ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு

3 posters

Go down

சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு Empty சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு

Post by சிவா Sat Nov 09, 2013 11:59 am

சிபிஐ சட்டபூர்வமற்ற அமைப்பு என்று குவாஹாட்டி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்கிறது.

பிரதமருடன் ஆலோசனை

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மன்மோகன் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: குவாஹாட்டி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். 1963-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சிபிஐ உருவாக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிபிஐ சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

இதே விவகாரம் குறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது: மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகத்தின் கீழ் சிபிஐ செயல்படுகிறது. குவாஹாட்டி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த அமைச்சகம் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்துள்ளது என்றார்.

தீர்ப்பு தவறானது

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ரா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, குவாஹாட்டி உயர் நீதிமன்றத் தீர்ப்பு தவறானது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

சிபிஐ கருத்து

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசியபோது, உயர் நீதிமன்ற தீர்ப்பால் இப்போது நடைபெறும் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படாது. தீர்ப்புக்கு எதிராக விரைவில் தடை ஆணை பெறப்படும் என்றார். சிபிஐ வட்டாரங்களில் விசாரித்த போது, உயர் நீதிமன்ற உத்தரவு நகலைப் பெற காத்திருக்கிறோம். அதனைப் பரிசீலித்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவை தெரிவித்தன.

தீர்ப்பு என்ன சொல்கிறது?

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் நவேந்திர குமார் தன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 1963-ல் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு மூலம் சிபிஐ உருவாக்கப்பட்டது, அந்த அமைப்புக்கு வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இல்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அன்சாரி, இந்திரா ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியிருப்பது: மத்திய உள்துறை அமைச்சகம் 1963 ஏப்ரல் 1-ல் நிறைவேற்றிய ஓர் தீர்மானத்தின் மூலம் சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் மத்திய அமைச்சரவையின் தீர்மானம் அல்ல. அந்தத் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவில்லை. எனவே சிபிஐ அமைப்பை போலீஸ் படையாகக் கருத முடியாது. அந்த அமைப்பு குற்ற வழக்குகளைப் பதிவு செய்வது சட்டவிரோதம். மத்திய உள்துறை அமைச்சகம் 1963-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் உள்பட மிக முக்கியமான பல்வேறு வழக்குகளை சிபிஐ இப்போது விசாரித்து வருகிறது. குவாஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்பால் அந்த அமைப்பே கேள்விக்குறியாகியுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறான தீர்ப்பு: முன்னாள் இயக்குநர் கருத்து

சிபிஐக்கு காவல் துறை அதிகாரங்கள் கிடையாது என குவஹாட்டி நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி சிபிஐ முன்னாள் இயக்குநர் ரகோத்தமன் கூறியதாவது: இந்தத் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது. நீதிபதிகள் சட்டத்தை தவறாக புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள். டெல்லி சிறப்பு காவல் சட்டம் 1946ன் கீழ் 1963ல் சிபிஐ உருவாக்கப்பட்டது. இதன்படி சிபிஐக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

சிபிஐ தரப்பில் எந்த வழக்கையும் டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின் கீழ்தான் பதிவு செய்வோம். சிபிஐ என்பது நாடாளுமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட பெயர். சிபிஐக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளில் கூறப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் அசாம் மாநிலத்தின் அனுமதி பெற்ற பிறகே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போது இப்படி தீர்ப்பளித்திருப்பது தவறு. இவ்வாறு ரகோத்தமன் கூறினார்.

2ஜி வழக்கை தடை கோரும் ஆ.ராசா

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு சர்மா, குவாஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்பை தனது ஐ-பேடில் காட்டினார்.

சிபிஐ அமைப்புக்கு வழக்குகளை பதிவு செய்ய அதிகாரமில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் 2ஜி அலைக்கற்றை விசாரணையை நிறுத்த வேண்டும் என்று அவர் கோரினார்.

இந்த நிலையில், குவாஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆ. ராசா உள்ளிட்டோர் தடை கோரியுள்ளனர்.

இந்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு Empty Re: சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு

Post by சிவா Sat Nov 09, 2013 12:00 pm

குவாஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: 2ஜி விசாரணைக்கு தடை கோரும் ஆ.ராசா

குவாஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆ. ராசா உள்ளிட்டோர் தடை கோரியுள்ளனர்.

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு சர்மா, குவாஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்பை தனது ஐ-பேடில் காட்டினார்.

சிபிஐ அமைப்புக்கு வழக்குகளை பதிவு செய்ய அதிகாரமில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் 2ஜி அலைக்கற்றை விசாரணையை நிறுத்த வேண்டும் என்று அவர் கோரினார்.

இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவன ஊக்குவிப்பாளர் வினோத் கோயங்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மஜித் மேமன் வாதாடியது:

உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 2ஜி அலைக்கற்றை விசாரணையை தொடர்ந்து நடத்தக்கூடாது. அதை மீறி நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பதிலளித்த நீதிபதி ஓ.பி.சைனி, உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து நாளிதழ்களில் படித்தேன், ஆனால் ஊடகங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்து நான் செயல்பட முடியாது என்றார்.

பின்னர் தீர்ப்பு நகலை வழக்கறிஞர்கள் அன்று மாலையில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். 2ஜி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி திங்கள்கிழமை முறைப்படி மனு தாக்கல் செய்யப்படும் என்றும் வழக்கறிஞர்கள் அறிவித்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு Empty Re: சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு

Post by சிவா Sat Nov 09, 2013 12:25 pm

கவுகாத்தி கோர்ட்டு உத்தரவு எதிரொலி: புதிய வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு அதிகாரம் இல்லை- நிபுணர்கள் கருத்து

சி.பி.ஐ. சட்டப்பூர்வ அமைப்பு அல்ல என்று கவுகாத்தி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்குகள், அது தொடர்பான கைதுகள், விசாரணைகள் என்ன ஆகும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

சி.பி.ஐ.யை முடக்கிப்போடும் கவுகாத்தி கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து இன்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த அப்பீல் மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் சி.பி.ஐ. அமைப்பை சட்டப்பூர்வமானதாக மாற்ற முன் தேதியிட்டு அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இதற்கிடையே சி.பி.ஐ. தொடர்ந்து செயல்பட முடியுமா? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. பெரும் சட்ட நிபுணர்கள், சி.பி.ஐ. இனி புதிய வழக்குகளை பதிவு செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.

மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் புதியதாக யாரையும் கைது செய்ய முடியாது. யாரிடமும் விசாரணை நடத்தவும் முடியாது என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மூத்த வக்கீல் துள்சி கூறுகையில், ''கவுகத்தி கோர்ட்டு தீர்ப்பு வெளியிடுவதற்கு முன்பு பதிவு செய்துள்ள வழக்குகளில் மட்டுமே சி.பி.ஐ. விசாரிக்க முடியும். புதிய வழக்கை விசாரிக்கும் அதிகாரம் சி.பி.ஐ.க்கு இனி இல்லை'' என்று கூறி உள்ளார்.

முன்னாள் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் முகுல்ரோத்கி கூறுகையில், ''கவுகாத்தி கோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்கப்படும் வரை சி.பி.ஐ. செயல்பட முடியாது'' என்று கூறி உள்ளார்.

இதேபோன்று மேலும் பல சட்ட நிபுணர்கள், சி.பி.ஐ.க்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

மாலைமலர்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு Empty Re: சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு

Post by சிவா Sat Nov 09, 2013 12:49 pm

2ஜி வழக்கை சி.பி.ஐ நீதிமன்றம் விசாரிக்க கூடாது ஆ.ராசா கோரிக்கை நிராகரிப்பு!

புதுடெல்லி: சி.பி.ஐ சட்டப்பூர்வமான அமைப்பு அல்ல என்ற கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு படி 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கின் விசாரணையை சி.பி.ஐ நீதிமன்றம் நடத்தக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

2 ஜி அலைகற்றை ஒதுக்கீடு வழக்கின் விசாரணை டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு சர்மா, சிபிஐ சட்டப்பூர்வமான அமைப்பு அல்ல என்று தீர்ப்பிற்கு பிறகு இந்த வழக்கின் விசாரணை நடைபெறுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் எனவே விசாரணையை நிறுத்துமாறும் வாதிட்டார்.

ஆனால் சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, ராசாவின் வழக்கறிஞர் வாதத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

அத்துடன் இந்த வழக்கின் சி.பி.ஐ சிறப்பு புலனாய்வு அதிகாரி விவேக் பிரியதர்ஷி, நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாகவும் அவரிடம் எதிர் தரப்பினர் விசாரணை நடத்தலாம் என்றும் கூறினார்.

இதே கருத்தை குற்றம் சாட்டப்பட்ட தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு Empty Re: சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு

Post by T.N.Balasubramanian Sat Nov 09, 2013 2:08 pm

சிபிஐ--- Central Bureau of Investigation .
குற்றம் என சந்தேகப்பட்டு ,குறிப்பிட்ட நபர் மீதோ /அலுவலகம் மீதோ /நிறுவனம் மீதோ ,CBI (Investigate )விசாரணை நடத்தக்கூடும்/ நடத்தலாம் . அதன் கண்டுபிடிப்பை நாட்டிற்கு வெளிப்படுத்தலாம். அதன் அடிப்படையில் நீதி மன்றம் வழக்கு பதிவிட அதிகாரம் கொடுக்க, அரசு, நீதி மன்றத்தில் வழக்கு பதிவிடலாம். அரசாங்க வக்கீல்  prosecution தரப்பாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் Defence தரப்பாகவும் செயல் படவேண்டும்.
CBI ஒரு பட்சமாக செயல்படுவதாக / ஆளுகின்ற கட்சியின் பிரதிநிதியாக செயல்படுவதாக ,எண்ணம் ஏற்படுகின்ற மாதிரி சில கேஸ்கள் கைவிடப்பட , CBI சுதந்திரமாக செயல்படுகின்றதா அல்லது சிலரை சந்தோஷப்படுத்த செயல் படுகிறதா என்ற சந்தேகம் மக்கள் மனதில் பெரிதளவு நிலைகொண்டுள்ளது.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு Empty Re: சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு

Post by SajeevJino Sat Nov 09, 2013 4:56 pm

போலிசும் கள்வன் , வக்கீலும் கள்வன் , நீதிபதியும் கள்வன்

ஒரு தனி மனிதன் நீதிமன்றத்திலேயோ அல்லது காவல் நிலையத்திலேயோ கால் வைக்கும் போதே எண்ணி விடலாம் அவன் வாழ்க்கை அழியப் போகிறது என்று

சட்டம் நீதி எல்லாமே தவறு செய்யும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் காப்பாற்றவே. தனி மனிதனுக்கென்று எந்த சட்டமும் இல்லை புண்ணாக்கும் இல்லை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு Empty Re: சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு

Post by T.N.Balasubramanian Sat Nov 09, 2013 6:36 pm

இரு தரப்பு வக்கீல்களும் பேசிவைத்துக்கொண்டு , மாறி மாறி ,வாய்தா வாங்கிக்கொண்டு ,எனக்கு தெரிந்த உறவினரை ஏமாற்றியதை நான் அறிவேன். இவ்வளவிற்கும் அவருடைய வக்கில் அவரது உறவினரே. 
இன்று நிலுவையில் இருக்கும் வழக்குகள் , வக்கீல்கள் மனது வைத்தால் எப்போதோ முடிந்து இருக்கும் என்பது பலரது அசைக்கமுடியா நம்பிக்கை.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு Empty Re: சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்
» மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 26 ஆயிரம் ஊழல் புகார்கள்
» ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» முன்ஜாமீன் மேல்முறையீடு விவகாரம் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கேவியட் மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum