புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 56 of 81 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 68 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 5:05 pm

நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 200 சிறுமிகள் மற்றும் 93 பெண்கள் மீட்பு

நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 200 சிறுமிகள் மற்றும் 93 பெண்கள் மீட்கப்பட்டனர்.

நைஜீரியாவில் ஒரு குறிப்பிட்ட அரசை உருவாக்க வலியுறுத்தி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சிறுமிகளையும், பெண்களையும் அவர்கள் கடத்துவதோடு, ராணுவம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜீரிய ராணுவத்துடன் அண்டை நாடுகளான நைஜர், கேமரூன் நாடுகளின் ராணுவமும் ஈடுபட்டு வருகிறது. இதனால் அண்டை நாடான நைஜரிலும் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் லேக் சாத் பகுதியில் உள்ள கரம்காவில் தீவிரவாதிகளுக்கும், நைஜர் ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 156 தீவிரவாதிகள், 46 ராணுவ வீரர்கள், 28 அப்பாவி பொதுமக்கள் என மொத்தம் 230 பேர் பலியாகினர். 32 பேரை காணவில்லை என்று நைஜர் நாட்டு உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே நைஜீரியாவில் உள்ள சாம்பிசா வனப்பகுதியில் நைஜீரிய ராணுவம் தீவிரவாதிகளுடன் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்த 200 சிறுமிகள் மற்றும் 93 பெண்களை மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபோக் பள்ளிக்கூடத்தில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட சிறுமிகள் இல்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக்கொண்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர். இந்த கடத்தல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர்களை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய ராணுவத்துடன் பல்வேறு நாடுகளின் படை வீரர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் மாணவிகள் கடத்தப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் இதுவரை அவர்களை மீட்கும் முயற்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 01, 2015 10:46 pm

27 தீவிரவாதிகள் கொன்று குவிப்பு, தீவிரவாதிகளின் மறைவிடங்கள் தரைமட்டம், பாக். ராணுவம் அதிரடி

பாகிஸ்தானில் ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 5 வீரர்களும் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் கைபர் ஏஜென்சி பகுதி, பழங்குடி இனத்தவர் திரளாக வசிக்கிற 8 பிரதேசங்களில் ஒன்றாகும். இங்கு பாகிஸ்தான் தலீபான், லஷ்கர் இ இஸ்லாம், தெக்ரிக் இ நபாஸ் இ ஷரியத் இ முகமதி, ஜமாத் உல் அஹ்ரார் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இங்கு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் ராணுவம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவும் அவ்வப்போது ஆளில்லா விமானங்களை அனுப்பி தாக்குதல் தொடுத்து வருகிறது.

அங்கு தீவிரவாதிகளின் பிடியில் உள்ள டைரா பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள கார்ஹி கமர் கேல், நாகை மலிக்தீன் கேல், ஜர்மான்சா, தாவா தோ, டாங்கு, மெஹ்ராபான் கலாய், காயிஸ்ட், தார்கோ காஸ், மைலு, தோர் தாரா, மலகாபாத் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினர் நுழைந்தனர். இந்த பகுதிகள் அனைத்தும் பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தாரிக் அப்ரிடி குழுவின் கட்டுப்பாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் இருந்து வருகின்றன. இங்கு ராணுவத்தினர் நுழைந்ததை தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது.

நேற்று இரு தரப்பினருக்கும் இடையே சண்டை வலுத்தது. தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினருடன், பீரங்கி தாக்குதல், வான்வழி தாக்குதல் என பலமுனை தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதன் முடிவில் 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் மறைவிடங்கள் தகர்க்கப்பட்டன. பாதுகாப்பு படையினரில் கேப்டன் அஜ்மல் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து சிராவில்லா, வாச்சாய் வேனி பகுதிகளில் தீவிரவாதிகளை குறி வைத்து பீரங்கி தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதல்களால் நிலை குலைந்து போயுள்ள தீவிரவாதிகள் ஆப்கான் எல்லையில் உள்ள செர்ஹாய், ராஜ்குல் பகுதிகளில் தஞ்சம் புகுந்து வருவதாக தெரிய வந்துள்ளது. தீவிரவாதிகளின் 10 மறைவிடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 01, 2015 10:58 pm

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா, புளூட்டோ கிரகத்தை ஆராய்வதற்கு நியூ ஹாரிசான்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் படம் எடுத்து அனுப்பி உள்ளது. அதில் புளூட்டோவின் மேற்பரப்பில் வியக்கத்தக்க அளவுக்கு வெளிச்சமும், கருப்பு திட்டுக்கள் காணப்படுவதும் தெரிய வந்துள்ளது.

* தென் கொரியாவில் ஒரு தனியார் ஆலையில் நடந்த கட்டுமானப் பணியின்போது, நைட்ரஜன் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

* பால்டிமோரில் போலீஸ் காவலில் கருப்பின வாலிபர் கொல்லப்பட்டது தொடர்பாக நியூயார்க்கில் நடந்த கண்டன போராட்டத்தில் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

* வடகொரியாவில் அணுகுண்டுகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களை வழங்கக்கூடிய அணு உலை ஒன்று மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கிறது. இது செயற்கைக் கோள் படம் மூலம் தெரிய வந்துள்ளது.

* பிரேசில் நாட்டில் ஓய்வூதிய திட்டத்தில் கொண்டு வரவுள்ள மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கியூரிட்டிபா நகரில் ஆசிரியர்கள் கண்டன போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 100 பேர் காயம் அடைந்தனர்.

* இங்கிலாந்தில் 7-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அங்கு தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகி வருகின்றன. சமீபத்திய கருத்துக்கணிப்பில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை விட ஒரு சதவீத ஆதரவை அதிகமாக பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 12:56 am


* அமெரிக்காவின் நியூயார்க் நகர போலீஸ் அதிகாரி பிரையன் மூரே (வயது 25), சுடப்பட்டார். தலையில் குண்டு பாய்ந்ததால், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவரை சுட்ட ஆசாமி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.

* ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து சனிக்கிழமையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அமெரிக்க கூட்டுப்படைகள் 24 வான் தாக்குதல்களை நடத்தி உள்ளன. அவற்றில் 17 தாக்குதல்கள் சிரியாவிலும், 7 தாக்குதல்கள் ஈராக்கிலும் நடத்தப்பட்டுள்ளன. சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை.

* பாகிஸ்தானில் கயிர்பூர்நாதன்ஷா புறவழிச்சாலையில், திருமண கோஷ்டியினர் சென்ற பஸ், உயர் மின் அழுத்த மின்சார கேபிள் உரசி தீப்பிடித்து எரிந்தது. இதில் 7 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 34 பேர் படுகாயம் அடைந்தனர். மணப்பெண்ணும், மணமகனும் வேறு ஒரு வாகனத்தில் பயணம் செய்ததால் தப்பித்தனர்.

* ஈராக்கில் மொசூல் அருகே பிடித்து வைத்திருந்த 300 யாஜ்டி இன மக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று விட்டதாக பதற வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 10, 2015 2:07 am

* மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம், ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டின் பேரில் கடந்த பிப்ரவரி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அங்கு நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி வான் அசிசா, ஆளுங்கட்சி வேட்பாளரான சுகெய்மி சபுதினை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

* பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் வசிக்கும் இந்துக்களை வழிபாடு செய்ய விடாமல் தடுப்பதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் மற்றொரு பிரிவினர் மீது இந்துக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை கண்டித்து அங்குள்ள மெராப்பூரில் இந்துக்கள் கண்டன போராட்டம் நடத்தினர்.

* பிலிப்பைன்சின் வடகிழக்கு கடற்பகுதியில் மையம் கொண்டுள்ள நோல் புயல் ஓரிரு நாட்களில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள எரிமலை ஒன்றும் எந்த நேரத்திலும் வெடித்து சிதறக்கூடும் என தெரிகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற பிலிப்பைன்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

* ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாட்டுப்படைகள், கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த சாதா மாகாணத்தில் நேற்று தீவிர தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஒரு சுரங்க தொழிற்சாலை, தொடர்பு மையம் என பல பகுதிகள் சேதமடைந்தன. ஹவுதி படையை தோற்றுவித்தவரின் கல்லறையும் இதில் சேதமடைந்தது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 10, 2015 2:14 am

2 ம் உலக போர் வெற்றி : ரஷ்யாவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு

மாஸ்கோ : இரண்டாம் உலக போரில் வெற்றி பெற்றதன் 70 வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. செஞ்சதுக்கத்தில் நடந்த இந்த அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான வீரர்களும், புதுவகையான ராணுவ தளவாடங்களும் கலந்து கொண்டன. பல நாட்டு தலைவர்களும் இதில் கலந்து கொண்டாலும் பெரும்பாலான மேலை நாட்டு தலைவர்கள் இதனை புறக்கணித்தனர். காரணம் உக்ரைனில் ரஷ்யா ஏற்படுத்தி வரும் குழப்பம் தான். உக்ரைன் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வரும் கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆயுத உதவி செய்து வருவதாக மேலை நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. அங்கு கிளர்ச்சி படையினருக்கும் உக்ரைன் ராணுவத்திற்குமிடையே 2014 ஏப்ரல் முதல் நடந்து வரும் போரில் இதுவரை 6,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதிபர் விளாதிமிர் புதின் பேசியபோது, இரண்டாம் உலக போரில் சண்டையிட்டு உயிர்நீத்த ரஷ்ய வீரர்களுக்கு புகழாரம் சூட்டினார். அதேபோல் வெற்றிக்காக பாடுபட்ட பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்க மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். ஆனால் இப்போது சர்வதேச ஒத்துழைப்பு அடிக்கடி மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதேநேரம் உக்ரைன் தலைநகர் கீவ் இல் நடந்த, மறைந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய உக்ரைன் அதிபர் பெட்ரோ பெரசெங்கோ, ரஷ்யாவின் செயலை கண்டித்து பேசினார். உக்ரைனை ஒரு சர்வாதிகார நாடுபோல காண்பிக்கவே ரஷ்யா விரும்புகிறது எனவும் உக்ரைனில் குழப்பம் விளைவிப்பதே ரஷ்யாவில் ஒரே குறிக்கோள் என்பது தெள்ளத்தெளிவாக தெரியும் விஷயம் என்றார்.

வெற்றி அணிவகுப்பு ரஷ்ய நேரப்படி காலை 10.00 மணிக்கு துவங்கியது. அதில் சீன அதிபர் ஜி ஜின்பெங், இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன், எகிப்து, தென் ஆப்பிரிக்கா, கியுபா, வெனிசுலா, மத்திய ஆசிய நாட்டு தலைவர்கள் உள்பட சுமார் 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ரஷ்யா முழுவதிலும் இருந்து வந்திருந்த ராணுவ வீர்கள் ( சிலர் இரண்டாம் உலக போர் காலத்து யூனிபார்மில் ) கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் செஞ்சதுக்கத்தை வட்டமிட்டு கொண்டிருந்தன. முதன் முறையாக சீன ராணுவ வீரர்களும் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

வழக்கமாக ரஷ்ய அதிபர் பக்கத்தில் ஐரோப்பியாவில் உள்ள ரஷ்ய ஆதரவு நாட்டு தலைவர்கள் தான் அமர வைக்கப்பட்டிருப்பார்கள்.இந்த முறை அது மாற்றப்பட்டு சீன அதிபர் ஜி ஜின்பெங் அமர்ந்திருந்தார். பெரும்பாலான மேலை நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளாமல் அவர்களது தூதர்களையே அனுப்பி இருந்தனர்.




பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 10, 2015 3:08 am

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தி வடகொரியா அதிரடி

நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரியின் இலக்கை தாக்கும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வடகொரியா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இது கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா கடந்த 2006, 2009, 2013 ஆண்டுகளில் தொடர்ந்து அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்காக அந்த நாட்டின் மீது ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. இதே போன்ற தடையை மேற்கத்திய நாடுகளும் விதித்துள்ளன. வடகொரியாவிடம் தற்போது 15-க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகின. அடுத்த ஆண்டு இறுதிக்குள் தன்னிடம் இருக்கும் அணுகுண்டுகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு அந்த நாடு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்தாலும், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மட்டும் விட்டு விடவில்லை. வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்துவதற்கு ஐ.நா. சபை ஏற்கனவே தடை விதித்துள்ளது. அந்த தடைக்கு மத்தியிலும், வடகொரியா தொடர்ந்து இத்தகைய சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நடத்துகிற வல்லமை படைத்த அதிநவீன ஏவுகணை சோதனையை அந்த நாடு வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இந்த ஏவுகணை சோதனை, அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் மேற்பார்வையில் நடந்துள்ளது. இது தொடர்பான படங்களை வடகொரிய அரசு நாளிதழ் ‘தி ரோடாங் சின்மம்’ வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த ஏவுகணை சோதனை எங்கு, எப்போது நடத்தப்பட்டது என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கடலோர நகரான சின்போவில், ஏவும் திறன் படைத்த சாதனங்கள் பொருத்தப்பட்ட நிலையில், நீர் மூழ்கி கப்பல் நிற்பதை செயற்கைகோள் படங்கள் ஏற்கனவே காட்டின. எனவே சின்போ கடல் பகுதியில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

வடகொரியா நிறைய அணுகுண்டுகளை வைத்திருந்தாலும், இப்போது கடலுக்கடியில் நீர் மூழ்கிக்கப்பலில் இருந்து புறப்பட்டு சென்று, கண்டம் விட்டு கண்டம் தாவி சென்று தாக்குதல் நடத்துகிற ஆற்றல் வாய்ந்த ஏவுகணை சோதனையை நடத்தி இருப்பது, அதிநவீனமானது; நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு சென்று தாக்குதல் நடத்தும் சாதனங்களை கண்டறிவது என்பது கடினமான ஒன்று என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த சோதனையால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 5:09 pm

வடகொரிய ராணுவ மந்திரிக்கு மரணதண்டனை, விமான எதிர்ப்பு பீரங்கியால் சுட்டு கொல்லப்பட்டார்

அதிபரின் நிகழ்ச்சியில் தூங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட வடகொரிய ராணுவ மந்திரிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. விமான எதிர்ப்பு பீரங்கி மூலம் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் அன் ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அதிகாரிகள், லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதை வழக்கமாக உள்ளது. அரசு நிர்வாகத்தை தூய்மையாக வைத்திருக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக வடகொரியா கூறுகிறது. கடந்த 4 ஆண்டுகால கிம் ஜாங் அன் ஆட்சி காலத்தில் 70-க்கும் மேற்பட்டோருக்கு இதுபோல் மரண தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது. தனது ஆட்சிக்கு எதிராக சவால் விட்ட மூத்த தலைவர்கள் 15 பேருக்கு கடந்த மாதம் மரண தண்டனையை அதிபர் கிம்ஜாங் அன் நிறைவேற்றினார்.

கிம்ஜோங் உன் அரசில் ராணுவ மந்திரியாக பதவி வகித்து வந்தவர் ஹியூன் யோங் சோல். 66 வயதான இவர் கடந்த மாத இறுதியில் அதிபர் கிம் ஜாங் அன் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ராணுவ மந்திரி ஹியூன் யோங் சோல் கண் அயர்ந்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது தேசத்துக்கு துரோகம் விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும்படி அதிபர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அண்மையில் ராணுவ மந்திரி ஹியூன் யோங் சோலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வடகொரியத் தலைநகர் பியாங்க்யாங்க் நகரில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் அவரை ஓரிடத்தில் இலக்காக நிற்கவைத்து சற்று தொலைவில் இருந்தவாறு விமான எதிர்ப்பு பீரங்கி மூலம் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். மேற்கண்ட தகவலை சியோல் நகரில் தென்கொரியா எம்.பி.க்களிடம் அந்நாட்டின் உளவுத் துறையான என்.ஐ.எஸ். தெரிவித்து இருக்கிறது.

ராணுவ மந்திரி ஹியூன் யோங் சோலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு அதிபர் கூட்டத்தில் அவர் தூங்கியது மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்றும், கடந்த மாதம் மாஸ்கோ நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டபோது ராணுவ மந்திரி ஹியூன் யோங் சோல், அதிபர் கிம்ஜாங் அன்னை பகிரங்கமாக விமர்சித்து பேசியதால் தண்டிக்கப்பட்டார் எனவும் தென்கொரிய உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 5:12 pm

பாகிஸ்தானில் பயங்கரம், பஸ் மீது மர்மநபர்கள் கொலைவெறித் தாக்குதல் 47 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயங்கரம், பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 47 பேர் உயிரிழந்தனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

கராச்சியில்உள்ள சாபோரா சவுக் பகுதியில் இஸ்மாய்லி பிரிவினரை ஏற்றிக் கொண்டு சென்ற பஸ்சில் ஆயுதம் தாங்கிய மர்மநபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். மோட்டார் சைக்கிளில்வந்த மர்மநபர்கள் பஸ்சுக்குள் புகுந்து அங்கியிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இச்சம்பவத்தில் 16 பெண்கள் உள்பட 47 பேர் உயிரிழந்தனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 3, 4 மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர்கள் 8 பேர் பஸ்சில் சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகிறது. பஸ்சில் இருந்தவர்களின் தலையை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

காயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே பலி எண்ணிக்கை உயரலாம் என்று கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். போலீசார் சம்பவ இடத்தில் குவிந்து உள்ளனர். இத்தாக்குதலை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் வைத்து இருந்தனர் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணையும் தொடங்கி உள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தப்பி ஓடியவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட பிரிவினர்மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதால் தீவிரவாத தாக்குதல்என உறுதி செய்யப்படவில்லை.





பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 5:12 pm

சவுதி அரேபியாவில் துப்பாக்கி சூட்டிற்கு இடையே சிக்கியிருக்கும் இந்தியர்கள், மீட்பதற்கு கோரிக்கை

ஏமன் எல்லையை ஒட்டிய சவுதி அரேபியாவின் நஜ்ரான் நகரில் துப்பாக்கி சூடு காரணமாக 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கிக் கொண்டு உள்ளனர். ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சவுதி அரேபியா தலைமையிலான அரபுபடைகளுக்கும் இடையே சண்டை நீடித்துவரும் நிலையில், அவர்கள் தங்களை உடனடியாக மீட்கும்படி இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர். நஜ்ரான் நகர்வாசியின் தகவலின்படி, ஏமன் எல்லையில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இடையே சிக்கிக் கொண்டுஉள்ள இந்திய ஒருவர் பேசுகையில், எங்களை மீட்க இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம். ஆனால் இதுவரையில் எந்தஒரு பதிலும் வரவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். வடமேற்கு பகுதியில் அமைந்து உள்ள நஜ்ரான் நகரம் ஏமன் எல்லையையே கொண்டு உள்ளது. இப்பகுதியில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து சென்ற நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். நஜ்ரானில் ராணுவ மையமும் உள்ளது. கடந்த 24 மணிநேரங்களில் ஏமன் கிளர்ச்சியாளர் நடத்திய தாக்குதலில் 6 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வங்காளதேசத்தை சேர்ந்த இருவரும் சண்டையில் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நஜ்ரான் நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களின் பாஸ்போர்ட் அனைத்தும், அதிகாரிகளிடம் சிக்கியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர்களால் அங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகாரிகள் அவரை தொடர்ந்து பணியாற்ற கேட்டுக் கொண்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது. அங்கு நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது. அதிகமான இந்தியர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் பகுதியிலே தங்க வேண்டிய நிலையில் சிக்கிஉள்ளனர். நஜ்ரான் நகரில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் அதிகமான இந்தியர்களே பணியாற்றி வருகின்றனர். “நாங்கள் தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளோம். அவர்களிடம் பேச காத்திருக்கிறோம்,” என்று அங்குள்ள இந்தியர் தெரிவித்து உள்ளார்.

எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துஉள்ள இந்தியர், நாங்கள் எங்களை மீட்க கோரிக்கை விடுத்து உள்ளோம். இருப்பினும் அரசு தரப்பில் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக நாங்கள் காணவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் தீவிரமாக சண்டையிட்டு வந்தனர். முக்கிய நகரங்களைப் பிடித்து கிளர்ச்சியாளர்கள் கைகள் ஓங்கிய நிலையில், சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி களத்தில் குதித்தது குறிப்பிடத்தக்கது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 56 of 81 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 68 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக