புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
21 Posts - 58%
heezulia
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
1 Post - 3%
viyasan
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
213 Posts - 41%
heezulia
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
208 Posts - 40%
mohamed nizamudeen
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
21 Posts - 4%
prajai
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
"தலைநாள்' விளக்கு! Poll_c10"தலைநாள்' விளக்கு! Poll_m10"தலைநாள்' விளக்கு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தலைநாள்' விளக்கு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Nov 19, 2013 11:09 am

"தலைநாள்' விளக்கு! சோ. செந்தில்குமார் - நன்றி தினமணி

உலகெலாம் திருவருள் செய்யும் இறைவன் ஒருவனேயாவான். உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் பல தலங்களில் அப்பெருமான் எழுந்தருளியுள்ளார், அவரது உண்மைச் சொரூபம் சோதி வடிவமாகும்; ஒளி வடிவமாகும். ""சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே'' என மணிவாசகர் போற்றியுள்ளார். ""எரியலால் உருவமில்லை'' என்று பெருமானைப் பற்றித் தேவாரம் தெரிவிக்கிறது.

சிவபெருமான் தனது சோதி ரூபத்தை உலக உயிர்களுக்குக் காட்டியருளி, இறைவிக்குப் பாதி உடம்பை அளித்து, அர்த்தநாரிக் கோலம் (அம்மையப்பர்) ஏற்று மகிழ்ந்தது கார்த்திகைத் தீபத் திருநாள் அன்றுதான்!

இப்பெருநாளை கார்நாற்பது எனும் நூல், ""நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகி'' என்கிறது. "தலைநாள்' எனும் சொல்லுக்கு "முதல்நாள்' என்பது பொருள். சங்க நூல்களுள் இச்சொல் கையாளப்பட்டுள்ள விதத்தைக் காண்போம்.

சிறுபாணாற்றுப்படை, ""தலைநாட் செருந்தி தமனிய மருட்டவும்'' (வரி-147 ) என்கிறது. பொ.வே.சோமசுந்தரனார், "தலைநாள்' என்பதற்கு "இளவேனிற்காலம் தொடங்குகின்ற நாள்' என்று உரை எழுதியுள்ளார். அதாவது, "இளவேனிற்காலம் தொடங்குகின்ற நாளிலே செருந்தி தன்னைக் கண்டாரைப் பொன்னென்று மருளப் பண்ணுதலானும்' என்பது அவரது உரை விளக்கம். செருந்தி இளவேனிற் காலத்தில் மலரும் என்பதையும் வண்டுகள் புதிய பூந்தாதுக்களை இப்பருவத்தில் உண்டுகளிக்கும் என்பதையும் பாலைக்கலி(பா.25) தெரிவிக்கிறது.

மலைபடுகடாம், ""தலைநாள் பூத்த பொன்னிணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப்பூசல்'' (வரி-305, 306) என்கிறது. இதற்கு பொ.வே.சோமசுந்தரனார், "முதல் நாளிலே பூத்த பொன்போன்ற கொத்தினையுடைய வேங்கைப்பூவைச் சூடுதற்பொருட்டு குறமகளிர் புலி புலி என்று கூவும் ஆரவாரம்' என்கிறார். மலைபடுகடாம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள "தலைநாள்' என்பது இளவேனிற் காலத்தின் முதல் நாளையே குறிக்கும்.

அகநானூறு, ""மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்க''(126, அடி 3, 4) என்கிறது. இதற்கு, "மலையின்மேல் தொடுத்த மிக்குச் செல்லுகின்ற வெள்ளத்தினால் முதல்நாளில் பூத்த பெருமை பொருந்திய மலர் துறையின்கண்ணே அசைந்தபடி இருக்கிறது' என்பது பொருள்.

மேலும், ""பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன'' (அக.187, அடி 8) என்கிறது. அதாவது, படைக்கலப் பயிற்சி பெற்ற இளையோரை அரங்கேற்றிக் கொற்றவைக்கு எடுக்கும் விழாவின் முதல்நாள் விழாவைப் போன்று என்பது பொருள். இவ்விழாவே "பூந்தொடை விழா' எனப்பட்டது.

மலைபடுகடாம், ""தலைநாள் அன்ன புகலொடு வழிசிறந்து பலநாள் நிற்பினும் பெறுகுவிர்'' (வரி.565-566) என்றும், ""தலைநாள் விடுக்கும் பரிசில்'' (வரி.581) என்றும் தெரிவிக்கிறது. அதாவது, பரிசில்பெற நன்னன் எனும் மன்னனின் அரண்மனையை அடைந்து, அங்கு பலநாள் தங்கியிருப்பினும் முதல்நாளில் தந்த விருப்பம் குறையாமல் நன்னன் உபசரிப்பான் (வரி.565, 566) என்றும், அந்த அரண்மனையில் பலநாள் தங்கிச்செல்ல விருப்பமில்லையெனில், முதல் நாளே மிகுந்த பொருள்களைக் கொடையாக நன்னன் வழங்கிப் போகவிடுவன்(வரி.581) என்றும் தெரிவிக்கிறது.

இவ்வாறு "தலைநாள்' எனும் சொல்லுக்கு "முதல்நாள்' என்பதே பொருளாயினும், பயன்படுத்தப்படும் இடத்திற்கேற்ப அச்சொல்லுக்கு, இளவேனிற் காலத்தின் முதல் நாள் என்றும், விழாவின் முதல்நாள் என்றும், மலர்கள் மலரும் முதல்நாள் என்றும், உபசரிப்பு செய்யும் முதல்நாள் என்றும், பரிசில் வழங்கும் முதல்நாள் என்றும் பல்வேறு பொருள்கள் சங்ககால நூல்களில் காணப்படுகின்றன.

""நலமிகு கார்த்திகை நாட்டவர்ஈட்ட

தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்

புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி

தூதொடு வந்த மழை'' (26)


என்பது கார்நாற்பது பாடலாகும். நன்மை மிக்க கார்த்திகை தீப விழாவில் நாட்டிலுள்ளோர் ஏற்றிவைத்த முதல்நாள் விளக்கைப்போல, "தோன்றி' எனும் ஒருவகைப் பூக்கள் அனைத்து இடங்களிலும் பூத்துக் குலுங்கின. ""மழையும் தூதென வந்தது'' என்பது இப்பாடலின் கருத்தாகும். இங்கு "தலைநாள்' என்பதற்கு "தீபவிழாவின் முதல் நாளன்று ஏற்றிவைத்த விளக்கு' என்பது பொருளாகும்.

கார்த்திகைத் தீப விழாவைக் கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நட்சத்திரத்தை முதலாகக்கொண்டு மூன்று நாள்கள் கொண்டாடுவர். முதல் நாள் அன்று விளக்குகளை வரிசையாக அழகு பொருந்த கோயில்களிலும். வீதிகளிலும், வீடுகளிலும் ஏற்றி வைப்பர்.

இத்திருநாளை, ""அறுமீன் கெழீஇய அறஞ்செய் திங்கட் செல்சுடர் நெடுங்கொடி'' (202) என்று நற்றிணை கூறுகிறது. பண்டைக் காலத்தில் தர்மங்கள் செய்வதற்குரிய நன்னாளாகவும் இந்நாள் விளங்கிற்று.

""கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்குப் போன்றனவே'' என்று களவழி நாற்பதும், ""குன்றில் கார்த்திகை விளங்கிட்டன்ன'' என்று சிந்தாமணியும் கூறுகின்றன.

பண்டைக்காலத் தமிழரின் பெருவிழாவாக இத்திருநாள் மட்டுமே விளங்கிற்று என்பதை, ""பெருவிழா விளக்கம்போல'' (185) என்று அகநானூறு மூலம் அறியலாம். ""தொல் கார்த்திகைத் திருநாள் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்'' என்பது ஞானசம்பந்தர் (திருமயிலை)

தேவாரம்.

சங்க காலத்தில் சமயப் பெருவிழாவாக விளங்கிய இத்திருநாளுக்கு மறுநாள் விஷ்ணு கார்த்திகை என்றும், அதற்கு மறுநாள் பிரம்ம(ன்) கார்த்திகை என்றும் வழங்குவர். இவ்விழா மூன்று நாள்கள் கொண்டாடப்பட்டாலும் தீபவிழாவின் முதல் நாளில் (தலைநாள்) ஏற்றப்படும் திருவிளக்கு மட்டுமே சிறப்பித்துக் கூறப்படுகிறது.
********************************************************************************************************

கருத்துகள்-பின்னூட்டம்
கார்த்திகை மாதத்தில், விண்மீனின் நிலையறிந்து, தமிழர்கள் தீபமேற்றி வழிபடுவதைப் பல சங்க நூல்கள் கூறுகின்றன. திருவண்ணாமலையில் முருகப்பெருமானுக்கு அதிகாலை நான்கு மணிக்குப் பரணி தீபம் ஏற்றுவதைக் ”கார்த்திகை விளக்கிட்டனன்” என்று, சீவகசிந்தாமணி குறிப்பிடுகிறது. தொல்காப்பியமோ, ”வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்” என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது. "மனை விளக்குறுத்து.." என வீடுகளில் விளக்கேற்றி வைப்பதையும் ஒரு சங்கப்பாடல் கூறுகிறது. "முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்.." (நற்றிணை 58) "கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்" (பரிபாடல் திரட்டு 10) 'ஆடு இயல் அழல் குட்டத்து' (புறநானூறு 229) "அகலிரு விசும்பின் ஆஅல் போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை" (மலைபடு கடாம் – 10) 'விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப, எரிசடை எழில் வேழம் தலை எனக் கீழிருந்து தெருவிடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கை" (பரிபாடல் 11) போன்ற பல்வேறு சான்றுகள் கார்த்திகை விளக்கு விழாவையும், அதன் தொன்மையையும் சிறப்பாகக் குறிக்கின்றன.

"மதி நிறைந்து/ அறுமீன் சேரும்/ அகல் இருள் நடுநாள்/ மறுகு விளக்குறுத்து/ மாலை தூக்கி.." என்பன அகநானூற்றுப் பாடல் 141இன் வரிகளாகும். "மதி நிறைந்து" - முழுநிலவு நாளில் / "அறுமீன் சேரும்" - கார்த்திகை மீன் சேரும் / "அகல் இருள் நடுநாள்" - இருளகற்றுமொரு நாளாக / "மறுகு விளக்குறுத்து" - தெருவெங்கும் விளக்கேற்றி / "மாலை தூக்கி.." - மாலைப்பொழுதைக் கொண்டாடி..' எனத் தொடர்கிறது, அப்பாடல். "குன்றில் கார்த்திகை விளக்கிட்டு...(256)" என்றும், "குன்றத்து உச்சிச் சுடர்...(262)" என்றும் சீவ சிந்தாமணி, பண்டைக்காலத்தில் மலைமேல் விளக்கேற்றுவதைக் கூறுகிறது. "தொல் கார்த்திகை நாள்.../ ...கொண்டாடும்.../ ...விளக்கீடு.." என்று தேவாரமும் (2-47/3) அவ்விழாவினைச் சிறப்பிக்கிறது. "கார்த்திகைச் சாற்றில் ('சாற்றுதல்' என்பது விழாக்கொண்டாடுதலைக் குறிக்கிறது!) கழிவிளக்குப் போன்றனவே'' என்று, 'களவழி நாற்பது' பாடல் எண் 17, கார்த்திகைத் திங்கள் விளக்கணி விழாவைக் கூறுகிறது. மொத்தத்தில், கார்த்திகை விளக்கு விழாவானது, தமிழர் வரலாற்றில் மிகத் தொன்மையானதாகும். - பதிவுசெய்தவர் சிவ.தணிகாசலம், நாமக்கல்கவிஞர் பேரவை, நாமக்கல்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக