ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!

+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters

Page 22 of 81 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 51 ... 81  Next

Go down

உலகச் செய்திகள்!  - Page 22 Empty உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 22 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


உலகச் செய்திகள்!  - Page 22 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Thu Jun 12, 2014 2:00 am

நேட்டோவுக்கு எதிராக எல்லையில் ரஷ்யா படைக் குவிப்பு

உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா இணைத்துக்கொண்டதை தொடர்ந்து, உக்ரைனுக்கு ஆதரவான மேற்கத்திய (நேட்டோ) நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவை அச்சுறுத்தும் வகையில், அந்நாட்டின் மேற்கு எல்லையை ஒட்டியுள்ள பால்டிக் நாடுகளில் ஒன்றான லாட்வியாவில், நேட்டோ படைகள் திங்கள்கிழமை போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன. லாட்வியா தலைநகர் ரிகா அருகில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட 10 நாடுகளின் 4,700 வீரர்கள் திங்கள்கிழமை இப் பயிற்சியில் ஈடுபட்டனர். 800 ராணுவ வாகனங்களும் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.

இந்தப் போர்ப் பயிற்சிக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்யா தனது மேற்கு எல்லையை நோக்கி செவ்வாய்க்கிழமை படைகளை அனுப்பத் தொடங்கியது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், “பால்டிக் கடற்படை, விமானப் படை மற்றும் தரைப்படை வீரர்கள், கலினிங்ராட் பகுதியை நோக்கி விரைந்து வருகின்றனர். லாட்வியாவில் உள்ள நேட்டோ படைகளுக்கு இணையான வலிமை கொண்டதாக இப்படை இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.


உலகச் செய்திகள்!  - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 22 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Fri Jun 13, 2014 12:31 am

இராக்கின் மொசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்: அச்சத்தால் 5 லட்சம் பேர் வெளியேறினர்

இராக்கின் இரண்டாவது பெரிய மொசுல் நகரத்தை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதைய டுத்து அச்சம் காரணமாக சுமார் 5 லட்சம் பேர் அந்த நகரத்தைவிட்டு வெளியேறி உள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

இராக்கில் ஷியா பிரிவினரின் தலைமையிலான அரசுக்கு எதிராக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அன்ட் தி லெவன்ட்' (ஐஎஸ்ஐஎல்) என்ற தீவிரவாத அமைப்பு, கார் வெடிகுண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப் பட்டுள்ளனர்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பலுஜா நகரத்தைக் கைப்பற்றிய இந்த அமைப்பினர், செவ்வாய்க்கிழமை மொசுல் நகரையும் கைப்பற்றினர். இதே அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸ்ஸாதுக்கு எதிராகவும் போரிட்டு வருகின்றனர்.

அமெரிக்கா, ஐ.நா. கவலை

இது குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ள அமெரிக்கா, "இராக்கில் மிகவும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது அந்த பிராந்தியத்துக்கே மிகப் பெரும் அச்சுறுத்தல் ஆகும்" என கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "மொசுல் நகரில் பாதுகாப்பு நிலை மிகவும் மோசமாகி இருப்பது கவலை அளிக்கிறது" என்றார்.

5 லட்சம் பேர் வெளியேற்றம்

இதுகுறித்து, ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச குடிபெயர்வு நிறுவனம் (ஐஓஎம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இராக்கின் மொசுல் நகரை செவ்வாய்க்கிழமை ஐஎஸ் ஐஎல் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் சுமார் 5 லட்சம் பேர் வெளியேறி வேறு இடத்தில் தங்கி உள்ளனர்.

கடந்த சில தினங்களாக நடை பெற்ற வன்முறை சம்பவங்க ளில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஏராளமானோர் காயமடைந்திருக் கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 4 மருத்துவமனைகளை உள்ளடக் கிய முக்கிய சுகாதார வளாகம் நகரின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால் அதனுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. வாகனப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் பொது மக்கள் அங்கிருந்து நடந்து வெளி யேறி வருகின்றனர்.

நகரின் மேற்குப் பகுதியில் இருந்த குடிநீர் வழங்கும் நிலையம் வெடிவைத்து தகர்க்கப்பட்டதால் குடிநீர் மற்றும் உணவுப் பொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இராக் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அபு பக் அல்-பாக்தாதி தலைமையிலான ஐஎஸ்ஐஎல் தீவிரவாத அமைப்பில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இதர ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் உள்ளனர். இவர்கள் இராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். அல்காய்தாவின் ஒரு பிரிவாக செயல்பட்ட இந்த அமைப்பு இப்போது, அல்-காய் தாவையே மிஞ்சும் அளவுக்கு வளர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


உலகச் செய்திகள்!  - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 22 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Fri Jun 13, 2014 12:31 am

அத்துமீறும் தமிழக மீனவர்கள் மீதான நடவடிக்கை தொடரும்: இலங்கை ராணுவம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள், தேசப் பாதுகாப்பு கருதி தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவன் வணிகசூரிய எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று கொழும்புவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனர்வகள், இலங்கையின் பாதுகாப்பு கருதி தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்றனர் என அடிக்கடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது உண்மைக்குப் புறம்பானது.

சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் மீனவர்கள், தேசிய பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற விதத்தில் நடந்துகொள்வதாக சில ஊடகங்கள், இணையதளங்கள் தவறான செய்திகளை முன்னெடுத்துச் செல்கின்றன. அவற்றில் எந்தவித உண்மையும் கிடையாது. இதனை நான் முற்றிலுமாக மறுக்கின்றேன்.

சர்வதேச சட்டத்தை மீறும் இந்திய மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்படுவதை மனிதாபிமானமற்ற செயல் என்று எவரும் கூற முடியாது" என்றார் அவர்.


உலகச் செய்திகள்!  - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 22 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Fri Jun 13, 2014 5:24 pm

தந்தத்திற்காக 20 ஆயிரம் யானைகள் கொலை

ஜெனிவா : 2013ம் ஆண்டில், தந்தத்திற்காக, 20 ஆயிரம் ஆப்ரிக்க யானைகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அழியும் நிலையில் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்த ஆய்வு அமைப்பு கூறியுள்ளது. 2012ம் ஆண்டிலும், இதே அளவில், யானைகள் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


உலகச் செய்திகள்!  - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 22 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Fri Jun 13, 2014 5:25 pm

உக்ரைனில் சுரங்க விபத்து : 7 பேர் பலி

கீவ் : உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கிரோவ்ஸ்க் நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில், 7 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாயினர். 2 பேர் இடிபாடுகளில் சி்க்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 2007ம் ஆண்டில் ஜாஸ்யாட்கோ பகுதியில் உள்ள சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில், 100 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்க


உலகச் செய்திகள்!  - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 22 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சம்பத் Fri Jun 13, 2014 8:09 pm

உலகச் செய்திகள்!  - Page 22 3838410834 
avatar
சம்பத்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 29/05/2014

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 22 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Mon Jun 16, 2014 1:49 am

பாக். போர் விமானங்கள் குண்டுவீச்சு; கராச்சி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கொலை

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்குமிடங்களில் போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தின. இதில் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தினாலும், அதில் குறிப்பிடத்தக்க பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்கள் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் மற்று உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிக் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதனையடுத்து அமெரிக்காவும் பாகிஸ்தானில் அதிரடி தாக்குதலை நடத்த தொடங்கியது. அமெரிக்கா அதிரடி தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தேகான், தத்தா கேல் வனப்பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் அதிகாலை நேரத்தில் குண்டுவீச்சு நடத்தின. தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. தீவிரவாதிகளின் 8 பதுங்குமிடங்கள் தகர்க்கப்பட்டன. ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டன.

மேலும் கராச்சியில் நடந்த தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதியும் கொல்லப்பட்டு விட்டதாக ராணுவ தகவல்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தானின் டான் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. கராச்சி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அபு அப்துல் ரகுமான் அல் மானி கொலை செய்யப்பட்டதாக ராணுவ தகவல்கள் தெரிவித்துள்ளன என்று டான் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்க தீவிரவாதிகளும் பலியாகியுள்ளனர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்திற்கு சீனாவில் நடந்த தாக்குதலுக்கு தொடர்பு உள்ளது. சமீபத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசை சீனா வலியுறுத்தியது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் உஸ்பெகிஸ்தான் தீவிரவாதிகள் ஆவார்கள். வெடிமருந்து கிடங்கு ஒன்றும் அழிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் பலியானவர்களில் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்களும் அடங்குவர் என்று எக்ஸ்பிரஸ் டிரிபியூன் கூறுகிறது.


உலகச் செய்திகள்!  - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 22 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Mon Jun 16, 2014 11:54 pm

பாகிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்: இதுவரை 177 தீவிரவாதிகள் சாவு

பாகிஸ்தானின் மிகப்பெரிய விமான நிலையமான கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து தீவிரவாதிகளை களையெடுக்கும் பணியை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கிடங்களை குறிவைத்து இன்று விமானங்கள் மற்றும் டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் இதுவரை 177 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-

ஷாவால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த 6 இடங்கள் மீது விமானப்படை விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வசிக்கவில்லை.

இந்த தாக்குதலின்போது முக்கிய நகரமான மிர் அலி நகருக்கு தப்பிச் செல்ல முயன்ற 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீரான்ஷா அருகில் சாலையில் குண்டுகளை புதைத்து வைத்தபோது 3 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். டேகர்-போயாவில் நேற்று நடந்த தாக்குதலில் 140 தீவிரவாதிகள் இறந்தனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் தெரிக் இ தலிபான் தீவிரவாதிகளுடன் இணைந்து சண்டையிட்ட உஸ்பெகிஸ்தான் தீவிரவாதிகள் ஆவர்.

இந்த அதிரடி தாக்குதல் தீவிரவாதிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அவர்களின் முக்கிய தகவல் தொடர்பு மையம் தகர்க்கப்பட்டது. தப்பி ஓடும் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


உலகச் செய்திகள்!  - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 22 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Jun 17, 2014 12:43 am

ஆப்கானிஸ்தானில் ஓட்டு போட்ட 11 பேரின் விரல் துண்டிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற அதிபர் தேர்தலை புறக்கணிக்குமாறு தலிபான் தீவிரவாதிகளின் எச்சரிக்கையை மீறி வாக்களித்த 11 பேரின் விரல்களை தலிபான்கள் துண்டித்தனர். ஆப்கானிஸ்தானில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஏற்கெனவே கடந்த மாதம் நடைபெற்ற முதல் கட்ட அதிபர் தேர்தலில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாவும் முன்னாள் உலக வங்கி பொருளாதார வல்லுநர் அஷ்ரப் கானியும் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண் டாம் கட்டத் தேர்தலில் மக்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது. அதை மீறி வாக்களித்தால் அவர்களை சித்ரவதை செய்து கொல்வோம் என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். தலிபான்களின் எச்சரிக்கையை மீறி ஹிராத் பிராந்தியத்தில் வாக்களித்துவிட்டு வந்த 11 முதியவர்களின் விரல்களை தலிபான்கள் துண்டித்து விட்டனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று ஆப்கான் உள்துறை துணை அமைச்சர் அயூப் சலாங்கி இன்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டார்.

ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2&ம் கட்ட தேர்தலில் 13.5 லட்சம் மக்கள் வாக்களித்தனர். வடக்கு பால்க், தெற்கு காந்தகார் உட்பட பல்வேறு பிராந்தியங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஜூலை 22&ம் தேதி இறுதிகட்ட முடிவுகள் வெளியா கும் என்று ஆப்கன் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


உலகச் செய்திகள்!  - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 22 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Jun 17, 2014 10:03 pm

இலங்கை வன்முறை: உரிய நடவடிக்கை எடுக்க முஸ்லீம் நாடுகள் உறுதி!

கொழும்பு: இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்லாமிய நாடுகள் உறுதியளித்துள்ளன.

கடந்த 15ஆம் தேதி இலங்கையிலுள்ள ஆழுத்கமாவில் முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மேலும் முஸ்லீம்களின் பல்வேறு கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளான ஈரான், கத்தார், ஆப்கானிஸ்தான், குவைத், பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் தூதர்கள், கொழும்பிலுள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

அப்போது, இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சம்பவம் குறித்து, 6 நாடுகளின் தூதர்களுக்கு, ரவூப் ஹக்கீம் விளக்கி கூறினார். மேலும், இந்த தாக்குதலின் பின்னணி குறித்தும், அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்தும், 'பொதுபல சேனா' என்கின்ற பெயரில் தீவிரவாத இயக்கத்தினரின் இந்த திட்டமிட்ட தாக்குதல்களினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிர் மற்றும் உடமை இழப்புகள் குறித்தும், தற்போதைய நிலைவரம் பற்றியும் எடுத்துரைத்தார்.

இவற்றை மிகவும் கவனமாகக் கேட்ட தூதர்கள், இலங்கை வாழ் முஸ்லீம்களின் நிலைமை குறித்து தமது நாடுகள் கவலை கொண்டிருப்பதாகவும், அவர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகவும் பொறுப்புணர்வுடன் முயற்சிகளில் ஈடுபட தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும், இப்பிரச்னைகள் குறித்து தமது நாடுகளின் தலைவர்கள், இலங்கை ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும், 19ஆம் தேதி நடைபெறவுள்ள முஸ்லீம் நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டிலும் இதுகுறித்து எடுத்துரைத்து, அதன் மூலம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தனர்.


உலகச் செய்திகள்!  - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 22 Empty Re: உலகச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 81 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 51 ... 81  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum