ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!

3 posters

Go down

டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ! Empty டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!

Post by சிவா Sun Nov 17, 2013 11:05 am

டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ! Rpcgsh6QB6xL9zt78opI+p26 

மதுரை போலீஸாரால் 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்று அழைக்கப்படுபவர் நுண்ணறிவு பிரிவின் ஆய்வாளர் பாலசுப்பிர மணியன். அண்மையில் வைகோவை வாலன்ட்ரியாக வம்புக்கு இழுத்து வாங்கிகட்டிக் கொண்டார் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன்.

 அவர் அப்படி என்ன செய்தார்?

உளவுத் துறை மற்றும் மதுரையில் உள்ள முக்கிய போலீஸ் அதிகாரிகளிடம் பேசியபோது, ''கோழிக் கூவித்தான் பொழுது விடிகிற மாதிரிதான் இந்த பாலசுப்பிரமணியத்தின் நினைப்பும். தெற்கு வாசல் இன்ஸ்பெக்டரான இவர், மதுரை மாநகர் நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு ஆட்டம் ஆரம்பம் ஆனது. தான்தான் மதுரையின் ஆக்டிங் கமிஷனர் என்று சொல்லிக்கொண்டு கமிஷனர் வர வேண்டிய முக்கியமான இடங்களுக்கும் முக்கியச் சம்பவ இடத்துக்கும் ஸ்பாட் விசிட் செய்வார். ஐ.பி.எஸ். அதிகாரிகளான டெபுடி கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர்களுக்கே உத்தரவு போடுவார். அவர்களும் வேறு வழியில்லாமல் அவரிடம் பம்மி நடந்துகொள்வார்கள். கமிஷனருக்கும் அவருக்கும் அவ்வளவு நெருக்கம். கமிஷனர் வீட்டிலேயே எப்போதும்  கிடப்பார் இந்த பாலசுப்பிரமணியன். கமிஷனர் பார்க்க வேண்டிய கோப்புகள், பரிந்துரை கோப்புகள் என எல்லாமே இவரை மீறிப்போகாது. கேட்டால், 'பாலு அளவுக்கு யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. எனவே, தமிழ் தெரியாத கமிஷனர்... பாலுவை வைத்து எல்லாவற்றையும் டீல் பண்ணுகிறார்’ என்கிறார்கள்.

சமீபத்தில் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக மதுரையில் ம.தி.மு.க. சார்பில் வைகோ ரயில் மறியல் போராட்டம் செய்தார். உயரதிகாரியான புருஷோத்தமன், 'போராட்டத்தை எப்போது முடிப்பீர்கள்?’ என வைகோவிடம் கேட்டார். 'இப்போதைக்கு போலீஸ் வர வேண்டாம். சிறிது நேரத்தில் நாங்களே கைதாகிவிடுகிறோம். ம.தி.மு.க-வின் 20 ஆண்டு கால அரசியலில் மக்களை இடையூறு செய்தோ, கடைகளை அடைத்தோ, ரயிலை மறித்தோ போராட்டம் பண்ணியது இல்லை. காவலர்கள் என் நண்பர்களே. நான் அழைக்கும்போது மட்டும் வாருங்கள்’ என வைகோ தெரிவித்தார். சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், டெபுடி கமிஷனர் தமிழ் சந்திரனோடு போய், 'டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்’ என்று வைகோவிடம் சொன்னார். கடுப்பான வைகோ, 'உளவுத் துறைக்கு இங்கு என்ன வேலை? உங்களை நான் அழைத்தேனா? ஏற்கெனவே நான் சொல்லிவிட்டேனே... அப்புறம் ஏன் அவசரப்படுத்துகிறீர்கள். நீங்கள் சிங்களவனின் கைக்கூலியா? உங்க உடம்பில் தமிழ் ரத்தம் ஓடவில்லையா? தமிழன்தானே? கொத்துகொத்தாய் இறந்தப் பச்சைக் குழந்தைகள் உன் உடன்பிறப்பாக இருந்திருந்தால் சும்மா இருப்பாயா?

சீனியர் ஆபீஸர்களே சும்மா இருக்கும்போது ஜூனியர் ஆபீஸரான உங்களுக்கு இங்கு என்ன வேலை? இந்த உளவு வேலைகளை எல்லாம் ஜெயலலிதாவிடம் வைத்துக்கொள். இந்தப் பூச்சாண்டிகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ என்று கோபப்பட்டார்.  உடனே பாலசுப்பிரமணியன், 'நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்.. நீங்களும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறீர்கள்’ என்று புலம்பியபடியே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்'' என்று சொன்னார்கள்.

பொதுவாக உளவுத் துறை போலீஸார், என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்பார்களே தவிர, எதிலும் மூக்கை நுழைக்க மாட்டார்கள். ஆனால், பாலசுப்பிரமணியனின் செயல்பாடு எல்லா விஷயத்திலும் அத்துமீறுவதாக   பொருமல் அதிகம் கேட்க ஆரம்பித்துள்ளது.

இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். ''அதுபற்றி சொல்வதற்கு இல்லை. என்னைப் பற்றி தவறாகச் சித்திரிக்கிறார்கள். நான் எல்லோரிடமும் நண்பராகத்தான் பழகுகிறேன்'' என்றார்.

அப்படி இருந்தால் இப்படி ஏன் சொல்லப் போறாங்க?

- சண்.சரவணக்குமார் @ விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ! Empty Re: டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!

Post by M.M.SENTHIL Sun Nov 17, 2013 2:30 pm

பேச்சு சூறாவளியிடம் போய் ஏன்யா வாய கொடுக்கிற?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ! Empty Re: டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!

Post by ராஜா Sun Nov 17, 2013 4:22 pm

M.M.SENTHIL wrote:பேச்சு சூறாவளியிடம் போய் ஏன்யா வாய கொடுக்கிற?
டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ! 3838410834 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ! Empty Re: டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
» போலி உண்ணாவிரதம் ; எடுபுடி வேலை பார்க்கும் அரசு : வெளுத்து வாங்கிய கமல்ஹசன்
» ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கைது
» காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!
» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum