புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 25 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 25 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 25 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 25 of 81 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 53 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 25 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:17 am

பாகிஸ்தானில் ராணுவம் விமான தாக்குதல்: 17 போராளிகள் சாவு

பாகிஸ்தானில் போராளிகள் ஆதிக்கம் நிறைந்த வடக்கு வசிரிஸ்தானி ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போராளிகளின் மறைவிடம் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படுவதால் அங்கிருந்து சுமார் 5 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் தர்காமண்டி, சாஷ்மா காவோன் ஆகிய பகுதிகளில் போராளிகளின் மறைவிடம் மீது இன்று ராணுவ விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இதில், 6 வீடுகள் தகர்க்கப்பட்டதாகவும், 17 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை 370 போராளிகளு



உலகச் செய்திகள்!  - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:17 am

ஈராக் இரு தரப்பு மோதலில் 21 ராணுவ வீரர்கள் பலி

ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே மதக்கலவரம் உருவானது. தற்போது அதுவே உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா பிரிவினரின் அரசை எதிர்த்து சன்னி பிரிவின் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு வலிமை வாய்ந்த ஈராக் மாநில இஸ்லாமிய அமைப்பினரும் ஆதரவாக உள்ளனர். அதனால் தீவிரவாதிகளின் கை ஓங்கி வருகிறது.

ஏற்கனவே, மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ள போராளிகள் தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜர்ஃப் அல் சக்கர் என்ற இடத்தில் இன்று போராளிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 21 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

சன்னி பிரிவினர் அதிகம் வாழும் இப்பகுதியில் பல மணி நேரம் வரை நீடித்த இந்த இரு தரப்பு மோதலில் பல போராளிகளும் பலியாகினர். மேலும், சந்தேகத்துக்குரிய பலரை ராணுவத்தினரும், போலீசாரும் கைது செய்துள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:18 am


பாகிஸ்தானில் காதல் திருமண ஜோடியின் கழுத்தை அறுத்த குடும்பத்தினர்

பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடியை அவர்களின் குடும்பத்தினர் கட்டிப்போட்டு, கழுத்தை ஈட்டியால் குத்தி கிழித்துள்ளனர். அந்நாட்டின் கிழக்கு பஞ்சாபின் சத்ரா கிராமத்தை சேர்ந்த 17 வயதான இளம்பெண்ணும் 31 வயதான ஆணும் கடந்த ஜூன் 18ந் தேதி குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின் அப்பெண்ணின் தாய், தந்தையர் இருவரும் வீட்டிற்கு வந்து தங்களது வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பி வீட்டிற்கு வந்தவுடன் காதல் திருமண ஜோடியை கயிற்றால் கட்டியதுடன், அப்பெண்ணின் தந்தை இருவரது கழுத்தையும் ஈட்டியால் அறுத்துள்ளனர்.

இது குறித்த தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த போலீசார் அப்பெண்ணின் பெற்றோரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையின் போது பழங்குடி வகுப்பை சேர்ந்தவரை மகள் திருமணம் செய்து கொண்டதால் தங்களது குடும்ப கவுரவம் பாதிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:35 am


ஈராக் வான்வெளியில் அமெரிக்க விமானங்கள்

ஈராக் வான்வெளியில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் வட்டமிட்டு வருகின்றன.

ஈராக்கில் நடந்து வரும் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாட்டின் சில முக்கிய நகரங்களை போராளிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றை மீடக அரசுப் படைகள் போராடி வருகின்றன.

முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரை மீண்டும் தங்கள் வசப்படுத்த போராளிகளுடன் ராணுவத்தினர் ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக தலையிடாது. தேவைப்பட்டால் அதிகபட்சமாக ராணுவ ஆலோசகர்களை மட்டும் அனுப்புவோம் என்று அந்நாட்டின் அதிபர் ஒபாமா அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து 180 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈராக் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஈராக் வான்வெளியில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் வட்டமிட்டு வருகின்றன. அங்குள்ள அமெரிக்க வீரர்களையும், தூதர்களையும் தேவை ஏற்பட்டால் பாதுகாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈராக் வான்வெளியில் அமெரிக்க விமானம் பறப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.




உலகச் செய்திகள்!  - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 3:42 pm


ஈராக் எல்லையில் சவுதிய அரேபியா 30 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்ததுள்ளது.


ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பின் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய நகரங்களை மீட்க ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே பலத்த சண்டை நடைபெற்று வருகிறது. ஈராக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிரியாவின் நகரம் ஒன்றை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். சன்னி தீவிரவாதிகள் தாங்கள் ஏற்கனவே சிரியா நாட்டில் கைப்பற்றிய பகுதிகளையும், ஈராக்கின் வடக்கு எல்லையோரம் கைப்பற்றிய பகுதிகளையும் ஒன்றாக இணைத்து இஸ்லாமிய நாடு என்ற ஒரு நாட்டை உருவாக்கினர்.

ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளிடன் உள்நாட்டுப்போரில் போராடி வருகின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியா தங்களது நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுவிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் எல்லையில் ராணுவ வீர்களை குவித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் சவுதி அரேபியா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அல் அரேபியா செய்தி சேனல் செய்திவெளியிட்டுள்ளது. தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை எடுக்க அந்நாட்டு அரசர் அப்துல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈராக், சிரிய எல்லைகளை பாதுகாப்பற்ற நிலையில் விட்டு விட்டு, ஈராக் படைகள் தங்கள் நிலைகளை கைவிட்டு சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து சவூதி அரேபிய வீரர்கள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லையிலிருந்து 2,500 ஈராக் வீரர்கள் திரும்பிச்சென்ற வீடியோ காட்சிகளையும் இந்த டெலிவிஷன் ஒளிபரப்பி உள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 1:49 am


ஈராக்கில் சதாம் உசேன் கிராமத்தை அரசு படை மீட்டது

ஈராக்கில் முன்னாள் அதிபர் சதாம் உசேன், திக்ரித் நகரை அடுத்த ஆவ்ஜா கிராமத்தில் பிறந்தவர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் திக்ரித்தையும், அதன் சுற்றுவட்டார பகுதிகளையும் 25 தினங்களுக்கு முன்பே கைப்பற்றினர்.

திக்ரித்தை மீண்டும் தங்கள் வசப்படுத்த ஷியா முஸ்லிம் அரசு படையினர் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆவ்ஜா கிராமத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் இரவோடு இரவாக தாக்குதல் நடத்தி ஆவ்ஜா கிராமத்தை அரசு படையினர் மீட்டனர்.

இந்த தாக்குதலில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.



உலகச் செய்திகள்!  - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 1:50 am

பிரான்ஸ்: வகுப்பறையில் ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற மாணவனின் தாய்

பிரான்சில் பள்ளிக்கூட வகுப்பறைக்குள் சென்ற ஒரு மாணவனின் தாய், ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

கிழக்கு பிரான்சில் உள்ள அல்பி என்ற நகரில் தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறன்றனர். இன்று காலை ஒரு மாணவனுடன், அவனது தாயும் பள்ளிக்கூடத்திற்கு வந்தார். தன் மகன் படிக்கும் வகுப்பறைக்குள் சென்ற அவர், சிறிது நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியையை குத்தினார்.

இதனால் பலத்த காயம் அடைந்த அந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியால் குத்திய பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை மந்திரிக்கு பிரான்ஸ் அதிபர் ஹொலாண்டே உத்தரவிட்டுள்ளார். ஆசிரியை ஒருவரை மாணவனின் தாய் குத்திக் கொலை செய்த சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 1:51 am

சிரியாவின் பெரிய எண்ணெய் வயலை ஐ.எஸ்.ஐ.எஸ். படை கைப்பற்றியது

வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து தங்களது அரசாட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் சிரியாவின் பெரிய எண்ணெய் வயல் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.

ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

2003–ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது சில அரபு நாட்டினர் சேர்ந்து இந்த படையை உருவாக்கினார்கள். அப்போது பெயரளவுக்கு தான் இது செயல்பட்டு வந்தது.

ஆனால் 2006–ம் ஆண்டுக்கு பிறகு இது தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது. சிரியா போருக்கு பிறகு இந்த படையில் ஏராளமானோர் சேர்ந்தனர். தற்போது 11 ஆயிரம் பேர் படையில் உள்ளனர். அதில் 6 ஆயிரம் பேர் ஈராக்கில் போரிட்டு வருகிறார்கள். 5 ஆயிரம் பேர் சிரியாவின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்களுக்கு பின்னணில் 15 ஆயிரம் பேர் வரை படையில் சேருவதற்கு தயாராக உள்ளனர். விரைவில் 60 ஆயிரம் பேரை சேர்த்து பெரும் படையை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கில் பாங்கி மற்றும் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த ரூ.12 ஆயிரம் கோடி பணம் இவர்களிடம் உள்ளது. இதை வைத்து பெரும் படையை உருவாக்கி வருகிறார்கள். ஒவ்வொரு வீரருக்கும் மாதம் ரூ.36 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

அரபு நாடுகள் பலவற்றில் சன்னி முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களும் இவர்களுக்கு பண உதவி செய்து வருகிறார்கள். இந்த படையின் தலைவராக அபுபக்கர் அல் பகாதி செயல்பட்டு வருகிறார். வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்.-சின் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓர் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்ட அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி, வடக்கு சிரியாவில் இருந்து ஈராக்கின் டியாலா மாகாணம் வரை உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், இந்நிலப்பரப்பின் 'கலிபா’வாக (மன்னர்) ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு பக்ர் அல் பக்தாதி விளங்குவார் என்றும் அறிவித்துள்ளார்.

இப்பகுதிக்குள் கலிபாவின் படைகள் நுழைந்த நேரத்தில் இருந்து, முந்தைய ஆட்சியாளர்களின் அதிகாரம் காலாவதியாகி விட்டதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் புதிய கலிபாவுக்கு விசுவாசமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும் எனவும் அந்த ‘ஆடியோ அறிக்கை’ குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புதிய ஆட்சி அமைக்கப்பட்டதால் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (ஐ.எஸ்.ஐ.எஸ்.) என்ற தங்கள் அமைப்பின் பெயர் ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி அறிவித்தார்.

இதை உலகின் எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில், இன்று அந்த இயக்கத்தின் தலைவர் அபு பக்ர் அல் பக்தாதி ஒரு ஆடியோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு அவரே தலைவர் என்றும், ஜிஹாத் என்னும் புனிதப் போரை நடத்த ஆயுதமேந்தி தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு திரண்டு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து பர்மா வரை இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பழிதீர்க்கும் வகையில் முஸ்லிம்கள் புனிதப் போருக்கு தயாராக இருக்கும்படியும் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

மேலும், இந்த அமைப்பினர் தங்களது அரசாட்சிக்கு உட்பட்ட பகுதி என்று அறிவித்துள்ள சிரியாவின் ரக்கா நகரின் வீதி வழியே ஒரு ராணுவ வாகனம் ‘ஸ்கட்’ ரக ஏவுகணையை ஏற்றிச் செல்லும் புகைப்படமும் ஐ.எஸ்.ஐ.எஸ். இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தங்களது ஆயுத பலத்தை காட்டி உலக நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மிரட்ட நினைப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே, ஈராக்-சிரியா இடையிலான டெய்ர் அல் ஸவ்ர் எல்லையோரம் உள்ள புகமால் என்ற நகரையும் கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர், கிழக்கு சிரியாவில் உள்ள எண்ணெய் வயல் ஒன்றினையும் நேற்று கைப்பற்றி தங்கள் வசமாக்கியுள்ளனர்.

கிழக்கு சிரியாவின் டெய்ர் அல் ஸவ்ர் பகுதியை ஒட்டியுள்ள அல்-உமர் எண்ணெய் வயலை கைப்பற்றுவதில் நுஸ்ரா குழுவினருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த சூழ்நிலையில் நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் இந்த வயலினை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளதாக சிரியாவில் உடுள்ள பிரிட்டைன் நாட்டின் மனித உரிமை கண்காணிப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட எண்ணெய் வயலில் ஒரு எரிவாயு தயாரிப்பு தொழிற்சாலை, மின்சார உற்பத்தி நிலையம் ஆகியவையும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 1:51 am

விலைப் பொருட்களைப் போல் பணிப்பெண்களை விற்கும் சிங்கப்பூர் வணிக வளாகம்

சிங்கப்பூரில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் சந்தைப் பொருட்களைப் போல் பணிபெண்களை காட்சிப்படுத்தி விலைக்கு விற்கும் அவலம் மனித உரிமையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள புக்கிட் திம்மா ஷாப்பிங் சென்டரில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மியான்மர் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள், ‘வீட்டு வேலையாள்’, ‘குழந்தைகள் (அ) முதியோர்களை பராமரிப்பவர்’, 'குடும்பத்தை நிர்வகிப்பவர்’ என்னும் அடையாளப் பெயர் பலகையுடன் வரிசையாக நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் உழைப்புத் திறனை காட்டும் வகையில் இந்தப் பெண்கள், இஸ்திரி போட்ட துணிகளையே மீண்டும், மீண்டும் இஸ்திரி போட்டும், அழ முடியாத பொம்மைகளை தொட்டில்களில் போட்டு ஓயாமல் ஆட்டியும், முதியோர் அமரும் காலி சக்கர நாற்காலிகளை வெகு லாவகமாக கடையை சுற்றி தள்ளிக் கொண்டும் திரிகிறார்கள்.

இவர்களில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பணிப்பெண்கள் விரைவாக விலை போய்விடுவதாகவும், பிரச்சனைக்குரியவர்கள் என கருதப்படுவதால் மியான்மர் நாட்டு ‘சரக்கு’கள் தேங்கி கிடப்பதாகவும் கூறப்படுகிறது.



உலகச் செய்திகள்!  - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 2:18 am

சூடானில் இனக்கலவரத்தில் 150 பேர் உயிரிழப்பு

எண்ணெய் வளமிக்க சூடானில் பெரும்பாலான எண்ணெய் கிணறுகள் மேற்கு கோர்டபான் மாநிலத்தில் உள்ளன. இங்கு எண்ணெய் கிணறுகள் அருகில் உள்ள நிலங்கள் தொடர்பாக அவ்லோடு ஓம்ரான் மற்றும் அல் சியாட் என்ற 2 பழங்குடி இன மக்களிடையே மோதல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அல் திபைப் பகுதியில் நேற்று முன்தினம் இரு பிரிவினரிடையே மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டது. நாள் முழுவதும் நடந்த இந்த சண்டையில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.




உலகச் செய்திகள்!  - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 25 of 81 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 53 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக