புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 38 of 81 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 59 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 16, 2014 3:30 am

லிபியாவில் அகதிகள் சென்ற கப்பல் மூழ்கியது 200 பேர் கதி என்ன?

ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக கடல் வழியாக சென்று ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் லிபியா மற்றும் சிரியாவில் இருந்து அனுமதியின்றி படகுகளில் சட்டவிரோதமாக செல்கின்றனர். அவ்வாறு 250 ஆப்பிரிக்க அகதிகள் ஒரு கப்பலில் சென்றனர்.

லிபியா தலைநகர் திரிபோலி அருகே தஜீரா என்ற இடத்தில் நடுக்கடலில் சென்றபோது கப்பல் மூழ்கியது. தகவல் அறிந்ததும் லிபியா கடற்படையினர் அங்கு விரைந்து சென்றனர். தீவிர முயற்சிக்கு பின்னர் 26 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து கப்பல் படை செய்தி தொடர்பாளர் அயூப் குசும் கூறுகையில், ‘கடலில் ஏராளமான பிணங்கள் மிதக்கின்றன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது’ என்று தெரிவித்தார். எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 18, 2014 1:12 am

சிரியாவில் உள்நாட்டுப் போர்: வான்வழி தாக்குதலில் 48 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக தொடர்ந்து 4-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் இதுவரை 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிர்பிழைக்க அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த நிலையில், அங்கு ஹாம்ஸ் என்னும் மத்திய மாகாணத்தில், தல்பிசே நகரை குறிவைத்து கடந்த 2 தினங்களாக அதிபர் ஆதரவு படையின் போர் விமானங்கள் கடும் குண்டு வீச்சு நடத்தின.

இதில் கிளர்ச்சியாளர்கள், அப்பாவி பொதுமக்கள் என குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒரு தாயும், அவரது 5 குழந்தைகளும் அடங்குவார்கள் என இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிற சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் கூறுகிறது.




பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 03, 2014 1:42 am

பாக்தாத் இராணுவ தளத்தை தீவிரவாதிகள் கைபற்றினர் – 300 இராணுவ வீரர்கள் படுகொலை!

ஈராக்கை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், பாக்தாத் இராணுவத் தளத்தை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இராணுவத் தளத்தை கைப்பற்ற நடந்த சண்டையில் 300 இராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், பல நகரங்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய தேசமாக உருவாக்க ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் பகுதிகளில் அமெரிக்க இராணுவம் கடந்த மாதம் முதல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனைத் தொடர்ந்து ஈராக் அரசை பழி தீர்க்கும் விதமாக ஈராகின் வடக்கு பகுதிகளில், குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஷியா பிரிவினரை தீவிரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது, பாக்தாத் அருகே உள்ள ஈராக் இராணுவ தளத்தை தீவிரவாதிகள் கைபற்றியுள்ளதாகவும், அங்கு சண்டையில் ஈடுபட்ட 300 இராணுவ வீரர்களை படுகொலை செய்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 03, 2014 2:17 am

சிரியாவில் பள்ளியில் குண்டு வெடித்ததில் 41 குழந்தைகள் பலி

சிரியாவின் கோம்ஸ் சிட்டியில் அரசுப் பள்ளியில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 41 குழந்தைகள் பலியாகினர் என்று மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் சீர்குலைந்துள்ள சிரியாவின் கோம்ஸ் சிட்டியில் பள்ளி குழந்தைகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் மாணவர்கள் கல்வி பயின்றபோது இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. குண்டுவெடிப்பில் சுமார் 41 பிஞ்சு குழந்தைகள் பலியாகியுள்ளனர். மேலும், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 10க்கும் மேற்பட்டோர்கள் பலியாகியுள்ளனர். மேலும், பல மாணவர்களை காணவில்லை என்று சிரியா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. காயம் அடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானோர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

பள்ளியில் ஒரு தீவிரவாதியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளான் என்று கூறப்படுகிறது. ஒரு குண்டை பள்ளியில் வைத்துவிட்டு மற்றோரு குண்டை அவனே வெடிக்க செய்துள்ளான். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இயக்கம் ஒன்று இப்பகுதியில் பல்வேறு முறை இரட்டை குண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டு போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். தற்கொலை குண்டுவெடிப்புகள் குழந்தைகள் பலர் பலியாகியுள்ளனர்.




பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 03, 2014 2:28 am

கொடூர தாய்க்கு 30 ஆண்டு சிறை

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் புறநகர் பகுதியான அட்லான்டாவில் எபோனி பெர்ரி என்ற பெண் வசித்து வருகிறார். இவரின் 16 வயது மகளான மர்கீயாவுக்கு, திடீரென உணவு உட்கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டால் 3 ஆண்டுகளாக பெரும் அவதிக்குள்ளாகி வந்த அவரை, கொடூர மனம் படைத்த எபோனி பெர்ரி மருத்துவரிடத்தில் எதுவும் காட்டாமல் வைத்திருந்தார். இதனால் படிப்படியாக உடல் மெலிந்து வந்த மர்கீயா, கடந்த 2012–ம் ஆண்டு உயிரிழந்தார். அப்போது அவரின் உடல் எடை வெறும் 19½ கிலோ மட்டுமே இருந்தது.

இவ்வாறு தனது மகளின் நலனில் அக்கறையின்றி இருந்த எபோனி பெர்ரி மீது, அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எபோனிக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 03, 2014 2:28 am

மது குடித்துவிட்டு கார் ஓட்டிய பிரபல நீச்சல் வீரர் கைது

உலகப்புகழ் பெற்ற நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் (வயது 29). அமெரிக்காவைச் சேர்ந்த இவர், இதுவரை ஒலிம்பிக் போட்டியில் 18 முறை தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். 2016–ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் அமெரிக்கா சார்பில் விளையாட உள்ளார். இவர் அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள போர்ட் மெக்கென்ரி சுரங்கப்பாதையில் நள்ளிரவில் மது குடித்து விட்டு மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டிச்சென்றார்.

இதனை அறிந்த போக்குவரத்து போலீசார் மைக்கேல் பெல்ப்ஸ்சை சுரங்கப்பாதையின் முடிவில் உள்ள சோதனைச்சாவடியில் மடக்கிப்பிடித்தனர். மது குடித்து விட்டு காரை ஓட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். போலீசார் சோதனைக்கு முழுஒத்துழைப்பு கொடுத்த நீச்சல் வீரர், பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 03, 2014 2:34 am

பாகிஸ்தானைச் சேர்ந்த 16 விமான பணிப்பெண்கள் கனடாவில் மாயம்

பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சில் பணிபுரிந்த விமான பணிப்பெண்கள் மற்றும் கேபின் பெண்கள் கனடாவில் மாயமாகியுள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (பி.ஐ.ஏ.)-ல் வெளிநாடு சென்ற 4 விமானப் பணிப்பெணகள் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாயமாகியுள்ளனர் என்று ஒரு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் 16-க்கும் மேற்பட்ட விமானப் பணிப்பெண்கள் கனடாவிற்கு சென்ற பிறகு பாகிஸ்தான் திரும்பவில்லை என்பதை பி.ஐ.ஏ.-யும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர்கள் மீது சர்வதேச விமான போக்குவரத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அந்த மீடியா தெரிவித்துள்ளது.

17 ஊழியர்கள் வேலைப்பார்க்கும் விமான நிறுவனத்தில் 36 விமான போக்குவரத்து சேவை மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2014 10:44 pm

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின

சீனாவில் பூகம்ப பாதிப்பு அதிகம் உள்ள யுன்னான் மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

புவேர் நகரில் இன்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6-6 ஆக பதிவாகியிருந்ததாகவும், 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இது மையம் கொண்டிருந்ததாகவும் சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக மாகாண தலைநகர் குன்மிங்கில் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. பல வினாடிகள் தொடர்ந்து ஆட்டம் கண்டதால், சில வீடுகளின் ஓடுகள் பெயர்ந்து விழுந்தன. பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடிவந்தனர். ஆனால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மாகாணத்தில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் இறந்தது குறிப்பிடத்தக்கது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 11, 2014 4:04 am

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் 40 நாட்களாக வெளியே வரவில்லை. கட்சியின் ஆண்டு விழாவிலும் அவர் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு குடும்ப ஆட்சி

கொரியா– வடகொரியா, தென்கொரியா என 1948–ம் ஆண்டு பிளவுபட்டது முதல், வடகொரியாவில் ஒரு குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது. முதலில் கிம் இல் சுங் ஆட்சி செய்து வந்தார். 46 ஆண்டு காலம் அவர் ஆண்டார். அவருக்கு பின்னர் அவரது மகன் கிம் ஜாங் இல் 1994–ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். அவர் 17 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார். அவரது மரணத்துக்கு பின்னர் அவரது மகன் கிம் ஜாங் அன் (வயது 31) 2011–ம் ஆண்டு டிசம்பர் 19–ந் தேதி ஆட்சிக்கு வந்தார்.

இந்தக் குடும்பம் வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தினாலும், மக்கள் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.

கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி

இந்த நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இப்போது பொது நிகழ்ச்சிகளில் தோன்றாமல் இருந்து வருகிறார். அவர் கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 3–ந் தேதி தனது மனைவியுடன் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதுவே அவர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி ஆகும்.

பாராளுமன்றத்துக்கு வரவில்லை

அந்த மாதக் கடைசியில் நடந்த பாராளுமன்ற கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது.

அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் உடல் நலமில்லாமல் இருப்பதாக அரசு டெலிவிஷன் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது.

கட்சியின் ஆண்டு விழா

இந்த நிலையில், அவரது தொழிலாளர் கட்சியின் 69–வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக இந்த நாளில் அவர் தனது தாத்தா கிம் இல் சுங், தந்தை கிம் ஜாங் இல் ஆகியோரின் கல்லறைக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக நேற்று அவர் அங்கு செல்லவில்லை. அந்த நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் தலைவர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற வில்லை. இருப்பினும் அவரது பெயர் தாங்கிய மலர்க்கூடை மட்டும் அந்த நினைவுச் சின்னத்தில் வைக்கப்பட்டது.

இதனால் அவர் என்ன ஆனார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதுவரை கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்காமல் இருந்தது இல்லை. இந்த நிலையில், நேற்று அவர் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காலில் காயமா?

இதற்கிடையே, அவர் ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அப்போது அவரது காலில் காயமுற்றதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இருப்பினும் இதற்காக 2 மாதங்களுக்கு மேலாக பொதுநிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருப்பாரா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

மற்றொரு தகவல், ஆகஸ்டு இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் அவர் ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டபோது, உடல் பருமன் காரணமாக கணுக்காலிலும், மூட்டிலும் காயம் அடைந்ததாகவும், அவர் ஒரு உபகரணத்தின் உதவியுடன் நடந்து வந்ததாகவும், பின்னர் காயம் கடுமையானதாக ஆகி விட்டதாகவும் கூறுகிறது.

அவரது கட்டுப்பாட்டில் ஆட்சி

இருந்தாலும், வடகொரியாவின் ஆட்சி இன்னும் அவரது கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாக நம்புவதாக தென் கொரியா கூறுகிறது.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 11, 2014 4:05 am

சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்படுமா? ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்கிறது

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 27–ந் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் பாரம்பரியமிக்க, உடல், மனம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்த யோகா பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி கூறியதுடன், ஆண்டில் ஒரு நாளை சர்வ தேச யோகா தினமாக அறிவித்து கடைப்பிடிக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது தொடர்பான நடவடிக்கையை ஐ.நா. பொதுச்சபை தொடங்குகிறது.

அந்த வகையில் வரும் 14–ந் தேதி முறையான ஆலோசனையை ஐ.நா. பொதுச்சபை நடத்துகிறது. இந்த ஆலோசனை 2 மணி நேரம் நடக்கிறது. இதில் சர்வதேச யோகா தினம் குறித்த வரைவு தீர்மானம் பற்றி விவாதிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 38 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 38 of 81 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 59 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக