by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
No user |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
உலகச் செய்திகள்!
Page 77 of 81 • 1 ... 40 ... 76, 77, 78, 79, 80, 81
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வீடுகளுக்குள்ளேயே இருங்கள்: தாய்லாந்து அரசு எச்சரிக்கை
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் காற்று மாசு அளவை விட 14 மடங்கு கூடுதலாக காற்றுமாசடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
திடிரென மிகக் கடுமையாக காற்று மாசடைந்திருப்பதால், தாய்லாந்தில் பாங்காக் மற்றும் தாய் மாகாண மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
எந்த அவசியமும் இல்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், வெளியே அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீடு பாங்காக்கில் பிஎம்2.5 என்ற அளவில் இருக்கிறது. இதனால், அங்கு வசிக்கும் மக்களுக்கு மூக்குத் திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
தற்போதைய நிலையில், உலகிலேயே காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் பாங்காக் ஆறாவது இடத்தில் உள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தொடங்குகிறதா சீனா – தைவான் போர்? கப்பல், போர் விமானங்களை ஏவிய சீனா!
சீனா – தைவான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் தைவான் எல்லையில் சீனா போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1949 முதல் சீனாவுக்கு அருகே உள்ள தனித்தீவு நாடான தைவான் தனிநாடாக இயங்கி வருகிறது. ஆனால் சீனா தைவானை தனது நாட்டின் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியம் என வாதிட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானை தனி நாடாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்துள்ள நிலையில் சீனா – தைவான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் தற்போது தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், சீனாவின் 23 போர் விமானங்கள், 4 போர்க்கப்பல்கள் தைவான் எல்லைகளில் இன்று சுற்று போட்டு திரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் ஜலசந்தியின் இடைநிலைக்கோடு பகுதியையும் கடந்து அவை வந்ததாக கூறியுள்ள தைவான் நிலமையை கண்காணிக்க வான் மற்றும் கடல் ரோந்து பணியை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்து வரும் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உலக நாடுகளை கவலைகொள்ள செய்துள்ள நிலையில் தற்போது சீனா – தைவான் இடையே நிலவும் போர் சூழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தென் ஆப்பிரிக்காவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு... குளிக்காமலே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்
தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மின்சாரம் தடைபடுவதால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி மற்றும் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியவசிய தேவைகளுக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. பல குடும்பங்களில் குழந்தைகள் குளிக்காமலேயே பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
நீர்த்தேக்கங்கள் வறண்டுள்ள நிலையில், பம்பிங் ஸ்டேஷன்களுக்கும் மின்சாரம் கிடைக்காததால், ஜோகன்னஸ்பர்க், பிரிட்டோரியாவின் சில பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் குழாய்கள் வறண்டு காணப்படுகின்றன. மக்களின் குடிநீர் தேவைக்காக தற்காலிக தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படுகின்றன.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சோஷாங்குவே நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் சாலையில் கற்கள் மற்றும் கழிவுகளை கொட்டி கண்டன முழக்கமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தாமஸ் மபாசா கூறுகையில், 'தண்ணீர் கிடைக்காததால் எனது பிள்ளைகள் குளிக்காமல் பள்ளிக்கு செல்லவேண்டி உள்ளது. சில சமயங்களில் நடு இரவில் தண்ணீர் வந்தால், குழந்தைகளை எழுப்பி குளிக்க வைக்கலாம் என்று காத்திருப்போம்' என்றார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பாகிஸ்தானில் மீண்டும் குண்டு வெடிப்பு: பலர் படுகாயம் என தகவல்
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் போலீஸ் தலைமையகம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும் வெளியாகிவில்லை. தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். காவலர் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியில் ஒரு பகுதியில் மசூதியில் குண்டு வெடிப்பு நடந்தது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இரு நாடுகளிலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை மொத்த உயிரிழப்பு 40 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து நேற்று நியூசிலாந்தின் வெலிங்டன்னில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். ஏற்கனவே நியூசிலாந்தில் கேப்ரியல் புயலால் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேதத்தை சந்தித்து வரும் நிலையில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை கடும் கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்துள்ளனர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
`என் மகளின் பெயரை வேறு யாரும் வைத்திருக்கக்கூடாது' - வடகொரிய அதிபரின் சர்வாதிகாரம்
அப்பட்டமான சர்வாதிகாரத்தை கிம் ஜாங் உன் நிலை நிறுத்தியிருக்கிறார். உலக அளவில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
வட கொரிய அதிபரான் கிம் ஜாங் உன், தன் மகளது பெயரான `ஜூ ஏ' என்கிற பெயரை அந்நாட்டில் வேறு யாருக்கும் சூட்டக்கூடாது என்றும் அப்பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்துக்குள் அப்பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
வடகொரியா பற்றி தெரிந்தவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்காது. சர்வாதிகாரத்தின் முகம் என்ன என்பதற்கான வாழும் உதாரணமாக இருப்பவர்தான் கிம் ஜாங் உன். சீனாவின் நட்பு நாடான வட கொரியாவில் கம்யூனிஸ ஆட்சி என்று சொல்லிக்கொண்டாலும் மன்னராட்சியைப் போலவே அதிபரின் வாரிசுகளே அந்நாட்டினை ஆண்டு வருகிறார்கள்.
ஜனநாயகம் என்கிற பேச்சுக்கே இடம் இல்லாமல் அதிபர் என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதற்கு எதிராக மூச்சுகூட விடாமல்தான் வட கொரிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வட கொரியாவில் திரைப்படம் கிடையாது, தொலைக்காட்சியிலுமே கூட முந்தைய அதிபர்களின் வரலாற்றுப்படத்தைத் தவிர வேறெதுவும் ஒளிபரப்பாகாது. அதிபர் உத்தரவை மீறுகிறவர்களுக்கு மிகக்கொடூரமான தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டை பற்றிய தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி தரக்கூடியதாய் இருக்கின்றன.
தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், அணுகுண்டு சோதனை நடத்தி உலகையே திகைக்க வைத்தவர். இவரின் தந்தையின் நினைவு தினத்தை ஒட்டி ஒரு வார காலம் அந்நாட்டில் யாரும் சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது என்கிற உத்தரவைப் பிறப்பித்தார். அதைக் கேட்ட பலரும் நல்ல வேளையாக வட கொரியாவில் பிறக்கவில்லையே என்று ஆறுதலடைந்தனர். அதிபர் மீது கொந்தளிப்பதா இல்லை அந்நாட்டு மக்களை நினைத்து வருந்துவதா எனக் குழம்பிக் கொண்டிருக்கும் வேளையிலேயே அடுத்தடுத்து சர்வாதிகார நடவடிக்கையை கிம் ஜாங் உன் மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் தன் மகளான 'ஜு ஏ'வை பொதுவெளிக்குக் கொண்டு வந்தார். 10 வயதாகும் 'ஜு ஏ' தான் வட கொரியாவை ஆளப்போகும் வாரிசு என்று பலர் கணித்துக் கொண்டிருந்த வேளையில் கிம் ஜாங் உன் வெளியிட்ட அறிவிப்பு தூக்கி வாரிப்போடச் செய்திருக்கிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வடகொரியா ஏவிய ஏவுகணை தவறி ஜப்பானில் விழுந்ததால் பரபரப்பு: போர் மூளுமா?
வடகொரியாவின் ஏவுகணை தவறி ஜப்பானின் பொருளாதார மண்டலத்தில் விழுந்து உள்ளதாக ஜப்பான் பிரதமர் உறுதி செய்துள்ளார்
கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை வைத்து எதிரி நாடுகளை அச்சுறுத்து வருகிறது. குறிப்பாக தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு நீண்ட காலமாக அச்சுறுத்தல் விடப்பட்டு வருவதாகவும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வடகொரியா ஏவிய ஏவுகணை ஒன்று ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்து உள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு ஒசிமா தீவு அருகே விழுந்ததாக அவர் கூறியுள்ளார்.
தென்கொரிய ராணுவமும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. இந்த ஏவுகணை ஜப்பானை வம்புகளுக்கும் முயற்சி என்றும் ஜப்பான் திருப்பி தாக்கினால் வடகொரியா தாங்காது என்றும் ஜப்பான் ராணுவ அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணையால் இரு நாட்டுக்கும் இடையே போர் மூளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
வட கொரிய அதிபரான் கிம் ஜாங் உன், தன் மகளது பெயரான `ஜூ ஏ' என்கிற பெயரை அந்நாட்டில் வேறு யாருக்கும் சூட்டக்கூடாது என்றும் அப்பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்துக்குள் அப்பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
கிம் ஜாங் கின் முடி அலங்காரம் பார்ப்பதற்கு வினோதமாக இருக்கும்.யாரும் அதே மாதிரி முடி வைத்துக்கொள்ளக்கூடாது
அப்பிடி வைத்துக் கொண்டால் தண்டனை அனுபவிக்க வேண்டுமென ஒரு சட்டம் போட்டுள்ளாராமே !
இது உண்மைதானா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:
- Code:
வட கொரிய அதிபரான் கிம் ஜாங் உன், தன் மகளது பெயரான `ஜூ ஏ' என்கிற பெயரை அந்நாட்டில் வேறு யாருக்கும் சூட்டக்கூடாது என்றும் அப்பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்துக்குள் அப்பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
கிம் ஜாங் கின் முடி அலங்காரம் பார்ப்பதற்கு வினோதமாக இருக்கும்.யாரும் அதே மாதிரி முடி வைத்துக்கொள்ளக்கூடாது
அப்பிடி வைத்துக் கொண்டால் தண்டனை அனுபவிக்க வேண்டுமென ஒரு சட்டம் போட்டுள்ளாராமே !
இது உண்மைதானா?
இது வேறயா?
கொடுங்கோல் ஆட்சி என்பதன் அர்த்தம் இதுதானோ?
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நமது வேறு முன்னேற்றங்கள் பண்பாட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை!மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை!
#சர்வாதிகாரம் செய்யவே பெரியவர்கள் முந்துகிறார்கள்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 77 of 81 • 1 ... 40 ... 76, 77, 78, 79, 80, 81
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்