ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் ஒதுக்கித் தள்ளியவை

Go down

கூகுள் ஒதுக்கித் தள்ளியவை Empty கூகுள் ஒதுக்கித் தள்ளியவை

Post by சிவா Tue Nov 12, 2013 1:25 pm


கூகுள் நிறுவனம் எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை, அடிக்கடி, பெரும்பாலும் இலவசமாகத் தந்து கொண்டிருக்கும். ஆனால், அதே கூகுள் நிறுவனம், தான் வழங்கி வந்த பல வசதிகளுக்கு மூடுவிழாவினையும், எந்த வித ஆரவாரமும் இன்றி நடத்துகிறது என்றால், அது உங்களுக்கு வியப்பினைத் தரும். 2013 ஆம் ஆண்டில் இவ்வாறு நிறுத்தப்பட்ட, மூடப்பட்ட வசதிகளை இங்கு பார்க்கலாம்.

1. கூகுள் ரீடர் (Google Reader RSS reader):

சென்ற ஜூலை மாதம் நிறுத்தப்பட்ட இந்த சேவை குறித்துப் பலர் தங்கள் ஆச்சரியத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த சேவை, சென்ற 2005 ஆம் ஆண்டுமுதல், கூகுள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்து வந்தது. இதனைப் பயன்படுத்தியவர்கள், பெரிய அளவில் இல்லை என்றாலும், அது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இருப்பினும், இதனை மிக விரும்பிய சிலர், இணையத்தில் இது தொடர வேண்டும் என மனுவெல்லாம் கொடுத்துப் பார்த்தனர். சிலர், கூகுள் நிறுவனம் தன் கூகுள் ப்ளஸ் மீது அதீத பாசம் கொண்டு, இதனை சாகடிக்கிறது என்றெல்லாம் வசனம் அமைத்து குழு அமைத்து வசை பாடினார்கள். ஆனால், கூகுள் தனக்கெனக் கொண்டிருந்த அளவு கோலின் அடிப்படையில் இந்த சேவையினை நிறுத்தியது. இந்த வசதிக்கு இணையான இன்னொரு வசதியை கூகுள் அல்லது வேறு யாரும் தரவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் ஒதுக்கித் தள்ளியவை Empty Re: கூகுள் ஒதுக்கித் தள்ளியவை

Post by சிவா Tue Nov 12, 2013 1:25 pm

2. ஐகூகுள் (iGoogle):

இந்த தனி நபர் ஹோம் பேஜ் தரும் இணைய தளம், 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த நவம்பர் 1 முதல் நிறுத்தப்பட்டது. இது கைவிடப்படும் செய்தி, ஜூலை 2012 லேயே அறிவிக்கப்பட்டது. குரோம் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்ற சிஸ்டங்களில் இயங்கும் புதிய வகை அப்ளிகேஷன்கள் வந்த பின்னர், ஐகூகுள் டூலினை காலம் கடந்த பழைய பெருங்காய டப்பா என்று கூகுள் கருதியது. எனவே இதனை மூடப் போகிறோம் என்று முன்பாகவே அறிவித்தது. 16 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தங்கள் டேட்டாவினை, நகர்த்திக் கொள்ள போதுமான காலம் தரப்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் ஒதுக்கித் தள்ளியவை Empty Re: கூகுள் ஒதுக்கித் தள்ளியவை

Post by சிவா Tue Nov 12, 2013 1:26 pm

3. லேட்டிட்யூட் (Latitude):

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் கூகுள் மேப் அப்ளிகேஷனுடன் இணைந்து செயல்படும் டூலாக இது வெளியானது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இயங்கிய சாதனங்களிலும் இது கிடைத்தது. மேப்பில் ஓர் இடத்தை அடையாளம் காண, அதன் அட்சரேகை (Latitude) கொடுத்துப் பார்க்கும் வசதியினை இந்த டூல் தந்தது. ஆனால், இந்த வசதி பின்னர் வந்த புதிய மேப் களிலிருந்து எடுக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்த டூல் வழங்கப்பட்ட ஆண்டு 2009. இப்போது இயங்கப்படும் இடத்தை மையமாகக் கொண்டு மேப் பயன்படுத்தும் வசதியை கூகுள் தன் கூகுள் ப்ளஸ் இல் தந்து வருகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் ஒதுக்கித் தள்ளியவை Empty Re: கூகுள் ஒதுக்கித் தள்ளியவை

Post by சிவா Tue Nov 12, 2013 1:26 pm

4. சொந்த ஆய்வுக்கு 20 சதவீத நேரம் (Google 20% Time):

கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிபுரியும் விதம் பற்றிக் கூறுகையில், அவர்கள் தங்கள் சொந்த ஆய்வுப் பணியினை, வாரத்தில் 20 சதவீத நேரம் ஒதுக்கி மேற்கொள்ளலாம் என்ற சுதந்திரம் தரப்படுவதனைப் பெருமையாகக் கூறுவார்கள். கூகுள் இதனை நிறுத்திவிட்டது. பலர் இதனை மிக மோசமான நடவடிக்கை என்றும், இதனால், சுதந்திரமான ஆய்வு கூகுள் நிறுவனத்தில் அற்றுப் போய்விடும் என்றும் கூக்குரலிட்டனர். ஆனால், தன் ஊழியர் மற்றும் பணிக் கலாச்சாரக் கட்டமைப்பில் மேற்கொண்டுள்ள மாற்றத்தில் இதுவும் ஒன்று என கூகுள் இந்த நிறுத்தத்தினை மேற்கொண்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் ஒதுக்கித் தள்ளியவை Empty Re: கூகுள் ஒதுக்கித் தள்ளியவை

Post by சிவா Tue Nov 12, 2013 1:27 pm

5. பில்டிங் மேக்கர் (BUILDING MAKER):

 கூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப் ஆகிய அப்ளிகேஷன் புரோகிராம்களில், முப்பரிமாண மாடல்களை உருவாக்க இந்த டூல் பயன்படுத்தப்பட்டது. இதனை சென்ற ஜூன் 1 முதல் விலக்கிக் கொண்டது கூகுள். இருப்பினும் ஏற்கனவே, இதனைக் கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கியவர்கள், இதன் கிடங்கிலிருந்து அவற்றைப் பெற்று, பயன்படுத்திப் பார்க்கலாம். தற்போது கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் அப்ளிகேஷன்களில், இதே முப்பரிமாண படங்களை உருவாக்க, டூல்கள் தரப்பட்டுள்ளன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் ஒதுக்கித் தள்ளியவை Empty Re: கூகுள் ஒதுக்கித் தள்ளியவை

Post by சிவா Tue Nov 12, 2013 1:27 pm

6. க்ளவ்ட் கனெக்ட் (CLOUD CONNECT):

 இது ஒரு ப்ளக் இன் புரோகிராமாக, கூகுளால் தரப்பட்டது. கூகுள் ட்ரைவில், நாம் உருவாக்கும் பைல்கள் தாமாக சேவ் செய்யப்பட இந்த டூல் பயன்பட்டது. பின்னர், கூகுள் ட்ரைவினை நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இந்த வசதியினை மேற்கொள்ளும் வகையில், கூகுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் இதே வசதி தரப்பட்டது. ஆனால், இந்த வசதி சென்ற ஏப்ரல் 30 முதல் நிறுத்தப்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் ஒதுக்கித் தள்ளியவை Empty Re: கூகுள் ஒதுக்கித் தள்ளியவை

Post by சிவா Tue Nov 12, 2013 1:27 pm

7. பிளாக்பெரிக்கான கூகுள் வாய்ஸ் (GOOGLE VOICE APP FOR BLACKBERRY):

ஏற்கனவே பிளாக் பெரி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தான் அளித்த இந்த டூலை, கூகுள் வாபஸ் பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கான தன் சப்போர்ட்டினை தரப்போவதில்லை என கூகுள் அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்திய பிளாக்பெரி வாடிக்கையாளர்களை, கூகுள், எச்.டி.எம்.எல். 5 பயன்படுத்துமாறு கூறிவிட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் ஒதுக்கித் தள்ளியவை Empty Re: கூகுள் ஒதுக்கித் தள்ளியவை

Post by சிவா Tue Nov 12, 2013 1:28 pm

8. கூகுள் சிங்க் (GOOGLE SYNC (Consumer version):

இதனைப் பயன்படுத்தி, கூகுள் மெயில், கூகுள் காலண்டர் மற்றும் காண்டாக்ட்ஸ் தொடர்புகளை, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் ஆக்டிவ் சிங்க் ப்ரோடோகால் மூலம் பயன்படுத்தும் வகையில், கூகுள் வடிவமைத்துத் தந்தது. ஆனால், பின்னர் கூகுள் நிறுவனத்தின் தொழில் நுட்பமான CardDAV வந்த பின்னர், கூகுள் சிங்க் நிறுத்தப்பட்டது. ஆனால், ஏற்கனவே இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தொடர்ந்து இதனைப் பயன்படுத்த முடியும். மேலும் வர்த்தக ரீதியான இதன் தனி டூல் இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. இருப்பினும், இந்த டூலைப் பொறுத்தவரை, கூகுள் இதனை அதன் சமாதிக்கு அருகே கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மேலே கூறப்பட்ட வசதிகளுடன், மேலும் சில சிறிய அளவிலான டூல்கள், வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அவற்றில் சில வசதிகள், சில நாட்டு வாடிக்கையாளர்களுடன் மட்டுமே தொடர்புள்ளவை என்பதால், இங்கு பட்டியல் இடப்படவில்லை.

கம்ப்யூட்டர் மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் ஒதுக்கித் தள்ளியவை Empty Re: கூகுள் ஒதுக்கித் தள்ளியவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum