புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
92 Posts - 61%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
1 Post - 1%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
1 Post - 1%
eraeravi
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
284 Posts - 45%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
19 Posts - 3%
prajai
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 66 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 66 of 81 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 73 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 66 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 28, 2018 1:51 am

இஸ்லாமுக்கு எதிரானது என இடிக்கப்பட்ட உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம்


சுற்றுலா நாடான மாலத்தீவில் கடந்த ஜூலை மாதம் உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. கடலுக்கு மேலேயும், கடலுக்கு அடியிலும் இருக்கும் வண்ணம் இந்த அருங்காட்சியகம் பல சிலைகளுடன் மிக நவீனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இயற்கை சூழல் காரணமாக கடலில் நீர் மட்டம் குறையும் போது கடலுக்கு அடியில் இருக்கும் சிலைகள் மேலே தெரியும்.

இந்நிலையில், இந்த அருங்காட்சியம் இஸ்லாம் மதத்திற்கு எதிராக உள்ளதாக அந்நாட்டில் உள்ள மத குருக்கள் குற்றம் சாட்டி வந்தனர். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகம்மது வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து, தற்போதைய அதிபர் அப்துல்லா யாமின், அருங்காட்சியத்தை இடிக்க உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து, அதில் உள்ள சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன.

இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கிய பிரிட்டன் சிற்பி ஜேசன் டிகேய்ர்ஸ் டெய்லர் கூறுகையில், “அந்த சிலைகள் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. கலையை பிரதிபலிக்கிறது அவ்வளவே” என தெரிவித்துள்ளார்.




உலகச் செய்திகள்!  - Page 66 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 28, 2018 2:03 am

30 பெண்களை கொன்று ஊறுகாய் போட்ட பெண்

ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 30 பெண்களை கொன்று தின்றதாக புகார் எழுந்ததை அடுத்து, சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த இந்த பெண் தனது கணவரோடு சேர்ந்து ஒரு பெண்ணை கொன்றதற்காக கைது செய்யப்பட்டனர். அப்போது அந்த பெண்ணின் மொபைல் போனை ஆராய்ந்த போது கொல்லப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி அதனுடன் போட்டோ எடுத்திருந்தது தெரியவந்தது.

இதனால், அவர்கள் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் அங்கு மனிதர்களின் உடல் பாகங்கள் ஃப்ரீசரிலும், ஊறுகாய் பாட்டில்களிலும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட் தீவிர விசாரணையில் இந்த பெண் ஏற்கனவே இது போன்று 30 பெண்களை கொன்று தின்றது அம்பளமாகியுள்ளது.

எனவே, இந்த பெண்ணிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும், அவளது கணவருக்கு காச நோய் உள்ளதால் அவரை இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 66 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 29, 2018 8:27 am


* பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 11 பயங்கரவாதிகளுக்கு ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்திருந்தது. அந்த தண்டனையை ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்துள்ளார்.

* மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவை பாலஸ்தீனிய அதிபர் மக்மூத் அப்பாஸ் சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு உறவினை பலப்படுத்தும் அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

* சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினரான அப்பாஸ் அலி இர்ஷாத்தும், அரசு துரைசாமியும் நாடாளுமன்றத்தின் மூலமாக சமூகத்துக்கும், தொழிலாளர் வர்க்கத்துக்கும் பாடுபடப்போவதாக கூறி உள்ளனர்.

* ஈராக்கில் கிர்குக் நகர பகுதியில் நடந்த 2 குண்டுவெடிப்புகளில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

* இம்ரான்கானைப் பிரதமராக அடைந்திருப்பதற்கு பாகிஸ்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும், அவர் முகமது அலி ஜின்னாவுக்கு பின்னர் மிகப்பெரிய தலை வர் என்று அவரது மனைவி புஷ்ரா ஒரு பேட்டியில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 29, 2018 8:30 am

கார் கதவை தானே சாத்திய இளவரசி இங்கிலாந்தில் தலைப்பு செய்தியான வினோதம்
-

உலகச் செய்திகள்!  - Page 66 201809280101350359_The-car-door-itself-is-the-locked-princess_SECVPF
-
லண்டன்,

நாம் காரில் இருந்து இறங்கியவுடன், கார் கதவை நாமே சாத்துவது அனிச்சை செயலான ஒன்று.

ஆனால், இங்கிலாந்து இளவரசி மேகன் மார்க்கல், கார் கதவை அவரே சாத்தியது, இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியிலும், பிரமிப்பிலும் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்து பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகவும் ஆகி உள்ளது.

ஏனென்றால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அரச குடும்பத்தினர், கார் கதவை தாங்களே சாத்துவது இல்லை.

இளவரசர் சார்லஸின் மகன் இளவரசர் ஹாரியை மணந்தவர்தான், மேகன் மார்க்கல். அவருக்கு வயது 37. அமெரிக்க நடிகையாக இருந்தவர்.

சமீபத்தில், லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் அவர் வந்தார். அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளவரசியை கைகுலுக்கி வரவேற்ற ஒருவர், அவரது கார் கதவை மூட முனைந்தார். அந்த வினாடி, சற்றும் எதிர்பாராமல், இளவரசியே கார் கதவை சாத்தி விட்டார். அந்த நபர், கையை சடாரென்று விலக்கிக்கொண்டு, ஆச்சரியத்தில் வாய் பிளந்தார்.

இந்த நிகழ்வுதான், புகழ்பெற்ற பி.பி.சி., சன், டெய்லி மெயில் உள்ளிட்ட ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. அத்துடன், நாடு முழுவதும் விவாதப்பொருளாகவும் ஆகி உள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதற்கு என்றே ஒரு சாரார் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்கள், இளவரசி மேகன் மார்க்கலையும் கவனித்து வருகிறார்கள். அவர் எவ்வித பாசாங்கும் இல்லாமல், எளிமையாக இருப்பார் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

அரண்மனை தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களில் ஒருவர், “வெல்டன் மேகன்” என்று எழுதி உள்ளார். மற்றொருவர், “இளவரசி மேகன் எந்த மரபையும் மீறவில்லை. அவர் பழக்க தோஷத்தில்தான் கதவை மூடி உள்ளார்” என்று எழுதி உள்ளார்.
-
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 29, 2018 8:32 am

மைக்ரோனேசியா: பயணிகள் விமானம், கடலில் பாய்ந்து விபத்து
-

பாலிகிர், உலகச் செய்திகள்!  - Page 66 201809290056144966_Micronesia-Passenger-plane-crashes-into-the-sea_SECVPF

பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகளில் ஒன்று, மைக்ரோனேசியா. அந்த நாட்டின் போன்பெய் தீவில் இருந்து ‘ஏர் நியுகினி போயிங்-737’ பயணிகள் விமானம், பப்புவா நியு கினியாவின் தலைநகர் போர்ட் மாரஸ்பிக்கு நேற்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம், மைக்ரோனேசியாவில் உள்ள சூக் தீவின் வெனோ நகரம் வழியாக செல்லக்கூடியதாகும்.

இந்த விமானத்தில் 35 பயணிகளும், 12 சிப்பந்திகளும் என மொத்தம் 47 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம், வெனோ நகரில் தரை இறங்கி செல்ல வேண்டும். ஆனால் தரையிறங்கும்போது, சற்றும் எதிர்பாராத வகையில் ஓடு தளத்துக்கு செல்வதற்கு முன்பாக கடலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் அலறினர்.

பயணிகள், சிப்பந்திகள் உயிர் தப்பினர். உடனடியாக பயணிகள், விமானத்தில் இருந்து வெளியேற தொடங்கினர். சிலர் நீந்திக் கரை சேர்ந்தனர். இருப்பினும் உள்ளூர் மீனவர்களின் மீன்பிடி படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அந்தப் படகுகள் மூலம் பயணிகள் கரைக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.

இந்த விபத்தில் பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் அதிசயமாக உயிர் தப்பினர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் மைக்ரோனேசியாவை சேர்ந்த நாளிதழ் ஒன்றின் நிர்வாக ஆசிரியரான பில் ஜேனசும் பயணம் செய்தார். விமானம் விபத்துக்குள்ளானது பற்றி அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வீடியோவும், தகவலும் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “அது கனவு போல அமைந்து விட்டது. விமானம் கடலில் பாய்ந்து நின்ற இடத்தில் இடுப்பளவு தண்ணீர் இருந்தது. நெருக்கடி கால வழியாக விமானத்தில் இருந்து நாங்கள் வெளியேறினோம்” என கூறி உள்ளார்.

ஜேம்ஸ் எயின்கெலுவா என்ற மற்றொரு பயணி கூறும்போது, “ஓடுதளத்தை அடைவதற்கு 500 மீட்டருக்கும் அதிகமான தூரம் இருந்தபோதே விமானம் கடலுக்குள் பாய்ந்து விட்டது. நல்ல வேளையாக இது பகல் நேரத்தில் நடந்தது. விமானம் கடலுக்குள் பாய்ந்து நின்றதும், எங்களை எல்லாம் மீட்டுச்செல்வதற்கு உள்ளூர் மக்கள் மீன்பிடி படகுகளுடன் வந்து உதவினர்” என கூறினார்.

இந்த விமான விபத்து தொடர்பான படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தீவிரமாக பரவின. அவற்றில் விமானம் இடுப்பளவு தண்ணீரில் பாய்ந்து நின்றது, சிறிய படகுகள் மூலமாக பயணிகள் மீட்கப்பட்டது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த விபத்து பற்றி ஏர் நியுகினியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானம் கடலுக்குள் பாய்ந்துவிட்டாலும் அதில் இருந்த 35 பயணிகளும், 12 சிப்பந்திகளும் பாதுகாப்பாக வெளியேற முடிந்திருக்கிறது. பயணிகள், சிப்பந்திகள் பத்திரமாக வெளியேறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலத்த மழை பெய்து மோசமான வானிலை நிலவியதுதான் இந்த விபத்துக்கு காரணம்” என கூறப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பயணிகள், சிப்பந்திகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். குறிப்பிடத்தக்க அளவுக்கு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் பத்திரமாக உயிர் பிழைத்தது, பயணிகளுக்கும், சிப்பந்திகளுக்கும் மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் பப்புவா நியு கினியா நாட்டுக்கு சொந்தமானது.
-
தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 29, 2018 8:36 am

கனடா மன்னிப்பு கேட்காதவரை அந்த நாட்டின் மீதான தடையை நீக்க முடியாது-சவுதி அரேபியா

துபாய்

‘இரண்டு பெண் சமூக ஆர்வலர்களை சவுதி அரேபியா அரசு
சிறையில் தள்ளிய விவகாரத்தில் தலையிட்ட கனடா அரசு,
கடந்த ஆகஸ்டு மாதம் சவுதி அரசாங்கத்தை கடுமையாக
விமர்சித்தது.

இதனையடுத்து சவுதி அரேபியா கனடா மீது நடவடிக்கை
எடுக்க முடிவு செய்ததுடன், விமான போக்குவரத்து உள்ளிட்ட
சேவைகளையும் ரத்து செய்தது.

கனடா மன்னிப்பு கேட்காதவரை அந்த நாட்டின் மீதான
தடையை நீக்க முடியாது என சவுதி அரேபியாவின்
வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்
கொள்ளாதவரை கத்தார் நாடு மீதான தடை நீடிக்கும் என்றும்
அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சவுதி, ஐக்கிய அமீரகம், பஹரின், எகிப்து ஆகிய நாடுகள்
முன்வைத்துள்ள கோரிக்கைகளை கத்தார் ஏற்றுக்கொள்ள
வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பில் கனடிய அரசு மேற்கொண்ட
விமர்சனம் பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல விரோதத்தை
ஏற்படுத்தும்வகையில் அமைந்திருந்தது எனவும் சவுதி
வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல் ஜுபைர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா ஒரு மதிப்புமிக்க நாடு என கனடிய அரசு
கருதுகிறது எனில் உடனடியாக இதுவரை எழுப்பப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும்
அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.’
-
------------------------------------
தினத்தந்தி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 01, 2018 4:16 am


எகிப்தில் பெண் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகார் பொய் என நிரூபமனமானதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எகிப்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் பாலியல் பலாத்கார அவலத்திற்கு ஆளானேன் என பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தவே, போலீஸார் அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட அவலங்களை பற்றி விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில் அந்த பெண் வீண் விளம்பரத்திற்காக இந்த கீழ்த்தரமான நாடகத்தை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.



உலகச் செய்திகள்!  - Page 66 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 01, 2018 4:19 am


இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 400 பேர் பலியான நிலையில் சற்றுமுன் பிஜித்தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி ஏற்படுமோ? என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் பிஜி தீவு அருகே சுமார் 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும், இருப்பினும் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 66 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 7:32 am



25 செப்டம்பர் 2018

சீனாவில் பள்ளி ஒன்றில் மாணவனுக்கு கொடுத்த
நூதன தண்டனையால் அந்த மாணவன் பரிதாபமாக
உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹனான் மாகாணத்தில் சங் என்ற 16 வயது
மாணவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தான்.
சம்பவ தினத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவன்
பாட வேளையில் சக மாணவனுடன் பேசிக்
கொண்டிருந்தான்.

இதனால் டென்ஷனான ஆசிரியர் மாணவனை தவளை
போல் குதித்து வருமாறு நூதன தண்டனை வழங்கினார்.
மாணவனும் கொடுக்கப்பட்ட தண்டனையை செய்து
முடித்தான்.

சிறிது நேரத்தில் மாணவன் மயக்கம் போட்டு கீழே
விழுந்தான்.

இதனால் பதறிப்போன ஆசிரியர்கள் மாணவனை தூக்கிக்
கொண்டு வேகவேகமாய் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் சங் ஏற்கனவே
இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியர் கொடுத்த தண்டனையால் மாணவன் உயிரிழந்த
சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
--------------------------
வெப்துனியா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 02, 2018 7:02 am

மீண்டும் மாணவர் புரட்சி? அலறும் சீன அரசு
-

சீனாவில், 1989ம் ஆண்டு தியான்மென் என்ற இடத்தில்
மாணவர்கள் அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர்.
அவர்களை ராணுவத்தை கொண்டு அரசு அடங்கியது.

இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
இதன் பிறகு சீன மாணவர்களிடம் ஒரு மாற்றம் காணப்பட்டது.
அரசு தொடர்பான விஷயங்களை அவர்கள் கவனமாக
தவிர்த்தனர்.

சொந்த நலம், வாழ்க்கையில் முன்னேற்றம் உள்ளிட்ட
விஷயங்களில் கவனம் செலுத்தினர். அவர்களுக்கு அடுத்த
தலைமுறை தற்போது தெருவில் இறங்கி போராட
தொடங்கி உள்ளது.
இதை பார்த்து சீன அரசு மிரள தொடங்கி உள்ளது.

தொழிற்சங்கம் துவக்க எதிர்ப்பு

சீனாவில் ஹூயுசோ என்ற நகரில் ஏராளமான
தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, 48 லட்சம் மக்கள்
வசித்து வருகின்றனர். இங்குள்ள ஜாஸிக் டெக்னாலஜி
என்ற தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள்
குறைந்த ஊதியம் உள்ளிட்ட பல பிரச்னைகளை
முன் வைத்து கடந்த ஜூலை மாதம் தொழிற்சங்கம்
துவக்க முற்பட்டனர்.

சீனாவில் அரசு சார்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளது.
இதன் அனுமதி பெற்ற பிறகே யாராக இருந்தாலும்
தொழிற்சங்கம் துவக்க முடியும். ஆனால், ஜாஸிக் டெக்னாலஜி
தொழிற்சாலை ஊழியர்கள் அந்த கூட்டமைப்பின் அனுமதி
பெறவில்லை.

அவர்களை அரசு முடக்கியது.
எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரசுக்கு தலைவலி

தற்போது இப்பிரச்னையில் சமீபத்தில் பட்டம் வாங்கிய
இளைஞர்கள் தலையிட தொடங்கி உள்ளனர். துவக்கத்தில்
இணையம் மூலம் இப்பிரச்னை குறித்து விவாதித்தனர்.
பின்னர் கடந்த மாதம் ஹூயுசோ நகருக்கு படையெடுக்க
தொடங்கினர்.

பல தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைக்கவும்,
ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் போராடவும்
தொடங்கி உள்ளனர். அவர்களையும் அரசு அடக்கி வருகிறது.
ஆனால், நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களிடையே
ஒரு அதிருப்தி உருவாகியுள்ளது.

நாட்டில் சமத்துவம் இல்லை. ஊழல் மலிந்து விட்டது.
சீன சமூகத்தில் பணத்திற்கு தான் மதிப்பு அளிக்கப்படுகிறது
என்று வெளிப்படையாகவே பேச தொடங்கி விட்டனர்.
இது சீன அரசுக்கு தலைவலியாக உருவாகி வருகிறது.
-
--------------------------------------
தினமலர்



Sponsored content

PostSponsored content



Page 66 of 81 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 73 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக