புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
254 Posts - 44%
heezulia
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
15 Posts - 3%
prajai
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எதிர்பார்ப்புகள்! Poll_c10எதிர்பார்ப்புகள்! Poll_m10எதிர்பார்ப்புகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்ப்புகள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 03, 2013 7:26 pm

கொடைக்கானல் மலையில், அந்தக் கார், சீரான வேகத்தில், இறங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் தெரிந்த, பசுமை படர்ந்த மலைத்தொடர்களை ரசித்தபடி, பயணம் செய்து கொண்டிருந்த ராகவன், டிரைவரிடம்...
''சுப்பு... வண்டியை, ஒரு ஓரத்தில், ஓரங்கட்டி நிறுத்துப்பா. பாத்ரூம் போய்ட்டு போகலாம்,'' என்றார்.
கொடைக்கானல் பள்ளி ஒன்றில், ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மகளை பார்த்துவிட்டு, சேலத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார் ராகவன்.

வண்டியில் இருந்து இறங்கியவர், சிறிது தூரத்தில் தெரியும் பள்ளத்தாக்கை நோக்கி, பெரியவர் ஒருவர் நடப்பதைப் பார்த்து, துணுக்குற்றார்.''சுப்பு... அங்கே பாரு. ஒரு வயசானவரு, அந்தப் பள்ளத்தாக்கை நோக்கி போய்ட்டிருக்காரு. ஏதோ விபரீதமாக நடக்கப் போகுதுன்னு நினைக்கிறேன். சீக்கிரம் போ, அந்த பெரியவரை தடுத்து, இங்கே கூட்டிட்டு வா,'' என்று, பரபரத்தார்.

சுப்பு வேகமாக நடந்து, அந்தப் பெரியவரை அணுகி, அவருடன் வாக்குவாதம் செய்தபடி, பெரியவரின் கையை, வலுக்கட்டாயமாக பிடித்து, அழைத்து வருவதைப் பார்த்து, நிம்மதி பெருமூச்சு விட்டார் ராகவன்.
''ஐயா, நீங்க நினைச்ச மாதிரி, இந்தப் பெரியவர், தன் உயிரை மாச்சுக்கத்தான், பள்ளத்தாக்கை நோக்கி போயிருக்காரு. நல்லவேளை காப்பாத்தியாச்சு,'' சுப்பு சொல்ல, தன்னருகில், வாடிய முகத்துடன் நிற்கும் அந்தப் பெரியவரை பார்த்தார் ராகவன். பெரியவரின், கண்கள் கலங்கியிருந்தன.''பெரியவரே... உங்க வயசுக்கு, நீங்க இப்படி ஒரு முடிவுக்கு போகலாமா... நல்லவேளை, அந்தக் கடவுள் கருணையால் தான், நாங்கள் உங்களை பார்த்திருக்கிறோம்.''

''மனசு நொந்து போயி, உயிரை விட துணிஞ்ச என்னை, ஏன் காப்பாத்தினீங்க... இன்னைக்கு இல்லாட்டியும், நாளைக்கு, இது நடக்க தான் போகுது,'' என்று, விரக்தியுடன் சொன்னார் பெரியவர்.''உங்களுக்கு எழுபது வயசு இருக்கும்ன்னு நினைக்கிறேன். உங்க வயசுக்கு, உங்களுக்கு எவ்வளவு அனுபவங்கள், மன முதிர்வு ஏற்பட்டிருக்கணும். நீங்க, இப்படி ஒரு தப்பான முடிவுக்கு வரலாமா?''

''வாழ்க்கையில் எல்லா நல்லது கெட்டதுகளையும் பார்த்து, சமாளிச்சு வாழ்ந்தவன்தாம்பா. வயசான காலத்தில், ஒதுங்க இடம் இல்லாமல், தவிக்க விட்டுட்டாங்க, நான் பெத்த பிள்ளைங்க. என்னை, வேண்டாத பொருளா, நினைக்கிறதை, பொறுக்க முடியாமத்தான், வீட்டை விட்டு புறப்பட்டு வந்துட்டேன். இனி, நான் வாழ்ந்து என்ன பிரயோசனம். அதான், என்னைப் படைச்ச கடவுள்கிட்டேயே போகலாம்ன்னு முடிவு செய்திட்டேன். தயவு செய்து என்னைத் தடுக்காம, நீங்க வந்த வழி போங்க. நான் வரேன்.''

''பெரியவரே ஒரு நிமிஷம்... சாகணுங்கற முடிவுக்கு வந்துட்ட உங்களை, என்னால தடுக்க முடியாது. நீங்க சொன்ன மாதிரி, இன்னைக்கு இல்லாட்டியும், நாளைக்கு அந்த முடிவுக்கு தள்ளப்படுவீங்க. ஆனா, அதுக்கு முன்னாலே, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா...''பெரியவர், ராகவனை புரியாமல் பார்த்தார்.

''நான் ஏழைப் பிள்ளைங் களை வச்சு, ஒரு ஹாஸ்டல் நடத்திட்டு வரேன். அவங்க, படிப்பை கவனிக்கும் பொறுப்பை எடுத்து, படிக்க வைக்கிறேன். என்கிட்டே வேலை பார்த்தவர், இரண்டு மாச விடுமுறையில், சொந்த ஊருக்கு போயிருக்காரு. அவர் வர்ற வரைக்கும், உங்களால அந்த பொறுப்பை ஏத்துக்க முடியுமா? ஒண்ணும் பெரிய வேலை இல்லை. அந்த பிள்ளைகளுக்கு துணையா, காவலாக அவங்களோடு இருக்கணும். எனக்கும் உதவியாக இருக்கும். உங்களுக்கும் சாகறதுக்கு முன், ஏதோ ஒரு உபகாரம் செய்தோம்ங்கிற திருப்தி கிடைக்கும். இரண்டு மாசத்துக்குப் பிறகு, உங்க விருப்பப்படி, நீங்க, எங்க வேண்டுமானாலும் போங்க. நான் தலையிட மாட்டேன். என்ன சொல்றீங்க?''

''வயசான நான், என்ன உபகாரம் செய்ய முடியும். என்னவோ, நீங்க சொல்றதைக் கேட்கும்போது, நம்மால முடிஞ்ச நல்லதைச் செய்துட்டு போகலாம்ன்னு தான் தோணுது. இரண்டு மாசம் தான் இருப்பேன். அதுக்குப் பிறகு, என்னை, கட்டாயப்படுத்தக் கூடாது,'' என்றார்.''ஆகட்டும் பெரியவரே, உங்க விருப்பம். காரில் ஏறுங்க.''

'தாத்தா... நீங்க ரொம்ப நல்லவராக இருக்கீங்க. இவ்வளவு நேரம், எங்களை விளையாட அனுமதிச்சீங்க. ரொம்ப தாங்க்ஸ் தாத்தா...' குழந்தைகள் பெரியவரைச் சுற்றி நின்று, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
''விளையாடறது ரொம்ப நல்லது. போயி, கை கால் கழுவிட்டு வாங்க. படிக்க ஆரம்பிக்கணும். ஒழுங்கா எல்லாத்தையும் படிச்சு முடிச்சா, ராத்திரி துாங்கறதுக்கு முன், எல்லாருக்கும் அரிச்சந்திரன் கதை சொல்வேன்.''
'சரி தாத்தா நீங்க சொல்றபடியே செயறோம்...' என்றனர், கோரசாக.அவர் அருகில், ஒரு சிறுவன் வந்து,''தாத்தா... நான் நல்லா படிச்சு, பெரிய வேலைக்குப் போய், கஷ்டப்படற எங்க அப்பா, அம்மாவை காப்பாத்துவேன் தாத்தா,'' என்றான்.அவனைப் பார்த்து, விரக்தியாக சிரித்தார் பெரியவர்.

''பெரியவரே... இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. இங்க இருக்கிற பிள்ளைகளை அவங்க பார்க்க, பெத்தவங்க வருவாங்க. எல்லாரையும் மெயின் ஹாலில் உட்கார வைங்க. வந்து பார்த்துட்டு போகட்டும். அவங்க எல்லாருமே கூலித் தொழிலாளிங்க. தங்களைப் போல் தங்கள் பிள்ளைகளும் கஷ்டப்படாம, படிச்சு முன்னுக்கு வரணும்ங்கற எண்ணத்தோடு, பிள்ளைகளைப் பிரிஞ்சு இருக்காங்க.''

''நல்லா வந்து பார்க்கட்டும். பிள்ளைகளுக்கும், பெத்தவங்களை பார்த்த திருப்தி கிடைக்கும். சின்னஞ்சிறுசுங்க, படிப்புக்காக பெத்தவங்களை பிரிஞ்சு இருக்குதுங்க,'' என்று கூறினார் பெரியவர், உண்மையான பரிவுடன்.
பிள்ளைகளின் பெற்றோர், தங்களால் முடிந்த உணவுப் பண்டங்களை வாங்கி வந்து கொடுத்து, பிள்ளைகளை பார்த்து சந்தோஷத்தோடும், அன்போடும் பேசிக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் பார்த்தபடி, மெல்ல நடந்து வந்தார் பெரியவர்.''தாத்தா... இங்க வாங்களேன்...''

அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினார். அன்று ஒரு நாள், 'படிச்சு வேலைக்குப் போய், அப்பா, அம்மாவைக் காப்பாத்துவேன்' என்று, உறுதிமொழி சொன்ன, அந்தச் சிறுவன், தன் பெற்றோருடன் அமர்ந்திருந்தான்.
பெரியவர் அவன் அருகில் சென்றார். அவரைப் பார்த்து, ''தாத்தா... இவங்க தான், எங்க அப்பா, அம்மா,'' என்று, புன்னகையுடன் சொன்னான்.

இருவரும் எழுந்து, வணக்கம் கூறினார், ''உங்க பையன் ரொம்ப புத்திசாலி. நல்லா படிச்சு முன்னுக்கு வருவான். இந்த வயசிலேயே, தான் படிச்சு வேலைக்குப் போயி, பெத்தவங்களை கஷ்டப்பட விடாம காப்பாத்தணுங்கற நல்ல எண்ணம், அவன் மனசில் இருக்கு. நீங்க கொடுத்து வச்சவங்க. உங்களை நல்லபடியா பார்த்துக்குவான்,'' என்றார் பெரியவர்.

''அட போங்க சாமி. அதையெல்லாம் யார் எதிர்பார்த்தா. நாங்க தான் படிப்பு வாசனை இல்லாம, இப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறோம். எங்க பிள்ளையாவது நல்லா படிச்சு, அரசாங்க வேலை பார்க்கணும் சாமி. அதுக்காகத்தான், ஒரே பிள்ளையை பிரிஞ்சு, காட்டிலேயும், மேட்டிலேயும் கஷ்டப்படறோம். நாளைக்கு, இவன் எங்களை வச்சு காப்பாத்துவான், சோறு போடுவான்கிற எண்ணமோ, எதிர்பார்ப்போ எங்ககிட்ட இல்லை சாமி. அப்படி எதிர்பார்த்தா கடைசியில விரக்தியும், வேதனையும்தான் மிஞ்சும். ஏதோ அதுங்களை நல்வழிப்படுத்திட்டா போதும். கடவுள் எங்களுக்குக் கொடுத்த வாழ்க்கையை, திருப்தியா வாழ்ந்துட்டுப் போயிடுவோம். முடிஞ்சா, நாலு பேருக்கு நல்லது செஞ்சுட்டு போயிட்டே இருப்போம். அவ்வளவுதான் சாமி, மனுஷ வாழ்க்கை.''

யதார்த்தமாகப் பேசும், அந்தக் கிராமத்துப் பெண்ணை, வியப்புடன் பார்த்தார் பெரியவர்.''பெரியவரே... உங்களுக்கு ரொம்ப நன்றி. இந்த இரண்டு மாசமா, இங்க இருக்கிற பிள்ளைகளை, அன்பாக, அனுசரணையாக உங்க பேரப் பிள்ளைகளைப் போல நல்லா பார்த்துக்கிட்டீங்க. லீவிலே போயிருந்தவர் வந்துட்டாரு. இனி, உங்க உதவி தேவையில்லை. நீங்க போகலாம்.''

''தம்பி... நான் எங்கேயும் போறதா உத்தேசமில்லை. கடைசி காலம் வரை, இந்த காப்பகத்திலேயே, இந்தப் பிள்ளைகளுக்கு துணையாக இருந்திடறேன்பா. என்னாலும் நாலு பேருக்கு உபயோகமாக இருக்க முடியுங்கிற திருப்தி கிடைக்குது. எதிர்பார்ப்புகள் தான் எனக்கு ஏமாற்றத்தையும், விரக்தியையும் கொடுத்திருக்கணும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன். என் கடமைகளை முடிச்சுட்டேன். கடவுள் கொடுத்த இந்த உயிரை, அவராக எடுத்துக்கற வரைக்கும் நாலு பேருக்கு உபகாரமாக வாழ்ந்துட்டுப் போறேன். எனக்கு அந்த வாய்ப்பை தருவியாப்பா,'' என்றார்.
மனம் நெகிழப் பேசும், அந்தப் பெரியவரின் கைகளை, அன்போடு பற்றிக் கொண்டார் ராகவன்.

நன்றி : சிறுவர்மலர்- பரிமளா ராஜேந்திரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக