ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!

+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters

Page 48 of 81 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 64 ... 81  Next

Go down

உலகச் செய்திகள்!  - Page 48 Empty உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 48 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


உலகச் செய்திகள்!  - Page 48 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Thu Mar 12, 2015 2:20 am

நைஜீரியாவில் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதலில் 34 பேர் பலி

நைஜீரியாவில் ஒரு குறிப்பிட்ட அரசை உருவாக்க வலியுறுத்தி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் வடகிழக்கு நைஜீரிய நகரமான மைடுகுரியில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு சந்தையில் நேற்றுமுன்தினம் இளம் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். இந்த தாக்குதலில் 34 பேர் உடல் சிதறி பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள் தான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மைடுகுரி சந்தையில் கடந்த சனிக்கிழமை நடந்த தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதலில் 54 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.


உலகச் செய்திகள்!  - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 48 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Thu Mar 12, 2015 2:20 am

எகிப்து பிரமிடுகள்-நினைவு சின்னங்களை அழிக்க அழைப்பு விடுத்துள்ள தீவிரவாதிகளுக்கு முஸ்லீம் மத போதகர் ஆதரவு

உலக அதிசியங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் விளங்கி வருகிறது.இந்த பிரமிடுகளை அழிக்க ஐ.எஸ் தீவிரவாதிகள் அழைப்பு விடுத்து உள்ளனர். இதற்கு குவைத்தை சேர்ந்த இஸ்லாமிய போதகர் ஒருவர் ஆதரவு தெரிவித்து உள்ளார். எகிப்திய செய்தி பத்திரிகையில் போதகர் இப்ராஹிம் அல்கண்டாரி கூறி இருப்பதாவது:-

ஆரம்ப கால முஸ்லீம்களுக்கு அவற்றை அழிக்க தைரியம் இல்லை. அதற்காக தற்போது உள்ள முஸ்லீம்கள் இதை பின்பற்ற வேண்டும் என்பது இல்லை.உண்மையில் முகமது நபியை பின்பற்றிய ஆரம்பகால முஸ்லீம்கள் எகிப்திய பாரோ நினைவு சின்னங்களை அழிக்க முடிய வில்லை ஆனால் இப்போது செய்யவேண்டும் என்று அர்த்தமில்லை என அல் கண்டாரி கூறியதாக அல் வதன் தினசரி செய்தி வெளியிட்டு உள்ளது. நினைவு சின்னங்களை அழித்து அதன் வழிப்பாட்டுக்கு முடிவு கொண்டு வரவேண்டும்.

இது போன்ற கட்டிடங்களை அழிப்பது மத கடமையாகும் என ஐ.எஸ் இயக்க தலைவர் அபு பக்கர் அல்-பஹாதி கூறியதை அவர் மேற்கோள் காட்டி உள்ளார்.

கடந்த மாதம் ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசூல் நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் உள்ளது. அங்குள நினிவேக் அருங்காட்சியகத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சேதப்படுத்தியுள்ளனர். அருங்காட்சியகத்தில் வரலாற்று புகழ்மிக்க புராதன பொருட்களை ஆயுதம் தாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் அழிப்பது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ளது. வீடியோவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிலைகளை சுத்தியலால் அடித்து நெறுக்கும் காட்சி, அவற்றை கிழே தள்ளும் காட்சி மெற்றும் அருங்காட்சியத்தில் இருந்த பொருட்களை சேதம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய, விலைமதிப்பில்லாத புராதன சிலைகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் அழித்துள்ளனர். அஸ்ஸிரிய காலத்தை சேர்ந்த சிறகுகள் கொண்ட காளை மாட்டின் கலைச்சின்னமும் அழிக்கப்பட்டது. இவை பொய்யான சிலைகள் என்றும், அவற்றை அழிக்க முகமது நபி உத்தரவிட்டார் என்றும் வாசங்களும் வீடியோவில் இடம்பெற்று இருந்தது குறிப்பிட தக்கது.


உலகச் செய்திகள்!  - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 48 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Thu Mar 12, 2015 2:24 am

87 வயது பாட்டியை கற்பழித்து சக்கர நாற்காலி மூலம் உலவவிட்ட 15 வயது சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை ஒட்டியுள்ள ஹெமெட் பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்துக்குள் புகுந்த இரு பள்ளி மாணவர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 87 வயது பாட்டியை முரட்டுத்தனமாக கற்பழித்தனர்.

அவரை அதோடு விட்டுவிடாமல், அங்கிருந்த 2 பாட்டில் பிளீச்சிங் பவுடர் கலந்த கரைசலை வாயில் ஊற்றி அவரை கொல்ல முயற்சித்து தப்பியோடி விட்டனர். அறைக்குள் இருந்த அபாய அறிவிப்பு பொத்தானை அந்தப் பாட்டி அழுத்தியதால் ஓடோடிவந்த காவலாளிகள் அவரை காப்பாற்றினர்.

இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பாட்டி நடமாட முடியாத முடக்குவாத நோய்க்குள்ளானார். தற்போது, சக்கர நாற்காலியின் துணையுடன் உலவிவரும் அந்த
பாட்டியை இந்த நிலைக்கு ஆளாக்கிய மாணவர்கள் ரூபன் ஜோஸ் மெலன்சன்(15), ரேமன்ட் மைக்கேல் மிரிண்டா(14) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது இரண்டாண்டுக்கு முன்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 18 வயது நிறைவடையும் வரை சிறார்கள் காப்பகத்திலும், 18 வயதுக்கு பின்னர் இதர கைதிகளுக்கான சராசரி சிறையிலும் இந்த 30 ஆண்டு தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் ஆஜரான அந்த பாட்டி, ‘நீங்கள் எனக்கு செய்துள்ள தீங்கு என்ன? என்பதை எனது முகத்தை ஒரு முறை பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். எனது சுதந்திரத்தை பறித்த நீங்கள் கட்டாயம் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும்’ என குற்றவாளிகளிடம் கண்ணீர் மல்கக் கூறியது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.


உலகச் செய்திகள்!  - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 48 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Thu Mar 12, 2015 3:16 am

நைஜீரியாவில் ராணுவ தாக்குதலில் 300 தீவிரவாதிகள் பலி; 2 நகரங்கள் மீட்கப்பட்டன

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள் அண்டை நாடுகளான நைஜர் மற்றும் சாத் நாடுகளிலும் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜீரிய ராணுவத்துடன் நைஜர், சாத் மற்றும் கேமரூன் நாடுகளின் படைகளும் ஈடுபட்டு உள்ளன.

இந்தநிலையில் நைஜர் மற்றும் சாத் நாடுகளின் கூட்டு ராணுவப்படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மலாம் படோவ்ரி மற்றும் டமாஸ்க் நகரங்களை மீட்கும் அதிரடி நடவடிக்கையில் நேற்றுமுன்தினம் ஈடுபட்டனர். எதிர்பாராத தாக்குதலால் தீவிரவாதிகளால் பதிலடி கொடுக்க முடியவில்லை.

இதில் தீவிரவாதிகள் 300 பேர் கொல்லப்பட்டனர். 2 நகரங்களும் மீட்கப்பட்டன. இந்த சண்டையில் 30–க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.


உலகச் செய்திகள்!  - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 48 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Thu Mar 12, 2015 5:22 pm

நையாண்டி கவிதை வெளியிட்ட துருக்கி அழகிக்கு 4 ஆண்டு ஜெயில்

உலகச் செய்திகள்!  - Page 48 201503121508491478_Turkey-may-jail-beauty-queen-for-insulting-president_SECVPF

சமீபத்திய காலமாக துருக்கியில் ஊடக சுதந்திரங்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைதள பதிவுகள் ஒடுக்கபடுவதாகவும் புகார் எழுந்து உள்ளது. அரசுக்கு எதிராக நூற்றுகணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கி நாட்டின் முன்னாள் அழகி மெர்வே புயுக்சரக். இவர் 2006 ஆம் ஆண்டு மிஸ் துருக்கியாக தேர்ந்து எடுக்கபட்டவர் ஆவார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் நையாண்டி கவிதை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த கவிதை மூலம், துருக்கி அதிபர் எர்டோகனை அவர் களங்கப்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் இவர் மீது புகார் செய்யபட்டது. போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 4 1/2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும் என கூற்ப்படுகிறது.


உலகச் செய்திகள்!  - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 48 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Thu Mar 12, 2015 5:23 pm

லண்டனில் சுரங்கப் பாதை தோண்டும் போது,16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3000 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு !!

லண்டனில் ரயில் சுரங்கப் பாதையில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனில் ரயில் சுரங்கப் பாதை அமைக்க பள்ளம் தோண்டும் போது, யாரும் எதிர்பாராத வகையில் 16 மற்றும் 17வது நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 3000 எலும்புக் கூடுகள் மண்ணில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மனித எலும்புக் கூடுகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம், லண்டனில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வாழ்ந்திருக்கிறது என்பதைக் கண்டறியலாம் என்றும் தெரிய வந்துள்ளது.


உலகச் செய்திகள்!  - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 48 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Fri Mar 13, 2015 10:37 pm

உள்நாட்டில் தயாரான ஆளில்லா உளவு விமானம், ஏவுகணையை இன்று பாகிஸ்தான் சோதித்தது

தீவிரவாதிகளை தேடி அழிக்கும் முயற்சியில் ஆளில்லா விமானங்களை இதுவரை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து விலைக்கு வாங்கிவந்த பாகிஸ்தான், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா உளவு விமானத்தை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

‘புராக்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த விமானம் உரிய இலக்கை சரியாக தாக்கி அழித்ததாகவும், தீவிரவாதத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கையில் இது ஒரு தேசிய சாதனை எனவும் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

இதேபோல், லேசர் தொழில்நுட்பத்துடன் விண்ணில் பாய்ந்து சென்று எதிரிகளை தாக்கும் ‘பர்க்’ என்ற புதிய வகை ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உலகச் செய்திகள்!  - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 48 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Sun Mar 15, 2015 10:50 pm

லாகூர் சர்ச்சுகள் மீது பயங்கர தாக்குதல்; ; 15 பேர் பலி, 45 பேர் காயம்

லாகூர்: பாகிஸ்தானில் 2 சர்ச்சுகளில் பயங்கரவாதிகள் இன்று தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 15 பேர் இறந்து விட்டதாகவும், 50 பேர் காயமுற்றுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காயமுற்றவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். லாகூர் யோகனாபாத்தில் பிரபல கத்தோலிக்க சர்ச்சுகள் உள்ளன. இங்குள்ள 2 சர்ச்சுகளில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க பலரும் வந்திருந்தனர். இந்நேரத்தில் 2 சர்ச்சுகளில் பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் பலரும் பதறியபடி சர்ச்சில் இருந்து வெளியேறினர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில்; நான் சர்ச்சில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது 2 பேர் கையில் துப்பாக்கியுடன் வந்தனர். மக்களை நோக்கி சுட்டனர். தொடர்ந்து அவர்கள் தங்களை தாங்களே வெடிக்க செய்தனர். தொடர்ந்து மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர் என்றார்.

டி.டி.பி., ஜாமத்துல் பொறுப்பேற்பு: பாகிஸ்தான் சர்ச் மீதான தாக்குதலுக்கு அங்குள்ள டி.டி.பி., ஜாமத்துல் அக்ரார் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


உலகச் செய்திகள்!  - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 48 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Sun Mar 15, 2015 10:51 pm

உலகச் செய்திகள்!  - Page 48 55056437c30db


உலகச் செய்திகள்!  - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 48 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Mon Mar 16, 2015 2:02 am

ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 54 தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசு படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஆப்கான் ராணுவமும், நேட்டோ படையினரும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள ஹாஸ்னி, காந்தஹார், லக்மேன், பார்யாப் மற்றும் ஷாரி புல் மாகாணங்களில் நேற்று முன்தினம் ஆப்கான் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 24 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 49 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் ஹெல்மந்த் தெற்கு மாகாணப்பகுதியில் நடந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவங்களில் 2 ராணுவ வீரர்கள் இறந்ததாக ஆப்கான் ராணுவம் தெரிவித்து உள்ளது.


உலகச் செய்திகள்!  - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 48 Empty Re: உலகச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 48 of 81 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 64 ... 81  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum