புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_m10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_m10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_m10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_m10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_m10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10 
19 Posts - 3%
prajai
சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_m10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_m10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_m10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_m10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_m10சுட்ட கதை - சினிமா விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்ட கதை - சினிமா விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:13 am

சுட்ட கதை - சினிமா விமர்சனம் P10

மலைவாழ் மக்களின் தலைவரைச் 'சுட்ட கதை!’

ராம்கி ரசிகன் பாலாஜியும், வலது காது கேட்காத வெங்கியும் சிரிப்பு போலீஸ்காரர்கள். அவர்கள், பணிக்குச் சேர்ந்த கோரமலை பகுதியின் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த லட்சுமிப்ரியாவைக் காதலிக்கிறார்கள். இந்த நிலையில் மலைவாழ் மக்களின் தலைவர் எம்.எஸ்.பாஸ்கர், மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்படுகிறார். 'அப்பாவைக் கொலை செய்தவனை அழிப்பேன்’ என்று சபதமெடுத்துப் புறப்படுகிறார் லட்சுமிப்ரியா. ஒரு திகீர் திருப்பத்தில் அடையாளம் தெரியாத ஒருவரைச் சுட்டுவிடுகிறார் பாலாஜி. எம்.எஸ்.பாஸ்கரைச் சுட்டது யார்... பாலாஜி சுட்டது யாரை? என்பதுதான் சுட்டகதையின் மீதிக் கதை!

முழுக்கவே ஒரு கற்பனையான, கலகலப்பான மலைக் கிராமத்தில் கதையை அமைத்த ஐடியாவில் வசீகரிக்கிறார் அறிமுக இயக்குநர் சுபு.

பாலாஜிக்கு, படத்தில் ஹீரோ புரொமோஷன். ராம்கி ரசிகன் ப்ளஸ் திருட்டு போலீஸ் மேனரிஸங்களை அச்சு அசலாகப் பிரதிபலித்து சிரிக்க வைக்கிறார். வெங்கியும் பாடி லாங்வேஜில் பிரமாதப்படுத்துகிறார். டிபார்ட்மென்ட் சைக்கிளை ஒரு திருடனிடம் கொடுத்த விஷயம் தெரிந்ததும், அவர் ஓடிவரும் ஸ்டைல் குபீர் சிரிப்பு. தனக்கு வலது காது கேட்காது என்பதை, யாருக்கும் தெரியாமல் சமாளிக்க முயற்சிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

'மினி’ விஜயசாந்தியாக ஆக்ரோஷம் காட்டும்போதும் அழகாக இருக்கிறார் லட்சுமிப்ரியா. 'மூக்கைப் பார்த்தா நம்ம சாதிக்காரன் மாதிரி இருக் கானே’ என்று மைண்ட் வாய்ஸில் யோசிக்கும் நாசர், வழக்கம்போல பலே!

மேட்லி ப்ளுஸின் இசை படத்துக்குப் பொருத்தம். கல்வி அமைச்சர், சிபாரிசுக் கடிதத்தில் கைநாட்டு இடுவது, மொக்கை போலீஸுக்கு 'சிங்கம்’ என பெயர் வைத்திருப்பது, பாரடைஸ் டீக்கடையை இங்கிலீஷில் 'பரதேசி’ என்று எழுதியிருப்பது என சின்னச் சின்ன ஐடியாக்கள் ரசனை ரகம்.

எம்.எஸ்.பாஸ்கரைக் கொன்றது யார் என்பது சுவாரஸ்ய முடிச்சுதான். ஆனால், அதில் எந்த ட்விஸ்ட்டும் இல்லையே சுபு? காட்சியில் இருக்கவேண்டிய ட்விஸ்ட், வசனத்தில் இருந்தால் மட்டும் போதுமா?

நச் லொகேஷன், கிச்சுகிச்சு கதாபாத்திரங்கள் என கவனம் செலுத்திய இயக்குநர், ஒட்டுமொத்தத் திரைக்கதையிலும் படீர் முடிச்சுகளைத் தூவியிருந்தால், படம் நம் மனதை சுளீரென சுட்டிருக்கும்!

- விகடன் விமர்சனக் குழு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:22 am


தாறுமாறான ஓட்டைகளுடன்... சுட்ட கதை.

கோரமலை பழங்குடி மக்கள் தலைவனான ஒட்டகம் (எம்.எஸ்.பாஸ்க்ர), தன் நெற்றியில் ‘தோட்டா’ தாங்கியபடி, சிரித்த முகத்துடன் சரியும் அந்த ‘திகில்’(?!) காட்சியில் தொடங்குகிறது... சுட்ட கதை. ராம்கியும் (பாலாஜி), சங்கிலியும் (வெங்கி) கோரமலை காவல் நிலையத்தில் பணிக்கு சேர்கிறார்கள். ஒட்டகத்தை கொன்றது யார்? என கண்டுபிடிக்க அல்ல! எந்நேரமும் சமோசாவும், தூக்கமுமாக இருக்கும் இன்ஸ்பெக்டர் திருமேனியின் (நாசர்) வீட்டு வேலைகளைச் செய்ய! சுட்டகதை ‘நகைச்சுவை படம்’ என்பதால், இந்த இடத்தில் நாசர் சிரிக்கிறார். பாவம்... அவர் மட்டுமே சிரிக்கிறார்! இப்படி, நகைச்சுவை ததும்ப(!) தொடங்கும் கதையில், இடைவேளையின்போது ஒரு ‘ட்விஸ்ட்’. கான்ஸ்டபிள் ராம்கியும், ஜீப் ஓட்டுனரான சங்கிலியும், ‘கெட்ட’ போதையில், திருமேனியின் துப்பாக்கியை எடுத்து விளையாட... டுமீட்! சுட்டது ராம்கி. சத்தமில்லாமல் சுருண்டது... ட்விஸ்ட் (ஜெயப்பிரகாஷ்). (செம ‘ட்விஸ்ட்’டுப்பா!). ஆனா, செத்தது ஆலிவர் ட்‌விஸ்ட் இல்ல! பின்னே! வீரகேசரி (ஆர்.எஸ்.சிவாஜி). அடடே... இது யாரு? அது... அது... அதுதான் க்ளைமாக்ஸ்.

படத்தில் வரும் முக்கிய ஆண் கதாபாத்திரங்கள் அனைவரும், ‘பென்சில்’ மீசை வைத்திருக்கிறார்கள் என்பது படத்தின் சிறப்பம்சம்! மற்றபடி... ‘எப்படி நடிச்ச ஆளுப்பா! இவரு போய்...’ என, ரசிகனை வருத்தப்பட வைக்கிறார் நாசர். படத்தின் நாயகர்கள் என சொல்லப்படும் இருவரும், ஏதேதோ செய்தும், பேசியும் வித்தை காட்டுகிறார்கள். ஆனால்... அத்தனையும் வீண்! படத்தில் ஒரு நாயகியும் உண்டு. அடிக்கடி பிணம் சுமக்கும் அந்த பாவையின்பெயர் சிலந்தி(லஷ்மிபிரியா)!

‘கதை வேண்டாம்! வித்தியாசமான விளம்பரங்கள் போதும். ரசிகன் நிச்சயம் திரை அரங்கிற்கு வருவான்!’ என்ற நம்பிக்கையுடன் படத்தை இயக்கியிருக்கிறார் சுபு. அவருக்கு வெற்றி! ரசிகனுக்கு.... மரண அடி!

மொத்தத்தில் ‘சுட்ட கதை’ - ‘அது வருது ஓடிருங்க’.

ரசிகன் குரல்: ‘காமெடி’ங்கற பேர்ல ஏன் மச்சி இப்படிகொல்றானுங்க?

தினமலர் விமர்சனம்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:24 am


டைட்டிலை பார்த்ததும் வழக்கமாக நம்மூர் சில இயக்குநர்கள் ஹாலிவுட், கொரியப்படங்களை சுட்டு கதை பண்ணுவாங்களே அந்த மாதிரின்னு நினைக்கத்தோணும், ஆனா இது ஒரு ஆளை துப்பாக்கியால ஒருத்தன் சுட்ட கதை. கொலையாளி யார்? என்பதை கண்டு பிடிக்கும் டிடெக்டிவ் காமெடி ஸ்டோரி.

மலைவாழ் மக்கள் வாழும் ஒரு கிராமம். அங்கே இருக்கும் எல்லாரும் திருட்டுப்பசங்க. அங்கே இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல புதுசா வேலைக்குச்சேரும் 2 கான்ஸ்டபிள்கள் மலைவாழ் மக்களின் தலைவனின் மகள் லேடி ஜெட்லீ மாதிரி இருக்கும் பொண்ணை காதலிக்கறாங்க. அந்த பொண்ணு கிட்டே தங்கள் காதலை வெளிப்படுத்தி 2 பேர்ல யாரோ ஒருவரை காதலிக்கனும்னு சொல்றாங்க. அந்த டைம்ல அந்தப்பொண்ணோட அப்பாவை யாரோ கொலை பண்ணிடறாங்க. பொண்ணு அப்பாவைக் கொன்னவங்களை பழிவாங்க நினைக்குது. அந்த 2 போலீஸும் உதவுறாங்க. யார் கொன்னது? எதுக்கு கொன்னாங்க? என்பதே மீதிக்கதை.

தமிழில், ஒரு வித்தியாசமான காமெடி கதையை, புதியதாக ஒரு திரைக்கதை வடிவத்தை காட்டணும்கற ஆர்வம் இயக்குநருக்கு அபாரமா இருக்கு. ஆனா ஆர்வம் இருந்த அளவு அவர் ஹோம் ஒர்க் பண்ணலை. அதனால திரைக்கதை தடுமாறுது. 110 நிமிடம் கூட ஓடாத சின்னப்படம் தான், ஆனா ரொம்ப இழுக்குது.

பாலாஜி, வெங்கடேஷ் இருவரும் ஹீரோக்கள். நாகேஷ், சந்திரபாபு பாணியில் நடிக்க முயற்சி பண்ணி இருக்காங்க. பாராட்டத்தக்க முயற்சி. 2 பேருக்கும் பாடி லேங்குவேஜ் நல்லா வருது. வடிவேலுக்குப்பின் காமெடி நடிகர்களில் பாடி லேங்குவேஜில் யாரும் கலக்கவில்லை. அந்தக்குறையை இவர்கள் தீர்த்து வைக்க வாய்ப்பு இருக்கு.

ஹீரோயினாக லட்சுமிப்ரியா. இவர் ஆல்ரெடி கவுரவம் படத்தில் நடித்தவர். இந்தியன் கிரிக்கெட் டீமில் இருந்தவர். நஸ்ரியா பாணியில் மிகக்கறாராக ஆடை விலகாமல் கண்ணியமாக வந்து போகிறார். தமிழ் சினிமா இவரை பயன்படுத்திக் கொள்வது நலம்.

நாசர், மகளிர் மட்டும் படத்தில் வருவது போல் ஒரு முழு நீள காமெடிப்படத்தில் சைன் பண்ணிடலாம் என கணக்குப்போட்டு இருக்கிறார். பாதிக்கிணறு கூட தாண்டவில்லை. ஆனால், அவர் அளவில் நடிப்பில் குறை சொல்ல முடியாது. குட்!

எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்ரகாஷ், லட்சுமிராமகிருஷ்ணன் என ஏகப்பட்ட கேரக்டர்கள். வந்த வரை ஓக்கே ரகம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:24 am



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. சாம்பசிவம் காமிக்ஸ் காட்சிகள் படத்தில் ஒரு புதுமை. படத்தில் ஹீரோக்கள் துப்பறியும் காட்சிகளில் காமிக்ஸ் காட்சியை இணைத்தது நல்ல ஐடியா. தமிழ் சினிமாவில் யாரும் இதுவரை காட்டாத காட்சி.

2. படத்தின் பின்னணி இசை அபாரம். ஒரு காமெடிப்படத்துக்கு இசையால் சிரிக்க வைப்பது ரொம்ப முக்கியம். அதை இந்தப்படம் பரிபூரணமா நிறைவேத்தி இருக்கு. மேட்லீ ப்ளூஸ் தான் இசை. ஆங்காங்கே எம்.எஸ்.விஸ்வநாதன் இசையை பயன்படுத்தி இருப்பது அடடே ரகம்.

3 கான்ஸ்ட;பிள் சிங்காரம் வரும் காட்சிகளில் எல்லாம் தண்ணி டேங்க் சத்தத்தை பின்னணி இசையாக கொடுத்த காட்சிகள் செம காமெடி. 2 ஹீரோக்களில் ஒருவருக்கு நினைத்தாலே இனிக்கும் ரஜினி மாதிரி எதையாவது திருடும் குணம் இருப்பதும், இன்னொரு ஹீரோவுக்கு ஒன் சைடு காது டமாரம் என்பதையும் வைத்து அமைக்கப்பட்ட காமெடிக்காட்சிகள் ஓகே ரகம். (இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளை வைத்து காமெடி பண்ணுவதை இனி தவிர்க்கலாம்)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:25 am

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. கதையோடு ஆடியன்ஸ் ஒன்றி விட வேண்டும் எனில் முதல்ல கேரக்டர்களை அந்நியோன்யமா காட்டிடணும். யார் எவர்னே தெரியாத ஆள், கொலை செய்யப்படுதல், ஹீரோயின் யாரையும் லவ்வலை என்பதெல்லாம் சுவராஸ்யம் குறைந்த காட்சி அமைப்புகள்.

2. கதை நடக்கும் கால கட்டம் 1970 என்பது போல் காட்டறாங்க. ஆனா ஹீரோயினை, ஹீரோக்கள் நீ விஜய சாந்தி மாதிரி இருக்கே என சொல்வது எப்படி?

3. காட்டுக்குள் இரவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் லைட்டிங்க் ஓவர் . ரொம்ப செயற்கை . இயற்கையான ஒளிப்பதிவு முக்கியம் . கொடைக்கானலில் அத்தனை லைட் ஏது ?

சி.பி. கமெண்ட் : வித்தியாசமான காமெடி படம். பார்க்கும் ஆர்வம் உள்ள ரசிகர்கள் பார்க்கலாம், பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு. ரொம்ப சின்னப்படம் என்பதால் நெளிய வைக்கவெல்லாம் இல்லை. படம் முழுக்க ஆடியன்ஸ் ரசிச்சு சிரிச்சாங்க. ஏ செண்ட்டர்ல ஓரளவு ஓடிடும்.

சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக