புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:47

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
5 Posts - 71%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
1 Post - 14%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
341 Posts - 79%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
47 Posts - 11%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 74 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 74 of 81 Previous  1 ... 38 ... 73, 74, 75 ... 77 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 12 Nov 2013 - 16:35

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 74 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 11 Aug 2021 - 19:47

தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் தலைவர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து போரிட வேண்டும்' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கிட்டத்தட்ட 65 சதவிகித நிலபரப்பை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். நேற்று மாலை, ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாக்லான் மாகாணத்தின் தலைநகரான பூல்-இ-ஹுமியை தலிபான்கள் கைப்பற்றினர். இப்படி கடந்த ஒரே வாரத்தில், ஏழு தலைநகர்களை கைப்பற்றிய தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வேகமாக முன்னேறி வருகின்றனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், 'ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்ப பெறும் முடிவு குறித்து வருந்தவில்லை. கடந்த 20 ஆண்டுளில் 1 ட்ரில்லியன் டாலர்களை செலவழித்துள்ளோம். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்துள்ளோம். விமானம், உணவு, உபகரணங்கள், ஆப்கன் படைக்கு ஊதியம் ஆகியவற்றை அமெரிக்க தொடர்ந்து வழங்கும். ஆப்கன் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். தலிபான்களை விட ஆப்கன் படைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே, போரிடவே அவர்கள் விரும்புவார்கள். அவர்களுக்காகவும் அவர்களின் நாட்டுக்காகவும் தொடர்ந்து போரிட வேண்டும்' என்றார்.



உலகச் செய்திகள்!  - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 11 Aug 2021 - 19:48

பாகிஸ்தானில் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்ட கோவில் சீரமைக்கப்பட்டு, ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார்கான் மாவட்டத்தின் போங்க் நகரில் பழமை வாய்ந்த ஹிந்து கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர். கோவிலுக்கு அருகேஉள்ள மதராசாவை, ஹிந்து சிறுவன் இழிவுபடுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு ஆயுதங்களுடன் ஏராளமானோர் கோவில் முன் திரண்டனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தாக்கிய அவர்கள், கோவிலின் பல இடங்களை அடித்து உடைத்ததுடன், சில இடங்களை தீயிட்டு எரித்தனர். இத்தாக்குதலில் கடவுள் சிலைகள், கோவில் கதவுகள், சுவர்கள் உள்ளிட்டவை பலத்த சேதம் அடைந்தன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 90 பேரை கைது செய்தனர். அரசு தரப்பில் கோவில் சீரமைப்பு பணிகள் உடனடியாக துவங்கப்பட்டன. பணிகள் முழுமை அடைந்ததால் கோவில், ஹிந்துக்கள் வசம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.



உலகச் செய்திகள்!  - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 11 Aug 2021 - 19:51

கிரீசில் காட்டுத் தீ: கட்டுப்படுத்த தவறியதற்காக மன்னிப்பு கேட்ட பிரதமர்

ஏதென்ஸ்: கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் தீவுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக காட்டுத் தீ பரவி வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் காட்டுத் தீ கிரீஸ் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

காட்டுத் தீ காரணமாகப் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுப் பகுதியில் பரவிய தீ, மக்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து உள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் கூறுகையில், 'நாட்டு மக்களின் வலியை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்றேன். தங்களுடைய இடமும், வீடும் நெருப்புக்கு இரையாவதை யார் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் எங்களால் முயன்றதைச் செய்தோம். ஆனால் அது போதவில்லை. தோல்விகள் கண்டறிந்து விரைவில் சரிசெய்யப்படும். காட்டுத் தீயால் ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்ய 500 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டு உள்ளது' என்றார்.



உலகச் செய்திகள்!  - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 11 Aug 2021 - 21:16

ஆப்கன் ராணுவத் தளபதி மாற்றம்: தலிபான்கள் கை ஓங்கும் நிலையில் அதிபர் அதிரடி



ஆப்கானிஸ்தானின் ராணுவத் தளபதியை மாற்றி அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி உத்தரவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறுகிய காலத்தில் 9 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். குண்டூஸ், தலூக்கான், ஷேபேர்கான், ஜரான்ஜ், சமங்கன், ஃபாரா உள்ளிட்ட 9 மாகாணங்களை தலிபான்கள் வசம் சென்றுவிட்டது.

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் தலிபான்களிடம் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சரணடைந்தனர்.

இந்நிலையில், நாட்டின் ராணுவத் தளபதியை அதிபர் அதிரடியாக மாற்றியுள்ளார். ஆப்கன் சிறப்பு தாக்குதல்கள் படையின் தளபதியாக இருந்த ஹிபதுல்லா அலிசாய் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனரல் வாலி அஹமத்சாய் விடைபெறுகிறார்.

இதனை டோலோ நியூச் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 11 Aug 2021 - 21:19

மேற்கு ஆப்பிரிக்காவில் புதிய ஆட்கொல்லி வைரஸ்! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!



உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரஸ் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொடிய வைரஸ் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்பர்க் என்ற இந்த வைரஸ் வௌவால்கள் மூலம் பரவுவதாகவும், இது மனிதர்களிடையே வேகமாக பரவுவதாகவும், இந்த நோய் 88 சதவீதம் இறப்பு விகிதத்தை கொண்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 14 Aug 2021 - 3:48

தலிபான்கள் வசம் 18 மாகாணங்கள் : அதிபர் அஷ்ரப் கானி ராஜினாமா ?


காபூல்: ஆப்கனில் தொடர் சண்டையில் அடுத்தடுத்து மாகாணங்களை தலிபான் படை கைப்பற்றி வருவதையடுத்து அதிபர் முகம்மது அஷ்ரப் கானி ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் இம்மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் ராணுவத்துடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர்.

நேற்று வரை 10 மாகாணங்கள் தலிபான் வசம் வந்தன. எனினும் ஆப்கன் ராணுவம் அமெரிக்க விமானப் படை உதவியுடன் தொடர்ந்து தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று நடந்த சண்டையில் மேலும் 8 மாகாணங்கள் என இதுவரை 18 மாகாணங்களை தலிபான்கள் கைபற்றியுள்ளனர். தற்போது தலைநகர் காபூலில் இருந்து 80 கி.மீ., தொலைவில் உள்ள கஜினி நகரை கைப்பற்றியுள்ள தலிபான்கள் வெற்றி முழக்கமிட்டபடி வாகனங்களில் கஜினி நகரை வலம் வருகின்றனர். காபூல் நகரை நெருங்கி வருவதாக கூறப்பட்டு வருகிறது.



இதுவரை 18 மாகாணங்கள் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், அதிபர் அஷ்ரப் கானிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் விரைவில் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும்,. இது தொடர்பாக அதிபர் முகம்மது அஷ்ரப் கானி இன்று (ஆக.13) அல்லது நாளை (ஆக்.14) நாட்டு மக்களிடம் உரையாட உள்ளார். அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பே, கூறுகையில், அஷ்ரப் கானி ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றார்.



உலகச் செய்திகள்!  - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 14 Aug 2021 - 3:51

தலிபான்கள் பிடியில் கந்தகார்: அதிகாரிகள், போலீசார் சரண்

காபூல்: ஆப்கனில் நாளுக்கு நாள் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்கள் கந்தகார் நகரை கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இம்மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் ராணுவத்துடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர். அதில் பல மாகாணங்களை கைப்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தகாரை கடும் மோதலுக்கு பின்னர் தலிபான்கள் கைப்பற்றினர். இதனால், அந்நகர வாசிகள் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பலர், வீடுகளுக்கு உள்ளேயே பதுங்கி உள்ளனர்.



ஆப்கனின் ஹீரட் நகரம் தலிபான்களிடம் வீழ்ந்ததை தொடர்ந்து, அந்நகர கவர்னர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகள், போலீஸ் தலைவர், உள்நாட்டு பாதுகாப்பிற்கான துணை அமைச்சர் உள்ளிட்டோர் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



இந்நிலையில், அந்நாட்டில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் ராணுவத்தை அனுப்பி வைக்க உள்ளதாக அறிவித்து உள்ளன.



ஆப்கனில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, தலிபான்கள் காபூலை கைப்பற்றும் பட்சத்தில், அந்நாட்டு மக்கள் மோசமான விளைவுகளை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 14 Aug 2021 - 12:46

ஆப்கன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?



காபூல்: கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு பயங்கர வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் ராணுவப் படைகளுக்கும் தாலிபானுக்கும் நடக்கும் இந்தத் தாக்குதல் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தாலிபான்களின் பயங்கர தாக்குதலால் அச்சுறுத்தப்பட்ட அஷ்ரப் கனி அரசு தாலிபான்கள் தங்கள் தாக்குதலை நிறுத்திக்கொள்ளுமேயானால் ஆப்கானிஸ்தானின் பாதி மாகாணங்களை தாலிபான் கட்டுப்படுத்த அனுமதி அளிப்பதாகக் கூறி இருந்தது.

ஆனாலும் ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக ஆக்கிரமிக்க தாலிபான் தாக்குதலை மேலும் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரங்கள்முதல் கிராமங்கள்வரை பல இடங்களை தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது.

தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தானின் நிலைமை என்ன எனத் தெரிந்துகொள்ள உலகமே ஆவலாக உள்ளது. தாலிபான்கள் ஒருபக்கம் பேச்சுவார்த்தை மூலமாகவும் மறுபக்கம் வன்முறை மூலமாகவும் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.
வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக குவிக்கப்பட்டிருந்த அமெரிக்க படைகளை வாபஸ் பெறப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு கைமாறாக தாலிபான்கள் அமெரிக்காவில் உள்ள தங்களது இலக்குகளை தாக்கப் போவதில்லை என்று உறுதி அளித்துள்ளது. இதனால் அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளது. இது தங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

அஷ்ரப் கனி அரசு எதிர்காலத்தில் தாலிபான்கள் இடம் சரணடையவில்லை என்றால் தலைநகர் காபூலில் உள்ள நாடாளுமன்றத்தில் தங்கள் படைகளை கொண்டு கட்டுக்குள் கொண்டுவர தாலிபான் முடிவெடுத்துள்ளது.

தலைநகர் காபூலின் வட மற்றும் தென்பகுதிகளில் தாலிபான் படையினர் தங்களது ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கிவிட்டனர். விரைவில் தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார். எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானை இந்த பயங்கரவாத அமைப்பு சர்வாதிகாரம் மூலம் ஆளும் என்பது தற்போது தெளிவாகிவிட்டது. ஒரு நாட்டையே பயங்கரவாத அமைப்பு ஒன்று கைப்பற்றி ஆளுவது என்பது உலக வரலாற்றிலேயே அரிதான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 14 Aug 2021 - 12:52


ஆப்கானிஸ்தானில் அதிக நகரங்களை தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான் நாட்டில், நிலைமை கட்டுப்பாட்டை மீறி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.

தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நடக்கும் சண்டை 'பெரும் பாதிப்பை' ஏற்படுத்துவதாகக் கூறிய அவர், அனைத்து தரப்பினரும் பொதுமக்கள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்டத்தை கடுமையாக மீறுவதாகவும், இது போர்க்குற்றமாகும் என்றும் ஐநா தலைவர் எச்சரித்தார்.

"ஆப்கானிஸ்தானில் நிலமை கட்டுப்பாட்டை மீறி வருகிறது. ஒவ்வொரு நாளும், நடக்கும் வன்முறை சம்பவங்கள் பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான தங்கள் கடமையை நான் அனைத்துக் தரப்பினருக்கும் நினைவூட்டுகிறேன், தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு தலிபான்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்" என அன்டோனியோ குடெரெஸ் கூறினார்.

"ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் தகவல்கள் கலக்கம் அடைய செய்கின்றன. ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டு மனித உரிமை மீறல் அரங்கேறி வருகின்றன. ஆப்கானியர்களின் உரிமைகளையும் உயிர்களையும் காப்பாற்ற, மனிதாபிமான ஆதரவு வழங்குவதில் ஐநா உறுதியாக உள்ளது மனிதாபிமான ஆதரவு, "என்று அவர் மேலும் கூறினார்.

தற்போதையை வன்முறையில் குறைந்தது 2,41,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு "குற்றவாளிகள் பொறுப்பேற்க வேண்டும்" என்று ஐ.நா தலைமை செயலர் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஐநா பொதுச் செயலர் இவ்வாறு தெரிவித்துள்ளார் தெற்கின் பொருளாதார மையமான கந்தஹார் தாலிபான் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை ஒரு அரசு அதிகாரி உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு 2001 ஆம் ஆண்டு முதல் அடக்கி வைக்கப்பட்ட தலிபான்கள், தற்போது, முழு வீச்சில் கொலை வெறியாட்டம் நடத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விரைவில் தாலிபான் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும் என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானின் 34 மாகாண தலைநகர்களில் 14 பகுதிகளை தாலிபான் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.



உலகச் செய்திகள்!  - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 16 Aug 2021 - 0:04

கரீபியன் நாடான ஹெய்டியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 பேர் படுகாயமடைந்துள்ளனர்.



#கரீபியன் நாடான #ஹைதி யில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே சுமார் 150 கிமீ தொலைவிலும், பெட்டிட் ட்ரூ டி நிப்ஸ் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அவசரநிலை பிரகடனம்



#நிலநடுக்கம் காரணமாக மக்கள் தெருக்களில் குவிந்தனர். வீடுகளில் சிக்கியவர்கள் மற்றும் ஹோட்டல்கள் மற்றும் பிற இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில், பொதுமக்களும் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவுக்கு உதவினர்.

இந்த பேரழிவு காரணமாக ஹைதி (#Haiti) பிரதமர் ஒரு மாத கால அவசரநிலையை அறிவித்துள்ளார். சனிக்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல நகரங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. பல இடங்களில் #நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணி பாதிக்கப்பட்டது.

இந்த கரீபியன் நாடு நெருக்கடியில் உள்ளது

கொரோனா #தொற்றுநோய் காரணமாக ஹைதி மக்களின் நிலை ஏற்கனவே மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் அங்கு மக்களின் பிரச்சனைகள் இன்னும் அதிகரித்துள்ளன.

#கொரோனா நோய்த்தொற்று மட்டுமல்லாமல், இன்னும் பல நெருக்கடிகளை இந்த நாட்டு மக்கள் ஏற்கனவே சந்தித்து வருகின்றனர். நாட்டு அதிபரின் படுகொலை, அதிகரித்து வரும் #பணவீக்கம் மற்றும் வறுமை ஆகிய பிரச்சனைகளோடு தற்போது இந்த நிலநடுக்கமும் மக்களின் அச்சத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 74 of 81 Previous  1 ... 38 ... 73, 74, 75 ... 77 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக