புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 46 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 46 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 46 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 46 of 81 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 63 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 46 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Feb 26, 2015 10:11 am

மாமா அங்கள், இங்க மலேசியாவுல வெயில் கொழுத்தோ, கொழுத்துன்னு கொழுத்துது. வெளியல போகவே முடியல, சூடு மண்டையை பிளக்குது. என் நிலமையும் உலக செய்தியா போடுங்கள். என் நிலமை உங்களுக்கு தெரியாதா?


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 26, 2015 10:13 am

தகவலுக்கு நன்றி......



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலகச் செய்திகள்!  - Page 46 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 26, 2015 10:18 am

தலைப்பு இவ்வாறு வைத்துக்கொள்ளலாமா?????

மண்டையை பிளக்கும் மலேசிய வெயில்...




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலகச் செய்திகள்!  - Page 46 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 1:57 am

பிலிப்பின்ஸில் ராணுவத் தாக்குதல்: 24 பயங்கரவாதிகள் சாவு

பிலிப்பின்ஸில் வனப் பகுதியில் ஒளிந்து செயல்பட்டு வந்த அல்-காய்தா ஆதரவு பெற்ற அபு சய்யஃப் பயங்கரவாதிகள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையில் இதுவரை 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

1990-களில் தொடங்கப்பட்ட அபு சய்யஃப் அமைப்பு, ஆள்களைக் கடத்திப் பணம் பறிப்பதற்குப் பெயர் பெற்றது. தற்போது அந்த அமைப்பின் பிடியில் 7 பிணைக் கைதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டு மணிலா கடலில் அபு சய்யஃப் நிகழ்த்திய பெட்ரேல் குண்டுத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவிடமிருந்து பயிற்சி உள்ளிட்ட உதவிகள் பெற்றும், பிலிப்பின்ஸ் அரசுப் படையினரால் பல ஆண்டுகளாக அபு சய்யஃப் பயங்கரவாதிகளை ஒடுக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில், அந்த அமைப்பை ஒடுக்குவதற்கான இறுதி கட்டப் போரை பிலிப்பின்ஸ் ராணுவம் தொடங்கியுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 46 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 1:58 am


“உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டது அமைதி ஒப்பந்தத்தை மீறும் செயல்’

கிழக்கு உக்ரைனில் மூன்று ராணுவ வீரர்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்றது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என அந்த நாட்டு அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ கூறியுள்ளார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடிய அவர், இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து மெர்க்கெல்லின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமர் மெர்கெல்லுடன் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடினார்.

உக்ரைனுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்கீழ், கிழக்கு உக்ரைனிலிருந்து வெளியேறும் ராணுவத்தினர் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நிகழ்த்தி 3 பேரைக் கொன்றிருப்பது அந்த ஒப்பந்தத்தைக் குலைக்கும் செயல் என பிரதமரிடம் பொரொஷென்கோ தெரிவித்தார். மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற, போர் முனையிலிருந்து கனரக ஆயுதங்களைத் திருப்பப் பெற்றது உள்பட, உக்ரைன் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிபர் பொரொஷென்கோ விளக்கினார்.

மின்ஸ்க் நகரில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மெர்க்கெல்லும் வலியுறுத்தினார். சண்டை நிறுத்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கும்படி கிளர்ச்சியாளர்களை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வற்புறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இரண்டு வாரங்களுக்கு முன்பு பெலாரஸ் நாட்டுத் தலைநகர் மின்ஸ்கில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், கிழக்கு உக்ரைனில் ஆங்காங்கே தொடர்ந்து சண்டை நிகழ்ந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக அந்தப் பகுதியில் சண்டை ஓய்ந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் நிகழ்ந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது அந்த நம்பிக்கையைக் குலைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.





உலகச் செய்திகள்!  - Page 46 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 1:06 am

உலகின் விலை உயர்ந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு!

உலக அளவில் விலை உயர்ந்த நகரமாக சிங்கப்பூர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார புலனாய்வு பிரிவு (EIU) ஒவ்வொரு ஆண்டும், உலக நாடுகளின் முக்கிய நகரங்களை பல்வேறு அளவில் ஆய்வு செய்து, உலகின் விலை உயர்ந்த நகரங்களுக்கான பட்டியலை அறிவிக்கும்.

கடந்த ஆண்டு முதல் இடத்தில் சிங்கப்பூரும், அதற்கு அடுத்த நான்கு இடங்களை முறையே பாரிஸ், ஒஸ்லோ, ஜுரிச், சிட்னி ஆகிய நகரங்கள் பிடித்தன. இந்த வருடத்திற்கான பட்டியலிலும் அந்த இடங்களில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை.

ஈஐயு அமைப்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக வைத்து உலக அளவில் சுமார் 133 நகரங்களில் இந்த ஆய்வை நடத்தியது. உணவு, உடை, பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் பொருளாதாரம் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

அதில் சிங்கப்பூரை பொருத்தவரை மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை மற்றும் போக்குவரத்து செலவீனங்கள் உட்பட அனைத்தும் நியூயார்க்கை விட பல மடங்கு அதிகமாகும். எனினும், அதனை ஏற்றுக்கு கொள்ளும் அளவிற்கு சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

அங்கு அடிப்படை மளிகைப் பொருட்கள் நியூயார்க்கை விட 11 சதவீதம் அதிகமாகும். மேலும், சிங்கப்பூர் மக்கள் போக்குவரத்திற்காக செய்யும் செலவுகள் நியூயார்க் வாசிகளை விட மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது.

வர்த்தகர்களும், வேறு நகரங்களுக்கு குடியேற திட்டமிடுவோரும் குறிப்பிட்ட அந்த நகரங்களின் பொருளாதார முன்னேற்றம், அடிப்படை செலவீனங்கள் போன்றவற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பட்டியலை பொருளாதார புலனாய்வு பிரிவு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 46 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 1:16 am

ஒபாமா யோசனையை நிராகரித்தது ஈரான்

ஈரான் குறைந்தது 10 ஆண்டுகளாவது தனது அணு ஆயுத உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.ஆனால் இதை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷெரீப் அளித்த பேட்டியில், ஒபாமாவின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது. அது அச்சுறுத்துவதாக உள்ளது. அதிகப்படியானதும், அர்த்தமற்றதுமான கோரிக்கைகளை ஈரான் ஏற்காது என கூறினார்.மேலும் அவர், இது தொடர்பாக, அதிகாரமிக்க 6 நாடுகளுடனான பேச்சுவார்த்தையை ஈரான் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.




உலகச் செய்திகள்!  - Page 46 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 1:17 am

உளவு பார்த்த இருவரை தலையை வெட்டி கொலை செய்தது போகோ ஹாரம் - வீடியோ வெளியீடு

பாதுகாப்பு படைக்கு உளவு பார்த்தாக கூறி இரண்டு பேரை தலையை வெட்டி கொலை செய்து போகோ ஹாரம் தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

நைஜீரியா நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகிறார்கள். அண்டை நாடுகளை சேர்ந்த ராணுவம் நைஜீரியாவுடன் இணைந்து போகோ ஹரம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பாதுகாப்பு படைக்கு உளவு பார்த்தாக கூறி இரண்டு பேரை தலையை வெட்டி கொலை செய்து போகோ ஹாரம் தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டுள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை போன்று போகோ ஹாரம் தீவிரவாதிகளும் அங்கு வெறியாட்டம் ஆடியுள்ளனர்.

வீடியோவில் முகத்தை மறைத்துக் கொண்ட தீவிரவாதிகள் இரண்டு நைஜீரியர்களை தலையை வெட்டிக் கொல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 'உளவாளிகள் அறுவடை' என்று அழைக்கப்பட்டு வீடியோ சமுக வலைதளமான டுவிட்டரில் தீவிரவாதிகளால் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டவர்கள் தாவூத் முகமது மற்றும் முகமது அவ்லு என்று தெரியவந்துள்ளது.

நைஜீரியா நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள சாட் மற்றும் கேமரூன் நாடுகளில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சாட் ராணுவம், கேமரூன் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.




உலகச் செய்திகள்!  - Page 46 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 05, 2015 3:26 pm

அமெரிக்க எம்.பி.க்களுக்கு ராஜபக்சே அரசு லஞ்சம் கொடுத்ததா? விசாரணை நடத்த சிறிசேனா அரசு முடிவு

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஆதரவைப் பெறுவதற்காக, அமெரிக்க எம்.பி.க்களுக்கு ராஜபக்சே அரசு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ஐ.நா. கவுன்சில்

இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானங்கள் கொண்டு வந்தது. 2012–ம் ஆண்டில் இருந்து அடுத்தடுத்து மூன்று தடவை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

2014–ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி, இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடந்து வருகிறது.

லஞ்சம் கொடுக்க திட்டம்

இதற்கிடையே, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வந்தபோது, இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதற்காக, அமெரிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்க முந்தைய ராஜபக்சே அரசு முயன்றதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை பாராளுமன்றத்தில், ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமாரா திஸ்சநாயகே இக்குற்றச்சாட்டை தெரிவித்தார். லஞ்சம் கொடுப்பதற்காக, அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டப்பட்டதா? என்று அவர் கேட்டார்.

பிரதமர் தகவல்

அதற்கு பதில் அளித்த துணை வெளியுறவு மந்திரி அஜித் பெரேரா, ‘எனது அமைச்சகத்தில் உள்ள ஆவணங்களின்படி, நிதி திரட்டப்பட்டது உண்மைதான். ஆனால், அமெரிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்தார்களா? அல்லது அவர்களே எடுத்துக்கொண்டார்களா என்று தெரியவில்லை’ என்று கூறினார்.

அப்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே குறுக்கிட்டு, ‘இதுபோன்று எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்க நிதி திரட்டுவது அமெரிக்க சட்டங்களை மீறிய செயல். எம்.பி.க்கள் பணம் வாங்கி இருந்தால், அந்த பணம் எதற்காக பெறப்பட்டது என்று அமெரிக்க சட்டப்படி அவர்கள் விளக்க வேண்டி இருக்கும்’ என்று கூறினார்.

விசாரணை

மேலும், இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவை கேட்டுக்கொள்வேன் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.



உலகச் செய்திகள்!  - Page 46 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 05, 2015 4:03 pm

திக்ரித்துக்கான யுத்தம்: பொதுமக்களின் கஷ்டங்கள் குறித்து கவலை அதிகரிப்பு

இராக்கில் திக்ரித் நகரை இஸ்லாமிய அரசு ஆயுதக் குழுவினரிடம் இருந்து மீட்பதற்காக அரச படைகள் தாக்குதல்களை ஆரம்பித்து நான்கு நாட்களாகும் நிலையில், அப்பகுதியில் வாழும் இராக்கிய பொதுமக்களின் கஷ்டங்கள் குறித்து கவலைகள் அதிகரித்து வருகின்றன.

முற்றுகையிடப்பட்டுள்ள இந்த ஊரில் இருந்து இடபெயர நேர்ந்துள்ளவர்கள் என நம்பப்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்காக நிவாரணப் பொருட்களை வாகனத் தொடரணிகளில் ஐநா அனுப்பியுள்ளது.

அரச படைகளின் தாக்குதலில் முக்கிய பங்கு வங்கிக்கும் இரான் ஆதரவு பெற்ற ஷியா ஆயுதக் குழுக்கள் சுன்னிக்களை இலக்குவைத்து இதனை ஒரு வகுப்புவாத பழிவாங்கலாக மாற்றிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என அமெரிக்காவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் எச்சரித்துள்ளன.

சென்ற ஆண்டு இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் திக்ரித்தை பிடித்தபோது நூற்றுக்கணக்கான ஷியா இன சிப்பாய்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

ஆயுததாரிகள் வைத்திருந்த சாலையோர குண்டுகள் மற்றும் பதுக்கிவைக்கப்பட்ட வெடிகள் காரணமாக அரச படைகளின் முன்னேற்றம் வேகம் குறைந்துள்ளது.

திக்ரித்தையும் அருகிலுள்ள இடங்களையும் எல்லா பக்கத்திலிருந்தும் சுற்றிவளைத்து முழுமையாக அடைத்துவிட்டு பின்னர் நகருக்குள் படையெடுப்பது என அரசாங்கம் விரும்புவதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.




உலகச் செய்திகள்!  - Page 46 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 46 of 81 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 63 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக