ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 8:23 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!

+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters

Page 47 of 81 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 64 ... 81  Next

Go down

உலகச் செய்திகள்!  - Page 47 Empty உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 47 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


உலகச் செய்திகள்!  - Page 47 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Sat Mar 07, 2015 4:22 am


7 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கபட்ட பெண்ணுக்கு 200 சவுக்கடி தண்டனை

சவுதி அரேபியாவில் பெண்கள் ஆண்கள் துணையின்றி வெளியே செல்ல கூடாது என சட்டம் உள்ளது அவ்வாறு துணையின்றி சென்ற 19 வயது பெண் ஒருவருக்கு சரியத் சட்டப்படி 200 சவுக்கடிகளும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கபட்டு உள்ளது.

அந்த பெண் தனது நண்பர் ஒருவரை சந்திக்க தனியாக சென்று உள்ளார்.அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கற்பழித்து உள்ளது.இந்த சம்பவம் கடந்த 2006 இல் நடந்து உள்ளது. 2 ஆண்கள் அந்த பெண்ணுக்கு வாகன வசதி செய்து கொடுப்பதாக கூறி தனியான இடத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து 7 பேர் கற்பழித்து உள்ளனர்.3 பேர் அவரது நண்பரை அடித்து உதைத்து உள்ளனர்.ஆரம்ப கட்டத்தில் அந்த பெண்ணுக்கு நாட்டின் சட்ட திட்டத்தை கடைபிடிக்காதது குற்றம் என கூறி 90 சவுக்கடிகள் வழங்கபட்டது.கற்பழித்த ஆணுக்கு சிறை தண்டனையும் வழங்கபட்டது.

ஆனால் பாதிக்கபட்ட பெண்ணின் பெண் வக்கீல் வழக்கை சவுதி பொது கோர்ட்டுக்கு கொண்டு சென்றார். எனினும் அங்கு பெண்ணுக்கு அதிகமான தண்டனை வழங்கபட்டது.பெண்ணுக்கு தண்டனை இரட்டிப்பாக்கபட்டது ஆனால் ஆணுக்கு அதே தண்டனை வழங்கபட்டு உள்ளது.

சவுதி அரேபிய அரசு இந்த முடிவை ஆதரித்து உள்ளது.பாதிக்கபட்ட பெண் செய்தது தவறு அவர் ஆண் துணை இல்லாமல் வெளியே சென்றது தவறு என கூறி உள்ளது.


உலகச் செய்திகள்!  - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 47 Empty Re: உலகச் செய்திகள்!

Post by ராஜா Sun Mar 08, 2015 11:31 am

சிவா wrote:
7 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கபட்ட பெண்ணுக்கு 200 சவுக்கடி தண்டனை

சவுதி அரேபியாவில் பெண்கள் ஆண்கள் துணையின்றி வெளியே செல்ல கூடாது என சட்டம் உள்ளது அவ்வாறு துணையின்றி சென்ற 19 வயது பெண் ஒருவருக்கு சரியத் சட்டப்படி 200 சவுக்கடிகளும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கபட்டு உள்ளது.

அந்த பெண் தனது நண்பர் ஒருவரை சந்திக்க தனியாக சென்று உள்ளார்.அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கற்பழித்து உள்ளது.இந்த சம்பவம் கடந்த 2006 இல் நடந்து உள்ளது. 2 ஆண்கள் அந்த பெண்ணுக்கு வாகன வசதி செய்து கொடுப்பதாக கூறி தனியான இடத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து 7 பேர் கற்பழித்து உள்ளனர்.3 பேர் அவரது நண்பரை அடித்து உதைத்து உள்ளனர்.ஆரம்ப கட்டத்தில் அந்த பெண்ணுக்கு நாட்டின் சட்ட திட்டத்தை கடைபிடிக்காதது குற்றம் என கூறி 90 சவுக்கடிகள் வழங்கபட்டது.கற்பழித்த ஆணுக்கு சிறை தண்டனையும் வழங்கபட்டது.

ஆனால் பாதிக்கபட்ட பெண்ணின் பெண் வக்கீல் வழக்கை சவுதி பொது கோர்ட்டுக்கு கொண்டு சென்றார். எனினும் அங்கு பெண்ணுக்கு அதிகமான தண்டனை வழங்கபட்டது.பெண்ணுக்கு தண்டனை இரட்டிப்பாக்கபட்டது ஆனால் ஆணுக்கு அதே தண்டனை வழங்கபட்டு உள்ளது.

சவுதி அரேபிய அரசு இந்த முடிவை ஆதரித்து உள்ளது.பாதிக்கபட்ட பெண் செய்தது தவறு அவர் ஆண் துணை இல்லாமல் வெளியே சென்றது தவறு என கூறி உள்ளது.
சிரி சிரி என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 47 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Mar 10, 2015 8:59 pm

இந்தியாவை விட அதிக அணு ஆயுதம் வைத்து உள்ள பாகிஸ்தான்

பாகிஸ்தானிடம் 120 ஆட்டோமிடிக் ஆயுதங்கள் உள்ளது. இது இந்தியாவை விட 10ம் அதிகமானது. இது கடந்த ஆண்டு அதன் அணுஆயுத விவரங்கள்.அணு விஞ்ஞானிகள் விசாரணையில் வெளியிட்ட புதிய இன்போகிராபிக் தகவலாகும்.

இந்த தகவல் இன்போகிராபி விளக்கப்படத்தை சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். இந்த விளக்கப்படம் 9 நாடுகளில் உள்ள அணுஆயுதங்கள் குறித்து விளக்குகிறது.1980 ஆம் ஆண்டுகளில் 65 ஆயிரமாக உச்சத்தை அடைந்து இருந்த அணுஆயுதங்கள் பிறகு 10 ஆயிரமாக குறைந்தது. பல நாடுகளில் இந்த ஆயுதங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.

இந்த விளக்கப்படத்தில் அமெரிக்க-ரஷ்யா ஆகியவை தலா 5 ஆயிரம் ஆயுதங்கள் வைத்து இருப்பதாக காட்டுகிறது.
பிரான்ஸ் - 300,
சீனா - 250,
இங்கிலாந்து - 225,
இஸ்ரேல் - 80
வட கொரியா மட்டும் 2006, 2009 மற்றும் 2013 இல் அணு சோதனைகள் நடத்தி உள்ளது.

ஆனால் மக்கள் உண்மையில் உலகில் இவ்வளவு ஆயுதங்கள் தான் இருக்கும் என நம்பவில்லை என நான் நினைக்கிறேன் என இந்திட்டத்தின் நிர்வாக இயக்குனர் ரேச்சல் பிரான்சன் கூறி உள்ளார்.


உலகச் செய்திகள்!  - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 47 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Mar 10, 2015 9:03 pm

உலக அதிசியமான எகிப்து கிஸா பிரமிடுகளில் ஆபாச படம் எடுத்த விவகாரம் விசாரணைக்கு உத்தரவு

எகிப்தில் புகழ் பெற்ற கிஸா பிரமிடு உள்ளது. கிஸா என்று அழைக்கப்படும் இது எகிப்தின் பெரிய பிரமிடு ஆகும். தொன்மையானதும், பழமையானதுமான உலக அதிசயங்களில் ஒன்று என்று கருதப்பட்டு வருகின்றது.மேலும் காலமாற்றங்களில் சிதைவடையாமல் இந்தப் பிரமிடு இன்னமும் அப்படியே பராமரிக்கப்பட்டும் வருகின்றது.

'கிஸா' பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை . உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத மர்மங்களை உள்ளடக்கியது. ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .

இவ்வளவு புகழ் பெற்ற பிரமிடு பகுதியில் ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.இது எகிப்து நாட்டவரை கோபத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த ஆபாச படம் ஆங்கில சப் டைட்டிலுடன் எடுத்து உள்ளனர். இதனை ரஷ்யர்கள் எடுத்து உள்ளனர். இந்த வீடியோக்கள் 3 ஆபாச இணையதளங்களில் இடம்பெற்று உள்ளது.
ஆபாச நடிகை நாட்டின் வரலாற்று சின்னமாக விளங்கும் இடங்களில் உடையில்லாமல் நடமாடி உள்ளார் அது சூட் செய்யபட்டு உள்ளது.

இது குறித்து எகிப்து வக்கீல் ஒருவர் மூத்த போலீஸ் அதிகாரியிடம் புகார் கொடுத்து உள்ளார். மேலும் உலக பிரசித்தி பெற்ற இந்த் உலக அதிசயஇடத்தில் 24 மணிநேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கேமிர நிறுவப்பட வேண்டும் என கோரி உள்ளார்.

இது குறித்து கூறி உள்ள எகிப்து அமைச்சர் மம்தாக் அல்-தமடி கூறும் போது ஆபாசபட்டத்திற்கு உரிய சில வெளிப்படையான காட்சிகள் இங்கு சட்டத்துக்கு புறம்பாக எடுக்கபட்டு உள்ளது.கிசா கல்லறைக்குள் சுற்றிபார்க்க வந்த் சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டு உள்ளனர். என கூறினார். தற்போது இந்த சம்பவம் தொடரபாக எகிப்து அரசு விசாரனைக்கு உத்தரவிட்டு உள்ளது.


உலகச் செய்திகள்!  - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 47 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Mar 10, 2015 9:06 pm

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் உதவியை நாடும் சவுதி அரேபியா

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. அமெரிக்காவின் இந்த கூட்டுப்படையில் சவுதி அரேபியா மற்றும் பல்வேறு வளைகுடா நாடுகளும் இணைந்துள்ளன.

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தங்கள் நாட்டு எல்லைகளை காக்கவும், அவர்களுக்கு எதிராக போராடவும், தங்கள் நெருங்கிய நட்பு நாடுகளான துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தானின் உதவியை நாட சவுதியின் புதிய மன்னரான சல்மான் முடிவு செய்துள்ளார்.குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போரிட பாகிஸ்தான் அரசு, தங்கள் ராணுவத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப வேண்டும் என மன்னர் சல்மான் விரும்புகிறார்.

இதற்கு கைமாறாக பாகிஸ்தானுக்கு பல்வேறு பொருளாதார உதவியை வழங்கவும் சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக நீண்டகால கடன் அடிப்படையில் எண்ணெய் வினியோகம் உள்ளிட்ட உதவிகளை அறிவித்து உள்ளது.


உலகச் செய்திகள்!  - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 47 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Mar 10, 2015 9:20 pm

ஒட்டகத்தின் மீது அதிக அன்பு வைத்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்

சவுதி அரேபியாவின் ரியாத் நகரை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் மேற்கு பகுதியில் உள்ள மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்றார்.அங்கு மனைவி தந்தை வளர்த்த அல் வலீப் என்ற ஒட்டகத்தை பார்த்த கொஞ்சி உள்ளார். இது தனது தந்தை கொடுத்த பரிசு எனவும் அது தனது டியர், ஸ்வீட்ஹார்ட் என்றும் அவரது கணவனிடம் கூறியுள்ளார்.

பின்னர் இருவரும் அவர்களது வீட்டிற்கு திரும்பும் போது, கணவர் அந்த ஒட்டத்தை பற்றி கேட்க, அந்த பெண் அதைப் பற்றி தெரிவித்துள்ளார். அந்த ஒட்டகம் தனது உயிர் என கூறி உள்ளார்.இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் கணவ்னை விட ஒரு விலங்கு மீது இவ்வளவு அன்பு செலுத்துவதா என கூறி மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.

விவாகரத்து கொடுத்த பின் கணவன் கூறியதாவது:-

”நீ உன்னுடைய கணவரை விட ஒரு விலங்கு மீது அதிக அன்பு செலுத்துவது என்றால் விலங்கு போல் நானும் ஒரு விலங்காகி விடுவேன். நீ மனிதர்களுடன் வாழ தகுதி இல்லாதவள் நீ இப்போது உன்னுடைய உலகத்திற்கு செல்லலாம்” என கூறினார்.


உலகச் செய்திகள்!  - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 47 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Mar 10, 2015 9:23 pm

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானின் ராணுவ உதவியை நாடுகிறது, சவுதி அரேபியா பதிலுக்கு பொருளாதார உதவி வழங்க திட்டம்

ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை சமாளிக்க பாகிஸ்தானின் ராணுவ உதவியை சவுதி அரேபியா நாடியுள்ளது.

கூட்டுப்படை

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். இந்த அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

தங்களை எதிர்க்கும் நாடுகளை சேர்ந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச்சென்று படுகொலை செய்து வரும் இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. அமெரிக்காவின் இந்த கூட்டுப்படையில் சவுதி அரேபியா மற்றும் பல்வேறு வளைகுடா நாடுகளும் இணைந்துள்ளன.

ஆதரவு இல்லை

இந்த கூட்டுப்படையில் சேரவோ, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கோ பாகிஸ்தான் இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கினால், அது தங்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நினைத்து, பாகிஸ்தான் விலகியே நிற்கிறது.

பாகிஸ்தானின் வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்ற குழு கூட்டத்தில் சமீபத்தில் பேசிய வெளியுறவு செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி, ‘ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான எந்த கூட்டணியிலும் பாகிஸ்தான் இணையாது. இது தொடர்பாக ஐ.நா. சபை சாசனம் அத்தியாயம் 7–ன் கீழ் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு மட்டுமே பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும்’ என்று கூறினார்.

ராணுவத்தை அனுப்ப...

ஆனால் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தங்கள் நாட்டு எல்லைகளை காக்கவும், அவர்களுக்கு எதிராக போராடவும், தங்கள் நெருங்கிய நட்பு நாடுகளான துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தானின் உதவியை நாட சவுதியின் புதிய மன்னரான சல்மான் முடிவு செய்துள்ளார்.

குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போரிட பாகிஸ்தான் அரசு, தங்கள் ராணுவத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப வேண்டும் என மன்னர் சல்மான் விரும்புகிறார்.

நவாஸ் ஷெரீப் பயணம்

இதற்கு கைமாறாக பாகிஸ்தானுக்கு பல்வேறு பொருளாதார உதவியை வழங்கவும் சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக நீண்டகால கடன் அடிப்படையில் எண்ணெய் வினியோகம் உள்ளிட்ட உதவிகளை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த வாரம் சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் தயக்கம்

பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் பிரதமரிடம், சவுதி மன்னர் இந்த வேண்டுகோளை வைத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால் சவுதி அரேபியாவுக்கு ராணுவ உதவி செய்தால், உள்நாட்டு பாதுகாப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் கிளம்பும் என கருதும் நவாஸ் ஷெரீப், இது தொடர்பாக எந்த உறுதியும் சல்மானுக்கு வழங்கவில்லை.


உலகச் செய்திகள்!  - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 47 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Mar 11, 2015 1:05 am


சீனாவில் நிலநடுக்கம்

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல வீடுகள் நாசமாகின.

அந்த மாகாணத்தின் குன்மிங் நகரில் உள்ளூர் நேரப்படி மாலை 5.59 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

தரையிலிருந்து 12 கி.மீ. ஆழத்திலிருந்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாக பதிவாகியுள்ள

இந்த நிலநடுக்கம் காரணமாக குன்மிங் பகுதி வழியாகச் செல்லும் ரயில்கள் தாமதப்படுத்தப்பட்டன.

நிலநடுக்கத்தின் மையமான குன்மிங் நகரில், பாதுகாப்பு கருதி ரயில்பாதைகள் தாற்காலிகமாக மூடப்பட்டன.


உலகச் செய்திகள்!  - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 47 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Thu Mar 12, 2015 2:15 am

இலங்கையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 79 இந்தியர்கள் கைது

இலங்கையின் தென்மேற்கு நகரத்தில் சட்டவிரோதமாக பணியாற்றியதாக இந்திய நாட்டை சேர்ந்த 79 பேரை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தங்களது நுழைவு விசாக்களை முறைகேடாக பயன்படுத்திய இந்திய நாட்டை சேர்ந்த 79 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று அந்நாட்டு குடியுரிமை துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொழும்பு நகரில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ள மட்டுகாமா நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அவர்கள் சட்டவிரோமாக பணியாற்றி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது என அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


உலகச் செய்திகள்!  - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 47 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Thu Mar 12, 2015 2:19 am

விபசார வழக்கில் இத்தாலி முன்னாள் பிரதமர் விடுதலை

இத்தாலியில் 1994–95, 2001–06, 2008–11 என மூன்று கால கட்டங்களில் பிரதமர் பதவி வகித்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி (வயது 78).

சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான இவர், பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 17 வயது நடனப்பெண் ஒருவருடன், பணம் கொடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் 2013–ம் ஆண்டு, பெர்லுஸ்கோனிக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

ஆனால் அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மிலான் நகரில் உள்ள அப்பீல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதில் கடந்த ஆண்டு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் இந்த விடுதலை தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் ரோமில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில், அவர் அப்பீல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது செல்லும் என உறுதி செய்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பெர்லுஸ்கோனிக்கு பெருத்த நிம்மதியை அளித்துள்ளது. அவர் தனது போர்ஜா இத்தாலியா கட்சியை புதிய வலுவுடன் வழிநடத்த இந்த தீர்ப்பு உதவும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


உலகச் செய்திகள்!  - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 47 Empty Re: உலகச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 47 of 81 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 64 ... 81  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum