புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
39 Posts - 72%
heezulia
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
375 Posts - 78%
heezulia
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
8 Posts - 2%
prajai
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_m10நோபல் வெற்றியாளர்கள் 2013 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோபல் வெற்றியாளர்கள் 2013


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:35 am

நோபல் வெற்றியாளர்கள் 2013 Ch76g

டைனமைட்டைக் கண்டறிந்த ஆல்ஃபிரெட் நோபல், ஒருநாள் செய்தித்தாளைப் பார்த்தபோது, 'டைனமைட்டைக் கண்டறிந்த மரண வியாபாரி மரணம்’ என்று தவறான செய்தி வெளியாகி இருந்தது.

இதைப் பார்த்து மனம் நொந்துபோன நோபல், தன் பெயர் இவ்வாறு அழைக்கப்படக் கூடாது என்று நினைத்தார். தனது சொத்துகளைப் பயன்படுத்தி, மனிதகுல முன்னேற்றத்துக்குப் பாடுபடும் பல்துறை அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று உயில் எழுதினார். அதன் அடிப்படையில்தான், 1901-ம் ஆண்டிலிருந்து இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய ஐந்து துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

'பேங்க் ஆஃப் ஸ்வீடன்’ என்ற வங்கி, தனது 300-வது ஆண்டை 1968-ல் கொண்டாடியபோது, நோபல் பரிசுக் குழுவுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கியது. எனவே, 1969-ம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசும் இணைந்தது.

இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:36 am

வேதியியல்

வேதியியல் வினைகளின் தொடக்கமும் முடிவும் மட்டுமே பொதுவாக நம் கண்களால் கண்டறியக்கூடியது. அந்த வேதிவினையில் இடம்பெறும் இடைவினைகள், நம் கண்களால் கண்டறிந்து பதிவுசெய்ய முடியாதது. (வெளிவரும் புகை, மேலே படியும் சிறு துகள்கள், 'சொய்ங்’ சத்தம் போன்ற சில விவரங்களை மட்டுமே நம்மால் கண்டறிய முடியும்.

நோபல் வெற்றியாளர்கள் 2013 Ch76f
இத்தகைய நுணுக்கமான இடைவினைகளை நாம் கண்டறியும்போது, நமது வேதியியல் ஆராய்ச்சிகள் மேலும் மேலும் செழுமை அடையும். நம் கண்களால் கண்டறிய முடியாத இத்தகைய சிறிய தகவல்களைக்கூட கணினியின் துணைகொண்டு பதிவுசெய்யவும், விளக்கவும் முடியும் என்று நிரூபித்தவர்கள் மார்ட்டின் கார்ப்ளஸ், மைக்கேல் லெவிட் மற்றும் ஏரி வார்ஷெல். இந்த மூவருக்கும் இந்த ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் சிக்கலான வேதியியல் ஆய்வுகளையும் மாதிரிகளையும் சுலபமாகப் புரிந்துகொள்ள இவர்களது கண்டுபிடிப்புகள் உதவுகின்றன. ஆய்வகச் சோதனை முடிவுகளும், கணினி வழி கண்டறியப்பட்ட சோதனை முடிவுகளும் பொருந்திப்போகின்றன. எனவே, மிகவும் அபாயகரமான வேதியியல் சோதனைகளைக் கணினி முறைகளைக்கொண்டு செய்வது பயனுடையதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதன் மூலம் வேதியியல் ஆய்வுகள் பெருமளவு முன்னேறும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:36 am

இலக்கியம்

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, கனடா நாட்டைச் சேர்ந்த 'ஆலிஸ் மன்றோ’ வுக்குக் கிடைத்துள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, சிறுகதை இலக்கியத்துக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 13-வது பெண். கனடாவிலிருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் பெண்.

நோபல் வெற்றியாளர்கள் 2013 Ch76e
தற்கால சிறுகதை இலக்கியத்தில் மிகச் சிறந்த சிகரங்களைத் தொட்டவர் ஆலிஸ் மன்றோ. மிக இயல்பான வார்த்தைகளும் சொற்றொடரும் அமையப்பெற்ற நடையைச் சிறுகதைகளில் கையாள்பவர். கடந்த 2009-ம் ஆண்டு, இவரது சிறுகதைகளைக் கௌரவிக்கும் விதமாக 'மேன் புக்கர்’ பரிசு வழங்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:37 am

பொருளாதாரம்

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல்  பரிசு பெறுபவர்கள், யூஜீன் பாமா, ராபர்ட் ஷில்லர் மற்றும் லார்ஸ் பீட்டர் ஹேன்சன்.

'' 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்பதுபோல, சந்தையில் பொருட்களின் விலை குறைவாக இருக்கும்போது, வாங்கிவிட வேண்டும். சந்தையில், விற்பனை புத்திசாலித்தனமாக நடப்பது இல்லை. அதனால், சந்தையில் அடிக்கடி வீழ்ச்சி ஏற்படும்'' என்பது போன்ற கொள்கைகளை ஷில்லர் வெளியிட்டார். ஆனால், இவருடன் பரிசைப் பகிர்ந்துகொள்ளும் யூஜீன் பாமா, ''நிதிச் சந்தை திறமையாகச் செயல்படக்கூடியது'' என்ற கொள்கையை வெளியிட்டார்.

நோபல் வெற்றியாளர்கள் 2013 Ch76d
இந்த இரண்டு கொள்கைகளில் ஒன்று சரியானது என்று நிரூபிக்கப்படும்போது, மற்றொன்று தவறாகிறது. எனவே, இந்த இருவரின் கொள்கைகளையும் ஆராய்ந்து, ஒரு முழுமையான கோட்பாட்டை உருவாக்கினார் பீட்டர் ஹேன்சன். எனவே, மூவருக்கும் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:37 am

  மருத்துவம்

மனித உடலின் அடிப்படை, அலகு செல் என்பது  தெரியும். அந்தச் செல்கள் உடலுக்குத் தேவையான சமயத்தில், தேவையான இடங்களுக்கு மூலக்கூறுகளை எவ்வாறு கடத்துகின்றன என்பதைப் பற்றிய ஆய்வுக்காக   ஜேம்ஸ் இ.ராத்மேன், ராண்டி ஷெக்மேன், தாமஸ் சுதோப் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு நொதிகள், புரதங்கள் போன்ற மூலக்கூறுகள் கடத்தப்படுகின்றன. இந்தச் சிறுசிறு மூலக்கூறுகளுக்கு 'வெசிக்கிள்கள்’ என்று பெயர். இந்த வெசிக்கிள்களின் இயக்கம், அது எவ்வாறு கடத்தப்படுகிறது, கடத்தலுக்குக் காரணமான மரபணுவை அடையாளம் காணுதல் போன்ற தகவல்களைத் தனித்தனியாகக் கண்டறிந்தார்கள்.

நோபல் வெற்றியாளர்கள் 2013 Ch76c
இந்த வெசிக்கிள்களின் கடத்தலில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக நரம்புத்தளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு மற்றும் நீரிழிவு போன்றவை ஏற்படுகின்றன. இந்தக் குறைபாடுகளைத் தடுக்க, இவர்களின் கண்டுபிடிப்பு பெரும் உதவியாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:38 am

 இயற்பியல்

 நவீன இயற்பியலின் முக்கியமான கண்டுபிடிப்பு சென்ற ஆண்டு நிகழ்ந்தது. 'கடவுள் துகள்’ என்று தவறுதலாகப் பெயரிடப்பட்ட 'ஹிக்ஸ்போசான் துகள்’, சென்ற ஆண்டு கண்டறியப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைப் பொருட்களும் அணுக்களால் ஆனது, இந்த அணுக்களுக்கு நிறையை வழங்குவது எது என்பதைக் கண்டறிவதில் பல இயற்பியலாளர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவந்தார்கள்.

இந்த ஆராய்ச்சியில், பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பிரான்சுவா ஆங்கலர், ராபர்ட் பிரௌட் ஆகியோர் இணை ஆய்வறிக்கைகளை வெளியிட்டார்கள். அவர்களில் முதன்முதலாகக் கருதுகோளை வெளியிட்ட, ஹிக்ஸின் பெயரால், 'ஹிக்ஸ்போசான் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. (இதில் 'போசான்’ என்ற வார்த்தை, இந்தியரான சத்தியேந்திரநாத் போஸ் அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது.

நோபல் வெற்றியாளர்கள் 2013 Ch76b
போசான் துகள் கண்டறியப்பட்ட அன்று ஹிக்ஸ், மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதார். போசான் துகள் பற்றிய கொள்கை முடிவு, இயற்பியலின் அணுக் கொள்கைகளிலும் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதிலும் துணைபுரியும் வகையில் உள்ளது.

மேலே சொன்ன மூவரில், ராபர்ட் பிரௌட் 2011-ல் மரணம் அடைந்ததால், அவருக்குப் பரிசு அறிவிக்கப்படவில்லை. பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பிரான்சுவா ஆங்கலருக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, போசான் துகளைக் கண்டறிந்த CERN ஆய்வுக்கூடத்துக்கும் பரிசு அளிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். ஆனால், அமைதி தவிர்த்த பிற பரிசுகள், அமைப்புகளுக்கு வழங்கப்படுவது இல்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:38 am

 அமைதிக்கான பரிசு

 ரசாயன ஆயுதங்களைக் கண்காணிக்கும் குழுவான 'ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனம்’ (OCPW) இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளது. அறிவியல் மற்றும் வேதியியல் துறையில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகள், ஆயுதங்களின் வளர்ச்சியிலும் பெரும் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்ப, அதிக அழிவை உண்டாக்கும் ரசாயன ஆயுதங்களின் பயன்பாடும் அதிகரித்து வந்த நிலையில், 1997-ம் ஆண்டு, வேதியியல் ஆயுதங்கள் ஒழிப்பு உச்சி மாநாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் OCPW அமைக்கப்பட்டது.

நோபல் வெற்றியாளர்கள் 2013 Ch76a
இந்த அமைப்பில் 189 நாடுகள், ரசாயன  ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்ற உறுதிமொழியில் கையப்பம் இட்டு, உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளன.  சமீபத்தில் சிரியாவில் பயன்படுத்தப்பட்ட ரசாயன ஆயுதங்கள் மற்றும் அவற்றின் கொடுமைகளை உலகுக்கு எடுத்துக்கூறும் விதமாக, மிகத் தெளிவான  ஆய்வறிக்கையை வெளியிட்டது இந்த அமைப்பு.

ரஷ்யா மற்றும் அமெரிக்க  நாடுகளின் தலைமையில் சிரியாவை 190-வது உறுப்பினராகச் சேர்க்கும் முயற்சிகளைச் செய்தது. உலகம் முழுவதும் ரசாயன ஆயுதங்கள் அழிப்பில், ஆரவாரமின்றி சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்த அமைப்பைக் கௌரவிக்கும் விதமாக நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:39 am

இயற்பியல், வேதியியல், பொருளாதாரத்துக்கான பரிசுகளை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் (Royal Sweedish Academy of science)என்ற அமைப்பு அளிக்கிறது. மருத்துவத்துக்கான பரிசை, கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்(Karolinska institute) ஐ சேர்ந்த நோபல் அசெம்ப்ளி (Nobel Assembly) என்ற அமைப்பும் அளிக்கிறது. இலக்கியத்துக்கான பரிசை, ஸ்வீடிஷ் அகாடமி (Swedish Academy) அமைப்பு அறிவிக்கிறது. இந்த மூன்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவை. அமைதிக்கான பரிசை மட்டும் நார்வே நோபல் கமிட்டி (Norwegion Nobel Commitee) வழங்குகிறது. அமைதிக்கான பரிசு நார்வேயில் உள்ள ஓஸ்லோ (Oslo) நகரத்திலும், மற்ற பரிசுகள் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் (Stockholm) நகரிலும் வழங்கப்படும். நோபல் பரிசு பெற்றுள்ள அத்தனை பேருக்கும், ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி, விருதுகள் வழங்கப்படும்.

சுப.தமிழினியன் @ விகடன்


டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Nov 02, 2013 3:31 pm

நோபல் வெற்றியாளர்கள் 2013 3838410834 நோபல் வெற்றியாளர்கள் 2013 3838410834 நோபல் வெற்றியாளர்கள் 2013 3838410834 நோபல் வெற்றியாளர்கள் 2013 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக