புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
85 Posts - 79%
heezulia
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
250 Posts - 77%
heezulia
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_m10நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 03, 2013 7:40 pm

நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் ! UoIQCu0ZSBeSfHqYZ0MZ+Astro-articles-56

விஜய வருடம் ஐப்பசி மாதம் முதல் நாளில் சூரியன் நீசமடைந்து துலா ராசிக்கு பிரவேசம். அன்று பவுர்ணமி திதியும், ரேவதி நட்சத்திரமும் கூடிய வெள்ளிக்கிழமை. மிகுந்த சுபிட்சம் காணும் மாதம் இது என்கிறது நாடி. அன்றைய கோள் நிலைகளை ஆராய்ந்திட, நவகிரகங்கள் பின்வரும் அளவில் பரவி ராசி சக்கரத்தில் நிற்பதைக் காணலாம். துலாஸ்தானம் அன்றைய அதிகாலைப்பொழுது காலை 5 மணிக்கு மேல் 5:30க்குள் குளிர்ந்த நீரில் நீராடி, தெய்வீக குறிகளாம் விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, சிவ பூஜை செய்வதும், வைணவர்கள் திருசூர்ணம், திருமண் இட்டு, உலகளந்தானை வழிபடுதலும் மிகுந்த சிறப்பைத் தரும் என்கிறார் அழுகணிச் சித்தர்:

‘‘விசயமாந் தமிழாண்டு துலாமது திங்கள்
சுக்ரந் தோன்ற மணி மந்திரந் தழைக்குமே
உலோகமது சந்தையில் ஏற்றங் கண்டு
நிற்குமே - தானியமும் தழைக்க உழுதுன்
போர் தம் அல்லல் அகல யேதுவாமே’’

வைத்தியத் தொழில் செய்வோரும், வைத்தியம் சம்பந்தப்பட்ட வாணிபம் செய்வோரும் பொருள் மேன்மை பெறுவர். வாணிபமது தழைக்கும் உலோகத் தொழில் புரிவோர்க்கு. விவசாயிகளின் அல்லல் குறையும், விளைபொருட்கள் ஏற்றம் பெரும் என்றார்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு

‘‘தொல்லை வந்துறுத்தும் - மந்தன்
தன்னை யொத்த வுறவால் கேடாம்
பொருளது விரையங்காண, அகச்சாந்தி
குன்றி பித்தொப்ப அலைமோது மகத்தை
கட்டுக்குள்ளடக்கி யாள, வுண்டு மேன்மை
பின்னிலே, அறுமுகனவனை ஆராதிக்க
கடலாடி நிற்க விலகும் வில்லங்க
மன்றோ’’
என்றார் கொங்கணர்.

சொந்தக்காரர்களால் சங்கடம், பொருள் நஷ்டம் வரும். மனதில் வருத்தம் கூடும். நிம்மதிக்கேடு உண்டு. திருச்செந்தூர் வாழ் ஆறுமுகனை ஆராதித்து வர, எப்படிப்பட்ட சோதனையும் விலகும் என்பதாம்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘‘பெண்டிரால் விரயமது கூடும்
மராமத்து தன்னாலுமலைச்சல் வந்தண்டும்
மேனிப் பீடை காணும் - நன்மை பல
செய்தும் இகழ்வர் இனியோர் - இதனை
சிம்ம வாகனியை அடைந்து ஆராதித்து
சீராய் போக்கின்புறலாகுமே’’
என்றார் சிவவாக்கியர்.

பெண்களால் சிறு நஷ்டம் கூடும். மராமத்துப் பணிகளில் ஈடுபட்டு அகம் சலிக்கும். யாருக்கு நன்மை செய்தாலும், நற்பெயருக்கு களங்கமே கற்பிப்பர். காலம் இது சற்று பொறுக்க, பின் பெரும் மேன்மை கிட்டும். பராசக்தி பூஜை செய்து, சற்றே விமோசனங் காணலாம்.

தொடரும் .......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 03, 2013 7:41 pm

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘‘கடனுபாதை தோன்றுங்காலம்
உடலுபாதை வழி விரையமுங் காணுமகச்
சோர்வு கிட்டும் - சொந்தக் குருதியால்
கொண்ட வின்பமது சிதறும் -வீண்பழிக்கு
வுட்புகவே, சபரியீசனை ஸ்தோத்ரஞ்
செய சலிப்பதுபடுமே’’
என்றார் சிவவாக்கியர்.

சற்று புதிய கடன்கள் ஏற்படும் நேரமிது. உடலுக்கு சற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு விலகும். ரத்த சம்பந்த உறவுக்காரர்களின் தலையீட்டால், மனதில் நிம்மதி குறையும். ஐயப்பனை ஆராதனை செய்து மனச் சங்கடங்களை விரட்டலாகும் என்பதாம்.

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத் திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘‘வஸ்திர தானமும் அன்னதானமும்
செய்தின்புறலாகுமே - கரப்பொருள்
சற்று விரயங்காணச் சுபமே
ஆபரண சேர்க்கை தன்னாலும் ஆடம்பர
உல்லாசந் தன்னாலும் இன்பங்காண
குபேர பூஜை புரிவோர்க்கு துய்த்த யின்பந் துலங்குமே’’
என்றார் கொங்கணர்.

துணிமணிகளை தானமாகக் கொடுத்து இன்பமடைவதும், உணவுப் பண்டங்களைத் தந்து உறவாடுதலும் உண்டாம். ஆடை, ஆபரணச் சேர்க்கையாலும் சுப விரயம் உண்டு என்றாலும், மனதில் மகிழ்ச்சி குறையாது நிற்கும். லட்சுமி குபேர பூஜை புரிந்து தொழுவோர்க்கு ஆண்டு முழுக்க ஆனந்தமே.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘‘அல்லல் பல துய்த்து அயர்ச்சி கண்ட
பேருக்கும் விமோசனமாம் மித்திங்கள்
பிணியோடு பீடைபல விலகுமே - வாட்டிய
வம்பும் வழக்கும் முடிச்சவிழுமென்றுணரே
அபத்ய நீராஜனமோடு அன்னாபிசேகஞ்
செய்தே நிற்ப இயலாதேதுமக்கு யியம்பு’’
என்றார் பாம்பாட்டியார்.

இதுவரை பட்டிட்ட துயரங்கள் யாவுமே விலகும். மனச் சோர்வு அகலும். சகல பிணிகளும், துக்கங்களும் விலகும் நற்காலம் இது. பகை தீரும். வழக்குகள் சாதகமாகும். அபத்ய நீராஜனம் செய்து, சிவனுக்கு அன்னாபிஷேகத்தில் பங்கெடுத்து நிற்ப, வெற்றி நமது என்பதாம்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘‘தனவரத்து கூடும். சேமித்த தனமுங்
கரையும் - வத்திரமே கறை கண்டு மேனி
புண்ணாக -வழியில் கண்டங்கண்
டோடுமே - சினமதனைக் குறைத்து
பொறுமையோடு பணிதன்னை
தனிக் கவனஞ் செலுத்தி நடத்த,
வரும் பொல்லாப்பு வாடுமென்போமே.
ஆதி வராகனை திருமகளுடன் தரிசித்து
மந்த விரதமிருப்ப ஆயுள் பலமாம் -
சேமமுண்டே திரும்பு’’
என்றார் பாம்பாட்டியார்.

பற்பல வழிகளிலும் தனம் வந்து சேரும். தனவிரயம் சொற்பமாக விளங்கும். சிறு விபத்துகளை, எச்சரிக்கையாக இருக்க தவிர்க்கலாகும். மிகவும் பொறுமை, கோபமின்மை, எச்சரிக்கை இவற்றைப் பின்பற்ற தீங்கில்லா நெடுநாள் வாழ்வு சேரும் என்பதாம். ஆதிவராக பூஜை சாலச் சிறந்தது.

தொடரும் .......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 03, 2013 7:42 pm

ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘‘பணி மாற்றமுண்டு - பணி மேன்மையு
முண்டு - மனை மாட்சிமை ரத துரக
யோகங் கூடுங்காலம். மையுண்டி
எந்நாளுமகற்றி மகேச பூசை புரிந்து ஆதிரை
நோன்பிருக்க, சேராத் தனஞ் சேரும்
நூதனமான பணியுங் கூட உலகுதனை
வலமே வரலாகுமே’’
என்றார் குதம்பையார்.

பணியில் குறிப்பிடத்தக்க மாற்றம் உண்டு. வாகன யோகம், வீடு நிலம் போன்றவற்றினால் சுகம் சேரும் நேரம் இது. தீட்டு வீட்டுச் சாப்பாடு உண்ணாது விரதம் காக்க நன்மையாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வர சகல சேமங்களும் கிட்டும். ஆயுள்பலம் உண்டு.

அசுவனி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘‘பெண்டிரால் அச்சங் காணும்
வாய்ச் சொல் தவிர்ப்பீர்
பெரியோர் தமதறிவழி பற்றிட பாங்காய்
மேல்வர காணீர் - ரகசியங் காப்பீர்
தாரம் தம் உறவாலுயர்வுண்டு
உற்ற தன் வழியுறவால் வஞ்சனை
வந்தே வாட்டுங் காலமிது. நந்தி
யானை நாடி நீயுயறு’’
என்றார் குதம்பையார்.

பெண்களால் தொல்லை வரும். மனதில் சற்று பயமும் தோன்றும். பேச்சைக் குறைத்து செயலைக் கூட்டுதல் மேன்மையாகும். பெரியோர்கள் ஆலோசனை கேட்டு அதன்படி நடக்க நன்மை உண்டாம். மனைவி வழி உறவினரால் மேன்மை உண்டு. உறவினர் வஞ்சகத்தினால் சஞ்சலம் காணும் மாதமிது. நந்தியீசனை தியானித்து ஆராதிக்க, உயர ஏதுவாகும் என்பதாம்.

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

‘‘தலம் பல நாடி யோடி திரவியந்
தேட முனையுங் கால மிதே. திரவியமதனைத்
தேட நூதன வழியுந் தோன்றுமே.
நல்லோர் நேசமே நலமாய்ச் சேர
நானிலத்தும் கீர்த்தியோடு திடமாய்
வாழலாகுமே. இட்டு வைத்திட்ட வித்தெலாம்
வருங்காலம் பொன்னாகக் குவிய
யப்பன் கள்ளழகனைக் கண்டாராதனை
புரிவீரே’’
என்றார் நர்த்தன சட்டைமுனி.

பற்பல தலங்களுக்குச் சென்று வாணிபம் செய்ய முற்படும் காலம் இது. நூதனமான பணி வழி பெரும் அளவில் பொருள் ஈட்ட ஏதுவாகும் நேரம். நல்லவர்கள் கூட்டுறவால் புகழ், கீர்த்தி கூடும். தற்போது துவங்கும் அனைத்து தொழிலும் பிற்காலம் பெரிய அளவில் லாபம் தரும். கள்ளழகரை அடி தொழுது நிற்பாருக்கு அமோகமான மேன்மை சேரும் என்பதாம்.

எண்ணித் துணியுங் கருமமும்
மேலோர் தாங் காட்டும்
பாதையிலும் பற்றி - எளிமையே
கோலமென கொண்டு பற்றற்று
வாழ்வார் தமை தேவருமேத்துவரே
என்றார் ஜமதக்கினி முனிவர்.

இந்த ஐப்பசி மாதத்தில் எந்தக் காரியம் செய்தபோதிலும் தீவிர ஆலோசனை செய்து பெரியோர்கள், அனுபவமிக்க கற்றோர்கள் தம் துணையுடன், எளிமையாக வாழ்ந்து பணி செய்வோர்க்கு வெற்றி நிச்சயம். வானில் உள்ள தேவர்களும் கொண்டாடுவர் என்பது உண்மை.

நன்றி : நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 03, 2013 10:50 pm

பெண்டிரால் விரயமது கூடும்
எனக்கு எந்நாளும் பெண்டிரால் விரயம் தான் ஏற்பட்டு வருகிறது.

திருமணத்திற்கு முன் தங்கை, பிறகு மனைவி, இப்பொழுது மகள்! அய்யோ, நான் இல்லை 
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Nov 04, 2013 10:13 am

அன்று பவுர்ணமி திதியும், ரேவதி நட்சத்திரமும் எப்படி வந்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 3:32 pm

சிவா wrote:
பெண்டிரால் விரயமது கூடும்
எனக்கு எந்நாளும் பெண்டிரால் விரயம் தான் ஏற்பட்டு வருகிறது.

திருமணத்திற்கு முன் தங்கை, பிறகு மனைவி, இப்பொழுது மகள்! அய்யோ, நான் இல்லை 

ஆண்கள் நிலைமை எப்போதுமே இதுதான் சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 3:33 pm

ChitraGanesan wrote:அன்று பவுர்ணமி திதியும், ரேவதி நட்சத்திரமும் எப்படி வந்தது
நீங்கள் சொல்வது புரியவில்லையே ? அநியாயம் அநியாயம் அநியாயம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 04, 2013 5:01 pm

பெண்களால் சிறு நஷ்டம் கூடும். மராமத்துப் பணிகளில் ஈடுபட்டு அகம் சலிக்கும். யாருக்கு நன்மை செய்தாலும், நற்பெயருக்கு களங்கமே கற்பிப்பர். காலம் இது சற்று பொறுக்க, பின் பெரும் மேன்மை கிட்டும். பராசக்தி பூஜை செய்து, சற்றே விமோசனங் காணலாம்.

சிவா wrote:
பெண்டிரால் விரயமது கூடும்
எனக்கு எந்நாளும் பெண்டிரால் விரயம் தான் ஏற்பட்டு வருகிறது.

திருமணத்திற்கு முன் தங்கை, பிறகு மனைவி, இப்பொழுது மகள்! அய்யோ, நான் இல்லை 
 
எப்போதும் போல் பராசக்தி பூஜை செய்யவும். சக்தியை ஒரு பாதியாக கொண்டவருக்கு இதெல்லாம் சொல்லியா தரவேண்டும்.

ரமணியன் 
  
 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 5:07 pm

T.N.Balasubramanian wrote:எப்போதும் போல் பராசக்தி பூஜை செய்யவும்.
தங்களைப் போன்ற அனுபவஸ்தர்கள் கூறினால் என்றும் நான் ஏற்க மறுப்பதில்லை! ஒன்னும் புரியல 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 04, 2013 6:13 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:எப்போதும் போல் பராசக்தி பூஜை செய்யவும்.
தங்களைப் போன்ற அனுபவஸ்தர்கள் கூறினால் என்றும் நான் ஏற்க மறுப்பதில்லை! ஒன்னும் புரியல 
 
நல்ல புள்ளைக்கு அதான் அழகு. சொன்னா கேட்டுக்கனம்.

ஆனா , (பால) சுப்பிரமணியன் சக்தி பூஜை செய்ததாக புராணம் இல்லையே . சிவன் தான் பூஜை செய்து ஒரு பாதியை சக்திக்கு கொடுக்க " BETTER HALF " என்ற சொல்லே உருவானது தெரியுமா?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக