புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
284 Posts - 45%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
19 Posts - 3%
prajai
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 54 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 54 of 81 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 67 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 54 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 11:50 pm

நிர்வாணமாக வந்தால் தான் அனுமதி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓவிய கண்காட்சி ஒன்று நடைபெற்றது. James Turrell என்பவர் வரைந்த ஓவியங்களை பார்க்க வருபவர்களுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஓவியத்துக்கும் அதை ரசிப்பவருக்கும் இடையே எதுவும் இருக்கக்கூடாது என்பதால், பார்வையாளர்கள் முழு நிர்வாணமாக வரவேண்டும் என்று கூறப்பட்டது.

இதை ஏற்று 50-க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் பிறந்த மேனியுடன் வந்து ஓவியத்தை ரசித்துச் சென்றனர்.



உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 11:59 pm


ஸ்மார்ட் போனில் விளையாடியதால் காயம்

ஸ்மார்ட் போனை வைத்து வீடியோ கேம் விளையாடுவது இளைய தலைமுறையினரின் பொழுதுபோக்கு. பஸ்களில், ரெயில்களில் பயணத்தின் போது கூட, இவர்கள் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

இப்படித்தான் அமெரிக்காவில் ஒரு இளைஞர் தனது ஸ்மார்ட் போனில் ‘கேண்டி கிரஷ் சாகா’ என்ற புதிர் விளையாட்டை விளையாடினார். அதுவும் இடையில் நிறுத்தாமல், ஒரு மாதம் விளையாடினார்.

இதன் காரணமாக அவரது கட்டைவிரல் தசை நார் கிழிந்து விட்டது. இப்படிப்பட்ட காயங்கள் பொதுவாக வலி தரக்கூடியவையாக இருக்கும்.

ஆனால் அவருக்கு வலியே இல்லையாம். அதே நேரத்தில் பிரச்சினைக்கு சிகிச்சை செய்து தீர்வு தேடி கொண்டார்.

வீடியோ கேம் விளையாடி தசைநார் கிழிந்தாலும், வலியே வராது என்பதையே இவரது அனுபவம் காட்டுவதாக சொல்கிறார்கள்.

இந்த ஆசாமி, தனது இடது கை விரல்களை கொண்டு விளையாடி இருக்கிறார். வலது கையை மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தி இருக்கிறார்.



உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 11:59 pm



* நியூசிலாந்து நாட்டில் வெலிங்டன் நகரில் நேற்று திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 5.2 புள்ளிகளாக பதிவானது.

* அமெரிக்காவின் தலைமை அறுவை சிகிச்சை மருத்துவராக இந்தியரான டாக்டர் விவேக் மூர்த்தி நேற்று பதவி ஏற்றார். அவருக்கு துணை ஜனாதிபதி ஜோ பிடென் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

* சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. அவற்றில் இதுவரை 2,079 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 66 பேர் அப்பாவி பொதுமக்கள். இங்கிலாந்தில் இயங்கி வரும் சிரிய மனித உரிமை கண்காணிப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

* பாகிஸ்தானில் சாவால், சர்கோதா சிறைகளில் தலா ஒருவர் வீதம், நேற்று 2 மரண தண்டனை கைதிகள் தூக்கில் போடப்பட்டனர்.

* லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் உள்ள கால்புகோ எரிமலை வெடித்து சிதறி வருகிறது. இதனால் அதன் 20 கி.மீ. சுற்றளவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.



உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 2:22 am

சவ ஊர்வலத்தில் ஆடை அவிழ்ப்பு நடனத்துக்கு சீனாவில் தடை

சீனாவின் கிராமப்புறங்களில் இறுதிச்சடகங்குகள் நடைபெறும் வேளையில் ஒரு வினோதமான வழக்கம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

படிப்படியாக ஆடைகளை களைந்த படியே நடனமிடும் மங்கையர்கள் இறுதி ஊர்வலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

எதற்காக? இறந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தான்!

இறுதி சடங்குக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இறந்துபோன மனிதருக்கு அதிகளவில் மரியாதை கிடைக்கும் என சீன கிராபமப்புறத்து மக்களின் நம்புகின்றனர்

ஆனால் சீனாவின் கிராமப்புறங்களில் நடக்கும் இது போன்ற இறுதிடச்சடங்கு சம்பிரதாயம் வெளி உலகின் பார்வைக்கு அவ்வளவாக தெரிவது கிடையாது.

இந்த ஆடை அவிழ்ப்பு நடனம் இறுதிச்சடங்குகளில் ஆடப்படுவது குறித்து நிறைய பேருக்கு தெரியாத நிலையில், சமூக வலைத்தலங்களில் இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சிலர் தங்களது ஆச்சரியத்தையும், கோபத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

இது எப்படி ஒரு பாரம்பரிய வழக்கமாக இருந்திருக்க முடியும் என்கிறார் ஒரு வலைப்பதிவர். மற்ரொருவரோ, விளையாடுகிறீர்களா என்ன, கவர்ச்சி ஆட்டம் இறுதிச்சடங்கிலா? என்று வாயை பிளக்கிறார்.

ஆடை அவிழ்ப்பு நடனம் சீனாவில் சட்டவிரோதமானது.

சமீபத்தில் சீனாவின் கலச்சார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹேபை மாகாணம் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஜீ ஆங்க் ஷு என்ற இடத்திலும் ஆபாச நடனமாடும் மங்கையர் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க அழைக்கப்பட்டிருப்பது குறித்து விவரித்திருக்கிறது.

இது போன்ற நாகரீகமற்ற நிகழ்ச்சிகள் , சீனாவின் கலாசார மதிப்பக் சீர்குலைத்து விடும் என்றும், இறுதிச்சடங்கில் இடம்பெறும் இந்த கவர்ச்சி நடனங்கள், வளர்ந்து வரும் நவீன சீனவின் வாழ்க்கை முறையை முடக்கும் தன்மை கொண்டது எனவும் சீனாவின் கலச்சார அமைச்சு, கண்டித்திருக்கிறது.

இதில் நடனம் ஆடியவர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் தண்டிக்கப்பட்டிருக்கிரறார்கள்.

இந்த வழக்கத்தை ஒழிக்க அதிகாரிகள் முன்னர் எவ்வளவோ முயன்றும் நடக்கவில்லை. ஆனால் விடாமுயற்சியுடன் சீன காவல்துறையடன் இணைந்து, இந்த வழக்கத்தை முற்றிலும் ஒழிக்க முடிவு செய்திருக்கிறது சீன கலாச்சாரத்துறை.

சீன கிராமப்புற மக்களின் மூடநம்பிக்கைக்கும் சீன கலாச்சாரத்துறையின் விடாமுயற்ச்சிக்கும் சரியான போட்டி தான் அங்கு இப்போது நடைபெறுகிறது என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.




உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 9:38 pm

சீனா 110 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க முடிவு

சீனாவின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங் கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னிட்டு பாகிஸ்தான் நாடு சீனாவிடம் இருந்து ஜே.எப்.-17 தண்டர் ரக போர் விமானங்களை வாங்க உள்ளது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவிடம் இருந்து மொத்தம் 110 போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது.

அவற்றில் முதல் கட்டமாக 50 ஜெட் விமானங்களை 3 வருட காலத்திற்குள் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கும் என சீன செய்தி தாளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், மீதமுள்ள 60 விமானங்கள் எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த ரக விமானங்களின் தொழில் நுட்பத்தை பாகிஸ்தானுக்கு சீனா முன்பே வழங்கி விட்டது. இதனால் பாகிஸ்தானில் தண்டர் ரக போர் விமானங்கள் தயாரிப்பு நடைபெறுகிறது. ஆனால், தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட உடனடியாக அதிக அளவில் போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு தேவையாக உள்ளது.

அரபிக் கடலில் பாகிஸ்தான் நாட்டின் குவாடர் துறைமுகத்தில் இருந்து சீனாவின் மேற்கு பகுதி வரை இணைப்பதற்கு ஜீ ஜின்பிங் 4,600 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் வான்வவெளிக்குள் ஜின்பிங் நுழையும்போது, அவரது சிறப்பு விமானத்தை சுற்றி 8 ஜே.எப்.-17 ரக போர் விமானங்கள் பாதுகாப்பிற்காக உடன் வந்தன.

அவரது வருகையின்போது, பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளுக்கு இடையே 51 ஒப்பந்தங்கள் கையெழுத்ததிடப்பட்டு உள்ளன. இதற்கு முன் வெளியான தகவலில், சீனா, 400-500 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 8 நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தானுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.



உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 10:35 pm

தீவிபத்தில் சிக்கி ‘பயர்’ ‘ஹெல்ப்’ என்று கூச்சலிட்ட கிளிகள்

அமெரிக்காவில் இடஹோ பிராந்தியத்தில் போய்சி நகரில் ஒரு கட்டிடத்தில் தீப்பிடித்துக்கொண்டது. தகவல் அறிந்து, தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். உள்ளே இருந்து ‘பயர் பயர்’ ‘ஹெல்ப் ஹெல்ப்’ என்று குரல்கள் கேட்டவண்ணம் இருந்தன.

அதைக் கேட்ட தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்துக்குள் நிறைய பேர் சிக்கி இருக்கக்கூடும் என்று கருதினர். உள்ளே சென்று தேடுதல் வேட்டை நடத்தியதில், அந்த குரல்களுக்கு சொந்தக்காரர்கள் இரண்டு கிளிகள் என்று கண்டுபிடித்தனர். மனிதர்களைப் போலவே அவை கூச்சலிட்டு உதவி கோரியுள்ளன. அவை பத்திரமாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டன.




உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 10:36 pm

* இஸ்ரேல் ராணுவத்தில் பணி புரிந்து வருபவர், ஏடியல் யூசுப் (வயது 22). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் இருந்து அங்கு சென்று ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவர் ராணுவத்தில் மிக சிறப்பாக பணியாற்றியதற்காக அந்த நாட்டின் அதிபர் விருது வழங்கப்பட்டுள்ளது.

* ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள ஒரு பூங்காவில் மிக அதிகளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பூங்கா சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

* இத்தாலி நாட்டில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல் தொடுக்க சில தீவிரவாதிகள் முயன்றுவருவதாக உளவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த தீவிரவாதிகளை தேடி கைது செய்யும் வேட்டையில் இத்தாலி போலீஸ் முழுவீச்சில் இறங்கி உள்ளது.

* இஸ்ரேல் நாடு தனது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருந்த வேளையில் காஸா முனை பகுதியில் இருந்து பாலஸ்தீன போராளிகள் ராக்கெட் வீச்சு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் எந்த ஒரு சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

* பாகிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதிகளை குறி வைத்து கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் குண்டு வீச்சு நடத்தியது. இதில் அமெரிக்கா மற்றும் இத்தாலியை சேர்ந்த தலா ஒரு பணய கைதி சிக்கி பலியாகினர். அந்த சம்பவத்துக்கு இப்போது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பொறுப்பேற்றுள்ளார். தவறுதலாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களிடம் அவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டுள்ளார்.




உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2015 12:13 am

சிலி கால்புகோ எரிமலை வெடிப்பு: சாம்பல் மேகம் பிரேசிலை அடைந்தது - விமானங்கள் ரத்து

சிலி நாட்டில் உள்ள கால்புகோ எரிமலை வெடிப்பினால் வெளியேறும் சாம்பல் மேகங்கள் தெற்கு பிரேசிலை அடைந்ததால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

43 ஆண்டுகளாக செயலற்று இருந்த சிலி நாட்டின் கால்புகோ எரிமலை மீண்டும் வெடித்து, வானில் சாம்பல் மற்றும் புகையை கக்கி வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிமலையில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் கலந்த புகையை கக்கி வருகிறது. எரிமலைக்கு அருகில் சில கட்டிடங்கள் சாம்பலின் எடையை சரிந்துவிட்டது. வளிமண்டலத்தில் பரவியிருக்கும் சாம்பல் மேகங்கள் அண்டை நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது.

முக்கியமாக பிரேசிலின் வான் பகுதியில் நகர்ந்து செல்லும் சாம்பல் மேகங்களால் சிலி, அர்ஜென்டீனா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளின் தலைநகரங்களுக்கு செல்ல இருந்த சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த விமான நிறுவனங்களும் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.

அந்நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தெற்கு துறைமுக நகரமான பர்டோ மோண்டில் இருக்கும் கால்புகோ எரிமலை புதன் கிழமை முதல் செயல்பட தொடங்கியுள்ளது. அப்பகுதியில் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை அப்பகுதியில் வசிக்கும் 6500 அதிகமான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருக்கும் 90 எரிமலைகளில், மிகவும் ஆபத்தானது கால்புகோ எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 1:27 am

இட்லிப் இராணுவ முகாம் சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் வசம்

சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிபிலுள்ள இராணுவ முகாம் ஒன்றை, அல் கயீதாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிபிலுள்ள இராணுவ முகாம் ஒன்றை, அல் கயீதாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

அங்கு செயல்பட்டு வரும் சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்கள் பெற்றுவரும் வெற்றிகளின் தொடர்ச்சியாக, இப்போது அல் கர்மீத் இராணுவ முகாமைக் கைபற்றியுள்ளனர்.

இதையடுத்து அல் கையீதாவுடன் தொடர்புடைய அந்தக் குழுக்கள் அம்மாகாணத்தின் பல முக்கியப் பகுதிகளில் இருந்து அரச படைகளை விரட்டியடித்து வருகின்றனர்.

இதேவேளை கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் வெற்றிப் படை என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கிளர்ச்சிக் கூட்டமைப்பு ஒன்று ஜிஸ்ர் அல் ஷுஹௌர் நகரைக் கைப்பற்றியது.

இதனிடையே அதிபர் அஸத் தலைமையிலான அரச படைகள் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இட்லிபிலுள்ள பல இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

அப்படியானத் தாக்குதல்களில் எழுபதுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.




உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 1:28 am

பாக்.கில் மனித உரிமை ஆர்வலர் கொலை: விசாரணைக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவு

பாகிஸ்தானில் ஷபீன் மஹ்மூத் என்ற மனித உரிமைகள் ஆர்வலர் மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

கராச்சியில் ‘இரண்டாவது தளம்’ என்ற பெயரில் அமைப்பை நடத்தி வரும் ஷபீன், மனித உரிமைகள் தொடர்பாக விவாதங்கள், கருத் தரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சி கள் நடத்தி வருகிறார்.இவர் கடந்த வெள்ளிக்கிழமை கலவர பூமியாகத் திகழும் பலுசிஸ்தானில் நடை பெறும் தவறுகள் குறித்து கருத் தரங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.

கருத்தரங்கம் முடிந்ததும் ஹோட்டலில் இருந்து காரில் தனது தாயாருடன் அவர் புறப்பட்டார். போக்குவரத்து சிக்னல் ஒன்றில் காரை நிறுத்தியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் சுட்டதில் ஷபீன் உயிரிழந்தார். அவரது தாயார் பலத்த காயம் அடைந்தார்.

பலுசிஸ்தான் மனித உரிமைகள் ஆர்வலர் மமா அப்துல் காதிர் இதுபற்றி கூறும்போது, “இந்த கருத்தரங்குக்கு முன்னால் ஷபீனுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதற்கு முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மிரட்டல்கள் வந்தன. பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பற்றி பேசுவது கடின மாக உள்ளது.

எனக்கும் தொடர்ந்து போனில் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அரசு அமைப்புகள் என்னை தொடர்புகொண்டு, இத்தகைய கருத்தரங்குகளில் பங்கேற்க வேண்டாம் என நிர்பந்திக்கின்றன. மனித உரிமைகள் பற்றி பேசினால் துரோகிகளாக பார்க்கிறார்கள்” என்றார். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

பலுசிஸ்தானில் தீவிரவாதத்தில் ஆர்வம் இல்லாத பிரிவினைவாதிகள், மாணவர்கள், கல்வியாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் ஏதாவது குற்றம் சாட்டி கொடுமைப்படுத்தி கொல்கின்றனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் குறை சொல்கின்றனர்.



உலகச் செய்திகள்!  - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 54 of 81 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 67 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக