ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா!

3 posters

Go down

வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Empty வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா!

Post by சிவா Sun Nov 17, 2013 11:02 am

வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! 9tufzOd9Q2yqKe5Fhfvf+p38 

'வன்முறை பரவாமல் தடுக்க பரமக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு சரிதான். இந்த நடவடிக்கை முற்றிலும் நியாயமானது. காவல் துறை நடந்துகொண்ட மெச்சத்தக்க முறையை கமிஷன் பாராட்டுகிறது’ - பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையில் இப்படி குறிப்பிடப்பட்டிருப்பது விவாதப்பொருள் ஆகிவிட்டது.

விசாரணை கமிஷனின் பரிந்துரைகளுக்கு, அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை அறிக்கையின் இறுதியில் குறிப்பிடுவது வழக்கம். அதன்படி சம்பத் கமிஷன் பரிந்துரைகள் மீது எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அரசு சொன்ன சில விஷயங்களும் சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது.

'துப்பாக்கிச்சூட்டுக்கான சந்தர்ப்பச் சூழ்நிலைகள் என்ன?’, 'பலப்பிரயோகம் நடந்ததா?’, 'துப்பாக்கிச்சூட்டுக்கான நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா?’, 'போலீஸ் அத்துமீறல்கள் இருந்ததா?’ - என நான்கு ஆய்வு வரம்புகளை விசாரித்தது கமிஷன். 'எதிர் சாதியினர் அதிகளவில் வசிக்கும் பகுதிகளுக்கு கலவரம் பரவாமல் தடுப்பதற்கு துப்பாக்கிச்சூடு முற்றிலும் அவசியம். சட்டத்தின்படி இது தற்காப்பான செயல்தான். ஆதிதிராவிடர்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்பட்டனர் என்பதைக் காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு உள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. போலீஸார் அளவற்றப் பொறுமையைக் கடைப்பிடித்தனர். அங்கிருந்த காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தாங்கள் சார்ந்த இனத்துக்குக் கொஞ்சமும் முக்கியத்துவம் கொடுக்காததை கமிஷன் பாராட்டுகிறது’ என்று தனது அறிக்கையில் சொல்லியிருந்தார் நீதிபதி சம்பத். இந்த முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டது அரசு. அதாவது, 'காவல் துறையினர் மீதான பழித்துரைகள் நீங்கலாக, விசாரணை ஆணையத்தின் ஆய்வு வரம்பு 1 மற்றும் 2 ஆகியவற்றில் சொல்லப்பட்ட முடிவுகளை அரசு கவனமாக கருத்தில் கொண்டு அவற்றை ஒப்புக்கொள்கிறது’ என்று சொல்லியிருக்கிறது அரசு.

'காவல் துறையினர் மீதான பழித்துரைகள் நீங்கலாக என்று சொல்லியிருப்பதன் மூலம், காக்கிகளை காப்பாற்ற நினைக்கிறது அரசு’ என்கிற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ''காவல் துறையை பாராட்டும் விஷயங்களை மட்டும் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, போலீஸுக்கு குட்டுவைத்த பரிந்துரைகளைக் கண்டுகொள்ளவில்லை'' என்கின்றன தலித் அமைப்புகள். 'போலீஸின் அத்துமீறல் இருந்ததா? இருந்தது என்றால், அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குதல்’ என்கிற மூன்றாவது ஆய்வு வரம்பின் முடிவை அரசு பெரிதாகக் கண்டு கொள்ளவில்லையாம்.

அப்படி அந்த ஆய்வு வரம்பின் முடிவில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது? 'கலவரத்தின்போது சில காவல் துறையினர், போலீஸ் ஆணைகளுக்கு (Police standing orders) மாறாக கலவரத்துக்குப் பிறகு சூழ்ந்துகொண்ட கலவரக்காரர்களை அடித்தது மனதுக்கு உகந்ததாக இல்லை’ என சொல்லி சம்பத் கமிஷன் சில பரிந்துரைகளைக் கொடுத்திருக்கிறது.

வெள்ளைச்சாமி உட்பட சிலர் மீது நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பான போலீஸார் மீது குற்றவியல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளைசாமியுடன் துணைக்கு ஆள் அனுப்பாமல் காலதாமதத்துடன் அவரை மதுரைக்கு அனுப்பியது சம்பந்தமாக மேல் விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்ப்புக்கனியின் இறப்புக்கான காரணம் மற்றும் பொறுப்புகளை உறுதிசெய்ய, மேற்கொண்டு புலன்விசாரணை நடத்த வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் பற்றி விசாரணை அறிக்கையில் கருத்து சொல்லியிருக்கும் அரசு, 'போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பந் தமான நடவடிக்கைகளை, அந்தந்த நிர்வாகத் துறைகளுக்கு ஆராய்ந்து மேல்நடவடிக்கை எடுக்க அனுப்ப வேண்டும் என அரசு தீர்மானித்துள்ளது’ என்று மட்டும் பொதுவாக குறிப்பிட்டுள்ளது. ''தவறு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷன் பரிந்துரைத்த பிறகும், அவர்கள் மீது ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை? இது பாரபட்சமானது'' என்கிறார்கள் தலித்துகள்.

துப்பாக்கிச்சூடு நடந்த அடுத்த நாள், 'துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என்று சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. அதற்கு அடுத்த நாள் 2011 செப்டம்பர் 13-ம் தேதியும் பரமக்குடி விவகாரம் சட்டசபையில் சூட்டைக் கிளப்பியது. 'தவறு செய்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எதிர்க் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது ஜெயலலிதா சொன்ன வார்த்தைகளை, இப்போது அவரே மீறியிருக்கிறார்.

அப்படி என்னதான் சொன்னார்? ''துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோருகின்றனர். விசாரணை கமிஷன் அறிவிக்கப்பட்ட பிறகு, தன்னிச்சையாக அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. கமிஷன் தனது விசாரணையை முடித்து, அரசிடம் பரிந்துரை அறிக்கையைத் தாக்கல் செய்யட்டும். அதில் கூறப்படும் பரிந்துரைகளை அரசு அப்படியே ஏற்கும். அதில், தவறு செய்தவர்களாகக் குறிப்பிடப்படுவோர் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று குறிப்பிட்டார்.

அதெல்லாம் இருக்கட்டும். சம்பத் கமிஷனுக்காக அரசு செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா? 1 கோடியே 40 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்!

- எம்.பரக்கத் அலி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Empty Re: வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா!

Post by Muthumohamed Sun Nov 17, 2013 7:35 pm

எப்ப தான் அம்மா வாக்குறுதியை நிறைவேற்றி இருக்காங்க அது போல் தான் இதுவும்

தகவலுக்கு நன்றி அண்ணா



வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Mவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Uவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Tவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Hவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Uவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Mவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Oவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Hவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Aவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Mவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Eவாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Empty Re: வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா!

Post by ayyasamy ram Sun Nov 17, 2013 7:52 pm

நல்லது நடக்கும் என நம்புவோம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா! Empty Re: வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum