புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10 
339 Posts - 79%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 55 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 55 of 81 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 68 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 55 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 1:28 am

யு.எஸ். படைகள் தாக்குதலில் காயமடைந்த ஐ.எஸ். தலைவர் பாக்தாதி பலி

இராக்கில் அமெரிக்க ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஐ.எஸ். தலைவர் பாக்தாதி இன்று பலியானதாக செய்திகள் வெளியானது.

கடந்த மார்ச் 18-ஆம் தேதி சிரியா எல்லை அருகே உள்ள நினேவா மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்கா தலைமையிலான ஆதரவு நாடுகளின் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் அந்த இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அமெரிக்க தரப்பில், தாக்குதல் சம்பவத்தின்போது அவர் அங்கு இருந்திருக்க வாய்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாக்தாதி உயிரிழந்துவிட்டதாக ரேடியோ இரான் தெரிவித்துள்ளது.

உலகின் மிகக் கொடூரமான தீவிரவாத இயக்கமாக ஐ.எஸ். அமைப்பை உருவாக்கியதில் அபு பக்கர் பாக்தாதி முக்கிய பங்கு வகித்தவர். 2010-ம் ஆண்டில் ஐஎஸ் அமைப்பில் தலைவரானது முதல் எப்போதும் தலைமறைவாக இருந்து வரும் அபுபக்கர், இதுவரை ஒருமுறை மட்டுமே பொது இடத்தில் தோன்றினார்.



உலகச் செய்திகள்!  - Page 55 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 2:01 am

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் உக்கிர தாக்குதல்-ராணுவம் பதிலடி: 30 பேர் சாவு

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த வெளிநாட்டுப் படைகளில் பெரும்பாலான படைகள் வெளியேறிவிட்ட நிலையில், பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக குந்துஸ் புறநகர் பகுதியில் இன்று மிகப்பெரிய தாக்குதலில் தலிபான்கள் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மோதலில், 8 ராணுவ வீரர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஒரு காலத்தில் தலிபான்களின் கடைசி கோட்டையாக விளங்கிய குந்துஸ் மாகாணத்தின் காவல் மற்றும் ராணுவ சோதனைச் சாவடிகள் மீது நூற்றுக்கணக்கான தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தீவிரவாதிகளால் அந்த பகுதியில் அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து, அதிபர் அஷ்ரப் கனி, இந்தியாவுக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.



உலகச் செய்திகள்!  - Page 55 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 2:13 am

மண்டை ஓடுகளை திருடிய துறவி

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அண்மையில் 65 வயது புத்த துறவி ஒருவரும், அவருடைய சீடர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கைதுக்கு காரணம் குருவும், சீடர்களும் கடந்த 19-ந்தேதி உடோன் தானி என்ற இடத்தில் இடுகாடு ஒன்றில் கல்லறைகளை உடைத்து அங்கிருந்து 2 மண்டை ஓடுகளை திருடியது தான். அபூர்வ சக்தி கிடைக்கும் தாயத்து தயாரிப்பதற்காக இடுகாட்டுக்கு சென்று கல்லறைகளை உடைத்ததாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் புத்த துறவியோ, லாட்டரிச் சீட்டில் தனக்கு பணம் விழுமா? என்பதை முன்கூட்டியே ஊகித்து அறிய ஆவிகளை சந்திக்கச் சென்றேன், மண்டை ஓடுகளை எடுக்க அல்ல என்று மறுத்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் கிராமப் பகுதிகளில் இதுபோல் ஆவிகளை சந்திக்க(?) புத்த துறவிகள் செல்வது வழக்கமான ஒன்று தான் என்று கூறப்படுகிறது.



உலகச் செய்திகள்!  - Page 55 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 3:34 am

ஆப்கானிஸ்தானில் பரிதாபம் நிலச்சரிவில் 52 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில், பதக்ஷான் மாகாணம், மிகவும் ஏழ்மையான மாகாணம். வளர்ச்சியே இல்லாத இந்த மாகாணத்தில் அடிக்கடி நிலச்சரிவுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், அங்கு தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள கவஹான் மாவட்டத்தில் நேற்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, ஏற்கனவே நாட்டின் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்வதற்கு சாலை வசதிகள் கிடையாது. ஹெலிகாப்டரில் மட்டுமே செல்ல முடியும். எனவே மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம், இதே மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350 பேர் உயிரோடு புதைந்தது நினைவுகூரத்தகுந்தது.



உலகச் செய்திகள்!  - Page 55 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 3:37 am

தென்கொரியாவில் 295 பேர் பலி கப்பல் கேப்டனுக்கு வாழ்நாள் சிறை

தென்கொரியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16–ந்தேதி ஒரு பயணிகள் கப்பல். கடலில் மூழ்கி பெரும் விபத்து நேரிட்டது. இதில் 295 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக கப்பலின் கேப்டன் லீ ஜூன் கியாக் உள்ளிட்டவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் லீ அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் 36 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று அப்பீல் கோர்ட்டில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்–முறையீட்டு வழக்கை விசாரித்த அப்பீல் கோர்ட்டு லீக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது.

வழக்கில் தொடர்புடைய பிற 14 பேருக்கு 18 மாதங்கள் முதல் 12 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.



உலகச் செய்திகள்!  - Page 55 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 3:39 am

ஆப்கான் மக்களுக்கு தோள் கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி

ஆப்கானை அதன் வன்முறையிலிருந்து மீட்க அந்நாட்டு மக்களுக்கு தோள் கொடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உதவும் என்று அந்நாட்டு அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கனி 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ளார்.

டெல்லியில் செவ்வாயன்று பிரதமர் மோடியை சந்தித்த அவர், பாதுகாப்பு, சாலை இணைப்பு வசதி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விரிவாக விவாதித்தனர். அதைத்தொடர்ந்து கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது மோடி கூறியது:

பூகோள ரீதியிலும், அரசியல் ரீதியிலும் தடைகள் இருந்த போதிலும் அதைத்தாண்டி இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மலர்ந்து முழுமையடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நீடிக்க வேண்டும் என்ற ஆப்கானிஸ்தான் அதிபரின் லட்சய திட்டத்துக்கு இந்தியா ஆதரவு தரும்.

இந்த ஒத்துழைப்பு அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சியை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தரப்பினரின் விருப்பங்கள், உரிமைகளை பாதுகாக்க உதவ வேண்டும். ஆப்கானிஸ்தானில் வெற்றி ஏற்பட வேண்டும் என்றால் அங்கு நடக்கும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதும் அண்டை நாடுகள் ஆக்கபூர்வ அணுகுமுறையை கையாளவதும் அவசியம்.

ஆப்கானிஸ்தானுடன் நல்லெண்ணமும் நட்புறவும் இருப்பதை இந்தியா ஆதரிக்கிறது அந்நாட்டில் ஜனநாயகம் மலர்ந்து வளம் மிக்கதாக மாற இந்தியா உறுதுணை புரியும். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் தொடர்வது வேதனை தருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டு பாதுகாப்புப்படைகள் பாதுகாக்கின்றன இதற்காக நன்றி தெரிவிப்பது எனது கடமை.

ஆப்கானிஸ்தானுடனான ஒத்துழைப்புகள் பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆப்கானிஸ்தான் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தப்படும் என்றார் மோடி.

பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் பேசிய மோடி, அண்டை நாட்டில் இருந்து வரும் தீவிரவாதத்தால் ஆப்கானிஸ்தானுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. அந்நாடு தீவிரவாதத்துக்கு உதவுவதை நிறுத்த வேண்டும். தீவிரவாதத்தால் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான வலியை நாங்களும் உணர்ந்துள்ளோம். தீவிரவாதத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்கு துணை நிற்போம் என்றார்.

“ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் மக்களை வேட்டையாடுகிறது. இதை முறியடிக்க வேண்டும்” என்று அஷ்ரப் கூறினார். முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அஷ்ரப் சந்தித்துப் பேசினார்.

புதனன்று இந்திய தொழில்துறையினரை அஷ்ரப் சந்தித்துப் பேச இருக்கிறார்.



உலகச் செய்திகள்!  - Page 55 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 3:40 am

* பாகிஸ்தானில் பெஷாவர், திர், சுவாட், மலாகண்ட் நகரங்களில் நேற்று காலையில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகள், கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இதே போன்று தஜகிஸ்தானிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது.

* தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று இரண்டு பயணிகள் ரெயில்கள் மோதி, விபத்து நேரிட்டது. இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

* திபெத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

* சீனாவில் யுனான் மாகாணத்தில் மூத்த மருத்துவர் ஒருவர் கட்டுமான திட்டங்கள், மருத்துவ சாதனங்கள் கொள்முதல், மருத்துவர்கள் நியமனம் ஆகியவற்றில் 5.64 மில்லியன் டாலர் (சுமார் ரூ.35 கோடி), 100 வீடுகள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.



உலகச் செய்திகள்!  - Page 55 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 3:52 am

பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

டோனி அபாட்டின் தொடர் கோரிக்கைகள், மயூரன் சுகுமாரனின் உருக வைக்கும் ஓவியங்கள், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நடத்திய பிரார்தனைகள் என எதுவும் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மனதை அசைத்துப் பார்க்கவில்லை.

இந்தோனேசிய நேரப்படி சரியாக நள்ளிரவு 12.25 மணிக்கு மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பாலி நைன் கைதிகளுக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பெண் கைதியான மேரி ஜேன் வேலோசோவிற்கு மட்டும் கருணை காட்டப்பட்டதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களாக விடோடோ, பாலி நைன் குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றாலும், கடந்த ஜனவரி மாதம் அவர் பாலி நைன் குறித்து கூறுகையில், “போதைப் பொருட்களால் இந்தோனேசியாவில் நாள் ஒன்று 50 பேர் இறக்கின்றனர். ஆகவே, போதைப் பொருள் கும்பலுக்காக என்னிடம் கருணை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறியிருந்தார்.

அவர் கூறியது போலவே கடைசி வரை அவரிடம் கருணை பிறக்கவில்லை. ஏறக்குறைய 10 ஆண்டு காலமாக நீடித்து வந்த அவர்களின் உயிர் போராட்டம் சில நிமிடங்களுக்கு முன்னாள் முடிந்து போயின.

மரண தண்டனைக்குரிய குற்றங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால் மரண தண்டனையின் மூலம் பறிக்கப்படும் உயிர் நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை. உயிருக்கான அளவு கோல்கள், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாக இருக்க முடியாது.

மனிதர்களால் மீட்டுக் கொடுக்க முடியாத உயிரை, சட்ட விரோதமாக பறித்தாலும் சரி, சட்ட ரீதியாக பறித்தாலும் சரி, அது கொலைக்குச் சமமானதே என பெரும்பான்மையான நாடுகள் ஒப்புக் கொள்கின்றன. அவற்றில் விதிவிலக்காக இருக்கும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று.



உலகச் செய்திகள்!  - Page 55 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 3:55 am

மேலாடை இன்றி சூரிய குளியல்

வெளிநாடுகளில் ஆண்களும், பெண்களும் சூரியக்குளியலில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருப்பர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்வேறு கடற்கரைகளில், பெண்கள் மேலாடையின்றி சூரியக்குளியல் போட அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் லாஸ் ஏஞ்சல்சின் வெனிஸ் கடற்கரையில் இதற்கு அனுமதியில்லை.

இந்த கடற்கரையிலும் ஆண்களைப்போல பெண்களையும் மேலாடையின்றி சூரியக்குளியலுக்கு அனுமதிக்க வேண்டும் என லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட தலைவர்கள் உள்ளூர் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். சூரியக்குளியலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமத்துவம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர்கள், மேலாடையின்றி குளித்தால் தான் ஐரோப்பிய உணர்வை அதிகமாக உணர முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.

வெனிசுக்கு அருகே உள்ள கவுன்சில் இந்த பரிந்துரையை அங்கீகரித்ததுடன், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்சிலுக்கும் அனுப்பி வைத்தது. அங்கும் இந்த பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டால் வெனிஸ் கடற்கரையிலும் பெண்கள் மேலாடையின்றி சூரியக்குளியல் போட முடியும்.



உலகச் செய்திகள்!  - Page 55 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 3:56 am

அதிக போதைக்கு பழங்கால மருந்து

பழங்கால மனிதர்கள் நோய் தீர்க்க பயன்படுத்திய பல்வேறு மருந்து வகைகள் இன்று வழக்கத்தில் இருந்து மறைந்து விட்டன. இவற்றை கண்டுபிடிக்கவும், இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள கையெழுத்து படிகளை மொழிமாற்றம் செய்வதிலும் தொல்லியல் ஆய்வு நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த ஆய்வின் பயனாக, அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் தலைவலி மற்றும் பின்விளைவுகளை நீக்க பயன்படுத்தும் மருந்து ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 1900 ஆண்டுகளுக்கு முன், நாணற்புல் தாளில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட கையெழுத்துப்படி ஒன்றை வரலாற்று ஆய்வாளர்கள் மொழிமாற்றம் செய்த போது இந்த மருந்தை கண்டுபிடித்தனர்.

அலெக்சாண்டிரியன் சின்னம் எனப்படும் ஒருவித செடியில் உள்ள இலைகளை நெக்லஸ் போல செய்து அணிந்தால், இந்த தலைவலி குணமடையும் என அதில் எழுதப்பட்டிருந்தது. கிரேக்க, ரோம நாகரிக காலங்களில், புகழ்பெற்ற தடகள வீரர்கள், மேடை பேச்சாளர் மற்றும் புலவர்களை கவுரவிக்க இந்த செடிகள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 55 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 55 of 81 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 68 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக