புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
2 Posts - 1%
prajai
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
435 Posts - 47%
heezulia
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
30 Posts - 3%
prajai
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!

Page 23 of 81 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 52 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 10:04 pm

இந்தோனேசியாவில் கடும் நிலச்சரிவு: 6 பேர் பலி

இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் இறந்தனர்.

மேற்கு ஜாவாவின் போகர் மாவட்டத்தில் நேற்று முதல் கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் மேகர்வாங்கி கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. 30 மீட்டர் உயரமுள்ள மலையில் இருந்து சேறும் சகதியும் மலையடிவாரத்தில் உள்ள வீடுகள் மீது விழுந்தது. இதில் 5 வீடுகள் மண்ணில் புதைந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதையுண்ட வீடுகளில் இருந்து 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 3 பேரைக் காணவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 10:06 pm

தப்பி வரும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்துங்கள்: ஹமித் கர்சாய்க்கு ஷெரீப் வேண்டுகோள்

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரவாதிகள் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் செல்கின்றனர். வடக்கு வசிரிஸ்தானில் விமான தாக்குதல் நடத்தியதால் சுமார் 2000 தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக நேற்று தகவல் வெளியானது. எனவே, தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தும் வகையில் எல்லையை மூடும்படி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாயிடம் கேட்டுக்கொண்டார்.

இதனை உறுதி செய்த பிரதமர் அலுவலகம், கர்சாயை நவாஸ் ஷெரீப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளது.

ராணுவம் நடத்திய விமான தாக்குதலில் ஏற்கனவே 184 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், இன்று தத்தா கெல் பகுதியில் தீவிரவாதிகளின் மறைவிடத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரமலான் மாதம் தொடங்குவதற்கு முன்பாக தாக்குதல் நடவடிக்கையை நிறைவு செய்ய ராணுவம் விரும்புவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 10:30 pm

எகிப்தின் புதிய அரசின் பிரதமராக இப்ராஹீம் மெஹ்லெப் பதிவியேற்பு

எகிப்து நாட்டில் கடந்த வருடம் அதிபர் முகமது மோர்சி பதவி இறக்கம் செய்யப்பட்ட பின்னர் இந்த ஆண்டு மே மாத இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி அப்டால் பட்டா எல் சிசி அதிபர் பதவி ஏற்றார்.

அதனைத்தொடர்ந்து இன்று அந்நாட்டின் புதிய அமைச்சரவையும் அதிபரின் கீழ் பதவிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இந்த நிகழ்ச்சி தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையில் இன்று அதிகாலை நடைபெற்றது.

கடந்த ஐந்து மாதங்களாக இடைக்காலப் பிரதமர் பொறுப்பை வகித்த பிரதமர் இப்ராஹீம் மெஹ்லெபே மீண்டும் பிரதமர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். நான்கு பெண்களுடன் பல தொழில்நுட்ப வல்லுனர்கள் உட்பட மொத்தம் 34 அமைச்சர்கள் இந்த புதிய அமைச்சரவையில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 13 பேர் புதியவர்கள் ஆவர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதலீட்டு அமைச்சர் அஷ்ரப் சல்மான், சர்வதேச கூட்டுறவு அமைச்சர் நக்லா எல் அஹ்வனி உட்பட பிற அமைச்சர்கள் பிரதமரைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற மற்ற பெரும்பாலான முக்கிய துறைகளின் அமைச்சர்கள் தொடர்ந்து அந்தத் துறைகளிலேயே நீடித்திருக்க குறிப்பிட்ட அளவிலேயே பழைய அமைச்சரவை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:29 am

கால்பந்து போட்டியை ரசித்த 21 பேர் நைஜீரியாவில் கொலை

கானோ:ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, மிகவும் ஏழ்மையான நைஜீரியாவில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியை, 'டிவி'யில் பார்த்துக் கொண்டிருந்தவர்களை குறிவைத்து, நேற்று நடத்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில், 21 பேர் கொல்லப்பட்டனர்.

நைஜீரிய நாட்டின் தேசிய விளையாட்டு கால்பந்து. எனினும், அந்நாட்டில், 2009ல் இருந்து வன்முறையில் ஈடுபட்டு வரும், 'போகோ ஹரம்' பயங்கரவாதிகள், கால்பந்து விளையாட்டு போட்டிகளை காண்பவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கானோ என்ற நகரில் பிரமாண்ட திரையில் கால்பந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்தவர்களை குறிவைத்து, வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பயங்கர வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதில், 21 பேர் கொல்லப்பட்டனர்; 27 பேர் உடல் பாகங்கள் சிதறி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டில் ஜனநாயக ரீதியிலான அரசு ஆட்சியில் உள்ளது. அதிபராக, குட்லக் ஜோனாதன் உள்ளார்.

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:35 am

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 6 பேர் பலி: பாகிஸ்தான் கண்டனம்

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தர்கா மண்டி என்ற இடத்தில் சந்தேகத்துக்குரிய ஒரு வீட்டின் மீது நேற்று பறந்த அமெரிக்க ஆளில்லா விமானம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 6 பேர் பலியாகினர். பலியானவர்கள் பற்றிய உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

'நாங்கள் ஏற்கனவே பல முறை தெளிவாக தெரிவித்திருப்பதைப் போலவே, அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்தியுள்ள இன்றைய தாக்குதல், பாகிஸ்தானின் இறையாண்மையை மீறும் செயலாகும். இதுபோன்ற தாக்குதல்கள் பாகிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிரான விளைவை ஏற்படுத்தி விடும்' என்று அந்நாட்டின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் கூறியுள்ளார்.

'உளவு தகவல்களை அடிப்படையாக கொண்டு, அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பாகிஸ்தானில் நடத்தி வரும் இதுபோன்ற ஆளில்லா விமான தாக்குதல்களை நிறுத்த முடியாது' என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த மாதம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 6:29 am

ஐ.நா., மனித உரிமை விசாரணையை ஏற்க முடியாது: இலங்கை பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றம்

கொழும்பு: இலங்கையில், கடந்த 2009ல், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதி உள்நாட்டுப் போரின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கமிஷன் விசாரணையை நிராகரித்து, இலங்கை பார்லிமென்டில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'அத்தகைய விசாரணையை அனுமதிக்க முடியாது' என, இலங்கை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கடந்த 2009ல் நடந்த போரின் போது, 40,000 தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதாக தமிழர் அமைப்புகள் புகார் கூறி வருகின்றன; அதை, இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான அரசு மறுத்து வருகிறது.இந்த விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கமிஷனில் தொடர்ந்து மூன்றாண்டுகளாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கைக்கு விசேஷ குழுவை அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இலங்கை அரசு, அத்தகைய முடிவுக்கு எதிராக பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் மூலம், ஐ.நா.,வின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட நினைத்தது.அதன் படி, இலங்கை பார்லிமென்டில் நேற்று தீ்ர்மானம் கொண்டு வரப்பட்டது. 'ஐ.நா., மனித உரிமை அமைப்பின் விசேஷ விசாரணை குழு வரக் கூடாது' என, வரைவு தீ்ர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீண்ட விவாதத்திற்கு பிறகு அந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அதில், தீர்மானத்திற்கு ஆதரவாக, 144 ஓட்டுகளும், எதிராக 10, ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து, 37 ஓட்டுகளும் பதிவாகின. இதன் படி, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தீர்மானம் வெற்றி பெற்றது.அந்த தீர்மானத்தில், 'இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் விசாரணையை ஏற்பதில்லை. அது, தற்போதைய அமைதி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஆளும் சுதந்திரா கட்சியின் நெருங்கிய கூட்டணி கட்சியாக இருக்கும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், நேற்றைய ஓட்டெடுப்பை புறக்கணித்தது. புத்த துறவிகளால், முஸ்லிம்கள் நான்கு பேர் கொல்லப்பட்டதை கண்டித்தும், தகுந்த பாதுகாப்பு வழங்க தவறிய இலங்கை அரசை கண்டித்தும், அந்த முஸ்லிம் கட்சி, ஓட்டெடுப்பை புறக்கணித்தது.

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 23, 2014 3:42 am

மத நல்லிணக்கத்தை விரும்பாத சர்வதேச படைகள் இலங்கை வன்முறையை சாதகமாக்குகிறது: ராஜபக்சே

கொழும்பு: மத நல்லிணக்கத்தை விரும்பாத சர்வதேச படைகள் இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த வன்முறைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பதாக அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், ''இலங்கையில் கடந்த வாரம் நடந்த இஸ்லாமியர்கள் மற்றும் சிங்களர்கள் இடையே நடந்த மோதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக தனிக்குழு ஒன்றை அமைக்கவுள்ளது. எனவே, நாட்டின் தற்போதைய சூழலை மக்கள் புரிந்துக்கொண்டு அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை விரும்பாத சர்வதேச படைகள், இலங்கையில் சமீபத்தில் நடந்த வன்முறைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றன. எந்த ஒரு தனிநபரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், சட்டத்தை மதிக்காமல் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 23, 2014 3:43 am

விண்வெளியில் காபி தயாரிக்க ஏற்பாடு

விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. அங்கு விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பூமியில் இருந்து அடிக்கடி விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு இங்கே உள்ளது போல எல்லா வகையான உணவுப்பொருட்களும் வழங்கப்படுவது இல்லை. அவர்களுக்கென பிரத்யேக முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது.

அந்தவகையில் அங்கு தங்கியிருக்கும் வீரர்கள் சூடான காபி குடிப்பதற்காக காபி தயாரிக்கும் எஸ்பிரசோ எந்திரம் ஒன்றை அனுப்ப இத்தாலி முடிவு செய்துள்ளது. இத்தாலி விண்வெளி நிறுவனத்தின் ஆதரவுடன், அங்குள்ள 2 நிறுவனங்கள் இணைந்து இந்த பணிகளை திட்டமிட்டு வருகின்றன.

கேப்சூல் வடிவிலான இந்த இயந்திரம் மூலம் காபி உள்ளிட்ட பல்வேறு சூடான பானங்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தயாரிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 23, 2014 3:43 am

85 வயதிலும் ஆசை வரும்

இளம்பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுக்கும் வாலிபர்களை ‘ஈவ்–டீசிங்’ வழக்கில் போலீசார் கைது செய்வர். ஆனால் மூதாட்டி ஒருவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த 85 வயது முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜப்பானில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த முதியவரின் மனைவி சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது அவருடன் 80 வயது மூதாட்டி ஒருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் முதியவருக்கும், அந்த மூதாட்டிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த முதியவரின் மனைவி இறந்து விட்டதைத்தொடர்ந்து அவர் அந்த மூதாட்டியை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தார். இதை தவிர்க்குமாறு மூதாட்டி எச்சரித்தும், முதியவர் கேட்கவில்லை.

பொறுத்து பொறுத்து பார்த்த அந்த மூதாட்டி போலீசில் புகார் செய்து விட்டார். அதை பெற்றுக்கொண்ட போலீசாரும் அந்த முதியவரை கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 23, 2014 6:38 pm

கென்யாவில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 20 பேர் பலி

கென்யாவில் சில நாட்களாக அங்கு வசிக்கும் டேகோடியா பிரிவினருக்கும் காரே பிரிவினருக்கும் இடையெ கருத்து மோதல்கள் இருந்து வந்தன. இந்நிலையில் இருபிரிவினருக்கும் இடையே நேற்று பெரிய அளவில் மோதல் ஏற்பட்டு கலகம் வெடித்தது. இதில் சுமார் 40 பேர் பலியாகியிருக்கலாம் என்று சோமாலியா ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

ஆனால் இன்று இதுகுறித்து பேசிய அந்நாட்டு காவல்துறை உயரதிகாரி மாசோத் மிவ்னியி சுறுகையில் “இத்தாக்குதல் பதிலுக்கு பதில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நடைபெற்றிருக்கிறது.

இத்தாக்குதலில் இதுவரை பலியானவர்கள் பற்றி பல்வேறு வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. எங்களின் அதிகாரப்பூர்வ தகவலின் படி இதுவரை சுமார் 20பேர் இக்கலவரத்தால் உயிரிழந்துள்ளனர். கலவரம் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களாகவே சோமாலியா மற்றும் கென்யாவின் எல்லைப்புறங்களில் தொடர் கலவரங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 23 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 23 of 81 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 52 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக