ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை

5 posters

Go down

செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை Empty செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை

Post by சிவா Sun Nov 03, 2013 11:54 pm



ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் வரும் 5ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. ஆனால், தற்போது நிலவும் வானிலை விஞ்ஞானிகளை பயமுறுத்தி வருகிறது. குமரி மாவட்டம் அருகே மையம் கொண்டுள்ள புயல் சற்று வலுவடையும் பட்சத்தில் இந்த விண்வெளி சோதனையை பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ரூ. 450 கோடி செலவில் இந்தியா தனது சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளது. மொத்தம் 200 மில்லியன் கி.மீ., பயணம் கொண்ட மங்கள்யான், திட்டமிடப்படி 5ம் தேதி ஏவப்பட்டால், வரும் 30ம் தேதி பூமியின் வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு, செவ்வாயை நோக்கி தனது நீண்ட பயணத்தை துவக்கும். அடுத்த 300 நாட்களில் செவ்வாயின் பாதை நெருங்கும் மங்கள்யான் அடுத்த சில தினங்களில் இருந்து தகவல்களை பூமிக்கு அனுப்பும். இதற்கான 56 .30 மணிநேர கவுன்டவுன் இன்று காலையில் 6. 08 மணிக்கு துவங்கியது.

வரும் 5ம் தேதி விண்ணில் பாய உள்ள பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மற்றும் செயற்கைகோளை கண்காணிக்க, இந்திய கடல் எல்லையில், யமுனா, நாலந்தா ஆகிய கப்பல்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சில இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிரப்புதல், பேட்டரிகளை சோதனை செய்தல் உள்ளிட்ட இறுதி கட்ட ஏற்பாடுகள் துவங்கி உள்ள நிலையில், வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறிப்பிட்ட நாளில் செயற்கைகோளை விண்வெளியில் ஏவும் விஷயத்தில் அச்சுறுத்தி வருகிறது.

மங்கள்யான் பயணம் மங்களகரமாகுமா ? பொதுவாக, அதிகமான மழை, புயல் ஏற்படும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏவுகணை இஸ்ரோ ஏவுவதில்லை. வானிலை கோளாறு காரணமாக மங்கள்யான் செயற்கைகோளை ஏவுவதில் சிக்கல் ஏற்பட்டால், வரும் 19ம் தேதிக்குள் ஏவ வேண்டும். 19ம் தேதி கடந்தும் வானிலை சரியில்லை என்றால், செவ்வாய்க்கு செயற்கைகோள் அனுப்பும் திட்டம் மேலும் தள்ளிப்போகும்.

செவ்வாய்க்கு ராக்கெட் ஏவும் பணி ' தோஷம்'- இல்லாமல் முடிந்தால் இந்தியா மகிழ்ச்சி அடையும்.

இந்தியா 4வது நாடு :


செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகிலேயே இந்த சாதனை பட்டியலில் இந்தியா 4 வது நாடு என்ற இடத்தை பிடிக்கும். இது வரை ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியுள்ளது. இந்நாடுகள் மொத்தம் அனுப்பிய 51 விண்கலத்தில் 21 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை Empty Re: செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை

Post by SajeevJino Mon Nov 04, 2013 9:15 am

இது கண்டிப்பாக ஒரு மைல் கல் தான் ..உலகமே நம்மை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்கப் போகிறது


வெற்றிகரமாக வானில் ஏவ நான் கடவுளிடம் மன்றாடுகிறேன்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை Empty Re: செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை

Post by சிவா Mon Nov 04, 2013 1:18 pm

SajeevJino wrote:இது கண்டிப்பாக ஒரு மைல் கல் தான் ..உலகமே நம்மை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்கப் போகிறது


வெற்றிகரமாக வானில் ஏவ நான் கடவுளிடம் மன்றாடுகிறேன்
சரியாகக் கூறியுள்ளீர்கள் சகோ!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை Empty Re: செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை

Post by balakarthik Mon Nov 04, 2013 1:21 pm

குமரி மாவட்டம் அருகே மையம் கொண்டுள்ள புயல் சற்று வலுவடையும் பட்சத்தில் இந்த விண்வெளி சோதனையை பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
இதுக்குத்தான் செஇவாயில எதுவும் செய்யகூடாது அது உருப்புடாதுனு சொல்லுவாங்க இதே வெள்ளியில புதணுல செஞ்சா நல்லாஇருக்குமுல எனா பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதே


ஈகரை தமிழ் களஞ்சியம் செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை Empty Re: செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை

Post by SajeevJino Mon Nov 04, 2013 2:23 pm

balakarthi wrote:இதுக்குத்தான் செஇவாயில எதுவும் செய்யகூடாது அது உருப்புடாதுனு சொல்லுவாங்க இதே வெள்ளியில புதணுல செஞ்சா நல்லாஇருக்குமுல எனா பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதே
 
ராக்கெட்டுக்கு கீழே எலுமிச்சம் பழம் இருப்பதால் பிரச்சனை ஏதும் இருக்காது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை Empty Re: செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை

Post by டார்வின் Mon Nov 04, 2013 2:28 pm

விண்வெளி ஆய்வு என்பதே பனிப்போர் காலத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடைபெற்ற போட்டியின் வெளிப்பாடாகவே ஆரம்பித்தது. இப்போது கூட தேசத்தின் வல்லமையை, அதன் தொழில்நுட்பத் திறனை எடுத்துக் காட்டும் விடயமாகவே விண்வெளி ஆய்வு பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க் கிரகத்துக்கு செல்ல ஜப்பானும், சீனாவும் செய்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த முயற்சி ஆசியாவில் நடைபெறும் புவிசார் அரசியல் போட்டியின் வெளிப்பாடாகவே சில ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
சீனா சில ஆண்டுகளாக மனிதர்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. சக்தி வாய்ந்த ராக்கெட்டுக்களை வைத்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவை விட பல ஆண்டுகள் முன்னேறிய நிலையில் சீனா இருக்கிறது.
சீனாவுடன் போட்டியா?
சீனாவுடன் போட்டிபோடும் நோக்கில் இந்தியா இந்த திட்டத்தை மேற்கொள்ளவில்லை என்கிறார் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் கே ராதகிருஷ்ணன். "நாங்கள் சீனாவுடனோ மற்ற எந்த ஒரு நாட்டுடனோ போட்டிபோடவில்லை. நாங்கள் மேலும் மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் – குறைந்த செலவில் அதிக பயன்களைத் தர வேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார் அவர்.

ஆனால் விண்வெளி ஆய்வு என்பதே மிகவும் செலவு பிடிக்கும் விடயம் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவேதான் மேற்கத்திய ஊடகங்கள் பல இந்தியாவின் வறுமையையும் விண்வெளித் திட்டத்தையும் தொடர்புபடுத்தி இது போன்ற திட்டங்கள் தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய அரசு இந்த ஆண்டு 5600 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொகை தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்கள், நுண்ணுணர்வு செயற்கைக் கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் அவை தொடர்பான கட்டமைப்புகள் ஆராய்ச்சிகள் போன்றவற்றுக்கே பயன்படுத்தப்படுகின்றன. மிகக் குறைந்த தொகையே வேறு கிரகங்களுக்கு செல்லும் ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கிடையே, இத்தகைய உடனடியான பொருளாதாரப் பயன்கள் கிடைக்காவிட்டாலும் இந்த ஆய்வுகள் மிகவும் அவசியமானவை என்கிறார் டாக்டர் அண்ணாதுரை. தொழில் புரட்சியின் பயன்கள் இந்தியாவுக்கு கிடைக்காததன் காரணமாகவே இந்தியா வறுமை நாடானது என்று கூறும் அவர், இந்திய விண்வெளி திட்டம் மூலமாக புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின் தாக்கங்களை கணிக்க முடிவதாகவும், இயற்கை வளங்கள் இருப்பதை கண்டறிய முடிவதாகவும் கூறினார்.
"சந்திரனில் நீர் எங்கே இருக்கிறது என்று மட்டுமல்ல- பூமியில் எங்கே நீர் கிடைக்கும் என்பதையும் நாங்கள் கணித்துக் கூறுயுள்ளோம்" என்றார் அண்ணாதுரை.
அதே நேரம் செவ்வாய் திட்டம் குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயரும் சில சந்தேகங்களை வெளியிட்டுள்ளார்.

சந்தேகங்கள்
செவ்வாய் திட்டத்தில் ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்ட பல குறிக்கோள்கள் தற்போது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் மாதவன் நாயர், இந்த முயற்சி முழு பலனை அளிக்காது என்கிறார்.
"செவ்வாய் கிரகத்தை நன்கு ஆராய வேண்டுமென்றால்,அந்த கிரகத்தை சுற்றி குறைந்த தூர வட்டப் பாதையில் செல்ல வேண்டும. ஆனால் இந்த கோளோ 377 கோலோ மீட்டரில் இருந்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை கொண்ட நீள்வட்டப் பாதையில் செல்லவுள்ளது. இதனால் துல்லியமாக செவ்வாயை ஆராய முடியாது. மேலும் இந்த கலன் 15 உபகரணங்களை எடுத்துச் செல்லும் என்று முன்பு தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 5 உபகரணங்களே எடுத்துச் செல்லப்படுகின்றன. செவ்வாயில் மீதேன் இருக்கும் சாத்தியக் கூறுகள் குறித்தும் ஏற்கனவே ஏராளமான தரவுகள் இருக்கின்றன. புதிதாக இப்போது எதையாவது கண்டுபிடிக்கமுடியாமா என்று தெரியவில்லை" என்றார் மாதவன் நாயர்.
சந்திராயன் திட்டத்தின் போது சந்திரனுக்கு 100 கிலோ மீட்டர் தொலைவிலான வட்டப் பாதையை இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது. பிறகு அது 200 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டது. செவ்வாய் பரப்பை குறைந்த தூரத்திலும் – தூரத்தில் இருந்தும் இரு வேறு செயற்கைக் கோள் செய்யக் கூடிய ஆய்வுகளை ஒரு செயற்கைக் கோள் மூலம் செய்ய வேண்டும் என்பதாலேயே நீள் வட்டப் பாதை தேர்ந்தெடுக்கப்பட்டதா இஸ்ரோ கூறுகிறது. உபகரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், ஆய்வுக்கு பங்கம் வராது என்கிறார் டாக்டர் அண்ணாதுரை.
BBC Tamil
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை Empty Re: செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை

Post by T.N.Balasubramanian Mon Nov 04, 2013 6:47 pm

அன்பு மலர் வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்பு மலர் .


பாலா கார்த்திக் ! குஜராத்தில் மங்களகரமான காரியங்களுக்கு (மங்கல்வார் ) செவ்வாய் கிழமை உகந்தது. (புத் வார் ) புதன் கிழமை உகந்தது இல்லை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை Empty Re: செவ்வாய்க்கு இந்தியா செயற்கைகோள் ; புயல் மூலம் அச்சுறுத்தும் வானிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  சென்னையை அச்சுறுத்தும் புயல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
» 12 மணி நேரத்தில் ஃபானி புயல் உருவாகிறது: இந்திய வானிலை மையம்
» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
» தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum