ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே!

Go down

பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Empty பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே!

Post by சிவா Sat Nov 02, 2013 1:09 am



புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறிய பேருந்துகளில் வரையப்​பட்டிருக்கும் இலைகள்தான் இப்​போதைய அரசியல் ஹாட்!

'அது இரட்டை இலை அல்ல; நான்கு இலைகளைக் கொண்டவை. பசுமையான சூழலைக் குறிக்கிறது’ என்று சட்டசபையில் திருவாய் மலர்ந்திருக்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

இந்தநிலையில், ஜெயலலிதா தலை மையிலான அ.தி.மு.க. அரசு, பசுமையில் எந்த அளவுக்கு கவனம் செலுத்து​கிறது என்பதை அறிய சென்னையில் அரசுக் கட்டுப்​ப​£ட்டில் உள்ள பூங்​காக்களுக்கு விசிட் அடித்தோம்.

தலைமைச் செயலகத்துக்கு எதிரில் இருக்கும் பூங்காவுக்கு முதலில் சென்றோம். புல்​வெளிகள் எல்லாம் பரா மரிப்பு இன்றி, காய்ந்து கருவாடாக காட்சி அளித்தன. ஒரே ஒருவர் மட்டும் பூங்காவில் விழுந்த குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். மழைபெய்து இருந்ததால், சில இடங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. சட்டசபைக்கும் தலைமைச் செயலகத்துக்கும் பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் ஓய்வு எடுக்கும் கூடாரமாகத்தான் அந்தப் பூங்கா இருக்கிறது.

அடையாறில் இருக்கும் தொல்காப்பியர் பூங்காவுக்குச் சென்றோம். அந்தப் பூங்காவைச் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்து பசுமையாகக் காட்சி அளித்தது. ஆனால், அந்த அழகான பூங்காவைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை. சாலையில் இருந்து அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றி, இடத்தை சுத்தமாக பராமரிக்க அங்கு ஆட்கள் இல்லை.

அடுத்து, செம்மொழிப் பூங்கா. பெயர்ப் பலகையில் உள்ள கருணாநிதியின் பெயர் பொறித்த ஒவ் வொரு எழுத்துக்களும் பறிக்கப்பட்டு இருந்தன. செம்மொழிப் பூங்கா என்ற சொல்லே எந்த இடத்திலும் இல்லை. இதை எல்லாம் திட்டம் தீட்டி சரியாக செய்தவர்கள், பூங்காவின் உள்ளே இருக்கும் மரங்களும் செடிகளும் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதைக் கவனிக்கத் தவறி விட்டனர். சென்னையில் மரங்கள் என்று இருப்பதே இதுபோன்ற சில பூங்காக்களில்தான். அங்கும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.

''உண்மையாகவே இயற்கை மீது அக்கறை உள்ளவர்கள், சுற்றுச்சூழல் மீது பாசம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?'' என, 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர ராஜனிடம் கேட்டோம். அவர், ''சென்னையில் உள்ள போக்குவரத்தை முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைவதற்கு காரணம் போக்குவரத்துதான். கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை 12 லட்சத்தில் இருந்து 33 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. அதேபோல, சென்னையில் இயங்கும் டவுன் பஸ்கள் தோராயமாக 2,500-ல் இருந்து 3,500 ஆக உயர்ந்து இருக்கின்றன. இதுவே மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புதான். தனிநபர் வாகனத்தைத் தவிர்த்துவிட்டு அரசுப் பேருந்துகளையும், பொது போக்குவரத்தையும் மக்கள் பயன்படுத்த ஊக்கு விக்க வேண்டும். பேருந்துகள் தரமாக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் மக்கள் பயன்பெறும் வகையில், பயணங்கள் எளிமையாக்கப்பட வேண்டும். இதுதான் இயற்கைக்கு உகந்தது. சுற்றுச்சூழலுக்கு சிறந்தது. சென்னைதான் பொது போக்குவரத்தின் தாய்வீடு. ஆனால், எத்தனை பேர் அரசுப் பேருந்துகளையும் ரயில்களையும் பயன்படுத்துகின்றனர்? இப்போது அதிகமாக தனி நபர் வாகனங்கள் பயன்படுத்தப்படுவது சென்னையில்தான். இந்தியாவில் அதிக மாசுநிறைந்த நகரம் சென் னைதான். தெற்கு ஆசியாவின் நான்காவது மாசுபட்ட நகரமும் சென்னைதான்.

சென்னை நகரத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் 100 மரங்கள் இருந்த இடத்தில் இப்போது ஒரு மரம்தான் இருக்கிறது. 99 சதவிகித மரங்களை வெட்டிவிட்டனர். மேம்பாலம் கட்ட, மெட்ரோ ரயில் பாதை அமைக்க, சாலைகளை அகலப்படுத்த, சொகுசு மாளிகை கட்ட... என, இருந்த மரங்களை எல்லாம் அழித்து விட்டனர். இத்தனை மரங்களை இழந்ததற்கு ஈடாக, புதிதாக மரங்களை நடுகிறார்களா என்பது கேள்விக்குறிதான். இப்போது, குல்மொஹர் (நிஹிலிவிகிபிகிஸி) மரத்தை நடு கிறார்கள். இது, நமது மண்ணுக்கு ஏற்றது அல்ல. புங்கமரம், வேப்பமரம் போன்றவைதான் நம் மண்ணுக்கு உகந்ததாக இருக்கும். இதுபோன்று மரங்கள் பூத்துக் குலுங்கிய நேரு பூங்கா, திரு.வி.க. பூங்காக்களை கண்டுகொள்ளாமல் விட்டு​ விட்டனர். இந்தப் பூங்காக்​கள்தான் சென்னையின் நுரையீரல். தண்ணீரை விலை கொடுத்து வாங்கு​வதுபோல, எதிர்காலத்தில் ஆக்ஸிஜனை விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். இப்போதே ஆக்ஸிஜன் பார்லர்கள் சென்னையில் வந்துவிட்டன. சாலை ஓரங்களில் மரங்களை வளர்க்க வேண்டும். மக்களையும் மரங்கள் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்காவிட்டால், இந்த நகரம் நரகமாகி விடும். பச்சை பெயின்ட் அடிப்பது, இரட்டை இலை ஓவியத்தை வரைவது... இவையெல்லாம் இயற்கைக்கு உகந்த விஷயம் அல்ல'' என்றார்.

சர்க்கரை என்று எழுதிப் பார்த்தால் இனிக் காது. அதுபோல, பசுமையான இலையை வரைந்து வைப்பதால் பசுமை ஆகிவிடாது அமைச்சரே!

- நா.சிபிச்சக்கரவர்த்தி @ விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Empty Re: பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே!

Post by சிவா Sat Nov 02, 2013 1:10 am

பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! P7
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Empty Re: பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே!

Post by சிவா Sat Nov 02, 2013 1:11 am

பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! P7a
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Empty Re: பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பச்சை நிறமே ....பச்சை நிறமே - இது பாட்டு இல்லை, கண்ணைக் கவரும் புகைப்படம் - ரசிங்க
» பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!
» கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள்
» சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum