ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 23:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 22:49

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமா என்றொரு அக்கா!

Go down

ரமா என்றொரு அக்கா! Empty ரமா என்றொரு அக்கா!

Post by krishnaamma Wed 6 Nov 2013 - 21:02

அலுவலக வேலையாகச் சென்னைக்குப் போகிறேன் என்று பெரியப்பாவிடம் சொன்னது தப்பாகப் போய்விட்டது.

"ரமாவைப் போய்ப் பார்த்துவிட்டு வா' என்று சொல்லி விட்டார்.

இன்றைக்கு நான் வளர்ந்து ஆளாகி விட்டேன் என்றாலும் பெரியப்பாவின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேச முடியது. அப்பாவே இன்றுவரை பேசியதில்லை.

பெரியப்பா கிராமத்துக் கூட்டுக் குடும்பத் தலைவர்.

பெரியப்பா என்னைப் புலிப்பால் கொண்டு வரச் சொல்லி இருக்கலாம். கடினமாக இருந்தாலும் செய்து விடலாம். ரமாவைப் போய் பார்ப்பது அதைவிடக் கடினம்.

மனசு கரித்தது.

பஸ்ஸில் ஏறி ஓரத்து சீட்டில் உட்கார்ந்து கையசைத்த போதும் மறக்காமல், "ரமாவைப் பார்த்து விட்டு வா' என்றார்.

"சரி' என்றேன்.

"அட்ரஸ் இருக்கில்லே?'

"டைரியில் குறிச்சி வச்சிருக்கேன்'

"நான் வறேன்'

நகர்ந்தார். பஸ்ஸும்.

சாலையோர மரங்களைப் போல், மனிதர்களைப் போல் மனதும் பின்னோக்கி ஓடியது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஸ்டெல்லா டீச்சர் சர்ச்சுக்குப் போன கையோடு வீட்டுக்கு வந்தாள்.

அப்பொழுது நான் பதின்மூன்று வயது பாலு.

"குட்மார்னிங், டீச்சர்'

"உன்னைப் பார்க்கத்தாண்டா வந்தேன். படிக்கிறியா, விளையாடறியா?'

"படிக்கிறேன் டீச்சர்.'

அதற்குள் உள்ளேயிருந்து ரமா வந்தாள்.

"வாங்க... டீச்சர், உட்காருங்க!'

டீச்சரும், ரமாவும் உட்கார்ந்து கொண்டார்கள்.

"எங்கே டீச்சர், இவ்வளவு தூரம்?'

"சர்ச்சுக்குப் போயிட்டு வர்றேன்.. வழியில உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போகலாமன்னு...'

"ரொம்ப சந்தோஷம். பாலு, உள்ளே போய் காபி கொண்டு வரச் சொல்லு.'

"அதெல்லாம் எதுக்கும்மா?' என்றாள் டீச்சர்.

"பரவாயில்லை. இருக்கட்டும். ரவி எப்படி படிக்கிறான்.'

காபிக்குச் சொல்லிவிட்டு வந்த நான் ஒரு ஓரமாய் நின்றேன்.

"உன் தம்பிகள்லே ரவி ஆவரேஜ்தான்! பாலுதான் இன்டலிஜென்ட்...'

"ரவிதான் என் தம்பி. பாலு எங்க சித்தப்பா பிள்ளை.'

ரமாவின் அந்தப் பதில் என் மனசை அறைந்தது.

டீச்சருக்கும் எப்படியோ இருந்திருக்க வேண்டும். வேறு விஷயங்களைப் பேசி விட்டுப் போய் விட்டார்கள்.

பஸ் ஏர்-ப்ரேக்கில் அதிர்ந்து நின்றது.

பின் மண்டை சீட்டில் மோதி வலித்தது.

நிறைய பேர் என்னைப்போலவே இடித்துக் கொண்டார்கள்.

"நீ சாவறதும் இல்லாம் என்னையும் வம்பில் இழுத்து விட்டுடுவியேடா, கபோதி. சைக்கிள்லே ஏறிட்டேன்னா மண்ல எறங்க மாட்டியோ' என்று திட்டிக் கொண்டே டிரைவர் வண்டியை மீண்டும் ஓட்டினார்.

நிறைய பேர் வலிதாங்க முடியாமல் மண்டையைத் தடவிக் கொண்டு அரற்றினார்கள்.

எனக்கு மண்டை மரத்துப் போய்விட்டது.

அதுவும் ரமாவின் உபயம்தான்!

"டேய் ரவி, தட்டை ஒழுங்கா கழுவணுண்டா. இதோ பாரு, நீ கழுவின தட்டுல சரியாவே பத்து போகலை!'

"உன் வேலையைப் பார்த்துக்கினு போடா'

.........................................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரமா என்றொரு அக்கா! Empty Re: ரமா என்றொரு அக்கா!

Post by krishnaamma Wed 6 Nov 2013 - 21:04

ரவி சுத்த சோம்பேறி. சாப்பிட்ட தட்டைக் கூடச் சரியாகக் கழுவவில்லை. அதனால்தான் சொன்னேன்.

அதுகூட இப்பொழுதென்றால் சொல்லியிருக்க மாட்டேன். சின்ன வயசின் பரபரப்பில் சொல்லி விட்டேன்.

குடும்பத் தூணின் பிள்ளையென்பதை அவனும் அலட்சியமான பதிலில் நிரூபித்து விட்டான்.

விஷயம் அதோடு நின்றிருந்தால் கூட பரவாயில்லை.

எங்கள் பேச்சு ரமாவின் காதில் விழுந்து விட்டது.

உள்ளறையிலிருந்து வந்தாள்.

"டேய் பாலு, உன் தட்டைக் காட்டுடா!'

எனக்கு வியர்த்தது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது.

"குடுடா'

பிடுங்கி இப்படியும், அப்படியுமாக திருப்பித் தேடினாள்.

கிடைத்து விட்டது - ஒற்றை பருக்கை.

"ஏண்டா, நீயே தட்டை ஒழுங்கா கழுவலை. நீ என்னடா அவன் தப்பைக் கண்டுபிடிக்கிறது?'

"இல்லேக்கா வந்து.. வந்து... நான் ஒழுங்காதான் கழுவினேன். எப்படியோ ஒரே ஒரு...'

"நங்'கென்று தலையில் இறங்கிய வலி உடம்பு முழுவதும் உறுத்தியது.

பேச்செல்லாம் நின்று போக கண்ணே கரைந்து போக அழுதேன் - துளியும் சத்தமில்லாமல்.

சத்தம் போடக்கூடாதென்பது ரமாவின் கண்டிஷன்.

சத்தமாக அழுதால் நான் ஓயும் வரை அவள் ஓயாமல் குட்டுவாள்.

அவளை இப்பொழுது போய்ப் பார்க்க வேண்டும்.

ரமா வீட்டிலிருந்தவரை இளவரசி மாதிரி இருந்தவள், அவள் வைத்ததுதான் சட்டம்.

பெரியப்பாவின் பிரிய மகள் என்பதால் எவரும் எதிர்க்க மாட்டார்கள்.

தெருவை அடைத்துப் பந்தல் போட்டுத்தான் அவள் திருமணம் நடந்தது.

புகுந்த வீடு போன பிறகு அவளை அவ்வப்பொழுது வீட்டு விசேஷங்களில் பார்த்ததுதான்!

படிப்பை முடித்து வேலைக்குப் போன பிறகு குடும்பத்திலிருந்தே தனித்திருந்ததால் ரமாவைப் பார்க்க வேண்டிய அவசியம் இதுவரை இல்லாமலிருந்தது. இப்பொழுது ஏற்பட்டு விட்டது.

வீட்டை அடைந்தபொழுது வாசலில் நின்றிருந்த ரமாவின் நாத்தனார் என்னைப் பார்த்துவிட்டு சட்டென்று உள்ளே போனாள்.

உள்ளே நுழைந்தேன்.

நகரின் கட்டட நெரிசலில் குறுகிப் போன வீடு, அகலத்தில் ஒடுங்கி இருந்தது.

நடுக்கூடத்தில் உட்கார்ந்திருந்த ரமாவின் மாமியார் கண்ணுக்கு மேலே கையை வைத்து உறுத்துப் பார்த்துக் கொண்டே "யாரது?' என்றாள்.

"நான் பாலு.'

"பாலுன்னா?'

உறவை ஞாபகப்படுத்த வேண்டிய சங்கடத்தில் நான். உள்ளறையிலிருந்து தூக்கிச் செருகிய புடைவையும் துடைத்துக் கொண்ட கையுமா வந்தது... ரமாதான்!

இளைத்து, அழகு குன்றி, கன்னத்தில் கவலைக் குழியுடன் இருந்தாள்.

ரமாவின் கணவர் கைநிறைய சம்பாதிக்கிறவர் தான்!

என்றாலும், பெரிய குடும்பி, தம்பி, தங்கைகளென்று வாழ்க்கையைப் பங்குகொள்ள நிறைய பேர்.

எப்போழுதோ ஒருமுறை பெரியப்பா, "ரமாவை வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்லேன்னு பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பமாகப் பார்த்துக் கொடுத்திருக்கலாம்' என்று நொந்து கொண்டது இப்பொழுது நினைவு வந்தது.

"வா பாலு'

"யார் ரமா, இந்தத் தம்பி.'

"என் தம்பிதான் அத்தை, பாலு'

"அடடே, இப்பத்தான் ஞாபகம் வருது, உங்க சித்தப்பா பிள்ளை இல்லே.'

"ஆமாம்.'

"உட்காருப்பா.'

உட்கார்ந்து கொண்டேன்.

"ரமா, தம்பிக்குக் காஃபி கொண்டு வா.'

"பாலு காஃபி, டீயெல்லாம் சாப்பிட மாட்டான். ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துட்டு வரேன்.' - அன்புடன் என் தோளைப் பிடித்து அழுத்தி விட்டுச் சொன்னாள்.

"ஊர்ல எல்லாரும் சௌக்கியமா...?' என்று மாமி சம்பிரதாய விசாரணைகளைத் தொடங்கினாள்.
ரோபோ மாதிரி எதையோ சொல்லிக் கொண்டிருந்தேன்.

மனசெல்லாம் அந்தக் கேள்விதான்!

ரமாவா இவள்... "என் தம்பிதான், அத்தை. பாலு' என்று சொல்பவள் ரமாவா? ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துட்டு வரேன் என்று பரபரப்பாய்ச் சொல்பவள் ரமாவா?

எப்படி மாறிப் போனாள்?

யோசித்ததில் புகுந்த வீட்டின் அழுத்தங்கள் ரமாவை இப்படி மாற்றியிருக்கும் என்று புரிந்தது.

பட்டை தீட்டினால் வைரம். புடம் போட்டால் தங்கம். அனுபவப்பட்டால்தானே மனிதர்கள்?

ரமாவை இனி அக்கா என்று கூப்பிடும் பொழுது அது வெறும் சம்பிரதாயமாக இருக்காது.


நன்றி - மங்கையர் மலர் - போளூர் ஆர். வனஜா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum