புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 11 I_vote_lcapஉலகச் செய்திகள்!  - Page 11 I_voting_barஉலகச் செய்திகள்!  - Page 11 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 11 of 81 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 46 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 11 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 30, 2013 12:25 pm

சிவா wrote:காவலாளியைக் கொன்ற மலைப்பாம்பு
ஆனால் அநத பாம்பு அவருடைய கழுத்தை நெறித்து கொன்று விட்டு தப்பி ஓடியது. .
சரியான ரவுடி பாம்பா இருக்கும் போல , கொன்னுட்டு தப்பி ஓடியிருக்குது , இப்ப போலீஸ் வலைவீசி தேடிவருவார்களே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 4:19 pm

டிசம்பர் 31 பேரணியில் சமரசம் கிடையாது – சாஹிட் எச்சரிக்கை

உலகச் செய்திகள்!  - Page 11 Ahmad-zahid

விலையேற்றத்தை மையமாக வைத்து அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் நாளை டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணிக்கு எந்த ஒரு கருணையோ அல்லது சமரசமோ காட்ட மாட்டோம் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி கூறியுள்ளார்.

டத்தாரான் மெர்டேகாவில் நாளை நடக்கவுள்ள இந்த பேரணியில் மக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த பேரணி எதிர்கட்சியினரின் ‘சூழ்ச்சி அரசியல் கலாச்சாரம்’ என்றும் சாஹிட் விமர்சித்துள்ளார்.

இது போன்ற எதிர்மறையான அரசியல் கலாச்சாரத்தை தவிர்த்து பேரணியை உடனடியாக நிறுத்துமாறும், எதிர்கட்சியினர் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் சாஹிட் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே பாஸ் உலாமா தலைவர் ஹாரும் தாயிப் இது குறித்து வெளியிட்டுள்ள கருத்தில், “இந்த புதுவருட பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு அல்ல. அரசாங்கம் தான் அப்படி கூறிக்கொள்கிறது. இந்த பேரணியில் எந்த ஒரு கலகமும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஒருவேளை அரசாங்கம் அடாவடித்தனமாக ஏதாவது செய்தால் கலகம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது ” என்று தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 4:10 pm

வங்காளதேசத்தில் தொடரும் வன்முறை; அரசியல் கட்சிகள் பேசி தீர்வு காண வேண்டும் - அமெரிக்கா

வங்காளதேசத்தில் வருகிற 5-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதை முன்னாள் பிரதமர் கலிதா ஜியா புறக்கணித்து விட்டார். அதோடு தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பேரணி, போராட்டம் நடக்கிறது. இதனால் வன்முறை வெடித்து பலர் உயிர் இழந்தனர். தேர்தல் அமைதியாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வன்முறை சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அமைதியா தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 4:12 pm

  புதுவருட பிறப்பை முன்னிட்டு பாம் ஜுமேரா தீவில் மிகப்பெரிய வானவேடிக்கை - துபாய் திட்டம்

உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக புர்ஜ் துபாய் அல்லது "புர்ஜ் காலிஃபா"  திகழ்கிறது. அமீரகங்களின் வெற்றிச் சின்னமாக இக்கட்டிடம் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது கட்டப்பட்டது.  இக்கட்டடத்தில் உலகின் மிகப்பெரிய மசூதி, நட்சத்திர ஓட்டல்கள், வர்த்தக அலுவலகங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள் என பல வசதிகள் உள்ளன. மேலும் மணல்,  பாறைகளை கொண்டு புதிய தீவை உறுவாக்கியும் துபாய் ஆச்சரியப்படுத்தியது.

பல்வேறு சிற்ப்பான செயல்களை செய்த துபாய் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் மிகப்பெரிய வானவேடிக்கையை நடத்த துபாய் திட்டமிட்டுள்ளது.

புதுவருடம் பிறப்பதை முன்னிட்டு இன்று இந்த வானவேடிக்கையை துபாய் நடத்த உள்ளது. கடந்த ஆண்டு குவைத் நாட்டின் 50வது தேசிய நாள் கொண்டாடப்பட்ட போது 60 நிமிடங்கள் வானவேடிக்கை நடத்தப்பட்டது. அதற்கு சுமார் 77,000 வெடிகள் பயன்படுத்தப்பட்டது.

இதனை மிஞ்சும் அளவுக்கு,  ஆறு நிமிடங்களில் 400 இடங்களிலில் இருந்து 450,000  வெடிகளை வெடித்து மிகப்பெரிய வானவேடிக்கையை காட்ட உள்ளது. இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு வான்வேடிக்கையை நிகழ்த்தப்பட உள்ளது. மணல் பாறைகளை கொண்டு உறுவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவில் இந்த வானவேடிக்கை நடத்தப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 4:12 pm

 கிழக்கு ஜப்பானில் 5.4. அளவுள்ள நிலநடுக்கம்; டோக்கியோவில் கட்டிடங்கள் குலுங்கின

கிழக்கு ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு 3.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டு 8 நிமிடங்கள் கழித்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் தலைநகர் டோக்கியோவில் கட்டிடங்கள் குழுங்கியுள்ளன. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. புகுஷிமா அணு உலைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 4:13 pm

 இலங்கையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கடற்படை வீரர்

இலங்கையில் திரிகோணமலை மாவட்டம்- குச்சவெளி பகுதியில் உள்ள திரியாய் கடற்படை முகாம் அருகே உள்ள வீட்டில் 4 வயது சிறுமியை , கடற்படை வீரர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது சகோதரி சத்தமிட உள்ளார் உடனே அந்த வீரர் கடற்படை முகாமுக்குள் தப்பி சென்று விட்டார்.  சிறுமி பரிசோதனைக்காக  திரிகோண மலை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளார். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர் கடற்படை வீரர் இல்லை என்றும் அவர் முகாமின் சமையல்காரர் என்றும் காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 4:13 pm

 தேவயானி வழக்கை கைவிடும் எண்ணத்தில் அமெரிக்கா இல்லை ’மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை’

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட விவகாரம், இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்த தகவல் கிடைத்த உடனேயே அமெரிக்க தூதர் நான்சிபவலை இந்தியா நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும், தேவயானி மீதான வழக்கை கைவிட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இங்கு பணியாற்றி வருகிற அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் இந்தியா பறித்துள்ளது. இந்த விவகாரம் காரணமாக இரு தரப்பு தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் எந்தவொரு பிரச்சினையிலும் இல்லாத அளவுக்கு இந்தியா இந்த பிரச்சினையில் இப்படி உறுதியான நிலைப்பாட்டினை எடுத்திருப்பது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்நிலையில் தேவயானி வழக்கு விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா வந்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. தேவயானிக்கு எதிரான வழக்கை தொடரவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஜனவரி 13ம் தேதிக்குள் தேவயானி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் தேவையான ஆவணங்களை அமெரிக்கா சேகரித்து வருகிறது.

ஐ.நா.வின் அந்தஸ்து தேவயானிக்கு கிடைத்துவிட்டால் வழக்கு தொரப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. ஆனால் வழக்கு ரத்து செய்யப்படாமல் நிலுவையில் இருக்கும். தேவயானி விவகாரத்தில் சமரச தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் இத்தகைய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 3:59 pm


23 ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு தலிபான்களோடு பேச்சு வார்த்தை ரத்து: பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் எல்லையில் இருந்து தலிபான்களால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்கள் 23 பேரின் தலையை தலிபான்கள் துண்டித்தனர். இதனையடுத்து தலிபான்களோடு பேச்சு வார்த்தையை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தலிபான்களோடு கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் அரசின் குழுவினர் ரகசிய இடத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனாலும் தலிபான் தரப்பில் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் நிகழ்த்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் தலிபானின் ஆதரவு அமைப்பான மொகந்த் ஏஜென்சி என்ற அமைப்பு வீடியோ டேப் ஒன்றை வெளியிட்டது. அதில் கடந்த 2010ம் ஆண்டு 23 ராணுவ வீரர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் சார்பில் உருது மொழியில் எழுதப்பட்ட ஒரு பக்க அறிக்கை ஒன்று வெளியானது.

அந்த அறிக்கையில் எல்லை பகுதியில் இருந்து அவ்வாறு கடத்தி கொண்டு செல்லப்பட்ட 23 ராணுவ வீரர் களையும் பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக தலை துண்டித்து கொன்று விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது.


SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Feb 19, 2014 8:59 pm

சிவா wrote:
23 ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு தலிபான்களோடு பேச்சு வார்த்தை ரத்து: பாகிஸ்தானில் பரபரப்பு


வினை விதைத்தவன் வினையைத்தான் அறுப்பான்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:32 pm

 சிகிச்சையில் அதிருப்தி; டாக்டர் இரும்பு கம்பியால் அடித்து கொலை

சீனாவில் சிகிச்சையில அதிருப்தி அடைந்த நோயாளி ஒருவர் சிகிச்சை அளித்த டாக்டரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டார்.

சீனாவின் ஹிலாங்ஜியங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கண், காது மற்றும் தொண்டை பிரிவிற்கான தலைமை டாக்டராக இருந்தவர் சன் டாங்டோ. அவர் காலை மருத்துமனையில் வேலை செய்ய தொடங்கிய போது அவரை ஒருவர் இரும்பு தடியால் பலமாக அடித்துவிட்டார். இதில் காயம் அடைந்த சன் டாங்டோ உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சன் டாங்டோ சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார்.

அவரை அடித்தவர் அவரிடம் மூக்கு பிரச்சனைக்காக சிகிச்சை பெற்றவர் என்று தெரிவந்துள்ளது. அவரின் சிகிச்சையில் அதிருப்தி அடைந்த நபர் அவ்வாறு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sponsored content

PostSponsored content



Page 11 of 81 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 46 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக