புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_m10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_m10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_m10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_m10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_m10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_m10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_m10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_m10வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?!


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 15, 2013 8:41 pm

வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?!

வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Wigneswaran_1593384g

கடந்த சில நாட்களில் இலங்கை சந்தித்துள்ள முக்கியமான பல திருப்பங்கள், நிகழ்வுகள் அடுத்தடுத்த கட்டங்களில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்பபைத் தூண்டி விட்டுள்ளன.
முதலாவது வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டதும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியும்.
இரண்டாவது “மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் நாட்டின் சனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் வடக்கில் இயல்பு நிலைமையை ஏற்படுத்த உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகள்” என இலங்கை அதிபர் ராஜ்பக்சே தேர்தல் முடிவுகள் அறிவித்த பின்னர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது. (இது நாகரிகம் கருதி கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.)
முன்றாவது போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கையில் ஐ.நா. தோல்வியடைந்து விட்டது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் பொதுச்சபைக் கூட்டத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது.
நான்காவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் போர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூற இலங்கை அரசாங்கம் தவறினால், சர்வதேச விசாரணைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள எச்சரிக்கை.
இப்படி அடுக்கடுக்கான மகிழ்ச்சிகள். கடந்த ஒரு வார காலமாக ஒவ்வொரு தமிழ் நெஞ்சிலும் இன்ப அலைகள் துள்ளிக்கொண்டு இருக்கின்றன. இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேர்தலைச் சந்திக்காத,, தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை வடக்கு மாகானம் தேர்தலைச் சந்தித்ததே கடந்த கால இலங்கை வரலாற்றில் தமிழர்கள் எதிர்ப்பார்க்காத ஒன்று. அதில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது தனி ஈழத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களின் உள்ளங்களில் பாய்ச்சிய சூரியக் கதிராக ஒளிவீசுகிறது.
மண்ணோண்டு மண்ணாகிப் போன ஒவ்வொரு இலங்கைத் தமிழனும் சிந்திய இரத்தமே இந்த வெற்றிக்கு அடித்தளமாக, பல்வகையிலும் இருந்து உள்ளது வாக்காளர்களின் விரல்களில் பதித்த கரு மை எல்லாம், புலிகள் சிந்திய குருதியின் செம்மை. விடுதலைப் போரில் தனி ஈழத்திற்காகத் தம்மை மாய்த்துக் கொண்ட தமிழர்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களின் விரல்களாக் மாறி விட்டனரோ? அந்த விரல்கள் பதித்த ஓட்டுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகிய ‘வீடு’ சின்னத்தில் பதிவாயினவொ? ஆம் வீடு துறந்து வீடு சென்றவர்களாலே இலங்கைத் தமிழர்களுக்கான நாடு உருவாகக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளதோ.
இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் மூன்று மாகாணங்களுக்குத் தேர்வு நடந்தன. அதில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட இலங்கை, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சி.வி. விக்னேஸ்வரன் அபார வெற்றி பெற்றார். ஐந்து மாவட்டங்களில், மொத்தம், 38 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 30 இடங்களைக் கைப்பற்றி தமிழர்களின் ஒன்றுபட்ட உணர்வை வெளிக்காட்டியுள்ளது.
இலங்கை இராணுவத்தினரும் ஈ.பி.டி.பி என்னும் அமைப்பினரும் இந்தத் தேர்தல் வெற்றிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம், பெண் வேட்பாளர் வீட்டில் இரவுத் தாக்குதல் என்று பல முறையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று முயன்றாலும் அத்தனை சதிகளையும் முறியடித்து முதன்மை பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களின் கண்காணிப்புடனும், காவல்துறை மற்றும் ராணுவத்தின் பலத்தப் பாதுகாப்புடனும், தேர்தல் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து தேர்தல் பார்வையாளர்களும் காமன்வெல்த்தில் இருந்து வந்திருந்த ஒரு கண்காணிப்புக் குழுவும் தேர்தலைக் கண்காணித்தன. இந்தியா சார்பில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சென்றிருந்தார்.
இத்தனைக் கண்காணிப்புகளின் இடையே நடைபெற்ற இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்ற இந்த அபார வெற்றி ஒட்டு மொத்த தமிழர்களின் வெற்றி. சுய ஆட்சி வேண்டும் என்று எண்ணிய தமிழர்களின் எண்ணத்தின் வெளிப்பாடே வாக்குகளாகக் குவிந்தன.
இந்த வெற்றியினால் இலங்கையில் எதைச் சாதித்து விட முடியும்? மாகாணங்களில் தன்னாட்சி உரிமை, தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சமஉரிமை, தமிழர்களின் தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல், இலங்கை அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய இலட்சியங்களை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்றெல்லாம் பட்டியலிட்டாலும் இவையெல்லாம் நடைபெறுமா என்பது வினாக்குறிகளே.
ஏனெனில் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தாலும், இலங்கையைப் பொறுத்த வரையில் மாகாண முதல்வருக்கான அதிகாரம் மிகவும் குறைவே என்பது பலரும் அறிந்ததே. இங்கு மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் கையேந்தும் நிலையில் இருந்து எந்தவித மாற்றமும் இருக்காது. அதனால், வளர்ச்சிப் பணிக்கான திட்டமிடலில் வடக்கு மாகாணத்தில், தமிழர்கள் எதிர்பார்க்கும் பெரிய மாற்றம் நிகழுவதற்கு வாய்ப்புகள் மிகக் மிகக் குறைவு என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
68 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்ற ராஜபக்சேவிடம் ஏனைய மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதைப் போன்று புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் வினவியுள்ளார். அதற்கு அனைத்து மாகாண சபைகளுக்கும் சம அளவிலான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளதாக ராஜபக்சே­ தெரிவித்துள்ளார். இதில் பெரிதாக மகிழ்ச்சி இல்லை என்றாலும் பொதுச்சபையின் கண்காணிப்பு வடக்கு மாகாணத்தின்மீது உள்ளது என்று உணர முடிகிறது. அதே வேளையில் இதுவும் முந்தைய கால கட்டத்து நாடகங்கள் போல கண் துடைப்போ என்ற ஐயமும் உள்ளது.
13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் எவையும் இல்லை என்றும், மத்திய அரசாங்கத்துக்கே முழுமையான காணி அதிகாரம் இருப்பதாகவும் இலங்கையின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஒருபுறம் கவலையளிக்கிறது.
என்றாலும் இந்த வெற்றியின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு எதிராகப் போராடித் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கருத இடமுள்ளது என்ற அளவில் நாம் மகிழ்ச்சி அடையலாம்.
முதல்வராக பதவியேற்க உள்ள சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தில் உள்ள மணிப்பாய் என்னும் ஊரில் பிறந்தவர். இலண்டனில் இளங்கலைப் பட்டப் படிப்பையும் கொழும்பு பல்கலையில் சட்டக்கல்வியையும் பயின்றவர்.
மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் மாவட்ட நீதி மன்றகளில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் 1987 ல் கொழும்பு மாவட்ட நீதிபதியாகவும் 1988 முதல் 2000 வரை உயர்நீதி மன்ற நீதிபதியாகவும், 2001 முதல் 2004 வரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.
வெற்றி வாகை சூடிய இலங்கை வடக்கு மாகாணத்தின் முதல்வர் வேட்பாளர் அவர்களுக்கும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற அனைவருக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமை.




(இக்கட்டுரை சோழநாடு கூட்டமைப்பு (அக்டோபர் 2013) மாத இதழில் வெளியானது.)




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Oct 16, 2013 12:23 am

பொறுத்து இருந்து பார்போம்

பகிர்வுக்கு நன்றி




வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Mவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Uவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Tவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Hவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Uவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Mவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Oவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Hவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Aவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Mவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Eவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 16, 2013 4:47 am

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்...
-
நல்லதே நடக்கும் என நம்புவோம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 16, 2013 7:16 am

Muthumohamed wrote:பொறுத்து இருந்து பார்போம்

பகிர்வுக்கு நன்றி
இப்போதே கூட்டணிக்குள் குழப்பமும் பிரச்சனையும் தொடங்கி விட்டதே.
நன்றி முத்து.



வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Aவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Aவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Tவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Hவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Iவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Rவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Aவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 16, 2013 7:53 am

குழப்பமில்லா கூட்டணி எங்கே இருக்கிறது ?
பதவி ஆசையே கூட்டணிக்கு அஸ்திவாரம். தகுதி இல்லாதோர் தலைவர் ஆனால் குழப்பங்கள் கொடி கட்டும். அரசியலில் தினம் தினம் அரங்கேறுவதுதான்.

ரமணியன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 17, 2013 8:48 pm

ayyasamy ram wrote:வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்...
-
நல்லதே நடக்கும் என நம்புவோம்
நம்புவோம் நம்புவோம்.. நன்றி அய்யாசாமி



வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Aவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Aவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Tவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Hவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Iவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Rவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Aவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Oct 18, 2013 12:23 am

Aathira wrote:
Muthumohamed wrote:பொறுத்து இருந்து பார்போம்

பகிர்வுக்கு நன்றி
இப்போதே கூட்டணிக்குள் குழப்பமும் பிரச்சனையும் தொடங்கி விட்டதே.
நன்றி முத்து.
 
அது தான் நமது முதல் பலவீனம் அக்கா அதை கலைந்தால் வெற்றி பெறலாம்




வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Mவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Uவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Tவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Hவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Uவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Mவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Oவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Hவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Aவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Mவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! Eவீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக