ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!

+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters

Page 7 of 81 Previous  1 ... 6, 7, 8 ... 44 ... 81  Next

Go down

உலகச் செய்திகள்!  - Page 7 Empty உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 7 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


உலகச் செய்திகள்!  - Page 7 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Dec 04, 2013 5:30 pm

தாய்லாந்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை இன்முகத்துடன் வரவேற்ற காவல்துறையினர்

உலகச் செய்திகள்!  - Page 7 Gv6cfFueR0ufnT8uQzs1+bfa7ff19-5ed8-416d-a884-759fa54cca95_S_secvpf.gif 

கடந்த ஒரு வாரமாக தாய்லாந்து பிரதமர் இங்க்லக் ஷினவத்ராவை பதவி விலகக்கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுதெப் தாக்சுபன் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

அரசு அலுவலகங்களை முற்றுகையிட்ட அவர்கள் பிரதமரைப் பதவி விலகக் கோரினர். இதனால் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிரதமர் ஆர்ப்பாட்டக்காரர்களிடமும் அமைதியான முறையிலேயே தீர்வு காண நினைத்தார். இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து நேற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.

இதனால், பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர்ப் புகையையும் அவர்களை நோக்கிப் பிரயோகித்தனர். தண்ணீரைப் பீய்ச்சியடித்தன் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை அவர்கள் வெளியேற்ற முயன்றனர்.

குற்றவியல் நீதிமன்றம் ஒன்று இவர்களுக்குத் தலைமை தாங்கிய தாக்சுபனுக்கு மரணம் அல்லது ஆயுள்தண்டனையை விதிக்கக்கூடிய கைது உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது. தாங்கள் வெல்லும்வரை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் போராடுவோம் என்று நேற்று மாலை தாக்சுபன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆயினும், தாய்லாந்தின் சுற்றுலா சீசனின் முக்கிய பருவம் தொடங்க உள்ளதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் தங்களுடைய போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

மேலும் நாளை தாய்லாந்து அரசரான பூமிபோல் அதுல்யதேஜின் 86 ஆவது பிறந்த நாள் ஆகும். தாய்லாந்து மக்களால் பெரிதும் மதிக்கப்படும் அவரது பிறந்த நாளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அவரை அவமதிப்பது போலாகும் என்று பெரும்பான்மையினர் கருதுகின்றனர்.

நேற்றே தலைநகரில் பிரதமரின் அலுவலகம் மற்றும் தலைமைக் காவல் அலுவலகம் ஆகிய இடங்களைச் சுற்றி மட்டுமே போராட்டம் தீவிரமாக இருந்தது. மற்ற இடங்கள் பொதுவாக அமைதியாகக் காணப்பட்டன.

இன்றோ, அரசு அதிகாரிகள் ஒரு புதிய முறையைப் பின்பற்றினர். தடுப்பு வேலிகளை விலக்கி, தங்கள் ஆயுதங்களையும் கீழே வைத்த பாதுகாப்பு வீரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறை அலுவலகத்துக்குள் வரவேற்றனர். அவர்களுடன் ஒன்றாக புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் பிரதமரின் அலுவலகமும் அவர்களுக்காகத் திறக்கப்பட்டது.. மோதல் நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினரைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய காவல்துறை தலைவரான கம்ரோன்விட் தூப்கிரசங் மோதலைத் தவிர்க்கவேண்டும் என்பது அரசின் கொள்கையாகும் என்று குறிப்பிட்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 7 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Dec 04, 2013 5:33 pm

இலங்கை உள்நாட்டுப்போரின்போது 17 நிவாரண ஊழியர்களை முழங்கால் போட வைத்து சுட்டுக்கொன்ற கொடூரம் அம்பலம்

இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்தது. அந்தப் போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

அப்போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சிங்கள அரசின்மீது சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இதில் தீவிரமாக உள்ளார்.

இந்தப் போரின்போது நிவாரணப்பணிக்காக சென்றிருந்த பிரான்ஸ் நாட்டின் 'ஏ.சி.எப்.' என்னும் தொண்டு அமைப்பின் (பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பு) ஊழியர்கள் 17 பேரை சிங்கள ராணுவம் மிகக்கொடூரமான முறையில் கொன்று குவித்து இருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து 'ஏ.சி.எப்.' அமைப்பு, '17 மனித நேய உதவி பணியாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதின் உண்மை வெளிப்பாடுகள்' என்ற தலைப்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மூதூரில் 2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி சிங்கள ராணுவம், கடற்படை, போலீசார் மனிதப்படுகொலைகளை அரங்கேற்றினர். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

இதுவரை எங்கும் நேர்ந்திராத அளவுக்கு நடந்த மனித உரிமை மீறல் குற்றங்களில் ஒன்றாக, 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலையை சொல்ல வேண்டும். அவர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு, பின்னர் முழங்கால் போட வைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் ஒவ்வொருவரையும் தலையில் சுட்டு கொன்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் முஸ்லிம். இவர்களை கொன்றது சிங்கள அரசின் படைகள்தான்.

இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுக்காக காத்திருந்தோம். ஆனால் கடைசியில், போர்க்குற்றம் புரிந்தவர்களை இலங்கை அரசு நீதியின் முன் நிறுத்தும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம்.

சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தித்தான், இலங்கை மனித உரிமை மீறல் குற்றவாளிகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'ஏ.சி.எப்.' செயல் இயக்குனர் மைக் பென்ரோஸ் இது தொடர்பாக கூறுகையில், "ஒவ்வொரு நாளும், நாங்களும் எங்களைப் போன்ற மனிதநேய அமைப்புகளும் போர்ப் பிரதேசங்களில் பணியாற்றினோம். மனிதநேய உதவிகளை செய்த பணியாளர்களை மதிக்காதவர்களை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இந்தக் குற்றங்களை செய்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது" என்றார்.

மனித நேயப்பணியாளர்களையும் விட்டு வைக்காமல் சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்றதாக இப்போது வெளியாகியுள்ள இந்த தகவல், சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 7 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Dec 04, 2013 5:35 pm

ஈராக்கில் ஷியா - சன்னி மோதல்களில் 23 பேர் சாவு: இவ்வாண்டின் பலி எண்ணிக்கை 6200 ஆக உயர்வு


வன்முறைக்கு விடுமுறை அளிக்க மறுத்து வரும் ஈராக்கில் சமீபகாலமாக வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

ஷியா ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவினரும், சன்னி பிரிவினரை பழிவாங்க ஷியா இனத்தவரும் நடத்தி வரும் 'நீயா? நானா?' சண்டையில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு பாக்தாத் நகரில் உள்ள சன்னி இனத்தவர் அதிகம் வாழும் அபுகரிப், பலுஜா, பகுபா, டிக்ரிட், சமாரா, மொசுல் தர்மியா நகரங்களில் நேற்று ஷியா பிரிவனர் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர்.

குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பரிதாபமாக பலியாகினர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கி நிகழ்ந்த ஷியா - சன்னி பிரிவினருக்கிடையிலான வன்முறை கலவரங்களில் இதுவரை 6 ஆயிரத்து 200 பேர் பலியாகியுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 7 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Dec 04, 2013 5:41 pm

காஷ்மீருக்காக இந்தியாவுடன் போர்: நவாஸ் ஷெரீப்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்நேரமும் போர்வரும் வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியிருக்கிறார். “இந்தியாவிலுள்ள காஷ்மீர் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே எனது கனவு. அது எனது வாழ்நாளிலேயே நடக்கும் என நினைக்கிறேன்.

அணு ஆயுதங்களில் வல்லவர்களான இரு நாடுகளுக்கிடையே எந்நேரமும் போர் வரும் வாய்ப்புள்ளது” என்று நவாஸ் ஷெரீப் செய்தியாளரிடம் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இச்செய்தி இடம்பெறவில்லை.

அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஷ்மீர் விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கேற்பவும், ஐ.நா சபை தீர்மானத்தின் அடிப்படையிலும் அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாகவும், அணு ஆயத போட்டியை இந்தியாவே முதலில் தொடங்கியதாகவும் அதனாலேயே பாகிஸ்தானும் ஆயுதப்போட்டியில் ஈடுபட்டதாகவும், தங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் ஆயுதப் போட்டிக்காக செலவழித்த தொகையை பொதுத் துறை முன்னேற்றத்திற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் செலவழித்திருக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலைமை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதில் மனநிறைவு கொள்வதாகவும் அவர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 7 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Dec 04, 2013 5:42 pm

காஷ்மீருக்காக இந்தியாவுடன் போர்: நவாஸ் ஷெரீப்


காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்நேரமும் போர்வரும் வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியிருக்கிறார். “இந்தியாவிலுள்ள காஷ்மீர் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே எனது கனவு. அது எனது வாழ்நாளிலேயே நடக்கும் என நினைக்கிறேன்.

அணு ஆயுதங்களில் வல்லவர்களான இரு நாடுகளுக்கிடையே எந்நேரமும் போர் வரும் வாய்ப்புள்ளது” என்று நவாஸ் ஷெரீப் செய்தியாளரிடம் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இச்செய்தி இடம்பெறவில்லை.

அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஷ்மீர் விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கேற்பவும், ஐ.நா சபை தீர்மானத்தின் அடிப்படையிலும் அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாகவும், அணு ஆயத போட்டியை இந்தியாவே முதலில் தொடங்கியதாகவும் அதனாலேயே பாகிஸ்தானும் ஆயுதப்போட்டியில் ஈடுபட்டதாகவும், தங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் ஆயுதப் போட்டிக்காக செலவழித்த தொகையை பொதுத் துறை முன்னேற்றத்திற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் செலவழித்திருக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலைமை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதில் மனநிறைவு கொள்வதாகவும் அவர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 7 Empty Re: உலகச் செய்திகள்!

Post by ராஜா Wed Dec 04, 2013 6:15 pm

நவாஸ் ஷெரிப் அவர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். (வாங்கடா அப்ப தான் உங்களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 7 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Sat Dec 07, 2013 4:20 pm

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 1900 விமானங்கள் ரத்து

அமெரிக்காவின் மத்திய பகுதியில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் டெக்சாஸ், லூசியானா, ஆர்கன்சாஸ், கெண்டக்கு உள்ளிட்ட மாகாணங்கள் பனியால் மூடிக்கிடக்கின்றன.டெக்காஸ்– மெச்சிகோ எல்லையின் வட கிழக்கில் இருந்து ஓகிபோ பள்ளத்தாக்கு வரையிலும் டல்லாஸ் பகுதியிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.பனிக்கட்டிகள் உறைந்து மூடிக்கிடப்பதால் இங்கு மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.பனிப்புயல் கடுமையாக வீசுவதால் மட்டும் 1900 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர்.சாலைகளில் பனி படர்ந்து இருப்பதால் பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 7 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Mon Dec 09, 2013 6:07 pm

 பாராளுமன்றத்தை கலைத்தார், தாய்லாந்து பிரதமர் யிங்லக் சின்வத்ரா

தாய்லாந்து பெண் பிரதமர் யிங்லக் சின்வத்ரா பதவி விலக வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாக தலைநகர் பாங்காக்கில் எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னாள் துணை பிரதமர் சுதேப் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்தநிலையில் பாராளுமன்றத்தை கலைத்த பிரதமர் யிங்லக் சின்வத்ரா, தேர்தல் நடத்தப்போவதாக அறிவித்தார்.

தாய்லாந்து சட்டப்படி, பாராளுமன்றத்தை கலைத்தால் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை ஆகும். அதன்படி 500 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ்சபைக்கு 60 நாட்களுக்குள், அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதிக்கு முன் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய உறுப்பினர் தெரிவித்தார்.  ஆனால் நாட்டை நிர்வகிக்க ’மக்கள் குழு’ ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ள சுதேப், இதை வலியுறுத்தி பேரணிகள் நடத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 7 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Sun Dec 15, 2013 12:01 pm

பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டாலர் கடன் வழங்க திட்டமிட்டிருந்ததை ரத்து செய்தது ஈரான்

இயற்கை எரிவாயு கொண்டு செல்ல பைப்லைன் அமைப்பதற்காக பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டாலர் கடன் வழங்க ஈரான் திட்டமிட்டிருந்தது. தற்போது ஈரான் பின்வாங்கியுள்ளது. ஈரான் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க திட்டமிட்டிருந்ததை ரத்து செய்துள்ளது. ஈரான் அரசு நிதி இல்லை என்று கூறியுள்ளது என்று பாகிஸ்தான் நாட்டு ஆயில் அமைச்சகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இயற்கை எரிவாயுவை கொண்டுவர பைப் லைன் பதிக்கும் திட்டத்தை இந்த வருட இறுதிக்குள் முடித்து தர ஈரானிடம் பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 7 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Sun Dec 15, 2013 12:05 pm

ஜமாத்–இ–இஸ்லாமி கட்சி தலைவர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரம்: 21 பேர் பலி

வங்காளதேசத்தில் 1971–ம் ஆண்டில் நடந்த சுதந்திர போராட்டத்தின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்த சிலர் அட்டூழியங்களில் ஈடுபட்டு பலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான ஒரு வழக்கில் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல் காதர் மொல்லா என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்துல் காதர் மொல்லா போரின்போது இனப்படுகொலை செய்ததாகவும், பெண்களை கற்பழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அப்துல் காதர் மொல்லா தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்காளதேசத்தில் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஷேக் ஹசினா, உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 7 Empty Re: உலகச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 81 Previous  1 ... 6, 7, 8 ... 44 ... 81  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum