புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
171 Posts - 79%
heezulia
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
1 Post - 0%
Pampu
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
336 Posts - 79%
heezulia
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவர்? - ஸ்டாலின் !

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:17 pm

First topic message reminder :

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 F4ZWrFDyTYO0zRpOvjco+E_1382591501

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.

அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.

சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.

இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.

அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.

nandri - siruvarmalar

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 12, 2014 7:38 pm

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் வாலஸ்டின். அவருடைய அறிவியல் அறிவின் சிறப்பைக் கேள்விப்பட்டிருந்த அயல்நாட்டு விஞ்ஞானி ஒருவர், அவரைச் சந்திக்க விரும்பி அவர் வீட்டுக்குச் சென்றார். அவரை அன்போடு வரவேற்றார் வாலஸ்டின்.

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 ZzsotMESBuERMhHeB2vY+E_1407411437
அந்த வீடு ஒரு சிறிய குச்சி வீடுபோல இருந்ததைக் கண்ட அயல் நாட்டு விஞ்ஞானி, "இந்தச் சிறிய வீட்டில் வாலஸ்டின் தம் சோதனைக் கூடத்தை எந்த இடத்தில் அமைத்திருப்பார்' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு சுற்று, முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்.
""என்ன பார்க்கிறீர்கள்?'' என்றார் விஞ்ஞானி வாலஸ்டின்.

""இல்லை... இவ்வளவு சிறிய வீட்டில் வசிக்கிறீர்கள்! இதுவரை நீங்கள் கண்டு பிடித்துள்ள விஷயங்களையெல்லாம் வைத்துப் பார்த்தால், உங்களுடைய ஆராய்ச்சிக்கூடம் மிகப் பெரிய ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த ஆய்வுக் கூடம் எங்கே? வெளியே எங்கேயாவது நிறுவியிருக்கிறீர்களா? நான் அதைப் பார்க்க வேண்டுமே!'' என்றார் அந்த அயல் நாட்டு விஞ்ஞானி.
""அவ்வளவு தானே! பொறுங்கள்... என் பிரம்மாண்டமான ஆய்வுக் கூடத்தைக் காட்ட ஏற்பாடு செய்கிறேன்,'' என்றார் வாலஸ்டின்.
சிறிது நேரத்தில் ஓர் உதவியாளன் அவர்கள் இருவருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தான். அவனிடம் வாலஸ்டின், மெதுவான குரலில் ஏதோ கூறினார். அவர் தலையை ஆட்டியவாறே உள்ளே சென்றான்.

சற்று நேரத்தில் அந்த உதவியாளன் திரும்பி வந்தான். ஒரு தட்டில் சில குப்பிகளும், குடுவைகளும், வேறு சில சோதனைக் கூட உபகரணங்களும் இருக்க, அதை ஏந்தியவாறே அவர்கள் முன்னால் வந்து நின்றான்.
அயல் நாட்டு விஞ்ஞானி அதை வியப்போடு பார்த்தார்.

வாலஸ்டின் புன்னகையோடு, ""என்னுடைய பிரம்மாண்டமான சோதனைக் கூடத்தைப் பார்க்க வேண்டும் என்றீர்கள் அல்லவா? இதோ இருக்கிறது என் சோதனைக் கூடம். பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்றார் தன் உதவியாளன் கையிலிருந்த தட்டைக் காட்டி.வந்திருந்த அயல் நாட்டு விஞ்ஞானிக்கு, வியப்பும், திகைப்பும் நீங்க, பல நிமிடங்கள் ஆயின.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 10:57 pm

யாரும் பாக்கலையா? புன்னகை பின்னூட்டம் எழுதுங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 11:27 am

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 3nBqenDiSriP0mVeIRXP+E_1389863336

இத்தாலி தேசத்திலே ஒரு வைத்தியக் கல்லூரி, அதில் சேருவதற்கு மனுக்கள் வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மனுவாகப் படித்துக் கொண்டு வந்தனர். ஒரு மனுவைப் படித்ததும், கீழே கையெழுத் திட்டிருப்பவர் யார் என்று பார்த்தனர். அந்தப் பெயரைக் கண்டதும், "இது யார்? பெயரைப் பார்த்தால் ஒரு பெண் போலல்லவா இருக்கிறது!' என்று சந்தேகப்பட்டனர்.

அவர்களுடைய சந்தேகத்திற்குக் காரணம் அந்த வைத்தியக் கல்லூரி யில் அதுவரை ஒரு பெண்கூடப் படிப்பதற்கு முன் வந்ததில்லை.

சிறிது நேரம் யோசித் தனர். பிறகு, "இது பெண் பெயராக இருக்காது; எவனோ ஒரு பையன் தான் இப்படிப் பெயர் வைத்துக் கொண்டிருக் கிறான் என்று முடிவு கட்டினர். கல்லூரியில் சேர்த்துக் கொண்டதாக உடனே தகவலும் அனுப்பினர்.

கல்லூரி திறக்கும் தினத்தன்று பணம் கட்டுவதற்கு வரிசையாக மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடன் ஒரு பெண்ணும் நின்றாள். அவளைப் பார்த்ததும் எல்லாருக்கும் ஒரே அதிசயமாக இருந்தது.
"என்ன இது? டாக்டர் படிப்பு படிப்பதற்கு ஒரு பெண் வந்திருக்கிறாளே!' என்றுதான் ஆச்சரியப்பட்டனர்.
அந்தப் பெண் கல்லூரியில் சேர்ந்தாள். கருத்துடன் படித்தாள். டாக்டர் பட்டமும் பெற்று விட்டாள். ரோம் சர்வகலாசாலையில் முதன் முதலாக, டாக்டர் பட்டம் பெற்ற பெண் அவள்தான்!

பட்டம் பெற்றதும் அவள் டாக்டர் தொழிலில் இறங்கினாள். நல்ல பெயரெடுத்தாள். டாக்டர் தொழில் செய்யும்போதே, அவள் அடிக்கடி ஏழைகள் வீடுகளுக்குச் செல் வாள். அங்குள்ள குழந்தைகளுக்கு இலவச மாகப் படிப்புச் சொல்லிக் கொடுப்பாள். அத்துடன் குழந்தைகளின் கல்வி முறையிலும் ஆர்வம் காட்டி வந்தாள். குழந்தைகளின் மனோ தத்துவத்தையும் நன்றாக ஆராய்ந்தாள்.

குழந்தைகளின் கல்வி, செயலோடு ஒட்டியதாக இருக்க வேண்டும். கதைபோலக் கற்பதுதான் கல்வி. குழந்தைகள் தாமாக மனம் இசைந்து கற்பதே கல்வி. இக்கல்வியால் குழந்தைகளின் குண விசேஷங்கள் வளர் கின்றன. தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும் திறமையும் வளர்கிறது.
இந்த முடிவுக்குத் தக்கபடி அவள் ஒரு புதிய கல்வித் திட்டத்தை வகுத்தாள். அந்த திட்டத்தை உலகம் முழுவதும் அறிந்தது. தற்போது பல நாடுகளில் அந்தத் திட்டப்படி பல பள்ளிகள் நடைபெறுகின்றன.
அந்தத் திட்டத்தின் பெயரைச் சொன்னாள். அந்தப் பெண் டாக்டர் பெயரும் உங்களுக்குத் தெரிந்துவிடும். "மாண்டிசோரி கல்வித் திட்டம்' என்பதுதான் அதன் பெயர். இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே, இவர் யார் என்று?

விடை: அந்தப் பெண் டாக்டர் இவர்தான் டாக்டர் மரியா மாண்டிச்சோரி அம்மையார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 12:02 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 JvIGaCBRST6OpRsUtUS9+E_1449136072

அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சையை பாதுகாப்பாய் செய்ய கண்டுபிடித்த 'வில்லியம் மார்ட்டன்' போலவே, அவருடைய காலத்திலேயே இன்னொரு மருத்து வரும், அறுவை சிகிச்சையின்போது நோயாளிக்கு வலி இல்லாமலிருக்க ஒரு மருந்தை கண்டு பிடித்தார். அவர் பெயர் 'சர் ஜேம்ஸ் சிம்சன்.'

இவர் 1811ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி எடின்பரோவிற்கு அருகிலுள்ள லின்லித் கோசுயரில் பாத்கோட் என்ற இடத்தில் பிறந்தார்; ஏழ்மையான குடும்பம்; தந்தை ரொட்டி சுட்டு விற்பனை செய்பவர். சிம்சன் அவருக்கு எட்டாவது பிள்ளை. சுயதொழில் செய்து கொண்டிருந்த அவர் பொருளா தாரத்தில் முன்னேற கடுமையாய் உழைத்துக் கொண்டிருந்தார்.

உள்ளூரில் படித்தார். நன்றாக படித்த தால், 14ம் வயதில் எடின்பரோ பள்ளியில் பல பரிசுகள் பெற்றார். வைத்திய படிப்பில் ஆர்வம் கொண்ட அவர், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 1830ம் ஆண்டு 19ம் வயதில் மருத்துவ ராக வெளியே வந்தார்.

சில மருத்துவமனைகளில் வேலை பார்த்தார். 1836ம் ஆண்டு புகழ்பெற்ற மருத்துவமனையில் வேலை கிடைத்தது. 3 ஆண்டுகளுக்குப்பின் 1839ல் எடின்பரோ பல்கலைக்கழக பேராசிரிய ரானார். நோயாளிகளைஅறுவை சிசிச்சை செய்கையில் அவர்கள்படும் அவஸ்தைகளை கண்டு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என சிந்தித்தார். 

அதைப் பற்றி தீவிரமாய் ஆய்வு செய்தார். தான் கண்டுபிடித்த மருந்தை ௧847ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி ஒரு நோயாளிக்கு கொடுக்க அவர் மயக்கமானார். சிம்சன் மகிழ்ந்தார். அம்மருந்தின் பெயர் 'குளோரோபார்ம்.'

வழக்கம்போல, முதலில் மருத்துவ உலகம் இதைக் கண்டு கொள்ளவில்லை. விக்டோரியா மகாராணிக்கு கொடுத்து பரி சோதித்தபின் ஏற்றுக் கொண்டது. அறுவை சிகிச்சையின் போது இம்மருந்தை பயன்படுத்தி நோயாளிக்கு வலி உணராமல் சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள்.
இம்மருந்தை கண்டுபிடித்ததற்காக அவருக்கு 'நைட்' விருது வழங்கப்பட்டது. 

ராணியின் மருத்துவராகவும் நியமிக்கப் பட்டார். குளோரோபார்மை கண்டுபிடித்த அம்மேதை, 1871ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். எனினும் அவரை மக்கள் மறக்கவே மாட்டார்கள் என்பதுதான் உண்மை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 5:02 pm

krishnaamma wrote:
அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சையை பாதுகாப்பாய் செய்ய கண்டுபிடித்த 'வில்லியம் மார்ட்டன்' போலவே, அவருடைய காலத்திலேயே இன்னொரு மருத்து வரும், அறுவை சிகிச்சையின்போது நோயாளிக்கு வலி இல்லாமலிருக்க ஒரு மருந்தை கண்டு பிடித்தார். அவர் பெயர் 'சர் ஜேம்ஸ் சிம்சன்.'
மேற்கோள் செய்த பதிவு: 1178985
இவர் குளோரபார்ம் கண்டுபிடிக்கவிடில் பல பேர் வேதனையில் அல்லல் பட்டு இருப்பர்,நன்றி அம்மா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 14, 2015 11:41 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சையை பாதுகாப்பாய் செய்ய கண்டுபிடித்த 'வில்லியம் மார்ட்டன்' போலவே, அவருடைய காலத்திலேயே இன்னொரு மருத்து வரும், அறுவை சிகிச்சையின்போது நோயாளிக்கு வலி இல்லாமலிருக்க ஒரு மருந்தை கண்டு பிடித்தார். அவர் பெயர் 'சர் ஜேம்ஸ் சிம்சன்.'
மேற்கோள் செய்த பதிவு: 1178985
இவர் குளோரபார்ம் கண்டுபிடிக்கவிடில் பல பேர் வேதனையில் அல்லல் பட்டு இருப்பர்,நன்றி அம்மா.
நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 14, 2015 11:43 pm

இதயம் காத்த பெலிக்ஸ்!

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 YuTx70GRPiCu5tSmIAyw+E_1449727564

இன்றைய நவீன - அவசர உலகில் பலகோடி மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது 'மாரடைப்பு' என்கிற ஹார்ட் அட்டாக்.

இந்த கொடூர நாசக்கார நோய் வந்தவுடன், ஆஸ்பிரின் மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றால், மாரடைப்பை தவிர்க்கலாம் என்கிறது இன்றைய மருத்துவ உலகம்.
அத்தகைய உயிர்போகும் நிலையில் மரணத்தை தடுக்கும், 'ஆஸ்பிரின்' மாத்திரையை கண்டுபிடித்தவர், 'பெலிக்ஸ் ஹாப்மன்.'

இவர், 1868ம் ஆண்டு, ஜனவரி 21ம் நாள் ஜெர்மனியிலுள்ள, 'லுட்விக்ஸ் பெர்க்' என்ற இடத்தில் பிறந்தார். தந்தை ஜேக்கப் சிறு தொழிலதிபர்.

இவர், உள்ளூரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் நன்கு படித்தார். 1890ம் ஆண்டு, பார்மஸ்சூடிகல் பரீட்சை எழுதி தேறினார். அடுத்து மியூனிச் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையிலும், வேதியியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பல்கலைக்கழகத்தில் நன்கு பயின்று முனைவர் பட்டம் பெற்று சாதனையாளராகத் திகழ்ந்தார். மருந்துகள் தயாரிக்கும் ஆர்வம் அவருக்குள் ஊற்றாக பெருகிக் கொண்டே இருந்தது. இவரின் திறனை அறிந்த, 'பேயர்' என்ற புகழ்பெற்ற மருத்துவ நிறுவனம், அவரை பணியில் சேர்த்துக் கொண்டது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் போது வலி நிவாரணத்திற்கான மருந்துகளை தயாரிப்பதில் தீவிரமாக செயல்பட்டார். இந்த நேரத்தில் அவரின் தந்தையார் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர் இருவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டனர்.

எவ்வளவோ மருந்துகள் கொடுத்தும் நோய் குணமாகாத நிலை. தந்தைக்கான நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இரவும், பகலும் கண் உறங்காமல் ஆய்வில் ஈடுபட்டார். அவரின் தீவிர ஆய்வால் 1897ம் ஆண்டு, ஆகஸ்ட் 10ம் தேதி வலிக்கான மருந்து கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த மருந்தின் வேதியியல் பெயர், 'அஸிடைல் சாலி சிலிக் அமிலம்.' இந்த மருந்தை வலி, வீக்கம், ஜுரம் போன்றவையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுத்து சோதனையிடப்பட்டது.
நோய்களுக்கு நிவாரணம் கிடைத்ததாக நோயாளிகள் சொல்ல, பெலிக்ஸ் மிகவும் மகிழ்ந்தார்.

அந்த மருந்திலிருந்து, புதிய ஒரு மருந்தை தயாரித்து தன் தந்தைக்கு அம்மருந்தை கொடுக்க, மூட்டுவலி குறைந்தது. பெலிக்ஸ் கண்டுபிடித்த மருந்தால் பல நோயாளிகள் பல்வேறு நோய்களிலிருந்து குணமடைவதைக் கண்ட மருத்துவ உலகம் அம்மருந்தை இரு கைகொண்டு வரவேற்றது.

ஜெர்மன் தவிர இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அம்மருந்தைக் கேட்டு வாங்கி, மக்களுக்கு கொடுத்தனர். நோய்கள் குணமாவதைக் கண்ட மருத்துவர்கள், மக்களின் வலிகளுக்கு நிவாரண மருந்தை கண்டுபிடித்த பெலிக்ஸை கடவுளாய் வணங்கினர்.

மருந்தின் பெயர் நீளமாய் இருப்பதைக் கண்ட பேயர் நிறுவனம் அதற்கு, 'ஆஸ்பிரின்' என்ற பெயரிட்டு மார்க்கெட் செய்தது.

ஆஸ்பிரினுக்கு உலகம் முழுக்க பெரும் வரவேற்பு உண்டானது. ஆரம்பத்தில் மருந்து 'தூளாய்' கொடுக்கப் பட்டது. பின்னர், அது மாத்திரை வடிவில் தயாரித்து விற்கப்பட்டது.

மக்கள் தலைவலியா... ஆஸ்பிரின், மூட்டு வலியா... ஆஸ்பிரின், தசை வலியா... ஆஸ்பிரின் என மருத்துவரின் அனுமதியின்றி வாங்கி வாங்கி சாப்பிட்டு நோய்களிலிருந்து விடுதலை பெற்றனர்.

மக்கள் உடல் வலிகளுக்காக ஆஸ்பிரினை கண்டு பிடித்த அம் மாமேதை 1946ம் ஆண்டு, பிப்ரவரி 8ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். என்றாலும் ஆஸ்பிரின் என்ற மருந்து உலகம் உள்ளவரை இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுவரை பெலிக்ஸ் மக்கள் மனதில் நிறைத்திருப்பார். அவரின் மறைவுக்குப் பின்னர் ஆஸ்பிரின் வேறு எதற்கெல்லாம் பயன்படும் என மருத்துவ ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் இந்த மருந்து 'இதயத்தை' காக்கும் அற்புதம் என்பதை, 1948ம் ஆண்டு கண்டு பிடித்தனர்.

ஆம்... மாரடைப்பு வந்தவுடன் இம்மருந்தை உபயோகித்தால், இதயத்தை காக்கலாம் என்பதை உணர்ந்த மருத்துவ உலகம், இதய நோயாளிகளுக்கு இதை சிபாரிசு செய்கிறது; இது உண்மையும் கூட. நெஞ்சுவலி, இதய நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் கலந்த மாத்திரைகள் கொடுக்கப் பட்டு வருகின்றன. இதயத்தை காக்கும் 'ஆஸ்பிரின்' தந்த மகானை என்றும் போற்றுவோம்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 10:44 am

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 7 LKtplEF3SMK53411rvnC+Rajaji-BW

ஒரு ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ரயில் ஜன்னல் வழியே காற்று வேகமாக வீசிக் கொண்டி ருந்தது. பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் காற்றின் ஜிலு ஜிலுப்பை நன்றாக அனுபவித்தனர்.
அப்போது, அந்தப் பெட்டியில் ஜன்னல் ஓரமாக இருந்த ஒருவர் சந்தோஷத்தில் ஜன்னலுக்கு வெளியே தன் கையை நீட்டி, ஆட்டி அசைத்து மகிழ்ச்சியை அனு பவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் சட்டென்று கழன்று விழுந்துவிட்டது.

பதறிப்போன அந்த மனிதர் தன் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டதாகக் கூச்சல் போட்டார். உடனே அந்தப் பெட்டியில் இருந்த சக பயணிகள் அனைவரும் பதற்றத் தோடு என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். சிலர் ஜன்னல் வழியாக கைக்கடிகாரம் தெரிகிறதா என்று பார்த்தனர். சிலர், 'எமர்ஜென்சி செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தலாம்' என்று யோசனை தெரிவித்தனர்.

இவ்வாறு அந்தப் பெட்டி முழுவதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த போது, கைக்கடிகாரத்தைத் தவறவிட்ட வருக்கு நேரெதிர் இருக்கையில் அமர்ந் திருந்த ஒருவர் மட்டும் எதனைப் பற்றி யும் கவலைப்படாமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந் தார். இதனைப் பார்த்தவர்கள் அவர் மீது கோபத்தில் இருந்தனர். இந்த மனித ருக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா என்று?

இதற்குள் அடுத்த ரயில் நிலையம் வந்துவிட்டது. இந்தப் பெட்டி அருகே நிறைய அதிகாரி கள் காத்திருந்தனர். இதனைப் பார்த்ததும் மற்றவர்கள் பரபரப் புடன் அந்த அதிகாரிகளிடம் கைக்கடிகாரம் தொலைந்து போனதைப் பற்றி பரபரப்புடனும், வருத்தத்துடனும் கூறி, ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டனர்.

இந்நேரத்தில் அந்த எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரோ, அந்த அதிகாரிகளிடம், ''இங்கிருந்து இருபது தந்திக் கம்பங்களுக்குப் பின்னால் இவரது விலை உயர்ந்த கடிகாரம் விழுந்து விட்டது. அதனைக் கண்டுபிடித்து இவரிடம் சமர்ப்பித்து விடுங்கள்,'' என்றார்.

அத்தனை பேரும் வாயடைத்துப் போயினர்.

அந்த எதிர் இருக்கையில் இருந்த அந்த புத்திசாலி மனிதர் யார் தெரியுமா?

அவர்தான் ராஜாஜி!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 11:03 am

மிகச்சிறந்த அறிவாளி . குலக்கல்வி திட்டம் கொண்டுவந்து தனக்குத்தானே சூன்யம் வைத்துக்கொண்டார் . இல்லையென்றால் காமராஜர் முதலமைச்சர் ஆகி இருக்கமுடியாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 11:14 am

M.Jagadeesan wrote:மிகச்சிறந்த அறிவாளி . குலக்கல்வி திட்டம் கொண்டுவந்து தனக்குத்தானே சூன்யம் வைத்துக்கொண்டார் . இல்லையென்றால் காமராஜர் முதலமைச்சர் ஆகி இருக்கமுடியாது .
மேற்கோள் செய்த பதிவு: 1193857

அது என்ன ஐயா 'குலக்கல்வி திட்டம்'....தயவு செய்து விளக்குங்களேன், மிகச்சிறந்த அறிவாளி என்று கேள்விப்பட்டு இருக்கேன், இவரின் மகளும் எங்க அம்மாவும் ஒரே பள்ளி இல் படித்தார்களாம், அம்மா சொல்வார்கள் புன்னகை .அவங்க வீட்டு கொலுவுக்கு எங்க அம்மா போய் இருக்காங்களாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக