமே திரட்டப்பட்டவை ஆகும் .
அதில் எங்கிருந்து பெறப்பெட்டது என மூல நூலின் விபரமும் தர உத்தேசித்துள்ளேன் .
இது ஆய்வுகளுக்கு பயன் படுத்தப்படவேண்டும் என்பதர்க்ககவும் ,நமக்கு இந்தகைய விஷயங்களில் ,நமது என பின்னாளில் உரிமைக் கோர ஒரு முக்கிய பதிவாகவும் விளங்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஈகரை எனும் பெருமை மிகுகுழுமத்தில் பதிவிடுகிறேன் .

நண்பர்கள் தரும் உற்ச்சாகம் என்னை இதில் ஈடுபட தக்க சக்தியை தரும் என நம்புகிறேன் .

இனி சித்த மருத்துவத்தில் பயன் படுத்தப்பெறும்
[b]காலம் ,அளவு , புடம் .எரிப்பு ஊது விபரங்கள்

ஒரு நாள் = 8 சாமம்
இரவு பகல் = 24 மணி

1 சாமம் = 3 மணி நேரம்
1 மணி = 2 1/2 நாழிகை
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்

1 நிமிடம் = 2 1/2 வினாடி தமிழ் முறை

4 நெல் எடை = 1 குன்றி எடை

3 1/2 குன்றி எடை = பண எடை
10 பண எடை = 1 வராகன் எடை
10 வராகன் எடை = 3 ரூபா எடை
1 வராகன் எடை = 32 குன்றி எடை . 1 3/4 தம்பிடி எடை
1 1/4 வராகன் எடை = 1 கழஞ்சி எடை

24 ரூபா எடை = 1 சேர்
5 சேர் = 1 வீசை
1 வைத்தியபலம் = 3 ரூபா எடை


1 உரி = அரைஇபடி பட்டிணம் படி
2 படி = 1 குறுநி , மரக்கால்
4 படி = 1 பதக்கு , 2 மரக்கால்

8 படி = 1 தூணி
24 படி = 1 கலம்



1 வெருகடி = 5 விரல் நுனி பிடியளவு
1 திரிகடி = 3 விரல் நுனி பிடியளவு


6 ரூபா எடையுள்ளது ஒரு எரு புடத்திர்க்கு

2 எரு = காடைப்புடம்
3 எரு = கவுதாரிப்புடம்

10 எரு =குக்குட புடம்
50 எரு = வராகப்புடம்
100 எரு = கஜப்புடம்
1000 எரு = கன புடம்


1 துருத்தி ஊதுவது == கன்னம்
2 துருத்தி ஊதுவது = உருக்கு
4 துருத்தி ஊதுவது = சத்து உலை

2 விரல் கன விறகு1 = 1 தீபாகினி

2விரல் கன விறகு2 =- கமலாக்கினி

2விரல் கன விறகு 5 = காடாக்கினி


காற்றில் கட்டுவது வாயு புடம்
ஜலத்தில் அமிழ்த்துவது ஜலப்புடம்
நெல்லில் வைத்து மூடுவது நெல் புடம்

சூரியனில் வைப்பது ரவிபுடம்
புகை அடங்க இடுவது அவிபுடம்
மணல் மூடி இடுவது மணல் புடம்

உமியில் எரிப்பது உமிப் புடம்
குழிக்குள் புடமிடுவஸ்து குழிபுடம்
குழித்தைலம் எடுப்பது குழிதைல புடம்
குப்பியில் வைத்து எரிப்பது குப்பிபுடம்


இவை மருந்துகள் செய்ய பயன் பெறும் என நம்புகிறேன் .
அளவும் அனுபானமும் சித்தவைத்தியத்தில் மிக முக்கியமானவ்பை .
எனவே இந்த நுண்ணிய அளவுகளை சரிவர பயன்படுத்த வேண்டும் .

ஆதாரம் - ராமகிரிச் சித்தர் ரசாயனம்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்









sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Mar 21, 2013 4:43 pm

சித்தமருத்துவ சங்கதிகள் -2
அண்ணாமலை சுகுமாரன்


மருத்துவம் எனும் போதே தெரிந்துவிடுகிறது
இது நோய்க்கு அதைத் தீர்க்க மருந்து தரும் முறை என்பது .
சித்தமருத்துவம் என்பது சித்தர்களால் வடிவமைக்க்ப்பபட்ட ,
அவர்களின் நடைமுறையில் இருந்து வந்த மருத்துவம் என்பதும் புரிகிறது .
இன்னும் எத்தனையோ மருத்துவமுறைகள் இந்தியாவில் உண்டு .
ஆயுர்வேதம் ,யுனானி , அலோபதி எனும் ஆங்கில மருத்துவமுறை ,ஹோமியோ எனும்
ஜெருமானிய முறை போன்ற நிறைய வகை மருத்துவ முறை உள்ளன .
உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு முறைகள் மருத்துவத்தில் பழக்கத்தில் இருக்கிறது .

நீண்ட சரித்திரம் கொண்ட எந்த இனத்திற்கும் அவர்களுக்கு என்று ஒரு சிறப்பான மருத்துவமுறை வழி வழியாக இருந்து வரும் .
ஆப்ரிக்காவில் கூட ஊடு முறை எனும் மந்திர சடங்குகள் கொண்ட வழிமுறை உண்டு .
ஆயினும் நமது தமிழ் நாட்டின் சித்தமருத்துவம் அவற்றில் ஒன்றுதான ?
அதற்க்கு என்று சிறப்பு ஒன்றும் இல்லையா ?
நமது சித்தர்களால் பயன்படுத்த முறை ஏனைய மருத்துவ முறைகளில் ஒன்றுதானா ?
தனித்துவம் ஒன்றும் இல்லையா ?

,சித்தமருத்துவம் சிறப்பானதனித்துவ தகுதிகள் கொண்டது .

சித்தமருத்துவம் தன்னைப்பற்றிய ,விளக்கம் ஒன்றை தானேத் தருகிறது .
மருந்து எனப்படுவது எப்படி இருக்கவேண்டும் என்ற ஒரு விளக்கம் தந்து கொள்கிறது


"மறுப்பதுடல் நோய் மருந்தெனல் சாலும்
மறுப்பது உள நோய் மருந்தெனல் சாலும்
மறுப்பது இனி நோய் வாராதிருப்ப
மறுப்பது சாவை மருந்தெனலாகும் "


எத்தனை தெளிவாக மருந்து என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை
வரை இருத்திருக்கிறார்கள் பாருங்கள் .
வேறு எந்த மருத்துவதிலாவது இப்படி மருந்து என்பது என்ன என
நெறிப்படுத்தப்பட்டுல்லதா? என்பது தெரியவில்லை .?\

மருந்து எனப்படுவது உடல் நோய்க்கு மருந்தாக இருக்கவேண்டும்
மருந்து என்பது உள நோய்க்கு மருந்தாக வேண்டும் ..நோய்களுக்கான
உளவியல் காரணங்களை ஆங்கில மருத்துவம் இப்போதுதான்
உணர்ந்து ஆய்வு செய்ய ஆரபிக்கிறது .
மருந்து மட்டும் உடலுக்கு வழ்கன்கினால் நோய் தீராது என உணர்கிறது
ஆனால் நமது சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் நோயுடன் அதைத் தீர்க்க உள்ளத்திற்கும் மருந்து தேவை எனக் கூறி இருக்கிறார்கள் .

மருந்து எனப்படுவது மீண்டும் அந்த நோய் வராமல் செய்யவேண்டும்
என உறுதியாக விதி வகுக்கிறது .

மருந்து எனப்படுவது மரணத்தை வெல்லும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும்
இவ்வுலகிற்கு ,வாழவந்தக் காரணம் பூர்த்தியாகும் வரை காயகல்ப்பம் உண்டு ,உடலை
கர்ப்பமாக்கி ,மரணமில்லா பெரு வாழ்வை வாழும் வல்லமை பெற்றதாக மருந்து எனப்படுவது இருக்க வேண்டும் என்கிறது இந்தப்பாடல் .

நமது சித்தமருத்துவத்தின் நோக்கம் எத்தனை தெளிவாக வகுக்கப்பட்டிருக்கிறது
என்பது வியப்பளிக்கப்படவில்லையா ?
எத்தனை உயரிய நோக்கம் கொண்டதாக சித்தமருத்துவ மருந்துகள் இருக்கவேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது என்பது நமது நீண்ட பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துக்காட்டுகிறது .

இப்படிப்பட்ட உயரிய நோக்கங்கள் கொண்ட நமது பாரம்பரிய சித்தவைத்தியம்
மாற்றுமுறை வைத்தியம் என அறிவிக்கப்பட்டிருப்பதையும் ,300 ஆண்டுகளே வரலாறு பின் புலம் கொண்ட ,இன்னும் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டி நாளும் ,மாறிவரும் ஆங்கில மருத்துவம் நமது நாட்டில் முதன்மை மருத்துவமாக இருக்கிறது .

ஆயினும் தகுதிபடைத்தவை என்றும் ஓதிக்கித்தள்ள இயலாதவை என்பதற்கு ஏற்ப ,
சித்தமருத்துவம் இன்றும் தன சீரிளமையுடன் தமிழைப்போலவே மக்கள் மத்தியில் ஜீவனாக வாழ்ந்து வருகிறது .

இவ்வாறு மரணமில்லாமல் வாழ இயலுமா என்பதற்கு திருமூலரே கூடவே தன்னையே சான்றாக சொல்லுகிறார்

இருந்தேன் இக்காயத்தே என்னில் கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே - திருமந்திரம்

யோகத்தில் அமர்ந்து நீண்ட காலம் உயிர்வாழக்ஹ்ந்தேன்
இரவு பகல் என்று தெரியாமல் யோகக்கட்சியில் ஜோதிதரிசனம் கண்டேன்
தேவர்கள் போற்றும் கடவுளின் திருவடிகளில் நீண்ட காலம் இருந்தேன் என்கிறார் .
தனது குருவான நந்தியில் திருவடியில் எல்லையில்லா காலம் இருந்தேன் என்கிறார் .


ஒரு சிலேர் இவர் குறிப்பிடுவது நந்தி நாடி எனும் குரு நாடியை என கூறுவதுண்டு .


உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேன் - திருமந்திரம்
என்கிறார் திருமூலர் .
இதில் குறிப்பிடப்படும் உடம்பை வளர்க்கும் உபாயம் தான்
சித்தர்கள் அருளிய சித்தமருத்துவம் .
அதற்க்கு தக்க மதிப்புவைத்து ,சித்தவைத்தியத்தை அணுகினால் ,நரை திரை இல்லாத ,
என்றும் இளமையான ,நோயில்லாத வாழ்வும் மரணமில்லாத வாழ்வும் சாத்தியமே
என சித்தர்கள் உறுதிபட கூறுகிறார்கள் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்





mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 22, 2013 5:20 pm

நல்ல பகிர்வு அருமையிருக்கு

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 08, 2013 7:37 pm

அண்ணாமலை சுகுமாரன் தொடரட்டும் ! தமழர்களின் தனிப்பெரும் சொத்து சித்தமருத்துவம் ! ஓலைச் சுவடிகளிலிருந்து நானே சில சித்தமருத்துவ நூற்களை அரசாங்க வெளியீடாக வெளியிட்டுள்ளேன் ! ‘வைத்திய அகராதி’(1995) , ‘விசுவாமித்ர சுவாமி வாக்கியம்’(1999),மருத்துவப் பெயரகராதி(1999)‘தமிழர் மருத்துவம்’(2000), போடுவார் பட்டி ஆச்சாரி எழுதிய ‘வைத்தியச் சாத்திரம் (2000)’, ‘வைத்திய நீதிப் பழமொழிகள்’ (2003), ‘மருத்துவப் பழமொழிகள், ஆங்கில மொழிபெயர்ப்புடன்’(2004) முதலியன அவை ! தமிழர்கள் அறிவியலைச் சித்த மருத்துவத்தில் இணைக்கவேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 08, 2013 9:14 pm

நல்ல சித்த மருத்துவ தகவல் பகிர்வு நன்றி நன்றி நன்றி

தொடரட்டும் உங்களின் பதிவுகள் .................




சித்தமருத்துவ  சங்கதிகள்    Mசித்தமருத்துவ  சங்கதிகள்    Uசித்தமருத்துவ  சங்கதிகள்    Tசித்தமருத்துவ  சங்கதிகள்    Hசித்தமருத்துவ  சங்கதிகள்    Uசித்தமருத்துவ  சங்கதிகள்    Mசித்தமருத்துவ  சங்கதிகள்    Oசித்தமருத்துவ  சங்கதிகள்    Hசித்தமருத்துவ  சங்கதிகள்    Aசித்தமருத்துவ  சங்கதிகள்    Mசித்தமருத்துவ  சங்கதிகள்    Eசித்தமருத்துவ  சங்கதிகள்    D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Oct 20, 2013 7:58 am

சித்தமருத்துவ சங்கதிகள்--3

சித்தர்களின் கற்ப மூலிகைகள்
---அண்ணாமலைசுகுமாரன்

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. "

விருந்தினராக வந்தவரை வெளியே இருக்கவைத்து விட்டுவிட்டுச் சாகாத மருந்தாகவே இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத்தக்க பண்பாடல்ல. என்கிறது அந்த வள்ளுவரின் குறள்.
விருந்தின் மேன்மையைத் தெரிவிப்பதைவிட இந்தக் குறளில் இன்னும் ஒரு
அழுத்தமான செய்தி உண்டு..
சாவா மருந்து எனும் சாக்காட்டைத் தடுக்கும்
மருந்து என்று ஒன்று இருப்பதாக அந்தக்கால அதாவது சுமார் 2000 வருடம் முந்தய தமிழ்ர்களுக்கு, ஒரு நம்பிக்கை நிச்சயமாக இருந்திருக்கிற்து...
நம்பிக்கை என்று மட்டும் இல்லாமல் அப்படி ஒரு மருந்தும் வழக்கத்தில்
இருந்திருப்பதாகவே வள்ளுவரின் எடுத்துக்காட்டு தெரிவிக்கிற்து.

உடலை பிணி, மூப்பு,திரை ,நரை ஏற்ப்படாமல்
உடலை அழியாத கற்ப தேகமாக மாற்றும் வழிமுறைகளை
நம் நாட்டு சித்தர்கள் பலர் அறிந்திருந்தார்கள்.
கற்பம் என்றால் ஊழி காலம் வரை என்றுபொருள்.
உலகின் இறுதி வரை வாழ வைக்கும் மருந்துகளே
கற்ப மருந்துகள் , சாவா மருந்துகள் எனப்[பட்டன.
அவற்றை கண்டறிந்த சித்தர் பெருமக்கள் ,தாம் மட்டும்
அறிந்ததை தனக்காகமட்டும் பயன்படுத்தியதல்லாமல் அவற்றை மற்றவரும் அறிந்துக்கொள்ள கருணையுடன் கூறியும் வைத்தனர்.
ஆயினும் தமது பாடல்களில் அவற்றை சற்று மறை பொருளாவே கூறிவைத்தனர்.

இவ்வாறு கற்ப்பமாக உடலை மாற்ற இயற்க்கையில் கிடைக்கும்
மூலிகைகளையே பெரும்பாலும் உபயோகித்தனர்.
ஒரு வகையில் உலகில் கிடைக்கும் அனைத்து தாவரங்களும்
எதோ ஒரு மருத்துவ குண்ம் கொண்டதாகவே இருக்கிற்து.

எந்த ஒரு இலையும் ,வேரும் உண்வாக உட்க்கொள்ளும்
கீரை என அழைக்கப்படுகிற்து
மருத்துக்காக அதயே கொள்ளூம் போது அதுவே மூலிகை என்று அழைக்கப்படுகிறது..

அதுவே வேறு விதமாக, அல்லது முறையாக பயன்படுத்தும் போது
மாந்திரீக குணம் உள்ளதாக மாறுகிறது. பல விந்தைகளை புரிகிற்து.

உடலை அழியாத கற்ப்ப தேகமாக மாற்றும் வல்லமைக்கொண்ட
மூலிகைகள் கற்ப மூலிகைகள் எனப்பட்டன.

மனித இனம் மரண்மில்லா இனமாக வாழவேண்டும்,
பிற்வி எடுத்ததின் பயனை அவன் அடையும்வரை
மரணம் என்பது அவன் விரும்பியபோது மட்டுமே,,
தான் பிற்வி எடுத்ததன் பயனை அடைந்துவிட்டதாக
அவன் கருதும் போது மட்டுமே வரவேண்டும்,

படிக்கும் படிப்பு முழுமையடையும் முன்பும் ,
அறியமவேண்டியதை அறிந்து முடிக்குமுன்பும்,
கழிக்கவேண்டிய கடனை கழித்து முடிக்கும் முன்பும்,
தீடீரென வகுப்பில் இருந்து DISCONTINUE ஆவது போல்

மரண்ம் என்பது நிகழ்ந்து ,மீண்டும் புதிய பிற்ப்பு நிகழ்ந்து,
மீண்டும் முதல் வகுப்பில் இருந்து ஆரபித்து,
எந்த வகுப்பு முன்பு படித்தொம் என்பது தெரியாமல்
மீண்டும் தட்டுத்தடுமாறி,திசைமாறி விட்ட இடத்தை
அடைவதற்க்குள் மேலும் பல கொடுக்கல் வாங்கலில் சிக்கி,
அப்பப்பா இந்த மாய சுழட்சியில் சிக்கி விடிவு பெறுவது எங்கனம் ?


எனவேதான் இற்ப்பு என்பது தன் வசப்படவேண்டும் என
நம் நாட்டு சித்தர்கள் உறுதி எடுத்தனர்.

இவ்வாறு வாழ வழிவகுக்கும் கற்ப மூலிகைகளின் ஒரு பட்டியலை ,பல்வேறு சித்தர்கள் பாடல்களில் இடம்பெற்றவைகளின் சிலவற்றை இங்கு காண்போம் .

1) அழுகண்ணி
2) தொழு கண்ணி
3) தில்லை மரம்

4 கணை எருமை
5. ஜோதி மரம்
6 கருவாழை
7 கருஊமத்தை
8 எட்டி
9 வெள்ளெருக்கு
10 சிவப்பு கீழகாய் நெல்லி
11 சிவப்பு தூதுவளை
சக்கரைவேம்பு
தேவதாரு
வேம்பு புல்லுரிவி
கல்லத்தி
குருக்கத்தி
சேங்கொட்டை
சீந்தில்
கறுப்புக் கரிசாலை
கருங்க்கொடிவேலி
செந்நாயுருவி
பேய்சுரை
அமிர்தவல்லி
மஞ்சள்பூ தைவேளை
கருநெல்லி
கருநெல்லி
கருநொச்சி
முப்பிரண்டை
இன்னும் எத்தனை எத்தனையோ, கருப்பு நிற கற்பமூலிகைகள்
வபரங்கள்; சித்தர் பெருமக்கல்லால் வழங்கப்பட்டு ,,இன்னும்
நம்மக்களால் சரிவர பயன்பாட்டிற்கு கொண்டுவராப்பாமல் கிடக்கிறது.

இப்போது நமது தேவையெல்லாம் அத்தனைத்தகவல்கள்;ஐயும் தேடித்தொகுப்பதும்,அந்த மூலிகைகளை முறைப்படி பயிரிட்டு,
த்தக்கொரு குருவின் மூலம் அதை ஆய்வு செய்து அதை
மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதே.

"நல்லதொரு கற்ப்பமதை காலைதனில்
நலமாக உண்டவருக்கு காயசித்தி
வல்லமையாய்மாலையிலே undaperukkuundaperukkuஉண்டபேருக்கு
வருகுமே பெருவாழ்வுமகிழ்வுண்டாகும்"









ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 20, 2013 9:03 am

பயனுள்ள சேவை...தொடருங்கள்

சித்தமருத்துவ  சங்கதிகள்    103459460 

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Nov 10, 2013 5:57 pm

சித்தமருத்துவ சங்கதிகள்-4

சமீபத்தில் சவுக்கிய சாரம் என்றும் பிணியற்ற வாழ்வு எனும்

1895 இல் முனுசாமி முதலியார் என்பவரால் எழுதப்பட்டு
சுந்தர முதலியாரது சுந்தரவிலாச அச்சுக்கூடத்தில்பதிப்பிக்கப்பட்ட
பழைய நூல் ஒன்று கிடைத்தது.

அதில் உட்ப்பிரிவாக நோய் அனுகாவிதி , போஜனவிதி , அக்ன்னவிதி
உட்க்கொள்ளும் கல விதி என பல ஆரோக்கிய விதிகள் பாடல்களாக
இடம் பெற்றிருந்தது .மிக எளிய முறைகள் ,அனைவரும் அறிந்த செய்திகள்தான்
ஆனாலும் மறந்துவிட்டோமே
அவைகளில் சிலவற்றை தொடர்ந்து வெளியிட எண்ணுகிறேன்.
நண்பர்கள் படித்து ,அவர்கள் நுகர்ந்த வித்தத்தை தெரிவித்தால்
மேலும் எழுத சற்று ஊக்கம் கிடைக்கும் .

முதல் பாடல் கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து வருவது
நோய் அணுகா விதியின் முதல் பாடல் இது .



"பாலுண்போம் எண்ணெய்பெரின் வெந்நீரில் குளிப்போம்
பகல் புணரோம் பகல்துயிலோம் மூத்த
குழவியரோ இளவெய்யலும் விரும்போம்
இரண்டடக்கோம் ஒன்றை விடோம் இடதுகையில் படுப்போம்
மூலம்சேர்கரி நுகரோம் மூததயிருண்போம்
முதல் நாளில் சமைத்தகரி அமுதெனினும் அருந்தோம்
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்குமிடத்தே "


பாடலின் நடை எளிய நடையாக இருப்பினும்கூடவே ஒரு சிறிய விளக்கத்தையும் தர எண்ணுகிறேன் .

பால் எனில் பசும் பாலை மட்டுமே உண்போம்
எண்ணை தேய்த்து குளித்தால் வெந்நீரில் மட்டுமே குளிப்போம் .
பகலில் புணர்ச்சி செய்ய்யமாட்டோம்
பகலில் தூங்கமாட்டோம்
தன்னைவிட வயதான பெண்ணையும் ,இள வெயிலையும்
விரும்பமாட்டோம்
மலஜலங்கை அடக்கமாட்டோம்
இந்திரியத்தை அதிகமாக வீணடிக்கமாட்டோம்,
எப்போதும் இடது கையை கிழே வைத்து உறங்குவோம்
மூல நோயை வரவழிக்கும் உணவை உண்ணமாட்டோம்
அமுதத்துக்கு ஒப்ப இருந்தாலும் பழைய உணகவை உண்ணமாட்டோம் ,
தயிர் மட்டும் பழயதை கொள்வோம் ,
உலகமே கிடைத்தாலும் பசியில்லாமல் உண்ணமாட்டோம் ,
இவ்வாறெல்லாம் இருக்கும் நாங்கள் இருக்கும் இடத்தில்
எமனுக்கு என்னவேலை ?

அடுத்தபகுதியை விரைவில் காண்போம்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 10, 2013 6:07 pm

நன்றாக இருக்கிறது ஐயா தொடருங்கள் , தொடர்ந்து இணைந்திருங்கள் நன்றி 

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 10, 2013 6:25 pm

அருமையா இருக்கு. தொடருங்கள் ஐயா.





சித்தமருத்துவ  சங்கதிகள்    Uசித்தமருத்துவ  சங்கதிகள்    Dசித்தமருத்துவ  சங்கதிகள்    Aசித்தமருத்துவ  சங்கதிகள்    Yசித்தமருத்துவ  சங்கதிகள்    Aசித்தமருத்துவ  சங்கதிகள்    Sசித்தமருத்துவ  சங்கதிகள்    Uசித்தமருத்துவ  சங்கதிகள்    Dசித்தமருத்துவ  சங்கதிகள்    Hசித்தமருத்துவ  சங்கதிகள்    A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக