ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேயோடு விளையாடி...

3 posters

Go down

பேயோடு விளையாடி... Empty பேயோடு விளையாடி...

Post by சாமி Mon Nov 18, 2013 3:02 pm

திங்கள்கிழமையானால் திமிலோகப்படுகிறது தாடிச்சேரி கிராமத்தைத் தழுவி இருக்கும் நாகமலை. அன்றுதான் இங்குள்ள பெருமாள் கோயிலில் பேயோட்டும் கச்சேரி களைகட்டுகிறது.

தேனி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தாடிச்சேரி. ஒரு காலத்தில் கம்பும், சோளமும் காய்த்துக் குலுங்கிய இந்தக் கிராமத்து மண்ணில் இப்போது கரண்டு வெள்ளாமை (காற்றாலை மின் உற்பத்தி) கனஜோராய் நடக்கிறது. காலம் மாறிவிட்டது. ஆனால், மக்கள் இன்னும் பழமை மாறாமல் இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைகளும் வாழ்க்கை முறைகளும் பெரிதாக மாறிவிடவில்லை. அதற்கு ஒரு அடையாளம்தான் இந்தப் பேயோட்டும் பெருமாள் கதையும். இந்த உரையாடலைக் கேளுங்கள்:

“மதியச் சாப்பாட்டுக்கு வீடு திரும்பிருவோமாக்கா..?”

“நேரமானா என்னாடி.. அங்கிய யாராச்சும் கறிச்சோறு ஆக்கிப் போடுவாக.. அதுல கொஞ்சம் அள்ளிப்போட்டுக்கலாம்டீ.”

“கரட்டுமேல ரொம்ப தொலை நடக்கணுமோ?”

“ரெண்டு மைலு போகணும்டி இவளே..”

பேச்சும் நடையுமாய் நாகமலையிலிருக்கும் கோயிலை நோக்கி சரளைப் பாதையில் சரசரவென நகர்கிறது பெண்கள் கூட்டம். அவர்கள் செல்வது பேயோட்டும் பெருமாள் கோயிலுக்கு.

“சட்டுப்புட்டுன்னு வைச்சு இறக்கிப் போடுங்கப்பே..” அன்றைய தினத்துக்கு கோயில் வாசலில் கோழிக்கறியும் சோறும் ஆக்கிப்போடும் உபயதாரர்கள், சமையல் ஆட்களை வேகப்படுத்தும் சத்தம் காதில் விழவும், “இந்தா வந்துருச்சுல்ல...” என்றபடி நடையை எட்டிப்போடுகிறது சனம்.

சரியாக மதியம் 12 மணி - பெருமாளுக்கு உச்சிக் காலப் பூஜை தொடங்குகிறது. சாம்பிராணிப் புகையின் மகிமையில் சும்மா இருப்பவர்களும் சாமியாடிவிடுவார்கள் போலிருக்கிறது. பயபக்தியுடன் பூஜையை முடித்துக்கொண்டு கருவறைக்கு வெளியே சந்நிதிக்கு எதிரே வந்து உட்காருகிறார் தங்கவேல் பூசாரி. அதற்கு முன்பாகவே நாலைந்து பெண்கள் சந்நிதிக்கு எதிரே வந்து பவ்யமாய் உட்கார்ந்துவிட்டார்கள். பூசாரியின் கையில் அதிரத் தயாராய் இருக்கிறது உடுக்கை. அவருக்குப் பக்கத்திலேயே கையில் ஒரு மினி டிரம்ஸுடன் வந்து அமர்ந்துகொண்டு தொண்டையைச் செருமுகிறார் லெட்சுமண பெருமாள்.

“நீ யாரா இருந்தாலும், எவரா இருந்தாலும், ஒரு வாழும் பொண்ணு வாழ்க்கையை கெடுக்கலாமா சண்டாளப் பாவிகளா?” தாளக்கட்டு மாறாமல் பாடுகிறார் லெட்சுமண பெருமாள். கை டிரம்ஸில் விளையாடுகிறது. அவருக்குப் பக்கவாத்தியமாகத் தங்கவேல் பூசாரியின் உடுக்கையும் உறுமுகிறது. எதிரே உட்கார்ந்திருக்கும் பெண்களில் ஒருவர் மட்டும் வித்தியாசமாக உடம்பை முறிக்கிறார்.

“வந்துட்டியா பாண்டி..” கூடப் படிக்கும் தோழனை அழைப்பதுபோல் அந்நியோன்யமாய் அழைக்கிறார் பூசாரி. மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பாகக் கொஞ்சம் பின்கதை.

எதிரே முறுக்கிக்கொண்டு இருக்கும் பெண்ணின் பெயர் ராமாத்தா. திருப்பூருக்குப் பிழைக்கப் போனவர். அங்கே இவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் குடும்பத்தோடு வசித்த குடிகாரன்தான் பாண்டி. குடிப்பதற்குக் காசு தரவில்லை என்பதற்காக விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாராம் பாண்டி. அவருடைய ஆவிதான் இப்போது ராமாத்தாவுக்குள் வந்திருக்கிறதாம். கடந்த வாரம் இங்கே வந்தபோது, ராமாத்தாவுக்குள் இருந்த பாண்டியே இத்தனையும் சொல்லிவிட்டாராம்.

“ஆனது ஆகிப்போச்சப்பா... அது வாழ வேண்டிய புள்ள. ஒனக்கு வேணுங்கிறத கேட்டு வாங்கிட்டு, மூணு வாரமோ அஞ்சு வாரமோ வந்து சந்தோஷமா ஆடிட்டுப் போயிரு”

“அப்டினா.. எனக்கு குவாட்டர் பிராந்தியும் பஞ்சு வைச்ச சீரெட்டும் வாங்கிக் குடுப்பா. மூணு வாரம் மட்டும் ஆடிட்டுப் போயிடுறேன்”

திருவாளர் பாண்டிக்கும் தங்கவேலு பூசாரிக்கும் இடையில் கடந்த வாரம் ஏற்பட்ட எழுதப்படாத ஒப்பந்தம் இது. கேட்டதை வாங்கிக்கொள்ளத்தான் இப்போது ராமாத்தாவுக்குள் இருந்து வாய்ஸ் கொடுக்கிறாராம் பாண்டி.

“இந்தாப்பே ஏய்.. நீ கேட்ட பிராந்தி...” பூசாரி எடுத்து நீட்ட, மொடாக் குடிகாரன் கணக்காய் குவாட்டரின் கழுத்தை திருகி, அப்படியே உள்ளே தள்ளுகிறார் ராமாத்தா. மன்னிக்கணும் பாண்டி! “டேய்.. அளவா குடிடா. பச்சப்புள்ள ஒடம்பு தாங்காது...” பூசாரியின் கெஞ்சல் எதுவும் பாண்டி காதில் ஏறியதாகத் தெரியவில்லை. “அவளா குடிக்கிறா? உள்ளார இருக்கிற பாண்டில்ல குடிக்கிறான்?” தள்ளி இருக்கும் பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுக்கிறார்கள். “சும்மா.. நொச்சு.. நொச்சுன்னு பேசாதீங்கம்மா” என்று தாய்குலத்தை அதட்டிவிட்டுப் பாண்டி பக்கம் திரும்புகிறார் பூசாரி.

“ஏலேய் பாண்டி, நீ கேட்டத குடுத்தாச்சப்பா...” பூசாரி சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டார் பாண்டி. “பஞ்சு வைச்ச சீரெட்டு?”

பக்கத்தில் இருந்தவர்கள் மஞ்சள் பைக்குள் இருந்து ஃபில்டர் சிகரெட்டை எடுத்துக் கொடுக்க, “தீப்பட்டி யாரு குடுப்பாவாம்?” கிசும்பாய்க் கேட்டார் பாண்டி. கூட்டத்தில் இருந்து யாரோ தீப்பட்டியை எடுத்து வீச, கச்சிதமாய் அதைக் கேட்ச் பிடித்த ராமாத்தாள், அதே வேகத்தில் சிகரெட்டைப் பற்றவைத்து ஆனந்தமாய் ஊதித் தள்ளினார். அதுவரை பொறுமை காத்த பூசாரி, எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு பிடி பிடிக்கக் கிளம்பினார்.

“சரிப்பா.. நாங்க சொன்னபடி நடந்துக்கிட்டோம். நீயும் அதே மாதிரி நடந்துக்கணும். இன்னும் ஒரு வாரம் ஒனக்கு பாக்கி இருக்கு. அடுத்த வாரமும் வந்து ஆடிட்டு சந்தோஷமா(!) இந்தப் புள்ளைய விட்டுட்டுப் போயிடணும்.”

பூசாரியின் கட்டளைக்கு மூச்சே விடவில்லை பாண்டி. “என்னடா.. பேச்சக் காணோம்... சொன்னபடி நடந்துக்கிறியா... இல்ல, தரையை நூறு தடவ நக்கவிடவா?” பூசாரி மிரட்டியதும் பாண்டி கிளம்பிவிட்டார் (ராமாத்தாள் மயங்கி விழுந்துட்டாங்கன்னா அதுதானே அர்த்தம்!).

சற்று நேரத்தில் முகத்தில் தண்ணீர் அடித்து ராமாத்தாளை எழுப்புகிறார்கள். “பயப்படாதம்மா... அடுத்த வாரத்தோட அந்தப் பய ஓடிப் போயிருவான்” என்று சமாதானப்படுத்தும் பூசாரி, கை நிறைய திருநீறை அள்ளி ராமாத்தாளின் கையில் திணிக்கிறார். அழுக்கான மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களைத் தட்டில் போட்டுவிட்டுச் சாதுவாய்க் கிளம்புகிறார் ராமாத்தாள். ஒரு குவாட்டரை மிக்ஸிங் ஏதும் இல்லாமல் உள்ளே தள்ளியதற்கான சிறு தள்ளாட்டம்கூட இல்லாமல் அவர் நடந்து செல்கிறார்.

தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் இப்படிப் பல வித்தியாசமான முகங்கள் நாகமலைக்குத் திங்கள் தவறாமல் வந்து போகின்றன. இங்கு வந்து போனால் பேய், பிசாசு, பில்லி, சூனியம் அத்தனையும் அறுத்துக்கொண்டு ஓடிவிடும் என்பது இந்த மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை பொய்க்காமல் குணமடைந்தவர்கள், அடுத்த வாரமே இங்கு வந்து கறிச் சோறாக்கிப் போட்டுக் கடனை நேர் செய்கிறார்கள். பேய், பிசாசு இதெல்லாம் பிதற்றல் என்று அறிவியல் மட்டுமல்ல, சாதாரண மக்களில்கூடப் பலரும் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள். எல்லாம் மனப் பிராந்தி என்று சொல்வார்கள். ஆனால் ராமாத்தாள் உருவில் வந்து நிஜப் பிராந்தி குடிக்கும் பாண்டிகளைத்தான் நாகமலைக்கு வரும் மக்களுக்குத் தெரியும். இதுதான் அவர்கள் கண்கண்ட உண்மை. அவர்கள் நம்பிக்கை. - குள.சண்முகசுந்தரம் - thehindu
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பேயோடு விளையாடி... Empty Re: பேயோடு விளையாடி...

Post by பார்த்திபன் Mon Nov 18, 2013 3:25 pm

எழுத்து நடை அருமை.சூப்பருங்க 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பேயோடு விளையாடி... Empty Re: பேயோடு விளையாடி...

Post by ayyasamy ram Mon Nov 18, 2013 4:25 pm

பொதுவாக இறை அருள் பெற்றவர்கள் இருப்பது உண்மை
-
அவர்கள் குறி சொல்லி பரிகாரமும் செய்ய சொல்வார்கள்
அது பலருக்கும் பலிக்கும்...
-
ஆனால் அந்த இறையருள் சிறிது காலமானதும் அவர்களை
விட்டு போய்விடும் எனபதும் மகத்தான உண்மை...!!
-
ஆனால் புகழுக்கு அடிமையான உள்ளம் அதை ஏற்காது
இறையருள் இருப்பதாக வேஷம் போடுவார்கள்...
மக்களையும் ஏமாற்றுவார்கள்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பேயோடு விளையாடி... Empty Re: பேயோடு விளையாடி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum